உள்ளடக்கத்துக்குச் செல்

பிரசியோடைமியம்(V) ஆக்சைடு நைத்திரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரசியோடைமியம்(V) ஆக்சைடு நைத்திரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • பிரசியோடைமியம் ஆக்சைடு நைத்திரைடு
  • பிரசியோடைமியம் நைத்திரைடு ஆக்சைடு
இனங்காட்டிகள்
யேமல் -3D படிமங்கள் Image
  • O=Pr#N
பண்புகள்
PrNO
வாய்ப்பாட்டு எடை 170.91 கி/மோல்
உருகுநிலை −261 °C (−437.8 °F; 12.1 K) (சிதையும்)
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பிரசியோடைமியம்(V) ஆக்சைடு நைத்திரைடு (Praseodymium(V) oxide nitride) என்பது PrNO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டினால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இச்சேர்மத்தில் பிரசியோடைமியம் +5 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. பிரசியோடைமியம் உலோகமும் நைட்ரிக் ஆக்சைடும் திண்ம நியான் முன்னிலையில் 4 கெல்வின் வெப்பநிலையில் வினைபுரிந்து பிரசியோடைமியம்(V) ஆக்சைடு நைத்திரைடு உருவாகிறது. பிரசியோடைமியம் நைட்ரசன் அணுக்களுடன் முப்பிணைப்பும், ஆக்சிசன் அணுக்களுடன் இரட்டைப் பிணைப்பும் கொண்ட நேர்கோட்டு படிகக் கட்டமைப்பை பிரசியோடைமியம்(V) ஆக்சைடு நைத்திரைடு ஏற்கிறது.[1]

வினைகள்

[தொகு]

கூடுதலான நைட்ரிக் ஆக்சைடுடன் பிரசியோடைமியம்(V) ஆக்சைடு நைத்திரைடு வினைபுரிந்து NPrO(NO) மற்றும் NPrO(NO)2 போன்ற அணைவுச் சேர்மங்களை உருவாக்கி இச்சேர்மம் ஓர் இலூயிசு அமிலமாக வெளிப்படுகிறது. மேலும் பிரசியோடைமியம்(IV) ஆக்சைடாகவும் நைட்ரசனாகவும் சிதைவடைகிறது:[1]

PrNO → PrO2 + N2

மேற்கோள்கள்

[தொகு]