பைன்கங்கை ஆறு
Appearance
பைன்கங்கை ஆறு (Painganga River), இதனை பென்கங்கை ஆறு என்றும் அழைப்பர். (Penganga River), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புல்டாணா மாவட்டம், ஹிங்கோலி மாவட்டம், நாந்தேட் மாவட்டம், யவத்மாள் மாவட்டம், சந்திரப்பூர் மாவட்டம் மற்றும் வாசிம் மாவட்டங்களின் வழியாகப் பாயும் முதன்மை ஆறு ஆகும்.[1] பைன்கங்கை ஆறு உமர்கேட் அருகே மரத்வாடா மற்றும் விதர்பா பகுதிகளைப் பிரிக்கிறது. இதன் துணை ஆறு வர்தா ஆறு ஆகும்.
புல்டாணா மாவட்டத்தில் உள்ள அஜந்தா மலைத்தொடரில் உற்பத்தியாகும் பைன்கங்கை ஆறு 495 km (308 mi) நீளம் கொண்டது. யவத்மாள் மாவட்டத்தில் உள்ள சஙகமேஸ்வரர் கோயில் அருகே பைன்கங்கை ஆறு, வர்தா ஆற்றில் கலக்கிறது. வர்தா ஆறு, பிராணஹிதா ஆற்றில் கலந்து, பின் பிராணஹிதா ஆறு கோதாவரி ஆற்றுடன் கலக்க்கிறது. கோதாவரி ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Yavatmal district". Archived from the original on 2007-07-13. பார்க்கப்பட்ட நாள் 2007-04-13.