உள்ளடக்கத்துக்குச் செல்

புசிங்கன் ஊகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புசிங்கன் ஊகான்.
சுவிட்சர்லாந்தினால் சூழப்பட்டுள்ள புசிங்கன் நகரம்.

புசிங்கன் ஊகான் (ஊகான் மீதமைந்திருக்கும் புசிங்கன்) என்றழைக்கப்படும் புசிங்கன் நகரம் சுவிஸ் நாட்டின் சாபவ்சன் அல்லது ஷஃப்ஹௌசன் மண்டலத்தால் சூழப்பட்டு அமைந்திருக்கும் ஒரு ஜெர்மனி நாட்டின் நகரம் ஆகும்.[1] இந்நகரத்தின் தெற்கில் ஊகான் மலைத்தொடர் அமைந்திருக்கின்றது. இந்நகரத்தின் மொத்த மக்கள் தொகை 1450 பேர் ஆகும். 19-ம் நூற்றாண்டிலிருந்தே இந்நகரம் ஜெர்மன் நாட்டிலிருந்து தனியே அமைந்திருக்கின்றது. ஜெர்மன் நாட்டின் பெருநிலத்தையும் இந்த நகரத்தையும் இடையில் 700 மீட்டர் அகலமான சுவிஸ் நாட்டின் டாபிளிங் கிராமம் பிரிக்கின்றது. 

புசிங்கன் நகரம் ஜெர்மனி நாட்டின் கொன்ஸ்டான்ஸ் மாவட்டத்தின் ஒரு பகுதியாக ஆட்சி செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் அதே சமயம் வணிகம் சார்ந்த நடவடிக்கைகள் மட்டும் லீக்டன்ஸ்டைன் சிற்றரசு, இத்தாலியின் கம்போன் இத்தாலியா ஆட்சிப் பகுதியைப் போலவே சுவிஸ் சுங்க விலக்குப் பகுதிகளுக்குள் இணைக்கப்பட்டு இருக்கின்றது. ஜெர்மனியும், சுவிட்சர்லாந்தும் கடந்த 2008/09 ஆம் ஆண்டில் செங்கான் ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு, எவ்வித எல்லைக் கட்டுப்பாடுகளும் நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து மக்கள் அதிகம் வருகை தரும் ஒரு சுற்றுலாப் பகுதியாக புசிங்கன் விளங்குகின்றது. குறிப்பாக ஊகான் மலைப்பகுதிகள் கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபட பலரும் வருவதுண்டு. இந்த நகரத்தில் புகழ்பெற்ற விவிலியக் கல்லூரியான ஐரோப்பிய நாசரானி கல்லூரியும் அமைந்திருக்கின்றது. 

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புசிங்கன்_ஊகான்&oldid=3221645" இலிருந்து மீள்விக்கப்பட்டது