உள்ளடக்கத்துக்குச் செல்

பியூரான் (விண்கலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியூரான்
Буран
பியூரான் (விண்கலம்)
ஏவுதளத்தில் பியூரான்
நாடு சோவியத் ஒன்றியம்
Named after"பனிப்புயல்"[1]
முதல் பயணம்1K1
நவம்பர் 15, 1988[1]
கடைசிப் பயணம்1K1
நவம்பர் 15,1988[1]
திட்டங்களின் எண்ணிக்கை1[1]
பயணிகள்0[1]
விண்ணில் செலவழித்த நேரம்3 மணிநேரம்
சுற்றுகளின் எண்ணிக்கை2[1]
Statusதிட்டம் கைவிடப்பட்டது; 2002-இல் பணிமனை இடிபாட்டில் ஒரு விண்கலம் அழிந்தது, இரு விண்கலங்கள் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டுள்ளன. [2]

பியூரான் விண்கலம் என்பது (உருசியம்: Бура́н, பஒஅ[bʊˈran], பனிப்புயல்) வடிவமைப்பிலும் செயல்பாட்டிலும் அமெரிக்காவின் விண்ணோடத்தை ஒத்த சோவியத் யூனியனின் சுற்றுப்பாதை வாகனமாகும். 1988-ஆம் ஆண்டில் மனிதரற்ற சோதனை பறத்தலுக்கு உட்படுத்தப்பட்டது; இதன்மூலம், விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒரே சோவியத் விண்ணோடமாக இது திகழ்கிறது. சோவியத் யூனியனின் பிளவுக்குப் பிறகு, 1993-ஆம் ஆண்டில் பியூரான் விண்கல மேம்பாட்டுத் திட்டம் நிறுத்தப்பட்டது. பியூரான் விண்கலம், சோவியத் விண்ணோடமாக கருதப்பட்டது; இதன் வானூர்தி மட்டுமே மறுபயன்பாட்டுக்கு உகந்ததாகும் (உண்மையில், மறுபடியும் இது பறத்தலுக்கு பயன்படுத்தப்படவில்லை). விண்கலத்தின் முக்கியமான பகுதி - ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படக்கூடிய சக்திவாய்ந்த ஏவூர்தி பொறி (எனெர்ஜியா).

பைக்கானூர் விண்வெளி ஏவுதளத்தின் விமானப் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பியூரான் விண்கலம் (பறத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டது), 2002-ஆம் ஆண்டில் பணிமனை இடிந்து விழுந்ததில் முற்றிலும் சேதமானது.[3]

குறிப்புதவிகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Buran". NASA. 12 November 1997. Archived from the original on 2006-08-04. பார்க்கப்பட்ட நாள் 2006-08-15.; Buran at the Wayback Machine (archived சனவரி 28, 2008).
  2. Eight feared dead in Baikonur hangar collapse, RSpaceflkight Now.
  3. "Buran". Russian Space Web. 2012-10-15. பார்க்கப்பட்ட நாள் 2013-09-28. 2002 May 12: The flight version of the Buran orbiter is destroyed in the roof collapse at Site 112 in Baikonur.