உள்ளடக்கத்துக்குச் செல்

மார்கரெட் அட்வுட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்கரெட் அட்வுட்
2006ல் அட்வுட்
2006ல் அட்வுட்
பிறப்புமார்கரெட் அட்வுட்
நவம்பர் 18, 1939 (1939-11-18) (அகவை 85)
ஒட்டாவா, ஒன்டாரியோ, கனடா
தொழில்எழுத்தாளர், கவிஞர்
தேசியம்கனடியர்
காலம்1960s - இன்றுவரை
வகைநேசப்புனைவு, வரலாற்றுப் புனைவு, ஊகப்புனைவு, பிறழ்ந்த உலகுப்புனைவு
குறிப்பிடத்தக்க படைப்புகள்த ஹாண்ட்மெய்ட்ஸ் டேல், காட்ஸ் ஐ, ஏலியாஸ் கிரேஸ், தி பிளைண்ட் அசாசின், ஓரிக்ஸ் அண்ட் கிரேக், சர்ஃபேசிங்க்
இணையதளம்
margaretatwood.ca

மார்கரெட் அட்வுட் (Margaret Atwood, நவம்பர் 18, 1939) ஒரு கனடிய பெண் எழுத்தாளர் மற்றும் கவிஞர். சமகாலத்திய பெண்ணிய எழுத்தாளர்களில் முதன்மையானவருள் ஒருவராகக் கருதப் படுகிறார். நேசப் புனைவு, வரலாற்றுப் புனைவு, ஊகப்புனைவு, பிறழ்ந்த உலகுப்புனைவு போன்ற பாணிகளில் பல புத்தகங்களை எழுதியுள்ள அட்வுட், உயரிய விருதுகளை வாங்கியுள்ள ஒரு கவிஞரும் கூட. இவற்றைத் தவிர இலக்கிய விமர்சகராகவும், சூழலிய செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார்.

கனடா நாட்டில் ஒட்டாவா நகரில் பிறந்த அட்வுட், டொரொண்டோ பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் ராட்கிளிஃப் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரி காலத்திலேயே அவரது கவிதைப் பதிப்புகள் வெளியாகின. பிரித்தானிய கொலம்பியா பல்கலைக்கழகம், மொண்ட்ரியாலில் உள்ள சர் ஜார்ஜ் வில்லியம்சன் பல்கலைக்கழகம், ஆல்பெர்டா பல்கலைக்கழகம், டொரோண்டோ பல்கலைக்கழகம், அலபாமா பல்கலைக்கழகம், நியூயார்க் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் ஆங்கிலப் பேராசியராகப் பணியாற்றியுள்ளார்.

1987ல் இவரது தி ஹாண்ட்மெய்ட்ஸ் டேல், அறிபுனைப் படைப்புகளுக்கான ஆர்தர் சி. கிளார்க் விருதை வென்றது. அட்வுட்டின் புத்தகங்களில் அறிபுனை பாணியின் கூறுகள் பல காணப்பட்டாலும் தானொரு அறிபுனை எழுத்தாளரல்ல என்று மறுக்கிறார் அட்வுட். தி பிளைண்ட் அசாசின், ஓரிக்ஸ் அண்ட் கிரேக், காட்ஸ் ஐ, எலியாஸ் கிரேஸ் ஆகியவை இவரது பிற குறிப்பிடத்தக்க படைப்புகள். மேலும் கனடிய தேசிய/பணாட்டு அடையாளத்தைப் பற்றிய அட்வுட்டின் கட்டுரைகள் உலகப்புகழ் பெற்றவை. மான் புக்கர் பரிசுக்கு ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டுள்ள அட்வுட் ஒரு முறை அதனை வென்றுள்ளார் (தி பிளைண்ட் அசாசின், 2000). கனடாவின் உயரிய கவர்னர் ஜெனரல் விருதினையும் இருமுறை வென்றுள்ளார். அட்வுட்டின் படைப்புகள் உலகெங்கும் ஆங்கில இலக்கிய பாடத்திட்டங்களில் இடம் பெற்றுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]