உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பியேர் அபேலார்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியேர் அபேலார்டு என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

கட்டுரைமுடியவில்லை. தொடரும்.வாழ்க்கை பற்றிய பகுதி எழுதியதும் உரிய மேற்கோள்களைச் சுட்டுவதுடன் கட்டுரை முடியும்.

பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை, கட்டுரையை ஓரளவு விரிவுபடுத்தினால் நல்லது. நன்றி.--Kanags \உரையாடுக 23:06, 2 மே 2015 (UTC)[பதிலளி]
அவருக்கு உகந்த நேரத்தில் அவருக்கு விக்கியாக்கப்பயிற்சி அளித்து வருகிறேன். கடந்த 40 வருடங்களாக பல்வேறு அறிவியல் கட்டுரைகளை எழுதி வருபவர். விருது பெற்றவர். தமிழ் இணையக்கல்விக்கழகத்தின் சொல்லாக்கக்குழுவில் செயற்பட்ட ஆலோசகரில் இவரும் ஒருவர். பல விக்சனரிச்சொற்களின் தவறுகளை, பேச்சுப்பக்கத்தில் முன்நிறுத்துபவர். அவரது வயது, பணிச்சூழல் காரணமாக இங்கு அவரின் பங்கு குறைவாகவே இருக்கும். இருப்பினும் அவரின் முயற்சியை, நாம் மெதுவாகத்தான் வளர்க்க இயலும். எனவே, இக்கட்டுரையை, பிறர் விரைந்து மாற்ற வேண்டாம் எனக் கோருகிறேன். நமது மாற்றங்களைச் சற்றுத் தள்ளிப் போடக் கோருகிறேன்.--உழவன் (உரை) 02:55, 3 மே 2015 (UTC)[பதிலளி]
நல்லது, இவ்வாறான துறைசார் அறிஞர்கள் பங்களிப்பது மிக்க மகிழ்ச்சி தருகிறது. மணல்தொட்டியைப் பயன்படுத்தினால் இப்பிரச்சினை தீருவதற்கு வாய்ப்புள்ளது. நன்றி.--Kanags \உரையாடுக 03:14, 3 மே 2015 (UTC)[பதிலளி]
ஆம். அதுபற்றியும் தெரிவித்து உள்ளேன். அவரின் கணினி பழக்கம் குறைவு. எனவே, இயல்பாக இவ்விக்கியாக்கம் சற்று மெதுவாக நடைபெறும். பயிலுமிடத்திற்கு (மணல்தொட்டி) மாற்ற பயிற்சி அளிக்கிறேன். நன்றி. மீண்டும் மற்றுமொரு உரையாடலில் சந்திப்போம். வணக்கம்.--உழவன் (உரை) 03:17, 3 மே 2015 (UTC)[பதிலளி]

வாழ்க்கைப்பகுதியை இணைக்கும்போது ஏற்கெனவே இருந்த மெய்யியல்பகுதி நீக்கப்பட்டுவிட்டது. அதை மீட்டெடுத்தால் கட்டுரை முழுமை அடையும். மீட்டெடுக்க முடியுமானால் மீட்டெடுத்து மீள இணைக்கவும்.நன்றிகளுடன். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:01, 6 மே 2015 (UTC)[பதிலளி]

முழுமையாக ஆங்கிலத்தில் இருந்த மெய்யியல் பகுதியே நீக்கப்பட்டது. அது இங்கே உள்ளது.--Kanags \உரையாடுக 12:36, 6 மே 2015 (UTC)[பதிலளி]

மெய்யியலின் விரிவாக்கத்தை மணல்தொட்டியில் மேற்கொண்டு விரைவில் முடிக்க முயல்கிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 04:50, 9 மே 2015 (UTC)[பதிலளி]

அபேலார்டின் பிந்தைய வாழ்க்கைக் குறிப்புகள் கொஞ்சம் சேர்த்தால் கட்டுரை மேலும் சிறப்பாக அமையும்.--உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:44, 12 மே 2015 (UTC)[பதிலளி]

நன்றி.--Kanags \உரையாடுக 21:23, 12 மே 2015 (UTC)[பதிலளி]