உள்ளடக்கத்துக்குச் செல்

பள்ளியறை வழிபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பள்ளியறை வழிபாடு என்பது இந்து சமயக் கோயில்களில் அர்த்தசாம பூசைக்கு பிறகு நடத்தப்படும் வழிபாடாகும். இல்லறத்தில் இருப்பதைப் போல இந்து சமயத்திலும் கணவன் மனைவிகளாக இறைவன் இறைவி இருப்பதால், அவர்களை ஒன்றாக பள்ளியறையில் சேர்த்து வழிபாடு நடத்தப்படுகிறது.

திருவரங்கத்தில்

[தொகு]

திருவரங்கம் அரங்கநாதர் கோயிலில் நடைபெறுகின்ற பள்ளியறைப் பூசையானது உற்சவர் சிலைகளைப் பள்ளியறையில் வைத்து நடத்தப்படுகிறது.

மூலவர் சந்நிதியில் அர்த்தசாம பூசை முடிந்தவுடன், சயனபேரர் எனும் சின்ன பெருமாளை மேளதாளத்துடன் பல்லக்கில் தாயார் சந்நிதிக்குக் கொண்டு வருகின்றனர். தாயார் சந்நிதியின் மங்கள ஆராத்திக்குப் பிறகு உற்சவ தாயாரான கருமாட்சியுடன் சயனபேரரும் வெள்ளி ஊஞ்சல் ஆடுகின்றனர். பூசைக்குப் பின் இருவரையும் பள்ளியறையில் வைக்கின்றார்கள். [1]

பள்ளியறை பூசையில் பசும்பால், வெல்லம், குங்குமப்பூ ஆகியவற்றால் செய்யப்பட்ட நிவேதனம் மக்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இதனைக் குழம்பு பால் என்கின்றனர்.

மறுநாள் காலை சயனபேரரும், கருமாட்சியும் அம்மன் சந்நிதிக்கு கொண்டு வரப்படுகிறார்கள். கருமாட்சி தாயார் சந்நிதியில் இருக்க, சயனபேரரை மூலவர் சந்நிதிக்குக் கொண்டு செல்கின்றனர். இதன் பிறகே விஸ்வரூப தரிசனம் செய்யப்படுகிறது.

ஆதாரங்கள்

[தொகு]
  1. தினத்தந்தி அருள்தரும் ஆன்மீகம் 19.07.2016 பக்கம் 14-15