பொ. சந்தியாகு
Appearance
பொ. சந்தியாகு (பிறப்பு: பிப்ரவரி 10 1939) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியராவார். ஆசிரியர் சங்கங்களிலும் கூட்டுறவுச் சங்கங்களிலும் ஈடுபாடு உடையவர்.
எழுத்துத் துறை ஈடுபாடு
[தொகு]1950 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், புதுக்கவிதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
பரிசில்களும், விருதுகளும்
[தொகு]- மலாயாப் பல்கலைக் கழகப் பேரவைக் கதைப் போட்டியில் பரிசுகள் பெற்றுள்ளார்.
- தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கம் நடத்திய போட்டியில் பரிசுகள் பெற்றுள்ளார்.
- "கூட்டுறவுச் செம்மல்" கெடா மாநில இந்தியப் பள்ளிகளின் கூட்டுறவுக் கழகம் விருது (2001)
- PJK விருது - மலேசியா அரசாங்கம்
உசாத்துணை
[தொகு]- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் பொ. சந்தியாகு பக்கம் பரணிடப்பட்டது 2012-01-18 at the வந்தவழி இயந்திரம்