பரிணாமச் சிந்தனையின் வரலாறு
பரிணாமச் சிந்தனையின் வரலாறு (History of evolutionary thought) குறித்த இக்கட்டுரை, உயிர்க்கூறு எவ்வாறு பரிணாமம் பெற்று வந்துள்ளது என்ற சிந்தனையின் வரலாறு பற்றியதாகும்.
உயிரினங்கள் காலங்காலமாக மாற்றத்திற்கு உட்பட்டு வருகின்றன என்ற தொன்மரபுக் கருத்தோட்டத்திலேயே பரிணாமச் சிந்தனைக்குரிய வேரினைக் காண முடியும். தொன்மையான கிரேக்க, ரோமானிய, சீன ஏன் மத்தியகால இஸ்லாமிய அறிவியலிலும் கூட இச்சிந்தனைக்கான கூறுகள் உண்டு. பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் நவீன உயிரியல் தொகைப்பாடுடன் துவங்கிய மேற்கத்திய உயிரியல் சிந்தனையில் இரு எதிரெதிர் கருத்துக்கள் தாக்கமளித்தன –
- இன்றியமையாதவை - ஒவ்வொரு உயிரினமும் இன்றியமையாத பண்புகளைக் கொண்டுள்ளன. அவை மாற்ற இயலாதவை என்று நம்பப்பட்டது.
- மத்தியகால அரிஸ்ட்டாடில் நுண்ணியற்பியலில் இருந்து வளர்த்தெடுக்கப்பட்ட இக்கருதுகோள், இயற்கை இறையியலுக்கும் பொருந்துகிறது.
இயற்கையிலாளர்கள் உயிரினங்களின் மாறுந்தன்மை மீது கவனம் கொள்ளத் துவங்கினர். இயற்கை பற்றிய நிலைத்தன்மை கண்ணோட்டத்தை மனதிற்கொண்டு உயிர்ப்படக்கக் கருதுகோளுடன் தொன்மவியல் பற்றிய தேடலில் இறங்கினர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜீன் பேப்பிஸ்ட் லாமர்க் (1744 – 1829) உயிரினங்களின் படிமாற்றம் பற்றியக் கோட்பாட்டை முன் வைத்தார். இதுதான் முழுமையாக வடிவமைக்கத்த முதல் பரிணாமக் கோட்பாடு.
1858 ஆம் ஆண்டு சார்லஸ் டார்வினும், ஆல்பிரட் ருஸ்ஸல் வாலேசும் இணைந்து பரிணாமக் கோட்பாடு நூலை வெளியிட்டனர். இக்கோட்பாட்டைத் தனது உயிரினங்களின் தோற்றம் குறித்து (1859) நூலில் டார்வின் விரிவாக விளக்கினார். லாமார்க்கில் இருந்து மாறுபட்ட டார்வின் அனைத்து உயிரிகளுக்குமான பொது மூதாதையையும், உயிர் மரம் வரைபடத்தையும் முன் வைத்தார். அதாவது ஒரே மூதாதையிடமிருந்து இருவேறுபட்ட உயிரினங்கள் தோன்றக் கூடும் என்பது டார்வினின் துணிபு. விலங்குத் தொகுதி, உயிர் நிலவியல், மண்ணியல், உருபன்னியம், கருவியம், ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விரிவான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இயற்கைத் தேர்வு குறித்த மேற்படி முடிவிற்கு வருகிறார்.
டார்வின் முன்வைத்த கருத்தின் மீது எழுந்த விவாதங்கள் பரிணாமக் கருத்தாக்கத்தை ஏற்பதற்கு விரைவுபடுத்தியது. ஆனால் இயற்கைத் தேர்வு முறைமை குறித்த கருத்து அவ்வளவு எளிதில் ஏற்கப்படவில்லை. உடலியல் ஆய்வு 1920 – 40 களின் ஊடாக ஒரு முடிவை எட்டிய பின்னரே டார்வினின் இயற்கைத் தேர்வு பரவலான அங்கீகாரம் பெற்றது. அதற்கு முன்பு பரிணாம வளர்ச்சிக்கு வேறுபல காரணிகளை ஆராய்ந்து கொண்டிருந்தனர் பெரும்பாலான உடலியலாளர்கள். இயற்கைத் தேர்வு என்பதற்கு மாற்றாக மரபுவழியாகப் பெற்ற குணாம்சம் மாற்றம் பெறுவதற்கான உந்தாற்றல், திடீரென்றடையும் பெரு மாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய டார்வினியத்தின் நீள் வட்ட (circa 1880 – 1920) கருதுகோள் தான் 1920 ஆம் ஆண்டு வரை நிலவி வந்தது. மெண்டேலிய மரபுக் கூறுகள் எனும் 19 ஆம் நூற்றாண்டுத் தொடராய்வின் விளைவாக 1900 இல் உருளங்கடலை தாவரத்தின் உறழ்வு மீள்கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டது. இத்துடன் இயற்கைத் தேர்வு ஆய்வு பற்றி 1910 க்கும் 1930 க்கும் இடைப்பட்ட காலத்தில் ஜே.பி.எஸ்.ஹால்டும், சிவால் ரைட்டும் கூட்டாக ரோலானால்ட் பிஷருடன் இணைந்து கண்டுபிடித்த திரள் மரபுக்கூறுகளின் புதிய ஒழுங்கும் ஒருங்கிணைந்தது. மரபணுத் திரள் கூறுகள் பிற உடலியல் ஆய்வுத் துறையுடன் கலந்து நவீன மேலதிகமாக பரிணாம ஒருங்கமைவு என்ற பரந்த உயிரியல் பரிணாமத்துடன் பொருத்தும் கோட்பாடாக 1930 – 1940 களில் உருவானது.
உயிரியல் பரிணாமக் கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து உயிர்நிலவியல் மற்றும் சீர்முறைமையுடன் கூடிய இயற்கை உயிர்த் திரளில் திடீர் மாற்றம் மற்றும் மரபுத் தொடர் பிரிவினைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இலகுக் கணிதவியல் மற்றும் பரிணாமத்தின் இயல்பு வகைகள் கண்டுபிடிப்பிற்கு இட்டுச் சென்றன. உயிரின் பரிணாம வரலாற்றில் மிக விரிவான மீள்கட்டமைப்பு செய்வதற்கு தொன்மவியலும், உடற்கூறு ஒப்பீட்டியலும் உறுதுணையாக விளங்கின.
மூலமரபணுவியல் துறையில் 1950 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட எழுச்சியையடுத்து புரத நிரலிகள் மற்றும் எதிர்ப்புத் திறன் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு மூலக்கூறு பரிணாமவியல் துறையும் வளர்ச்சி கண்டது. பின்னர் அதனுடன் ரிபோ உட்கரு அமிலம் (RNA) மற்றும் டியாக்சி ரிபோ உட்கரு அமிலம் (DNA) குறித்த ஆய்வுகளும் இணைத்துக் கொள்ளப்பட்டது. 1960 ஆம் ஆண்டில் மூலக்கூறு பரிணாமத்தின் இயற்கை நடுநிலை கோட்பாட்டு, தகவமைவியம் மீது எழுந்த விவாதங்கள், தேர்வின் அலகு, பரிணாமத்தால் இயற்கைத் தேர்விற்கும், மரபணு நகர்விற்கும் இடையில் எழும் மோதல்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து மரபணுக் கூறினை மையமாகக் கொண்ட பரிணாமக் கண்ணோட்டம் [2] பரவலடையத் தொடங்கியது. இருபதாம் நூற்றாண்டுகளின் இறுதியில் டிஎன்ஏ ஆய்வில் ஏற்பட்ட அடுத்தடுத்த கண்டுபிடிப்புகளால் மூலக்கூறின் இனவளர்ச்சி மரபுத்துறை உருவானது. கார்ல்வூஸ் உருவாக்கிய மூன்று – ஆதிக்கச் சீர்மை, உயிர் மரம் வரைபடத்தை அங்கீகரித்தது. அத்துடன் பரிணாமக் கோட்பாட்டுடன் பொருந்துவதில் சிக்கலானதாக இருந்தாலும் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கு உயிர் மரபியல், மரபணு பரிமாற்றப் பரவல் போன்ற மெய்மைகளும் அறிமுகமாயின. உயிரியல் பரிணாமத்தில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் உயிரியல் மரபுக் கிளைகளில் மட்டுமல்லாமல் கல்விப்புல (எ.கா –மானுடவியல், உளவியல்) ஒழுங்கமைவிலும், சமூகத் தளத்திலும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தின.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Haeckel 1879, ப. 189, Plate XV: "Pedigree of Man"
- ↑ Moran, Laurence A. (2006). "Random Genetic Drift". What is Evolution?. Toronto, Canada: ரொறன்ரோ பல்கலைக்கழகம். Archived from the original on 2006-10-19. பார்க்கப்பட்ட நாள் 2015-09-27.
- ↑ Futuyma, Douglas J., ed. (1999). "Evolution, Science, and Society: Evolutionary Biology and the National Research Agenda" (PDF) (Executive summary). New Brunswick, NJ: Office of University Publications, Rutgers, The State University of New Jersey. இணையக் கணினி நூலக மைய எண் 43422991. Archived from the original (PDF) on 2012-01-31. பார்க்கப்பட்ட நாள் 2014-10-24.
- Futuyma, Douglas J.; Meagher, Thomas R., தொகுப்பாசிரியர்கள் (2001). "Evolution, Science and Society: Evolutionary Biology and the National Research Agenda". California Journal of Science Education (Sacramento, CA: California Science Teachers Association) 1 (2): 19–32. பன்னாட்டுத் தர தொடர் எண்:1531-2488. இணையக் கணினி நூலக மையம்:425607451. http://eric.ed.gov/?id=EJ631583. பார்த்த நாள்: 2014-10-24.