தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.
உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். குறுங்கட்டுரையாக தொடங்கி, தக்க ஆதாரங்களைச் சேர்த்து உதவலாம். படங்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்தலாம்.
வணக்கம்! Shrikarsan அவர்களே! பள்ளி மாணவர்கள் குழுமம் தங்களை அதன் புதிய உறுப்பினராக ஏற்றுகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது! ஏதேனும் ஐயம் எழுந்தால் இங்கே கேட்கலாம்! நன்றி!
தம்பி, பதக்கத்தைச் சேர்க்கச் சொல்லி என்னைச் சேர்க்கச் சொன்னதோடு, அதனை உங்களுக்கும் கற்றுத் தரச் சொன்ன உங்கள் கற்றல் ஆர்வத்தை மெச்சுகிறேன். தற்போதைக்கு அப்பதக்கங்கள் நிர்வாக அணுக்கம் உடையவர்களால் மட்டுமே சேர்க்க முடியும்படி உள்ளது (மீடியாவிக்கி:Gadget-wikilove.js) என்பதுதான் நிரல் :) தங்கள் பங்களிப்பு சிறக்க வாழ்த்துகள் தம்பி :) சூர்யபிரகாஷ்உரையாடுக15:28, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
போட்டி விதிகளில் ஒன்றான இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும் என்பதை நீங்கள் கருத்திற் கொள்ளவில்லை. எனவே நீங்கள் போட்டியில் கலந்து கொண்டாலும், கட்டுரைகள் போட்டிக்குரியவை அல்ல. அடுத்த முறை இதைக் கவனத்திற் கொண்டு போட்டியில் ஈடுபட்டு வெற்றியீட்டுங்கள். --Anton·٠•●♥Talk♥●•٠·04:35, 3 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
நடக்காது நடக்காது. இம்மாதம் அணுகுண்டு தான். பெயர்: சிறிகர்சன் பையன். விக்கிக் கட்டுரைப்போட்டி அதிரப்போகிறது. அனைத்தும் யுரேனியத்தால் ஆனது. சில நாட்களுக்கு இவருக்குப் பயந்து யாரும் கட்டுரைப்போட்டிப் பக்கம் வரமாட்டார்கள். பார்த்துக்கொள்ளுங்கள். :) :) :) --♥ ஆதவன் ♥♀ பேச்சு ♀14:16, 7 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
ஆமாம்! ஆமாம்! இப்பொழுதே மூன்று என்றால் மூன்று ஆறாகி ஆறு ஒன்பதாகி இறுதியில் எங்கு போய்த்தான் முடிகிறதோ?........................
அப்பப்பா! ஸ்ரீகர்சன் பையன் இலங்கை மேல் விழுந்தால் தமிழ் நாடும் சரி, இலங்கையும் சரி. இப்படிக்கு (அணுகுண்டின் இளவல்)--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 04:06, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
தென்காசி, முத்துராமன், நந்தினி, மற்ற அனைவரும் ஒரு முறை விக்கிப்பீடியா:தோழமை பாருங்கள். வயதில் இளையவரானாலும் உங்களுக்கு இடையே எவ்வளவு தான் நெருக்கமான உறவு / நட்பு என்றாலும், விக்கியில் பேசும் போது மட்டும் நீ, உன் போன்று ஒருமையில் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். கட்டிப் பிடித்துக் கொஞ்சினாலும் சரி, கட்டி உருண்டு அடித்துக் கொண்டாலும் சரி, நீங்கள் / உங்கள் போன்ற மரியாதையான விளிப்புச் சொற்களைப் பயன்படுத்த வேண்டுகிறேன். இது ஒரு நல்ல விக்கிப்பண்பாடாக இருக்கும். வேறு பயனர்களுக்கு இடையேயான காரசாரமான உரையாடல்களில் தவறான முன்மாதிரியாகி விடாமலும் இருக்கும். இது ஒரு வேண்டுகோளே. நன்றி.--இரவி (பேச்சு) 08:49, 3 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
எங்கே ஸ்ரீ கர்சா ,,,, எல்லோரும் கொரிலா முறை தாக்குதலில் ஈடுபடுவதால் , யார் யார் போட்டியில் உள்ளனர் என்றே தெரியவில்லை. இதுல நான் எங்க பரிச வாங்குறது.இருந்தாலும் முயற்சி பண்ணுவோம்:)நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:26, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
இது தொடர்பான உரையாடல்கள் கட்டுரைப் போட்டி ஆரம்பிக்கும் போதே நிறைய பக்கங்களில் நடந்தது. மூன்றாவது மாதமே புயலடித்ததால் புயலுக்கு அது தெரியாமல் போயிருக்கலாம். இருந்தாலும் தளபதியாரின் பக்கம் வந்து இப்படி அவரை பயமுறுத்தினால் அவர் என்ன செய்வார் தெரியுமா?
யார் யார் மேல் பொறாமையும்,கோபமும் கொண்டுள்ளார்கள் தென்காசியாரே? நான் ஒன்றும் என்னை புயல் என்று கூறிக்கொள்ளவில்லை.நான் வெற்றி பெற முயர்ச்சிக்கிறேன் அவ்வளவு தான்.நான் போட்டியை ஆரோக்கியமாகவே கையாளுகிறேன்.யாருடைய வளர்ச்சியையும் நான் தடுக்கவில்லை, அது போன்ற எண்ணமும் எனக்கு இல்லை. நான் நியாயமே கேட்டேன்.நான் விரிவாக்கிக் கொண்டிருப்பதை ஏன் விரிவாக்கி கொண்டிருக்கிறீர்கள் என்று தான் கேட்டேன்.நந்தினிகந்தசாமி (பேச்சு) 14:42, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
நான் யாரும் யார் மேல் பொறாமையும் கோபமும் கொண்டதாகக் கூறவில்லை. ஸ்ரீகர்சன், நான், ஆதவன், முத்துராமன், நீங்கள் அனைவரும் இதற்கு முன்னர் எப்படி உரையாடினோமோ அப்படித்தான் நானும் உரையாடினேன். நீங்கள் கட்டுரை சிக்கல் பற்றிய எண்ணத்தில் இருந்ததால் உங்களுக்கு உரையாடலின் நோக்கம் வேறு மாதிரி தெரிந்திருக்கிறது. தற்போதைக்கு கட்டுரைப் போட்டியில் நீங்கள் கவனம் செலுத்தவும். என் உரையாடல் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:10, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
ஏங்க இப்படி விசயத்த சீரியஸா ஆக்குரீங்க.....Relax please..நந்தினி அவர்களே ஸ்ரீகர்சன் போட்டியில் வெல்ல வேண்டும் என்றோ அல்லது அறியாமலோ செய்திருக்கலாம்..வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்...ஸ்ரீகர்சா நீயும் எதையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாமல் ஆரோக்கியமான உரையாடலாக எடுத்துக்கொள்ளவும்..முத்துராமன் (பேச்சு) 15:35, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
ஸ்ரீகர்சன் நீயும் தொகுத்தலுக்கு முன் வரலாறை பார்த்து கொள்ளவும்...ஆரோக்கிமான போட்டிக்கு அதுவே வழிவகுக்கும்.போட்டியில் பரிசை தவிர பயனர்களின் பங்களிப்பே முக்கியம் மற்றவர்கள் தொகுத்துகொண்டிருக்கும் கட்டுரைகளை விட்டுவிடவும்.முத்துராமன் (பேச்சு) 15:42, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
ஸ்ரீ கர்சா, முதல் தீர்வுக்கே என்ன பதிலுரைப்பது என்று எனக்குத் தெரியவில்லை , இதில் இரண்டாவது தீர்வு வேறா?....... நீ புரிந்து கொண்டதே எனக்கு போதும்.என் பேச்சு பக்கத்தில் இருப்பனவற்றை நீயே பதிவேற்றிவிடு.ஏனெனில் அது உன் உழைப்பு.அவ்விருக்கட்டுரைகளும்,நான் தொக்க ஆரம்பித்தவை ஆனால் நீ எழுதியது உன் உழைப்பு தான்.அவ்விரு கட்டுரைகளின் முடிவும் நடுவர்கள் உள்ளது. வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி.அன்புடன் அக்கா :).நந்தினிகந்தசாமி (பேச்சு) 08:41, 30 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
அக்கா நான் செய்த தவறைப் பொறுத்தருளியமைக்கு நன்றி. நீங்கள் தான் கட்டுரைப் போட்டியில் வெற்றிபெறுவீர்கள் அதற்கு முன்கூட்டியே என் வாழ்த்துக்கள். தாங்கள் கூடுதலாகக் கட்டுரைகளை விரிவாக்க வேண்டும் என்பதற்காக நான் மேலும் போட்டியில் பங்கு பற்றுகின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 09:24, 30 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
தம்பி நீ நீக்க நீக்க நான் போட்டுகிட்டே இருப்பேன்.வெற்றி பெற்று விட்டாய் தம்பி. வாழ்த்துக்கள்.:) ...... தென்காசியாரே ஸ்ரீகர்சனின் பங்களிப்பை பார்த்து முடிவை அறிவியுங்கள்.அவர் முடிவுகளில் இட தயக்கம் காட்டுகிறார் போல தெரிகிறது.எப்படியோ விக்கியில் அணுகுண்டும் போட்டாச்சு :). என் தமயன் உனக்கு விக்கியின் மாக்னஸ் கார்ல்சன் என்று பெயர் சூட்டியுள்ளான். அவரும் உனக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார் தம்பி.:).........--நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:09, 30 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
நீ நீக்கம் செய்தாலும் நிருவாகிகள் பார்த்திருப்பர் ,,, விளையாட்டு வேண்டாம் தம்பி, சிறு பிள்ளை தனமாக இருக்கும். :) // It's all in the game. Welcome to the show :) //--நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:15, 30 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
எனது 56 வது வயதில் 56 கட்டுரைகளை எழுதுவது சிவனின் ஆசி!!. க.ளை.ப்..பு?? எம் தாய்மொழி தமிழில் கலைஞானம் அனைத்தும் குவித்த பிறகு பார்க்கலாம்...அப்போது கிடைத்தால் ஓய்வை. நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 08:46, 15 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
அன்புத் தம்பி தங்கள் குதிரை ஓடி களைத்துப் போகும்போது சொல்லுங்கள் அன்புடனும், நன்றியுடனும்--Yokishivam (பேச்சு) 14:53, 15 திசம்பர் 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவில் வானியல் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் விக்கிப்பீடியாவில் வானியல் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க ஓர் அரிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் இணைந்து வானியல் துறையில் பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
நீங்கள் இத்திட்டத்தை வளர்த்தெடுக்க பெரிதும் உதவுவீரகள் என நம்புகிறேன், ஆகவே இத்திட்டதிற்காக முன்னின்று உழைத்துச் செயற்பட உங்களை வேண்டுகிறேன்.
பங்காற்றும் வழிகளைப்பற்றி அறிய இப் பக்கத்தில் உள்ள பங்காற்றும் வழிகளில் உள்ள விடங்களைப் பற்றி வாசித்து பங்களிக்கும் முறைகளைப்பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
வானியல்த் துறையை வளர்த்தெடுக்க விக்கியில் பணியாற்றுபவர்கள் மிக மிக அரிது, அப்படி இருகையில் தாங்கள் வானியல் துறை சார்ந்த கட்டுரைகளான டிரைட்டன், ஐரோப்பா போன்ற துணைக்கோள்களின் கட்டுரைக்களை மேம்படுத்துவதில் பங்காற்றி உள்ளீர்கள். இப்படிப்பட்ட அரும்பணியாற்றும் நீங்களும் ஏன்? விக்கித்திட்டம் வானியலில் பங்குகொண்டு அத்துறையை வளர்த்தெடுக்க தங்களை அன்புடன் அழைக்கும் அன்பு இளவல் தம்பி கீரன்!... --அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:12, 22 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.
இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
அண்ணா நீங்கள் தரம் ஒன்பது பாடப்புத்தகத்தைப் படியெடுத்து முன்னேஸ்வரம், களுதாவளைப் பிள்ளையார் ஆலயக் கட்டுரைகளை எழுதியுள்ளீர்கள். இது விக்கிக் கொள்கைகளுக்கு முரணானதாகும். ஆகவே அவற்றை நீக்கியுள்ளேன். இவ்வாறு செய்வதை நிறுத்தி நீங்கள் ஏற்கனவே வேறு கட்டுரைகளில் இவ்வாறு செய்திருந்தால் நீக்கிவிடவும். 'நூலை படித்துவிட்டு அதை மூடி விடவும். அதன்பிறகு நினைவில் உள்ளதை எழுதினால் பதிப்புரிமை மீறலில் பெரும்பாலும் வராது.' இது தென்காசி எனக்குக் கூறிய அறிவுரை :) --♥ ஆதவன் ♥♀ பேச்சு ♀04:18, 24 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
பதக்கம் (உருவாக்கம்)
தாங்கள் சிறந்த பதக்க உருவாக்குனர் என்பர்து அனைவரும் அறிந்த விடயமே, விக்கித்திட்டம் சைவத்தில் சைவசமயத்திற்கான பங்களிப்பாளர் எனும் பதக்கத்தை உருவாக்கியது போல் விக்கித்திட்டம் வானியலுக்காக வானியலிற்கான பங்களிப்பாளர் எனும் பதக்கத்தை உருவாக்கினால் நன்றாய் இருக்கும்.
(உறுப்பினர் உருவாக்கினால் தானே அது உறுப்பாக அமையும்.) -அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:54, 27 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
நண்பர் ஸ்ரீகர்சன் அவர்களுக்கு உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி இனி எடுக்கும் தலைப்புகள் விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி தலைப்புகளில் இருந்து மட்டும் எடுக்கிறேன் . இனி வரு காலங்களிலும் உங்கள் ஆதரவை எதிர் நோக்கும் ஒரு புதிய பயனர் புதுவைபிரபு 10:22, 29 திசம்பர் 2013 (UTC)
நானும் அக்டோபர் மாதத்தில் போட்டி வித்திகளைச் சரியாகப் படிக்காமல் விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி தலைப்புகளில் இல்லாத 15 கட்டுரைகளை விரிவாக்கினேன். அம்மாதம் நந்தினி அக்கா 4 கட்டுரைகளை விரிவாக்கி முதலிடம் பெற்றார். பின்னர் நவம்பர் மாதம் விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி தலைப்புகளில் இருந்த 29 கட்டுரைகளை விரிவாக்கி முதலிடம் பெற்றேன். முயற்சியைத் தொடருங்கள் வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்கலாம்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 23:38, 29 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
பக்கவழி நெறிப்படுத்தல் பட்டியல்களில் ஒவ்வொரு வரி / தலைப்பின் இறுதியிலும் புள்ளி வைக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். அப்படியே வைத்தாலும் தானியங்கியாக வைக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். இது தொடர்பாக தொடர்ந்து தொகுக்கும் முன் சற்று பொறுக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 19:15, 31 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
புரிதலுக்கு நன்றி. அலகு, மங்காத்தா போன்ற பக்கங்களில் ஒரு பட்டியல் வரிக்கு ஒரு தலைப்பு மட்டும் உள்ள போது புள்ளி இடுவது எழிலாகவும் இல்லை, இலக்கணப்படி தேவைப்படுவதாகவும் தெரியவில்லை. இரு சொற்றொடர்கள் இருந்தால் இடையில் புள்ளி வைக்கலாம். அல்லது, ஒரே சொற்றொடரில் நிறைய பட்டியல் உருப்படிகள் காற்புள்ளி / அரைப்புள்ளியால் பிரிக்கப்பட்டிருந்தால் முற்றுப் புள்ளி வைக்கலாம். இதனைத் தெளிவுபடுத்திக் கொண்டு மேற்கொண்டு தொடர வேண்டும். அல்லது, ஏற்கனவே புள்ளியிட்ட பக்கங்களை மீள்விக்க வேண்டும்.--இரவி (பேச்சு) 12:49, 1 சனவரி 2014 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள் ஸ்ரீகர்சா! நீயே வெல்வாய் என்பது எனக்கு முன்பே தெரியும். உன் பங்களிப்புகளை தொடர்ந்து கவனித்திருந்தேன். என்னைவிட இரண்டு, மூன்று கட்டுரைகளை அதிகம் எழுதியிருந்தாய். :) மீண்டும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உன் அறிவு பலருக்கும் பயன்படட்டும். அண்டனுக்கும், ஸ்ரீகர்சனுக்கும் நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:26, 6 சனவரி 2014 (UTC)[பதிலளி]
ஆசியான் பற்றிய கட்டுரையை மேம்படுத்தியமைக்கு நன்றி. நீங்கள் எழுதிய ஒரு பந்தியை மட்டும் விக்கி நடைமுறைக்கேற்பத் திருத்தியிருக்கிறேன். பொதுவாக கட்டுரையின் ஆரம்ப வரிகளில் கட்டுரைத் தலைப்பை மட்டுமே தடித்த எழுத்தாகத் தரலாம். ஏனைய இடங்களில் அவ்வாறு தேவையில்லை. ஒரே சொல்லுக்கு ஒரே கட்டுரையில் பல முறை உள்ளிணைப்புகள் தருவதைத் தவிருங்கள். மிக நீண்ட கட்டுரை என்றால் இரண்டு மூன்று இடங்களில் தரலாம். எனது திருத்தத்தைப் பாருங்கள். வாழ்த்துகள்.--Kanags\உரையாடுக22:33, 10 சனவரி 2014 (UTC)[பதிலளி]
translatewiki.net இல் பங்களிக்க புதிய கணக்கை உருவாக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். நீங்கள் அதே பெயரில் ஒரு புதிய கணக்கை ஆரம்பியுங்கள்.--Kanags\உரையாடுக22:35, 11 சனவரி 2014 (UTC)[பதிலளி]
தொடர் கட்டுரைப் போட்டியில் தொடர்ந்து வெற்றிகளை குவிக்கும் ஸ்ரீகர்சனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
- ரத்தின சபாபதி (பேச்சு) 11:11, 4 பிப்ரவரி 2014 (IST)
விருப்பம் வாழ்த்துக்கள் சகோதரா! தங்கள் பணி மேலும் தொடர்க......--யாழ்ஸ்ரீ (பேச்சு) 06:06, 4 பெப்ரவரி 2014 (UTC)
நன்றி ரத்தின சபாபதி அவர்களே, நன்றி தம்பி--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:19, 4 பெப்ரவரி 2014 (UTC)
Shrikarsan! உங்கள் புதிய கருவிகளுக்கு நன்றி. இந்தச் சிறிய வயதில் உங்களதும் உங்கள் நண்பர்களதும் விக்கிப் பங்களிப்பு வியக்க வைக்கின்றது.
விருப்பம். வேறொன்றுமில்லை. உங்கள் கருவியைச் சோதித்துப் பார்த்தேன். :)--கலை (பேச்சு) 09:48, 17 பெப்ரவரி 2014 (UTC)
நன்றி கலையரசி அவர்களே மேலும் பல கருவிகளை உருவாக்கி விட்டேன் விரைவில் வெளியிடுகின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:40, 17 பெப்ரவரி 2014 (UTC)
நன்றி ஸ்ரீகர்சன். உங்களைப் போன்ற இளைஞர்களின், மாணவர்களின் ஈடுபாடும், பல்வகைப் பங்களிப்புகளும் நம்பிக்கையை விதைக்கின்ற வீரியமிகு வித்துக்கள். வங்கியாளன் என்ற முறையிலே என் பங்களிப்பைத் தொடர விழைகின்றேன்.−முன்நிற்கும் கருத்து சேந்தன் (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
அண்ணா! தாங்கள் நான் முன்பதிவில் இட்டிருந்த கட்டுரைகளை விரிவக்கியுள்ளீர்கள். துருக்கிய மொழி, இலத்தீன் போன்ற கட்டுரைகள்--நி.மாதவன் (பேச்சு) 07:40, 27 மார்ச் 2014 (UTC)
நன்றி சிறீகர்சன், தாயக் கட்டை பகுப்பை சிறப்பாக முடித்ததற்கு....
புதிய கட்டுரைகள் தொடங்க வாழ்த்துக்கள்18:31, 28 மார்ச் 2014 (UTC)சரவணன் பெரியசாமி
விருப்பம் நன்றி--ஸ்ரீகர்சன் (பேச்சு) 02:07, 29 மார்ச் 2014 (UTC)
அண்ணா! தாங்கள் திரும்பவும் நான் முன்பதிவில் இட்டிருந்த கட்டுரைகளை விரிவக்கியுள்ளீர்கள். வட்டாரமொழி வழக்குகள் கட்டுரை. முன்பதிவைப் பார்த்துவிட்டு விரிவாக்குங்கள் ப்ளீஸ். உங்களால் எனக்கு மூன்று கட்டுரை லாஸ்ட் ஆயிடிச்சு. போன முறை எதியோப்பியா கட்டுரையையும் விரிவாக்கியுள்ளீர்கள்.--நி.மாதவன் (பேச்சு) 12:58, 30 மார்ச் 2014 (UTC)
முன்பதிவில் இட்ட கட்டுரையை விரிவாக்கக் கூடாது என எந்த ஒரு நிபந்தனையும் இல்லை என முன்னர் தென்காசியார் குறிப்பிட்டிருக்கின்றார்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 06:49, 31 மார்ச் 2014 (UTC)
விருப்பம் ஆமாம் மாதாவா! அதுவும் இதே பேச்சுப் பக்கதிலேயே குறிப்பிட்டிருக்கின்றார், உங்கள் அண்ணனுக்கு இதைப்பற்றி விரிவாகத் தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன், அவரிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:38, 31 மார்ச் 2014 (UTC)
அப்படி என்றால் ஏன் முன்பதிவு இருக்கிறது. அதை அழித்து விடலாமே?--நி.மாதவன் (பேச்சு) 11:04, 31 மார்ச் 2014 (UTC)
//கட்டுரைப் போட்டியில் முன்பதிவு எல்லாம் சும்மா ஒரு கணக்குக்குத் தான். யார் முன்பதிவு செய்ததையும் யார் வேண்டுமானாலும் தொகுக்கலாம்.// தென்காசியார் கூறியது. இவ்வாறு முன்பும் நிகழ்ந்துள்ளது.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:22, 31 மார்ச் 2014 (UTC)
ஆங்கில விக்கியில் இருந்து வெட்டி ஒட்டும் போது கவனிக்கத் தக்கவை
ஏற்கனவே இங்கு வார்ப்புருக்கள் உள்ளனவா என்று பார்க்கவும்
இயன்றவரை மொழிபெயர்க்கவும்
இல்லாவிடின் நிறைய உடைந்த இணைப்புகளையும், சிகப்பு இணைப்புக்களையும் கொண்டு கட்டுரை அழகாக இருக்காது. உங்கள் தொகுப்புகள் மீள் அமைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். --Natkeeran (பேச்சு) 16:07, 31 மார்ச் 2014 (UTC)
விருப்பம் கட்டுரைகளில் பொருத்தமற்ற அட்டவனைகளையும், ஆங்கில உள்ளடக்கங்களையும், அதிகளவான படங்களையும் சேர்க்காதீர்கள். விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம் என்பதையும் கட்டுரைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் நினைவிற் கொள்ளுங்கள். நன்றி. --AntonTalk 08:21, 3 ஏப்ரல் 2014 (UTC)
அண்ணா தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. மொழிபெயர்க்கப்படாத கட்டுரைகள் முதர்ப்பக்கத்தில் இடப்படுவது இல்லை. எனினும் வார்ப்புரு உருவா க்க்கப்பைட்டுள்ளதால் நான் அக்கட்டுரைக்கு மொழிபெயர்ப்பு வார்ப்புரு இடவில்லை. தயவு செய்து மொழிபெயர்க்கப்பைடாது ஆங்கிலத்தில் உள்ளவற்றை விரைந்து தமிழ்ப்படுத்தவும். நன்றி--♥ ஆதவன் ♥。◕‿◕。♀ பேச்சு ♀08:21, 4 மே 2014 (UTC)[பதிலளி]
Yஆயிற்று ஆனால் மொழிபெயர்ப்பு வார்ப்புரு இடுமளவிற்கு ஒன்றும் ஆங்கிலத்தில் இல்லையே அடிக்குறிப்புக்களில் இரண்டு தானே ஆங்கிலத்தில் இருந்தன.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:24, 4 மே 2014 (UTC)[பதிலளி]
இன்போபாக்ஸ் இல் இன்னும் சில ஆங்கிலத்தில் உள்ளன. திருத்த வேண்டுகிறேன். முதற்பக்கத்திற்கு பரிந்துரைக்க முன் அல்லது தெரிவு செய்ய முன் இவற்றை கவனித்தல் நல்லம். இல்லாவிடில் தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் குறைத்து மதிப்பிடப்படலாம்.//மொழிபெயர்ப்பு வார்ப்புரு இடுமளவிற்கு ஒன்றும் ஆங்கிலத்தில் இல்லையே அடிக்குறிப்புக்களில் இரண்டு தானே ஆங்கிலத்தில் இருந்தன.// மொழிபெயர்ப்பு வார்ப்புருவை இடுமலவிற்கு இல்லையா??, சிரியனவோ பெரியானவோ விக்கியில் ஒன்றுதான். (ந.ம) :) :) :) --♥ ஆதவன் ♥。◕‿◕。♀ பேச்சு ♀12:48, 4 மே 2014 (UTC)[பதிலளி]
unreferenced என்பதை சான்றில்லை என அனைத்துக் கட்டுரைகளிலும் மாற்றுவது தேவை தானா? இது அவசியமில்லை என்றே நான் நினைக்கிறேன். வார்ப்புருக்களின் தலைப்புகள் வேறு மொழிகளில் இருப்பதில் தவறில்லை. அனைத்து வார்ப்புருக்களுக்கும் மாற்றப் போகிறீர்களா? அப்படியாயின் ஆங்கிலத் தலைப்பில் உள்ள பல்லாயிரக்கணக்கான வார்ப்புருக்களையும் நீக்கி விட்டு தமிழ்த் தலைப்புகளாக மாற்றி விடலாமா?--Kanags\உரையாடுக21:07, 9 சூன் 2014 (UTC)[பதிலளி]
தினேசுகுமார் ஒரு பக்கம் பல்லாயிரம் பக்கங்களுக்கு ஆங்கிலத்தில் வார்ப்புரு சேர்த்துக் கொண்டு வருகிறார். அவற்றை நீங்கள் திருத்துகிறீர்கள். இது இரட்டை வேஎலையில்லையா.--Kanags\உரையாடுக07:37, 10 சூன் 2014 (UTC)[பதிலளி]
மன்னித்துவிடுங்கள் கனக்ஸ் இப்போதுதான் பேச்சுப்பக்கத்தைப் பார்த்தேன். unreferenced என்பதை சான்றில்லை என அனைத்துக் கட்டுரைகளிலும் மாற்றுவது தவறா? ஆங்கிலத்தில் இருப்பதை தமிழில் மாற்றுவது தவறில்லையே! புதிதாகக் கருவி வடிவமைத்துவருகின்றேன். அதனுடைய சோதனை ஓட்டமே இது. //அனைத்து வார்ப்புருக்களுக்கும் மாற்றப் போகிறீர்களா?// அனைத்தையும் இல்லை சிலவற்றையே. //அப்படியாயின் ஆங்கிலத் தலைப்பில் உள்ள பல்லாயிரக்கணக்கான வார்ப்புருக்களையும் நீக்கி விட்டு தமிழ்த் தலைப்புகளாக மாற்றி விடலாமா?// இக்கூற்றை வழிமொழிகின்றேன். ஆனால் பல பயனர்கள் ஆ.வி யில் இருந்து மொழிபெயர்ப்பதால், ஆங்கிலத்தலைப்பை வழிமாற்றாக வைத்துக்கொண்டு அவற்றை தமிழ்த்தலைப்பிற்கு நகர்த்திவிடலாம்!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 07:42, 10 சூன் 2014 (UTC)[பதிலளி]
உங்கள் சோதனை ஓட்டம் சரியாகத்தானே வேலை செய்கிறது. இனிமேல் அவற்றை மாற்றாதீர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தம்ழில் தலைப்பிடுகிறார்கள். தகவல்சட்டம், தகவற்சட்டம், தகவல்ச்சட்டம் எனப் பலவாறாகத் தலைப்பிடுகிறார்கள். இதனால் ஒரே வார்ப்புரு பலமுறை உருவாகுவதற்கு வாய்ப்பாகிறது. தமிழ்விக்கி ஒரே குப்பையாகப் போய்விடும். இதனைக் கூறுவதால் நான் தமிழுக்கு எதிரி என நினைத்து விடாதீர்கள். பயனுள்ள பல துப்பரவாக்கல்கள் உள்ளன. அவற்றை செய்யுமாறு வேண்டுகிறேன். நீங்கள் உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்.--Kanags\உரையாடுக07:49, 10 சூன் 2014 (UTC)[பதிலளி]
கட்டுரைத் தலைப்பை மாற்ற வேண்டாம். கட்டுரைகளில் உள்ள இஸ்லாமியச் சட்டம் என்ற பகுப்பை நீக்கி இசுலாமியச் சட்டம் என்ற புதிய பகுப்பை சேர்க்க வேண்டும்.--Kanags\உரையாடுக08:20, 10 சூன் 2014 (UTC)[பதிலளி]
முடிந்த வரை அல்ல, கட்டாயம் செய்யுங்கள். அவ்வாறு முடியாவிட்டால், ஒரு நாளைக்கு இவ்வளவு (10-20) என்று சிறு தொகுப்புகளை மட்டுப்படுத்துங்கள்.--Kanags\உரையாடுக11:18, 12 சூன் 2014 (UTC)[பதிலளி]
ஆங்கிலப் பெயரில் உள்ள வார்ப்புருக்களைத் தமிழ் பெயருக்கு வழிமாற்றினால் போதுமானது. ஒவ்வொரு கட்டுரையாக சென்று தமிழுக்கு மாற்ற வேண்டாம். இனி வரும் காலங்களில் தமிழ் வார்ப்புருப் பெயர்களையே பயன்படுத்துமாறு பயனர்களிடம் வேண்டலாம். தொடுப்பிணைப்பி போன்றவற்றில் ஆங்கில பெயருடைய வார்ப்புருவுக்குப் பதிலாக தமிழ் பெயருடைய வார்ப்புருவைச் சேர்க்கலாம். இன்னொன்று, உங்கள் பயனர் கணக்கில் இருந்து தானியங்கித் தொகுப்புகளைச் செய்ய வேண்டாம். தானியங்கித் தொகுப்பு என்று குறிப்பிடாமலும் தானியங்கி வசதியைப் பயன்படுத்த வேண்டாம். ஏற்கனவே தானியங்கி இயக்குவோரின் உதவியைப் பெறுங்கள். அல்லது, புதிய தானியங்கிக் கணக்குக்கு விண்ணப்பியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 09:32, 15 சூன் 2014 (UTC)[பதிலளி]
கவனத்திற்கு, நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோளை தொகுப்பை நீக்கவும், மீளமைக்கவும் செய்துள்ளீர்கள். இவ்வாறு செய்வது முறையல்ல. முடிந்தவிடயங்கள் நீக்கப்படாது இங்குள்ளவாறு பரணேற்றப்பட வேண்டும். மீளமைத்தல் பயன்பாட்டை இங்கு பார்க்கவும். நன்றி. --AntonTalk17:58, 12 சூன் 2014 (UTC)[பதிலளி]
சிறீகர்சன், குறுங்கட்டுரைகள் பகுப்பில் தற்போது 3500 இற்கு மேல் கட்டுரைகள் சேர்ந்து விட்டன. பொதுவாக இவ்வாறான பகுப்பில் கட்டுரைகளை உப பகுப்புகளினுள் தான் சேர்க்க வேண்டும். தகுந்த உப பகுப்புகளுக்குள் இனி மேல் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தகுந்த உபபகுப்புகள் இல்லாவிட்டால் அவற்றை தகுந்த வார்ப்புருக்கள் மூலம் உருவாக்குங்கள். இவ்வாறான வேலைகளைச் செய்தவற்கு தானியங்கிகளை அணுகுங்கள். பயனர் செயரத்தினா போன்றோர் தானியங்கிகள் வைத்துள்ளார்கள். இன்னும் பலரிடம் உள்ளது. அவர்களைக் கொண்டு செய்யுங்கள். அல்லது நீங்களே தானியங்கியை எவ்வாறு இயக்குவது என்பதைக் கற்று ஒரு தானியங்கிக் கணக்கை உருவாக்குங்கள். இனிமேல் இவ்வாறான தொகுப்புகளை உங்கள் கணக்கில் செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன்.--Kanags\உரையாடுக08:00, 13 சூன் 2014 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்க காலத்தில் ஆங்கில விக்கிப்பீடியா வழக்கத்தைப் பின்பற்றி இவ்வாறு குறுங்கட்டுரை வார்ப்புரு இட்டோம். ஆனால், இவ்வாறு வார்ப்புரு இடுவதால் பெரிய பயனில்லை என்பதால் பிறகு வார்ப்புரு இடும் வழக்கத்தைத் தொடரவில்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் கிட்டத்தட்ட 2 கிலோ பைட்டுக்கு குறைவான கட்டுரைகள் மட்டும் 18,000. துறை சார்ந்து இவற்றுக்கு குறுங்கட்டுரை வார்ப்புரு இடுவதும் கூட உரிய பயனைத் தருமா என்பது ஐயமே. ஏனெனில், குறித்த கால நீக்கம், கட்டுரைப் போட்டி என்று பலவாறு அணுகினாலும் குறுங்கட்டுரைகள் விரிவாவதில்லை. சிறப்பு:ShortPages போன்ற பக்கங்களே குறுங்கட்டுரைகளை இனங்காண போதுமானவை. அதே வேளை நீங்கள் இவ்வாறு வார்ப்புரு இட்ட சூன் 11, 12 தேதிகளில் கட்டுரை எண்ணிக்கை பெருமளவு உயர்ந்திருப்பது நல்ல விசயம். ஒரு வேளை உள்ளிணைப்புகள் இல்லாத கட்டுரைகளில் இந்த வார்ப்புருவைச் சேர்ப்பதால் கட்டுரை எண்ணிக்கை கூடுகிறதா? எப்படியாயினும் குறுங்கட்டுரை வார்ப்புரு சேர்ப்பதை மட்டும் ஒரு தொகுப்பாக செய்யாமல் கட்டுரையில் பிற மேம்பாடுகளையும் செய்வது வரவேற்கத்தக்கது.
துடுப்பாட்டக்காரர்கள் தொடர்பான கட்டுரைகளில் தொடர்ந்து "ஆவார்" என்ற ஒற்றைச் சொல்லைச் சேர்ப்பது போன்ற மாற்றங்களைத் தொடர்ந்து செய்திருந்தீர்கள். இது போன்ற ஒரே மாதிரியான தொகுப்புகளை தானியங்கிகள் மூலம் செய்ய முடியும். அவற்றையும் கூட ஒரு கட்டுரையில் இவ்வாறு தானியக்கமாக செய்யப்படும் மாற்றங்கள் என்ன என்று ஆய்ந்து ஒரே தொகுப்பில் செய்வது நன்று. --இரவி (பேச்சு) 09:30, 15 சூன் 2014 (UTC)[பதிலளி]
மு.ப.க இற்றைப்படுத்தலுக்கு நன்றி. இது தொடர்பில் சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன். இது தொடர்பில் பிற பயனர் கருத்து கேட்க விரும்பின் பொருத்தமான இடத்தில் இது தொடர்பில் வினவுங்கள்.
அடுத்து இடம்பெறவிருக்கும் கட்டுரை எவை என்பதை முன்னமே அறியத்தாருங்கள். இதனால் மற்றவர்கள் திருத்த, மறுக்க, மேம்படுத்த இடமுண்டு. முன்பு இதுதொடர்பில் குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன. இங்குமுதற்பக்கத்தில் இடம்பெறப்போகும் கட்டுரைப் பரிந்துரைகள் என்பதில் தயாராகவுள்ள கட்டுரைகளைப் பட்டியலிடுங்கள் அதற்கு முன்பு, பயனர் பரிந்துரைகள் என்பதில் இடப்பட்டு முதற்பக்கத்தில் இடம்பெற தயாராகட்டும். திடீர் திடீரென முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவது சிக்கல்களை ஏற்படுத்தலாம். தற்போதுள்ள கட்டுரைகளை தக்க இடத்தில் இட்டு ஒழுங்குபடுத்துங்கள். தற்போதுள்ள முதற்பக்கத்தில் இடம்பெறப்போகும் கட்டுரைப் பரிந்துரைகள் என்பதில் உள்ள கட்டுரைகள் 'பயனர் பரிந்துரைகள் என்பதில் கீழ் வர வேண்டும்.
பொதுவாக காப்புரிமையற்ற படிமங்களே முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தலாம் என்ற வரைமுறை விக்கிப்பீடியாவில் உண்டு என்ற கருத்து உள்ளது. இங்கேயும் இது பற்றி கருத்திடப்பட்டுள்ளது. எனவே காப்புரிமையற்ற படிமங்களை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்த வேண்டாம் என நினைக்கிறேன்.
முன்பு, ஒவ்வொரு ஞாயிறும் முதற்பக்கத்தில் இடப்பட்டு வந்தது. தற்போது திங்களில் இடம்பெறுகிறது. இனிமேல் இதுதான் முறையென்றால்(?), அடுத்து இடம்பெற இருப்பவை என்ற தலைப்பின் கீழ் இரு நாட்களுக்கு முன்பே தயாராக இருந்தால் நிருவாகிகளில் ஒருவர் இற்றைப்படுத்துவார். நீங்களும் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்க வேண்டியதில்லை. ஒரு மாதத்திற்குரிய கட்டுரைகள் தயாராக அங்கு இருந்தால் இன்னும் சிறப்பு.
AWB, தானியக்கத் தொகுப்புகளை உங்கள் கணக்கில் இருந்து செய்வதை உடனே நிறுத்த வேண்டுகிறேன். இது குறித்து ஏற்கனவே உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டும் உள்ளது. தனியாக தானியங்கிக்கு என ஒரு கணக்கு தொடங்கி விண்ணப்பியுங்கள். நன்றி. - இரவி
தொடர்ந்து உங்கள் கணக்கு தானியங்கித் தொகுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் ஒரு நாளுக்கு மட்டும் உங்கள் கணக்கைத் தடுத்து வைத்துள்ளேன். தானியங்கித் தொகுப்புகளுக்கு என தனிக்கணக்கு உருவாக்கி தானியங்கி அணுக்கத்துக்கு விண்ணப்பியுங்கள். அணுக்கம் கிடைக்கும் வரை இவ்வாறான தொகுப்புகளில் ஈடபட வேண்டாம். நன்றி.--இரவி (பேச்சு) 11:12, 19 சூன் 2014 (UTC)[பதிலளி]
@இரவி அவர்களே! பேச்சுப்பக்க அறிவிப்பை நீங்கள் இட்டபோது நான் கை யில் தொடங்கும் வீரர்களின் பெயரில் தொகுத்துக்கொண்டிருந்ததால் கை முடியும்வரை தொடர்ந்தேன். பின்னர் நிறுத்திவிட்டேன். தடையை நீக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். தானியங்கிக் கணக்கு உருவாக்காமல் awb ஐக் கொண்டு தொகுப்பதில் தவறேதும் உள்ளதா? இருப்பின் தெரியப்படுத்துங்கள். awb ஒரு தானியங்கி அல்லவே மாறாக பாதி தானியங்கி (semi-automated) என நினைக்கின்றேன். முன்னர் //இது போன்ற ஒரே மாதிரியான தொகுப்புகளை தானியங்கிகள் மூலம் செய்ய முடியும்// என்று கூறியதாலேயே பாதி தானியங்கி மூலம் அத்தொகுப்புக்களைச் செய்ய முயன்றேன்.
//விக்கிப்பீடியா சமூகம் பக்கங்களை இற்றைப்படுத்தத் தயக்கமேதும் இன்றித் துணிவாகச் செயல்படுக என்று ஊக்கப்படுத்துகிறது. நம்மைப் போன்ற விக்கிகள்,அவற்றில் பிழை திருத்தவும்,இலக்கணத்தைச் சரியாக்கவும், சரியான சொல்லைப் பயன்படுத்தவும் பலரும் பங்களிப்பதாலேயே வேகமாக வளர்கிறது. பங்குபெறும் எல்லோரும் துணிவாக விக்கிப்பீடியா ஓர் சிறந்த கலைக்களஞ்சியமாக உருவெடுக்க உதவிட வேண்டும். எத்தனை முறை நீங்கள் படிக்கும் நேரத்தில் "ஏன் இத்தனை பிழைகளைத் தொகுக்காது விட்டிருக்கிறார்கள்?" என்று எண்ணியிருப்பீர்கள். எவ்வளவு முறை இதனை நாமே செய்திருக்கலாமே என எண்ணியதுண்டு? விக்கிப்பீடியாவில் நீங்கள் செய்திகளைச் சேர்க்க,மாற்ற,திருத்த முடியும். சற்றுப் பணிவுடன் செயல்பட வேண்டியது நல்லது என்றாலும், எல்லா மாற்றங்களையும் எவரும் செய்யலாம். நினைவில் கொள்க - நீங்கள் எழுதியதை/திருத்தியதை மற்றவர்களும் தொகுக்க முடியும். இதனால் வருந்தாதீர்கள்! அவர்களும் நம்மைப்போன்று தமிழ் விக்கிப்பீடியாவைச் சிறந்த கலைக்களஞ்சியமாக எடுத்துச் செல்ல விழைபவர்களே!// இவ்வாறு விக்கிப்பீடியா:துணிவு கொள் இல் உள்ளதுடன் நான் தவறான மாற்றங்களேதும் புரியவில்லை. உரிய நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:31, 19 சூன் 2014 (UTC)[பதிலளி]
@இரவி அவர்களே! தாங்கள் தற்போது வேறேதாவது வேலையில் ஈடுபட்டதால் இதனை உடனடியாகக் கவனிக்கத் தவறியிருக்கலாம். தயவு செய்து இயன்றவரை உடனடியாகப் பதிலளியுங்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:44, 19 சூன் 2014 (UTC)[பதிலளி]
நீங்கள் செய்த தொகுப்பில் தவறு இல்லை. awb தொகுப்பு தானியக்கத் தொகுப்பாகவே கருதப்படும். அதனைத் தானியங்கிக் கணக்கில் இருந்தே செயற்படுத்த வேண்டும். நீங்கள் தனியாக தானியங்கிக் கணக்கு தொடங்கி தானியங்கி அணுக்கம் பெறும் வரை இவ்வாறான தொகுப்புகளைச் செய்வதில்லை என்று உறுதி அளித்தால், உடனே தடையை விலக்கிக் கொள்கிறேன். தானியங்கிக் கணக்கில் இருந்து செய்யும் போதும், எவ்வாறான தொகுப்புகளைச் செய்வீர்கள் என்பதை முன்கூட்டியே குறிப்பிட வேண்டும். ஒரே பக்கத்தில் பல மாற்றங்களைச் செய்ய எண்ணினால், அவற்றை ஒரே தொகுப்பில் செய்து விடுவது நன்று. பல நூறு பக்கங்களைப் பாதிக்கக் கூடிய தொகுப்புகள் என்றால் அவற்றையும் முன்கூட்டியே பேச்சுப் பக்கத்தில் உரையாடிச் செய்யலாம். ஏனெனில், தானியங்கி அணுக்கம் பெற்ற பிறகு, உங்கள் தொகுப்புகள் பெருவாரியான பயனர்களின் கண்ணில் படாது. எடுத்துக்காட்டுக்கு, நீங்கள் வார்ப்புரு பெயரை ஒவ்வொரு பக்கத்திலும் தமிழுக்கு மாற்றிய தொகுப்பில் தவறு இல்லை. ஆனால், அது தேவையில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது. நன்றி. --இரவி (பேச்சு) 12:14, 19 சூன் 2014 (UTC)[பதிலளி]
சிறீகர்சன், துடுப்பாட்டக்காரர்கள் பற்றிய கட்டுரைகளில் பெரும்பாலானவற்றில் தகவல் பிழைகள் உள்ளன. அவை முதலில் களையப்பட வேண்டும். இந்த 3000 கட்டுரைகளிலும் ஆவார் சேர்ப்பதால் எவ்விதப் பயனும் கிடைக்கப்போவதில்லை. அந்த நேரத்தில் ஓரிரு கட்டுரைகளை முழுமையாகத் திருத்தலாம்.--Kanags\உரையாடுக12:23, 19 சூன் 2014 (UTC)[பதிலளி]
@இரவி அவர்களே! தங்கள் புரிதலுக்கும் விளக்கத்திற்கும் நன்றி. தானியங்கிக்கு என்று முன்பே பயனர்:Shribot என்ற கணக்கைத் தொடங்கியிருந்தேன். அக்கணக்கிற்குத் தானியங்கி அணுக்கம் கோருகின்றேன். நான் தனியாகத் தானியங்கிக் கணக்கு தொடங்கி தானியங்கி அணுக்கம் பெறும் வரை இவ்வாறான தொகுப்புகளைச் செய்வதில்லை என்று உறுதி அளிக்கின்றேன் விக்கிப்பீடியாவில் இனி என் தானியங்கி அகல உழும் நான் ஆழ உழுவேன்:)--ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:47, 19 சூன் 2014 (UTC)[பதிலளி]
@கனக்ஸ் அவர்களே! //இந்த 3000 கட்டுரைகளிலும் ஆவார் சேர்ப்பதால் எவ்விதப் பயனும் கிடைக்கப்போவதில்லை.// இவ்வாறு கூறுவது பொருத்தமற்றது என நினைக்கின்றேன். தமிழ் இலக்கண முறைக்கேற்பவே ஆவார் என்பதனைச் சேர்த்தேன். துடுப்பாட்டம் தொடர்பான கட்டுரைகளுக்கும் புத்துயிர் அளிக்கும் வகையில் வலைவாசல்:துடுப்பாட்டம் உருவாக்கப்பட்டுள்ளது நாமும் இணைந்து முடிந்தவரை பங்களிப்போம்:)--ஸ்ரீகர்சன் (பேச்சு)
12:47, 19 சூன் 2014 (UTC)
தடையை விலக்கி வைத்துள்ளேன். தானியங்கித் தொகுப்புகளைத் தற்காலிக நிறுத்துவதற்கு வேறு வழியில்லாமலேயே கணக்கைத் தடை செய்ய வேண்டி வந்தது. இதனை உங்கள் மீதான தடையாக எண்ண வேண்டாம். எந்தக் கட்டுரையிலும் தானியங்கியைக் கொண்டு சிறு தொகுப்புகள் செய்வதில் சிக்கல் இல்லை. ஆனால். ஆயிரக்கணக்கான ஒரே மாதிரியான கட்டுரைகளில் மாற்றங்களைச் செய்யும் போது, ஒரே தொகுப்பில் ஒரு பக்கத்துக்கான அனைத்து மாற்றங்களையும் செய்யுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது தேவையற்ற தொகுப்பு எண்ணிக்கையைத் தவிர்க்கும். நன்றி.--இரவி (பேச்சு) 13:52, 19 சூன் 2014 (UTC)[பதிலளி]
@இரவி அவர்களே! நன்றி, ஆனால் தடைப்பதிகையில் என் பெயரும் இடம்பெற்றதுதான் மனதிற்குக் கொஞ்சம் கவலையாக உள்ளது. அனைத்தும் விக்கியில் ஏற்படும் வித்தியாசமான அனுபவங்களே! மனந்தளராமல் தொடர்ந்து பங்களிப்பேன். இனிமேல் என் பங்களிப்புக்கள் விக்கிக்கு நன்மையளிக்கும் வகையில் புரட்சிகரமானதாக இருக்கும். அதற்கு ஒட்டுமொத்த விக்கிக் குடும்பமும் ஒத்துழைப்பீர்கள் என நம்புகின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:24, 20 சூன் 2014 (UTC)[பதிலளி]
சிறீகர்சன், கவலை வேண்டாம். அதனால் தான், நேற்றே //தானியங்கித் தொகுப்புகளைத் தற்காலிக நிறுத்துவதற்கு வேறு வழியில்லாமலேயே கணக்கைத் தடை செய்ய வேண்டி வந்தது. இதனை உங்கள் மீதான தடையாக எண்ண வேண்டாம்.// என்று குறிப்பிட்டு இருந்தேன். நிறுத்தி வைத்த வண்டி சறுக்குப் பாதையில் ஓடும் போது பிடித்து நிறுத்துவது மாதிரி தானியக்கமாக ஓடிக் கொண்டிருந்த கணக்கை நிறுத்த வேறு வழியில்லை. மனித முறையில் செய்யப்பட்ட தொகுப்பு என்றால் தடைக்கு அவசியம் இல்லை. விக்கியில் முதற்கட்டுரை நீக்கப்பட்டவர்கள், விக்கி புரியாமல் தொகுத்து தடை செய்யப்பட்ட பலர் மிகச் சிறந்த பங்களிப்பாளர்களாக மாறி இருக்கிறார்கள். தொடர்ந்து சிறப்பாக பங்களியுங்கள். --இரவி (பேச்சு) 13:17, 20 சூன் 2014 (UTC)[பதிலளி]
விருப்பம்இரவி அவர்களே! நிச்சயமாக அதனாலேயே //அனைத்தும் விக்கியில் ஏற்படும் வித்தியாசமான அனுபவங்களே! மனந்தளராமல் தொடர்ந்து பங்களிப்பேன்.// என்று குறிப்பிட்டிருந்தேன். வாழ்த்துக்கு நன்றி!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:45, 21 சூன் 2014 (UTC)[பதிலளி]
வார்ப்புரு:Infobox hotel என்பது ஆங்கில விக்கியில் Infobox building என்பதற்கு வழிமாற்றப்பட்டிருந்தது. இதனால், இங்கும் ஒரு வழிமாற்று உருவாக்கினேன்.--Kanags\உரையாடுக07:45, 21 சூன் 2014 (UTC)[பதிலளி]
உங்கள் இருவருக்கும் நன்றி. நான் ஆங்கில விக்கியிலிருந்து தகவற்பெட்டியை காப்பி&பேஸ்ட் கொடுத்து தொகுத்தால் தகவற்பெட்டி தோன்றாமல் சிவப்பு நிறத்தில் ’வார்ப்புரு: ....’ எனத் தெரிந்தது. ஏன், என்ன தவறு என்று எனக்குப் புரியவில்லை. (இன்று ’தி பார்க்’ கட்டுரைக்கு முயன்றேன். முன்பொருநாள் ’ஐடிசி கிரான்ட் சோழா ஹோட்டல்’ கட்டுரைக்கு முயற்சி செய்தேனென நினைக்கிறேன்) இப்பொழுது எனது டெஸ்ட் பக்கத்தில் முயற்சி செய்து பார்த்தால் சரியாகத் தோன்றுகிறது.
மற்றுமொரு உதவி, ’ஹோட்டல்’ என்பதற்குப் பொருத்தமான தமிழ்ச் சொல்லைப் பரிந்துரைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். இக்கட்டுரைகளுக்கான பகுப்பினை உருவாக்க உதவியாக இருக்கும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 07:14, 21 சூன் 2014 (UTC)[பதிலளி]
ஒரே நாளில் நான்கு பதக்கங்கள் ! அடுத்து வாகையாளருக்கு எனச் சிறப்புப் பதக்கம் ஒன்று வடிவமைத்துக் கொண்டு வருகிறேன். முன் கூட்டிய வாழ்த்துகள் !--இரவி (பேச்சு) 13:27, 24 சூன் 2014 (UTC)[பதிலளி]
எவ்வளவு பதக்கங்கள், நம்பவே முடியலை! ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என கேள்விப்பட்டிருக்கன், ஆனா இங்கை ஒரு கல்லில் ? மாங்காய்கள். வாழ்க வளமுடன்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 14:16, 24 சூன் 2014 (UTC)[பதிலளி]
அடுத்து இடம்பெறவிருக்கும் கட்டுரை எவை என்பதை முன்னமே அறியத்தாருங்கள். முன்னறிவிப்பில்லாமல் திடீர் திடீரென முதற்பக்கத்தில் காட்சிப்படுத்த வேண்டாம். பரிந்துரைத்து மறுப்பில்லாதவிடத்தே கட்டுரைகளை மு.ப. காட்சிப்படுத்தவும். எ.கா: இவ்வார மு.ப. கட்டுரை '''பிழை காட்டு: <ref> குறிச்சொல் உள்ளது, ஆனால் <references/> குறிச்சொல் காணப்படவில்லை''' என்று ஆயத்தமற்ற நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. --AntonTalk19:29, 24 சூன் 2014 (UTC)[பதிலளி]
வணக்கம், சிறீகர்சன். 2013 கட்டுரைப் போட்டிப் பரிசுகள், பரிசுத் தொகை விவரம் இங்கு உள்ளது. ஒரு முறை சரி பார்த்து விடுங்கள். உங்கள் பரிசுத் தொகை, சான்றிதழை அனுப்பி வைக்க பின்வரும் விவரங்கள் தேவை. இவற்றை ravidreams at gmail dot com என்ற முகவரிக்கு, ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து அனுப்பி வையுங்கள். இங்கு பொதுவில் பகிர வேண்டாம். தாங்கள் என்னுடன் பகிரும் தகவல் வேறு யாருடனும் எக்காரணம் கொண்டும் பகிரப்படாது என்று உறுதியளிக்கிறேன்.
உங்கள் வங்கிக் கணக்கு விவரம் (கணக்கில் உள்ள முழுப்பெயர், கணக்கு எண், கணக்கின் வகை (சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு போல), வங்கியின் பெயர், வங்கி முகவரி, வங்கிக் கிளையை அடையாளம் காண்பதற்கான குறியீட்டு எண் (இந்தியாவில் இதனை IFSC எண் என்று கூறுவோம்)
மேற்கண்ட விவரத்தைப் பகிர விரும்பவில்லை என்றால், பரிசுத் தொகை காசோலை மூலம் அனுப்பி வைக்க இயலும். அதற்கு
வங்கிக் கணக்கில் உள்ள உங்கள் முழுப்பெயர் விவரம் தேவை.
சான்றிதழ்கள் / காசோலை அனுப்பி வைக்க உங்கள் இல்ல முகவரி தேவை.
இவ்விவரங்கள் கிடைத்த உடன் மின்மடல் மூலம் மறுமொழி அளித்து உறுதிப்படுத்துகிறேன். பரிசுத் தொகையும் சான்றிதழும் சூலை மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும்.
இந்த விவரங்களை எனக்கு அனுப்பி வைத்திருந்தால் தெரியப்படுத்துங்கள். இல்லை எனில், உடன் அனுப்பி வைத்து விட்டு இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 14:46, 30 சூலை 2014 (UTC)[பதிலளி]
இவ்வாரம் இடம்பெற்ற தமிழ் அச்சிடல் பற்றிய கட்டுரை ஏற்கனவே முதற்பக்கத்தில் இடம்பெற்று விட்டது. நல்ல கட்டுரைகள் மீண்டும் இடம்பெறுவதில் தவறில்லை. ஆனாலும் புதிய கட்டுரைகள் இல்லாத பட்சத்தில் இது ஏற்றுக் கொள்ளக்கூடியதே. தவறாமல் முதற்பக்கத்தை இற்றைப் படுத்துவதற்கு எனது வாழ்த்துகள்.--Kanags\உரையாடுக20:52, 15 சூலை 2014 (UTC)[பதிலளி]
கனக்ஸ் அவர்களே பேச்சுப்பக்கத்தைப் பார்த்து மு.ப வில் முன்னரே இடம்பெற்றுள்ளதா என சோதித்தே கட்டுரைகளைத் தெரிவுசெய்வேன். தவறுதலாகக் கவனிக்காது விட்டுவிட்டேன். எனக்கு ஓர் உதவி செய்வீர்களா? இரண்டாம் தவணைப் பரீட்சை அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ளதால் அடுத்த வாரம் மு.ப கட்டுரைகளை இற்றைப்படுத்த முடியாது. ஆகவே நீங்கள் உருவாக்கி இற்றைப் படுத்தி உதவ முடியுமா?--ஸ்ரீகர்சன் (பேச்சு) 21:32, 15 சூலை 2014 (UTC)[பதிலளி]
சிறீகர்சன், உங்கள் அண்மைய தொகுப்புகள் பல AWB தானியங்கித் தொகுப்புகள் போல் தெரிகிறது. தெளிவுபடுத்த முடியுமா? எடுத்துக்காட்டுக்கு, ஒரே நிமிடத்தில் நான்கு, ஐந்து வெவ்வேறு சிறு பக்கங்களில் பல்வேறு சிறு தொகுப்புகள் செய்துள்ளீர்கள். மனித முறையில் இவ்வாறு செய்வது சாத்தியம் இல்லை என்றே நினைக்கிறேன். ஏற்கனவே இவ்வாறு செய்வதில்லை என்று உறுதி மொழி அளித்ததுடன் உங்கள் தானியங்கி வேண்டுகோளும் நிலுவையில் இருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டி உள்ளது. நன்றி.--இரவி (பேச்சு) 19:02, 16 சூலை 2014 (UTC)[பதிலளி]
சிறீகர்சன், நீங்கள் நேற்று செய்த மாற்றங்கள் குறித்து எனது ஆதங்கம்: இங்கு உப பகுப்புத் தலைப்புகளில் நிங்கள் செய்துள்ள மாற்றங்களைப் பாருங்கள். இவையெல்லாம் தேவை தானா? இவ்வாறான திருத்தங்கள் அவசியமற்றது. தானியங்கி மூலமோ அல்லது நேரடியாகவோ இவ்வாறான மாற்றங்களைச் செய்யாதீர்கள். எனது சில ஆயிரக்கணக்கான கட்டுரைகளிலும் நீங்கள் மாற்றம் செய்யப்போகிறீர்களா? இதனால் விக்கிபீடியாவுக்கோ அல்லது குறிப்பிட்ட கட்டுரைகளுக்கோ என்ன நன்மை? நீங்கள் செய்துள்ளவாறு தான் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் என்று எங்காவது எழுதி வைத்துள்ளார்களா? உங்கள் தொகுப்பு எண்ணிக்கைகளை அதிகரித்துக் காட்டுவதால் உங்களுக்கு அது நன்மையாக இருக்கலாம்:)--Kanags\உரையாடுக21:00, 16 சூலை 2014 (UTC)[பதிலளி]
இரவி அவர்களே உறுதி மொழி அளித்த பின்னர் தொடர்ந்தும் AWB கொண்டு தொகுக்கும் அளவு நான் மோசமானவன் அல்ல. நான் autoFormatter கொண்டே இத்தொகுப்புக்களைச் செய்தேன். கடந்த இரு நாட்களும் இரவிலேயே இத்தொகுப்புக்கள் செய்யப்பட்டதை அவதானித்திருப்பீர்கள். குறிப்பிட்ட தினத்தில் விரிவாக்கப்பட்ட கட்டுரைகளை அண்மைய மாற்றத்தில் தெரிவு செய்து அக்கட்டுரைகளில் உள்ள general fix களை மேற்கொண்டேன். இவ்வாறாக அன்றைய தினம் விரிவாக்கப்பட்ட கட்டுரைகளில் துப்புரவை மேற்கொண்டேன். கனக்ஸ் அவர்களே //உங்கள் தொகுப்பு எண்ணிக்கைகளை அதிகரித்துக் காட்டுவதால் உங்களுக்கு அது நன்மையாக இருக்கலாம்:)// இவ்வாறு பிறர் மனம் புண்படும்படி கூறுவதைத் தவிருங்கள். அவர் என்ன நோக்கோடு அத்தொகுப்புக்களைச் செய்தார் என அறியாமல் இவ்வாறு கூறுவது முறையல்ல. அவ்வாறு தொகுப்பு எண்ணிக்கைகளை அதிகரித்துக் காட்டுவதால் எனக்கு என்ன நன்மை? சற்று விளக்க முடியுமா??? //எனது சில ஆயிரக்கணக்கான கட்டுரைகளிலும் நீங்கள் மாற்றம் செய்யப்போகிறீர்களா?// நான் நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளைத் தேடித் தொகுக்கவில்லை. அண்மைய மாற்றத்தில் விரிவாக்கப்பட்ட கட்டுரைகளிலேயே தொகுத்தேன். //எனது சில ஆயிரக்கணக்கான கட்டுரைகள்// எனக் கூறுவதைத் தவிருங்கள். அதற்குப் பதிலாக நான் உருவாக்கிய சில ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எனக் கூறுவது பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் இங்கு உருவாக்கப்படு கட்டுரைகள் யாருக்கும் சொந்தமானவை அல்ல. உருமேனியா, மலேரியா, விளம்பரம், புற்றுநோய் போன்ற கட்டுரைகளில் மேற்கொண்ட தொகுப்புக்களையும் பாருங்கள். இவை பயனற்றவையா? இப்படியான general fix களை மேற்கொள்வதில் என்ன தவறு உள்ளது. தவறுகள் இருப்பின் தெரிவிக்கவும் அது உண்மையில் தவறென்றால் நிறுத்திக் கொள்கின்றேன். இவ்வாறாக அண்மைய மாற்றத்தில் உள்ள விரிவாக்கப்பட்ட கட்டுரைகளைத் தெரிவுசெய்து general fix களை AWB இல் மேற்கொள்ள முடியாது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 04:14, 17 சூலை 2014 (UTC)[பதிலளி]
சிறீகர்சன், இந்தப் பேச்சுத் தலைப்பிற்கு முந்தைய தலைப்பினை நீங்கள் கவனித்தீர்களா என்பது தெரியவில்லை. எவ்வித பிரச்சனையும் இல்லாத formatகளை திருத்தி நமது வளத்தை வீணாக்குவதைத் தவிர்க்கலாமே? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:42, 17 சூலை 2014 (UTC)[பதிலளி]
சிறீகர்சன், துப்புரவுப் பணிகளில் உதவுவதற்கு நன்றி. https://meta.wikimedia.org/wiki/User:TMg/autoFormatter பின்வருமாறு கூறுகிறது: "Auto-Formatter is a user script that semi-automatically fixes more than 200 common errors..." இந்த semi-automatically என்ற தன்மை தான் தானியங்கித் தொகுப்போ என்ற ஐயத்தைக் கிளப்பியது. AWB பயன்படுத்துவது மட்டும் தான் தானியங்கித் தொகுப்புக்கணக்கில் வரும் என்றில்லை. பைத்தான் நிரல் பயன்படுத்தி ஏவப்படும் பணிகள் முதற்கொண்டு, ஒவ்வொரு பக்கத்துக்கும் பயனர் நேரடியாகச் சென்று தொகுக்காத பணிகள் அனைத்தும் தானியங்கிப் பணிகள் தாம். எனினும், இந்த autoFormatter நிரல் ஒவ்வொரு பக்கத்திலும் மனித ஊடாட்டத்தைக் கோருவதால் இதனை முழுமையான தானியங்கித் தொகுப்பாக கருத முடியாதுள்ளது. Hot Cat, தொகுப்பிணைப்பி ஆகியவற்றோடு ஒப்பு நோக்க வேண்டியுள்ளது. இனி, இவ்வாறான தொகுப்புகளைச் செய்யும் போது சிறு தொகுப்பு என குறியுங்கள். தொகுப்புச் சுருக்கத்தில் Autoformatter பயன்படுத்தி விக்கி குறியீடுகள் திருத்தம் என குறிப்பிடுங்கள். இவ்வாறு முன்பே செய்திருந்தால் இத்தொகுப்புப் பணி பற்றிய குழப்பம் வந்திருக்காது. இந்த நடைமுறையில் யாருக்கேனும் மாற்றுக்கருத்து இருந்தால் தொடர்ந்து உரையாடுவோம்.
மா. செல்வசிவகுருநாதன், இந்த நிரல் சில மாற்றங்களைத் தவிர்ப்பதற்கான வழி வகைகளைக் கூறுகிறது. ஆனால், பகுதி-தானியக்கமான பணியில் ஒட்டுமொத்தமாக எல்லா மாற்றங்களையும் செய்து விட்டுப் போவதில் தவறில்லை. ஏதேனும் தவறு இருந்தால் சுட்டலாம். பயன் என்ன என்ற நோக்கில் பார்ப்பது சிரமம். ஒரு நிரலாளரின் பார்வையில் இருந்து இவ்வாறான விக்கிக் குறியீடுகள் ஒழுங்குடன் இருப்பது முக்கியமாகப் படலாம். இவ்வாறான மாற்றங்கள் ஆங்கில விக்கிப்பீடியாக்களில் செய்யப்படுவனவே.--இரவி (பேச்சு) 05:10, 17 சூலை 2014 (UTC)[பதிலளி]
கவனிக்க: இவர் மாதமிருமுறை வெளிவரும் பத்திரிகையான "பிரபோதன்" அல்லது "ஞானோபதேசம்" என்று பொருள்படும் பத்திரிகையில் தாம் எழுதிய கட்டுரைகளால், பாலகட் மத்தியப் பிரதேசத்தில், பிரபோதாங்கர் டாக்கரே என்றும் அறியப்பட்ட கேஷவ் சீதாராம் தாக்கரே என்பவரின் மகனாகக் கீழ் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார்???--♥ ஆதவன் ♥。◕‿◕。♀ பேச்சு ♀11:14, 28 சூலை 2014 (UTC)[பதிலளி]
Yஆயிற்று அதைத் தான் செய்துகொண்டிருந்தேன் அதற்குள் முந்திக்கொண்டு தகவல் இட்டுவிட்டீர்கள். சென்றவாரம் தவணைப் பரீட்சைகள் நடைபெற்றதால் இற்றைப்படுத்தும்படி கனக்சிடம் உதவி கேட்டிருந்தேன். (காண்க) ஆனால் யாரும் அக்கறைகாட்டியதாகத் தெரியவில்லை. அதனால் நானே அவசர அவசரமாக இற்றைப்படுத்தினேன். அதனால் தான் குறித்த மாற்றங்களை அப்போதே மேற்கொள்ள முடியவில்லை.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:34, 28 சூலை 2014 (UTC)[பதிலளி]
சூன் 16, 2013 தொடங்கிய தங்களுடைய தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பின் முதலாம் ஆண்டு நிறைவைப் பாராட்டி தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவர் சார்பாகவும் இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். கட்டுரைப் போட்டியைக் களைகட்ட வைத்தது, துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளல், ஆழ்ந்த விக்கி நுட்ப அறிவு என்று தங்கள் பங்களிப்புகள் மலைக்க வைப்பவை. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள் !--இரவி (பேச்சு) 05:24, 8 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
@பூங்கோதை அவர்களே டேவிட் சில்வர்மேன் கட்டுரையில் மேற்கோள்கள், வெளி இணைப்புகள் ஆகிய தலைப்புக்களின் கீழுள்ள சில வெளியிணைப்புக்கள் தொடர்பிழந்த இணைப்பாகக் காணப்படுவதால் அவை அத்தளத்தின் முதற்பக்கத்திற்கு வழிமாற்றப்படுகின்றன. அதன் காரணமாகவே மேற்குறிப்பிட்ட பகுப்பு அக்கட்டுரையுடன் தன்னியக்கமாக இணைந்துவிட்டது. ஆங்கிலக்கட்டுரையிலும் இப்பகுப்பு இணைந்துள்ள போதிலும் அப்பகுப்பை மறைத்துள்ளனர். தமிழிலும் தற்போது அவ்வாறே பகுப்பை மறைத்துள்ளேன். இப்போதும் அப்பகுப்பில் டேவிட் சில்வர்மேன் கட்டுரை உள்ளடக்கப்பட்டிருந்தாலும் வெளிப்படையாகக் கட்டுரையின் கீழ் தெரியாது.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 05:43, 12 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
ஸ்ரீகர்சன், நான் (வரு)கிறது என்று எழுதும் இடங்களில் எல்லாம் (வரு)கின்றது என திருத்தி வருகிறீர்கள். நிகழ்காலத்தைக் குறிக்க கிறு, கின்று,ஆநின்று என மூன்றும் பயன்படுத்தலாம் என படித்துள்ளேன். இருப்பினும் இலக்கணத்தில் தெளிவு பெற உங்களை நாடுகி(ன்)றேன். --மணியன் (பேச்சு) 12:33, 27 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
கிறு என்பதைவிட கின்று என்று இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்துத் திருத்தினேன். வருகிறது என்றிருந்தாலும் தவறில்லை.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:46, 12 செப்டம்பர் 2014 (UTC)
கர்சன், முதற்பக்கக் கட்டுரை வார்ப்புருவை உருவாக்கும் போது,
ஆங்கிலச் சொற்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கட்டுரைகள் சுருக்கமாகத் தாருங்கள். முதற்பக்கத்தின் முதல் (நீள்) அரைப்பங்கு மிக நீளமாகவும், மற்றைய அரைப்பங்கு சிறியதாகவும் வராமல், இரு பக்கமும் ஏறத்தாழ சமமாக இருக்கத்தக்கதாக கட்டுரைப் பகுதிகளை சேர்க்க வேண்டும்.
நபர்கள் பற்றிய கட்டுரைகளில் பிறந்த ஆண்டு, இறந்த ஆண்டுகள் கட்டாயம் தரப்பட வேண்டும்.
இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஆலோசனைகள் வழங்குவது பலருக்குப் பிடிப்பதில்லை.--Kanags\உரையாடுக 03:19, 20 செப்டம்பர் 2014 (UTC)
நீங்கள் செய்திருந்த ஒரு மாற்றத்தை மீள்வித்திருக்கிறேன். முதலில், இரு சொற்களுக்கிடையே ஒரு இடைவெளி கட்டாயம் விட வேண்டும். மேலும், நான் எனது தட்டச்சுக் கருவி மூலமே - என்ற குறியீட்டை எழுதுகிறேன். இதனை நீங்கள் மாற்ற வேண்டியது என்ன அவசியம். உருள்கூர்ந்து இவ்வாறான மாற்றங்களை வேண்டுமானால் தானியங்கி கருவி மூலம் செய்யுங்கள். உங்கள் பயனர் கணக்கில் செய்ய வேண்டாம். முன்னரும் உங்களுக்கு இது பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி.--Kanags\உரையாடுக20:06, 15 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
தம்பி, மக்களவை தொடர்பான பகுப்புகளை கட்டுரைகளில் இருந்து தேவையில்லாமல் நீக்கியிருக்கிறாய். பின்னர், வார்ப்புருவை பகுப்பின் பக்கத்தில் இணைத்திருக்கிறாய். இதன் மூலம் விளையும் நன்மை என்ன? மூல பகுப்பை பார்த்தாயா? அதே பகுப்பு அதற்கே துணை பகுப்பாகி சுழற்சி முறையில் செல்கிறது. பகுப்புகளை கட்டுரையில் இருந்து நீக்குவதால் பலனில்லை. மொத்தமாக பகுப்புகளை நீக்குவதற்கு முன்னர் ஒரு முறை கேட்டிருக்கலாம். :(-தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:39, 19 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
தேவையுடன் தான் நீக்கினேன் அண்ணா! //வார்ப்புருவை பகுப்பின் பக்கத்தில் இணைத்திருக்கிறாய்.// வார்ப்புருவை பகுப்பின் பக்கத்தில் இணைத்தது நானல்ல. //இதன் மூலம் விளையும் நன்மை என்ன?// //மொத்தமாக பகுப்புகளை நீக்குவதற்கு முன்னர் ஒரு முறை கேட்டிருக்கலாம்.// ஒரு மக்களவை குறித்த வார்ப்புரு இருக்கும் போது பகுப்பையும் அதனுடன் இணைத்துவிட்டால் அனைத்துக் கட்டுரைகளிலும் இணைந்துவிடும். பிற்காலத்தில் இரட்டை வேலையை தவிர்க்க இது உதவும். //மூல பகுப்பை பார்த்தாயா? அதே பகுப்பு அதற்கே துணை பகுப்பாகி சுழற்சி முறையில் செல்கிறது.// தற்போது நீங்கள் கூறிய பிரச்சினையைச் சரிசெய்துள்ளேன் கவலை வேண்டாம். //மொத்தமாக பகுப்புகளை நீக்குவதற்கு முன்னர் ஒரு முறை கேட்டிருக்கலாம்.// விக்கிப்பீடியா சமூகம் பக்கங்களை இற்றைப்படுத்தத் தயக்கமேதும் இன்றித் துணிவாகச் செயல்படுக என்று ஊக்கப்படுத்துகின்றது. (காண்க:விக்கிப்பீடியா:துணிவு கொள்)--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}}12:57, 19 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
சிறீகர்சன், இவ்வாறான வார்ப்புருக்களை பகுப்புகளில் இணைக்க வேண்டாம். வார்ப்புருக்களில் இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகளைக் கொண்டே அது தானியங்கியாகத் தோன்ற வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும். உதாரணமாக, தமிழ்நாடு மாவட்டங்கள் வாரியான வார்ப்புருக்களில், தமிழ்நாடு போன்ற பொதுவான கட்டுரைகளும் இணைக்கப்பட்டுள்ளன. அவ்வாறான கட்டுரைகளில் இவ்வாறு பகுப்பை சேர்க்கும் போது அது தமிழ்நாடு கட்டுரையிலும் தேவையற்றுத் தோன்றும். இதற்காகத் தானோ என்னவோ, இந்தத் தானியங்கி இணைப்புகள் ஆங்கில விக்கியில் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை.--Kanags\உரையாடுக19:55, 19 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
//உதாரணமாக, தமிழ்நாடு மாவட்டங்கள் வாரியான வார்ப்புருக்களில், தமிழ்நாடு போன்ற பொதுவான கட்டுரைகளும் இணைக்கப்பட்டுள்ளன.// ஆனால் வார்ப்புரு தமிழ்நாடு கட்டுரையில் இணைக்கப்பட்டாலேயே அக்கட்டுரை இப்பகுப்பினுள் இணைந்துவிடும். இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டே இப்பணியைச் செய்யத் தொடங்கினேன்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}}10:45, 20 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
ஏன் இதனை எச்சரிக்கை எனக் குறிப்பிட்டீர்கள்? நான் autoFormatter கொண்டே இத்தொகுப்புக்களைச் செய்தேன். இவை தானியங்கித் தொகுப்புக்கள் அல்ல. விக்கிக் குறியீடுகள் அவற்றிற்குரிய முறைப்படி அமைவதே பொருத்தமானதாகும். இதுகூட ஒருவகை துப்புரவுப் பணிதான். ஒட்டு மொத்தமாக பல பக்கங்களில் ஒரே மாதிரியான மாற்றங்களை செய்யத்தான் தானியங்கிகளை உபயோகப்படுத்துவார்கள்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}}02:59, 24 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
இவ்வாறு நீங்கள் விக்கிக்குறியீடுகளை மாற்றுவதென்றால் அனைத்து 63,000 கட்டுரைகளிலும் இந்த மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும். அதனை ஏன் தானியங்கியாக செய்ய முடியாது? ஆங்கில விக்கியில் இவ்வாறான தொகுப்புகளை பெருந்தொகையில் செய்வதற்கு சாதாரண கணக்கில் அனுமதிக்க மாட்டார்கள். எச்சரிக்கையுடன் தடுக்கப்படுவார்கள். அதற்காகவே எச்சரிக்கை விடுத்தேன். இங்கு என்ன உரை திருத்தம் செய்திருக்கிறீர்கள்?--Kanags\உரையாடுக08:43, 24 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
Kangas, முந்தைய கருத்தில் சரியான இணைப்பைத் தர தவறி விட்டேன். இதனைப் பார்க்கவும். நான் சொன்னால் சரியாக இருக்கும் என்றெல்லாம் இல்லை. மாற்றுக் கருத்துகளை முன்வையுங்கள். என் கூற்றில் தவறு இருந்தாலும் திருத்துங்கள். autoformatter கொண்டு செய்யும் தொகுப்புகளில் அப்பக்கத்தைத் திறந்து அந்தப் பொத்தானை அழுத்தும் உழைப்பாவது இருக்கிறது. ஒரு பயனர் இதனை ஒவ்வொரு பக்கமாகத் திறந்து தான் செய்ய முடியும். இதனைத் தானியங்கியாகச் செய்யும் வழியிருந்தால் கட்டாயமாக அவ்வாறே செய்யலாம். ஆனால், தற்போதைய நிலையில் இக்கருவியைப் பயன்படுத்த தானியங்கி முறை இருப்பதாகத் தெரியாத நிலையில், எச்சரிக்கை விடுக்கவோ தடுக்கவோ வேண்டாம். சிறு தொகுப்புகளாக குறிக்க மட்டும் வேண்டலாம். ஒரு பயனர் தன்னுடைய நேரத்தில் இன்னும் பயன் மிகு தொகுப்புகளைச் செய்யலாம் தான். ஆனால், இதுவும் பயன்மிக்கதே என்று ஒருவர் கருதுவாரானால், அந்தப் பங்களிப்புக்கும் இடம் தர வேண்டும் அல்லவா? நன்றி.--இரவி (பேச்சு) 21:36, 1 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
பூங்கோதை அவர்களே வார்ப்புரு:தகவல்பெட்டி புத்தகம் இல் சில வழுக்கள் இருந்தமையாலேயே இப்பிரச்சினை இருந்தது. நான் தற்போது ஆங்கில விக்கியில் உள்ள தற்போதைய பதிப்பிற்கேற்ற வகையில் தமிழில் மொழிபெயர்த்துவிட்டேன். ஆண்டிறுதிப் பரீட்சைகள் நடைபெற்றதால் சில நாட்களாக விக்கியில் பங்களிக்க முடியவில்லை. வேறேதாவது உதவி தேவைப்படின் கேளுங்கள். நன்றி:)--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}}07:40, 6 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
வணக்கம் Shrikarsan!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
வணக்கம் சிறீகர்சன், வழமை போலவே இம்மாதம் உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். இம்மாதமும் தொடர்ந்தும் மேலும் பல முனைப்பான பங்களிப்பாளர்களை உருவாக்குவது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை இங்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:47, 16 சனவரி 2015 (UTC)[பதிலளி]
என்னுடைய விக்கியன்பு ஒழுங்காக வேலை செய்யவில்லை விக்கிபுயல் என்பதற்கு பதிலாக சிகரம் தொட்ட பதிவர் என்ற பதக்கமே சரி. தகவற்சட்டத்தை சரிபார்க்கவும் குறிப்பாக பரப்பளவு ஏன் 3 என்று காட்டுகிறது எனத் தெரியவில்லை --குறும்பன் (பேச்சு) 18:13, 4 சனவரி 2015 (UTC)[பதிலளி]
குறும்பன்அவர்களே நன்றி:) உங்களதும் ஏனைய விக்கி அன்பர்களதும் பரிபூரண ஒத்துழைப்பே கட்டுரை மெருகேற உதவியது. உங்களுடன் தொடர்ந்தும் ஒன்றிணைந்து பங்களிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையைச் சொன்னால் கட்டுரைகளை விரிவாக எழுத என்னைத் தூண்டியது நீங்கள் தான். கட்டுரைப் போட்டியில் விரிவாக எழுதி என்னைக் கவர்ந்தீர்கள். பின்னர் நானும் விரிவாக எழுதி விரிவான கட்டுரைக்கான வாகையர் பட்டத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். பிலிப்பீன்சு கட்டுரையும் கட்டுரைப் போட்டியின்போது ஏப்ரல் மாதம் நான் விரிவாக்கிய கட்டுரைதான்.
நீங்கள் பிரதான → முதன்மை , விமானம் → வானூர்தி போன்ற சில சொற்பதங்களை மாற்றும் போது தான் அவை அச்சொற்களுக்குரிய சரியான தமிழ்ப்பதம் என்பதை அறிந்துகொண்டேன். பரப்பளவு மொத்தம் 3,00,000 கிமீ² 120,000 சது. மை என்று இருக்க வேண்டியது பரப்பளவு மொத்தம் 3 கிமீ² 120 சது. மை என்று இருப்பதற்கு formatnum இருமுறை பயன்படுத்தப்பட்டதே காரணம் தற்போது வார்ப்புருவில் சரிசெய்துவிட்டேன். உங்கள் ஆதரவிற்கும் உதவிகளுக்கும் நன்றி. தொடர்ந்தும் விக்கிக்கு எம்மாலான பங்களிப்புக்களை வழங்குவோம்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}}11:09, 5 சனவரி 2015 (UTC)[பதிலளி]
நன்றி ஸ்ரீஹீரன், நன்றி மணியன் அவர்களே! பாடசாலைக் கல்விக்கிடையில் தொடர்ந்து கட்டுரைகளை விரிவாக எழுதுவது கடினம்:( க.பொ.த சா/த மற்றும் க.பொ.த உ/த பரீட்சைகளும் நெருங்குகின்றன. காலம் இருக்கின்றது! முடியும்போதெல்லாம் விரிவாக எழுதுகின்றேன்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}}11:01, 7 சனவரி 2015 (UTC)[பதிலளி]
தகவலுக்காக: ஆ.வி.யில் சிறப்புக் கட்டுரையாக்கம் பொதுவாக சில முறைகளைத் தாண்ட வேண்டும். அவையாவன Good article > Peer review > Featured article nomination. இதில் Good article கட்டயமில்லை ஆனால் Peer review கட்டாயமானது. இதனை பயனர் வெளியில் வைத்திருக்காது கட்டுரையின் பேச்சு வெளிக்கு நகர்த்துங்கள். பேச்சு:பிலிப்பீன்சு/நக1 என்று இருக்கலாம். (நக = நல்ல கட்டுரை) உதாரணத்திற்கு நான் அண்மையில் செய்த நல்ல கட்டுரைக்கான மதிப்பு GA1. ஆனால் Peer review, Featured article nomination என்பன விக்கியின் பிரதான பக்கங்களிலேயே துணைப்பக்கங்களாக இருக்கும். --AntonTalk 07:59, 8 பெப்ரவரி 2015 (UTC)
தகவலுக்கு நன்றி அன்டன் அவர்களே! ஆங்கில விக்கியில் Peer review அவசியமானது என்பதை அறிவேன். தமிழில் அவ்வாறானதொன்று இல்லாததால் இப்பக்கத்தை உருவாக்கிச் சிறப்புக் கட்டுரையாக்கத்தை மேற்கொண்டேன். கட்டுரையின் பேச்சு வெளியிலும் Peer review செய்யலாம் என்று எனக்குத் தெரியாது. இப்பக்கத்திற்கும் Peer review இற்கும் வித்தியாசம் உள்ளது போல் உள்ளது. இதனைப் பேச்சு வெளிக்கு நகர்த்துவது பொருத்தமாக இருக்குமா? உங்கள் கருத்தை எதிர்பார்க்கின்றேன்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 12:37, 9 பெப்ரவரி 2015 (UTC)
ஆம், பேச்சு வெளிக்கு நகர்த்துவது பொருத்தமாக இருக்கும். கட்டுரை முறையான கட்டங்களைக் கடந்து வந்துள்ளது என்பதற்கு ஆதாரமாகவும் இருக்கும். வரைபடங்களைத் தமிழாக்க முயற்சிக்கிறேன். சிபியும் உதவலாம். --AntonTalk 16:08, 10 பெப்ரவரி 2015 (UTC)
Yஆயிற்றுஅன்டன் அவர்களே! நீங்கள் கூறியபடி இப்பக்கத்திற்கு நகர்த்தியுள்ளேன். உதவ முன்வந்தமைக்கு நன்றி.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 19:06, 10 பெப்ரவரி 2015 (UTC)
முதற்பக்கம் இற்றைப்படுத்தல் - முதற்பக்கக் கட்டுரைகள்
முதற்பக்கம் இற்றைப்படுத்தல் - முதற்பக்கக் கட்டுரைகள் வணக்கம், தற்போது சில காலமாக முதற்பக்கக் கட்டுரைகள் இற்றைப்படுத்தலில் தொய்வுத் தன்மை தெரிக்கின்றது. நீங்களும் முதற்பக்கக் கட்டுரை பராமரிப்பாளர்களில் ஒருவர் என்பதால் இது தொடர்பில் கருத்துத் தெரிவிப்பது பயனுள்ளதாக அமையும். குறித்த திட்டப்பக்கத்திலோ ஆலமரத்தடியிலோ இதுபற்றி உரையாடலாம். நன்றி. --AntonTalk 07:52, 8 ஏப்ரல் 2015 (UTC)
அன்டன் அவர்களே பாடசாலை பரீட்சைகள் மற்றும் க.பொ.த சா/த காரணமாக என்னால் அதிக நேரம் இங்கு பங்காற்ற முடியவில்லை. இது தொடர்பாக என் பங்களிப்பை அவ்வப்போது தரத் தயாராக உள்ளேன். நன்றி--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 12:26, 15 ஏப்ரல் 2015 (UTC)
சிறீகர்சன், பூட்டிய வார்ப்புருகள் பட்டியல் ஏதும் இருக்கிறதா? இதில் எவற்றை மேம்படுத்த விரும்புகிறீர்கள் என்று தெரிவித்தால், தங்கள் பணி முடியும் வரை திறந்து வைக்க உதவுகிறேன். தங்களைப் போன்று இன்னும் பல வார்ப்புரு உருவாக்குநர்கள் தங்கள் ஆர்வத்தைத் தெரிவிக்கும் போது வார்ப்புரு தொகுப்பாளர்களுக்கான அணுக்கத்தை உருவாக்குவோம். நன்றி. --இரவி (பேச்சு) 10:05, 14 ஏப்ரல் 2015 (UTC)
இரவி அவர்களே முழுமையாகக் காக்கப்பட்ட வார்ப்புருக்களின் பட்டியலை இங்கும் முழுமையாகக் காக்கப்பட்ட Module களின் பட்டியலை இங்கும் காணலாம். இவற்றுள் வார்ப்புரு:Coor dm இல் உள்ள உள்ளடக்கம் அனைத்தையும் எடுத்துவிட்டு காப்பையும் நீக்கிவிட்டு அதனை வார்ப்புரு:Coord இற்கு நீங்களே வழிமாற்றிவிடுங்கள்.
த.வி யில் உள்ள சில சிக்கலான வார்ப்புருக்கள் மற்றும் Module கள் ஆ.வி யில் உள்ளது போல் முழுமையாகக் காக்கப்படவேண்டும். எடுத்துக்காட்டாக வார்ப்புரு:இவ்வார முதற்பக்கக் கட்டுரை, வார்ப்புரு:Convert, வார்ப்புரு:Userbox, வார்ப்புரு:Coord, வார்ப்புரு:Infobox மற்றும் இவ்வார்ப்புருக்களுடன் இணைந்த Module கள் (Module:Convert/data, Module:Convert/text, Module:Coordinates, Module:Userbox, Module:Infobox மற்றும் பிற) என்பவற்றைக் குறிப்பிடலாம். இவற்றின் பராமரிப்புப் பணியை நான் SEPTEMPLATE திட்டத்தினூடாக மேற்கொள்கின்றேன். ஆனால் இவை முழுமையாகக் காக்கப்படும் பட்சத்தில், ஆர்வமும் நுட்ப அறிவும் இருக்கும் பட்சத்திலும், இவற்றின் பராமரிப்புப் பணியை தொடர்ந்து என்னாலோ நிர்வாகியல்லாத பிற பயனராலோ செய்யமுடியாது போகலாம். ஆ.வி யில் மேம்பாட்டுப் பணிகள் துரிதகதியில் இடம்பெறும் வேளையில் இது த.வி யில் ஒரு தேக்க நிலையை உருவாக்கிவிடும். இதனால் தான் நான் வார்ப்புரு தொகுப்பாளர்களுக்கான அணுக்கத்தை உருவாக்க முன்மொழிந்தேன். இதன்மூலம் நிர்வாகியல்லாத ஆனால் வார்ப்புரு, Module தொடர்பான நுட்ப அறிவும் அனுபவமும் மிக்க பயனர்கள் முழுமையாகக் காக்கப்பட்ட வார்ப்புருக்கள் மற்றும் Module களை இலகுவாகப் பராமரிக்க முடியும்.
தற்போது முழுமையாகக் காக்கப்பட்டுள்ள சில வார்ப்புருக்கள் தேவையற்றவையாகவும் (வார்ப்புரு:Sitesupportpage), காப்பு நீக்கம் செய்யப்பட வேண்டியனவாகவும் (வார்ப்புரு:Coor d) உள்ளன. இவற்றைக் கவனித்து ஆவன செய்ய வேண்டுகின்றேன்--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 13:34, 15 ஏப்ரல் 2015 (UTC)
விவரங்களுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட விசயங்கள் தொடர்பாக உரிய மாற்றங்களைச் செய்துள்ளேன். சில ஐயங்களையும் கோரி உள்ளேன். உங்கள் பதிலுக்கு ஏற்ப அடுத்து தேவையான மாற்றங்களைச் செய்கிறேன். இப்போது வார்ப்புரு தொகுப்புக்கு என்று சிறப்பு அணுக்க வசதி இல்லாத நிலையில் மேலும் பல வார்ப்புருக்களைப் பூட்டுவது உகந்தது அன்று. ஏதேனும் வார்ப்புருவில் தொடர் விசமம் அல்லது பயனர்கள் அறியாமல் பிழை செய்தால், காப்பிடுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 06:33, 23 ஏப்ரல் 2015 (UTC)
சிறீகர்சன், மற்ற மொழி விக்கிப்பீடியர்கள் சிலருக்கு நுட்ப உதவி தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, இங்கு பாருங்கள். அவ்வப்போது இந்த நுட்ப உதவி மன்றத்தைக் கவனித்து உதவ முடியுமா? நன்றி.--இரவி (பேச்சு) 06:16, 23 ஏப்ரல் 2015 (UTC)
இரவி அவர்களே நிச்சயமாக முடியும்போது உதவுகின்றேன்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 06:27, 24 ஏப்ரல் 2015 (UTC)
Translating the interface in your language, we need your help
Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:07, 26 ஏப்ரல் 2015 (UTC)
மதனாகரன் அண்ணா இப்போதும் விக்கிப்பீடியா:முன்னிலையாக்கர் பக்கத்தில் <dot-separator> எனத் தோன்றுகின்றதா? (எனக்குத் தோன்றவில்லை). இம்மாற்றத்தை நேற்றிரவுதான் செய்தேன். வார்ப்புருவில் இயல்பிருப்பாக separator ஆக இருந்த dot இனை tpt-languages ஆக மாற்றியிருந்தேன். dot-separator ஏன் வேலைசெய்யவில்லை என இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}}11:12, 18 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
மதனாகரன் அண்ணா #ifexist என்பது ஒரு expensive ParserFunction. #invoke என்பது Module களைச் செயற்படுத்துவதற்கான ஒரு Function. பயன்பாட்டினை அறிய நான் தந்துள்ள இணைப்புகளைப் பாருங்கள். விக்கி நுட்பம் தொடர்பில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்டதால் கையொப்பத்தில் இவற்றை இணைத்துள்ளேன்:)--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}}13:22, 20 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
உங்கள் பக்கத்திலுள்ள பழைய உரையாடல்களைக் காப்பகத்தில் ஏற்றாமல் நிரலைப் பயன்படுத்திச் சுருக்கியுள்ளீர்கள். பழைய உரையாடல்களை ஏற்ற நேரமெடுப்பதால் கைப்பேசியில் புதிய உரையாடல்களைப் படிக்கக் கடினமாக உள்ளது. உங்கள் பழைய உரையாடல்களைக் காப்பகத்தில் ஏற்றினால் உதவியாக இருக்கும். நன்றி. --மதனாகரன் (பேச்சு) 04:51, 2 செப்டம்பர் 2015 (UTC)
மதனாகரன் அண்ணா முன்னரும் ஏனைய விக்கிப்பீடியர்கள் பரணேற்றும்படி கேட்டுக்கொண்டார்கள். பரணேற்ற விருப்பமில்லாததால் நிரலைப் பயன்படுத்திச் சுருக்கினேன். விரைவில் பரணேற்ற முயற்சிக்கின்றேன்:)--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 04:23, 9 செப்டம்பர் 2015 (UTC)
ஆ.வி.யில் Module:HtmlBuilder பார்த்தீர்களா? சில நாட்களாக வழு நிலவரங்களைக் கவனிக்கவில்லை. --AntanO 15:48, 10 செப்டம்பர் 2015 (UTC)
அன்டன் அவர்களே கவனத்திற்குக் கொண்டுவந்தமைக்கு நன்றி. ஆ.வி.யில் தற்போது Module:HtmlBuilder பயன்பாட்டிலில்லை. த.வியில் Module:HtmlBuilder பயன்பாட்டிலுள்ள Module களை முதலில் சரிப்படுத்திவிடுகின்றேன். பின்பு Module:HtmlBuilder ஐ ஆ.வி.யில் உள்ளபடி மாற்றிவிடலாம். இன்றே விரைந்து செய்து முடிக்கின்றேன்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 09:58, 11 செப்டம்பர் 2015 (UTC)
Yஆயிற்றுஅன்டன் அவர்களே சரிசெய்துவிட்டேன்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 10:35, 11 செப்டம்பர் 2015 (UTC)
நன்றி, ஸ்ரீகர்சன் --AntanO 17:56, 11 செப்டம்பர் 2015 (UTC)
நேரங் கிடைக்கும்போது வார்ப்புரு:Chem ஐச் சரிசெய்து தரமுடியமா? சல்பேற்று என்ற பக்கத்திலும் சிக்கல் எழுந்துள்ளது. SO42- என்று வரவேண்டிய இடத்தில் O4S என்று வருகின்றது. --மதனாகரன் (பேச்சு) 05:25, 14 செப்டம்பர் 2015 (UTC)
Yஆயிற்று ஆண்டன் சரிசெய்துள்ளார். --மதனாகரன் (பேச்சு) 06:22, 14 செப்டம்பர் 2015 (UTC)
விரைந்து உதவியமைக்கு நன்றி அன்டன் அவர்களே தற்போது பாடசாலை ஆரம்பமாகிவிட்டதாலும், இன்னொரு விடயத்தில் (?) மேம்படுத்தல்களைச் செய்துவருவதாலும் அதிகம் பங்களிக்க முடிவதில்லை. முடியும் போதெல்லாம் வார்ப்புருகளை மேம்படுத்தி உதவுகின்றேன்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 11:38, 14 செப்டம்பர் 2015 (UTC)
மதனாகரன் அண்ணா, அன்டன் அவர்களே வேதியல் வார்ப்புருகளை பகுதி பகுதியாக ஆ.விக்கு ஏற்றபடி இற்றைப்படுத்தி வருகின்றேன். வார்ப்புரு:Chembox Identifiers உடன் தொடர்புபட்ட அனைத்து வார்ப்புருகளையும் சரிசெய்துவிட்டேன்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 13:03, 15 செப்டம்பர் 2015 (UTC)
தமிழ் விக்கியில் நீங்கள் தரவேற்றிய உங்கள் சொந்தப் படிமங்களை அவற்றைப் பொதுவில் விடுவதாக இருந்தால், நீங்களே பொதுவகத்தில் மீண்டும் தரவேற்றலாம். அவை அங்கு ஏற்றுக் கொள்ளப்பட்டால், இங்குள்ள படிமங்களை நீக்க படிமங்களில் {{nowcommons}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.--Kanags\உரையாடுக 08:17, 20 செப்டம்பர் 2015 (UTC)
Yஆயிற்று நன்றி கனக்ஸ் அவர்களே--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 08:34, 20 செப்டம்பர் 2015 (UTC)
நுட்பத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட வேண்டுகோள்
வணக்கம். மீடியாவிக்கி தொடர்புடைய நுட்பத்தில் ஆர்வமும் திறமும் உடைய நீங்கள் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவராகச் செயற்பட்டால் நன்றாக இருக்கும். இணைய வேண்டுகிறேன். விவரங்களை இங்கு காணலாம். நன்றி.--இரவி (பேச்சு) 08:06, 13 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
@இரவி அவர்களே க.பொ.த சா/த பரீட்சை டிசம்பர் மாதம் வரவுள்ளதால் தற்போது பங்களிக்க முடியாதுள்ளது. டிசம்பர் 17 இன் பின்னர் இணைய வழி ஒருங்கிணைப்பில் முனைப்புடன் ஈடுபட முடியும்:)--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}}03:50, 14 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
நல்ல கருவி அண்ணா. வாழ்த்துக்கள் :) சிறப்பாக செய்திருக்கிறீர்கள். எனக்கு வாய்ப்பளிக்காமல் தான் பதக்கம் தந்தமைக்கு மதனாகரன் அண்ணாவைக் கடிந்துகொள்ளவே முடிகிறது. :) --♥ ஆதவன் ♥。◕‿◕。♀ பேச்சு ♀09:57, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]
சோதித்துப் பார்த்தேன். இது போன்ற நுட்பப் பணிகளில் தாங்கள் காட்டும் ஆர்வம் சிறப்பு. இதனை விருப்பத் தேர்வுகள்->கருவிகள் பகுதியில் வருமாறு செய்யலாமே? பழைய விக்கியன்பு கருவியை நீக்கி விடலாம்.--இரவி (பேச்சு) 13:24, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]
Yஆயிற்று. ஆனால், தற்போது பதக்கம் அளிப்பதற்கான விக்கியன்பு இதயம் புலப்படவில்லை. ஒவ்வொரு பக்கம் திறக்கும் போதும் பெயர், அறிவிப்புச் சின்னங்களுக்கு அருகே புதிதாக ஒரு விக்கியன்பு இதயம் தொடர்பாக உள்ள இணைப்புகள் விரிந்து சுருங்குகின்றன. இதனைச் சோதித்துப் பார்த்து சரி செய்ய வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 15:04, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]
இரவி அவர்களே மீடியாவிக்கி:Gadget-wikilove2.css பக்கத்திலுள்ள உள்ளடக்கத்தை @import url('//ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shrikarsan/விக்கியன்பு2.css&action=raw&ctype=text/css'); என்று மாற்றிவிடுங்கள். பின்பு சரியாகிவிடும். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}}15:23, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.--இரவி (பேச்சு) 18:57, 26 மார்ச் 2016 (UTC)
தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் ஒரு நாளே உள்ளது.--இரவி (பேச்சு) 13:11, 27 மார்ச் 2016 (UTC)
சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.
பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
Antan அப்போது பேருந்திலிருந்ததால் கைபேசியில் தமிழில் தொகுக்க முடியவில்லை. அதனால் தான் தொகுத்தல் சுருக்கமின்றி முன்னிலையாக்கினேன். ஆனால் பேச்சுப்பக்கத்தில் காரணத்தைத் தெரிவித்திருந்தேனே?--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}}06:25, 10 மே 2017 (UTC)[பதிலளி]
Antan அதைத் தான் முன்னரே எனக்குத் தெரியுமென்று குறிப்பிட்டிருந்தேனே. நான் அப்போது தொகுத்துக்கொண்டிருந்த சூழல் அப்படிப்பட்டது.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}}06:51, 10 மே 2017 (UTC)[பதிலளி]
Antan நீங்கள் எப்படி அவ்வாறு கூறமுடியும். வார்ப்புருவிலேயே (இவ்வாறு]) கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும் என்று உள்ளது. நீங்கள் தானே பேச்சுப்பக்கதில் தெரிவிக்காமல் முதலில் வார்ப்புருவை நீக்கினீர்கள். ஒரு தடவை கவனித்திருந்து பேச்சுப்பக்கத்தில் தெரிவித்த பின் மீளமைத்திருக்கலாம். நீங்கள் தொகுப்புச் சுருக்கத்தில் as per discussion at village pump எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் அவை புதிய ஆசிரியப் பயனர்களுக்கே என நினைத்தேன். அதனால் தான் அவ்வாறான புதிய ஆசிரியர்களது கட்டுரைகளை ஏதும் செய்யாது பயனர்:Shrikarsan/துப்புரவு இப்பக்கத்தில் அவற்றை பின்னாளில் கண்காணிப்பதற்காக ஒழுங்குபடுத்திவருகின்றேன். எடுத்துக்காட்டாக கல்வி நிலைகள். கட்டுரை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் உள்ளது. சில நேரடி கூகுள் தமிழாக்கமாக உள்ளன (எ.கா. தொடக்கப் பள்ளி). இவ்வாறான குப்பைகளுக்கு நான் நீக்கல் வார்ப்புரு இடவில்லையே. நீங்கள் என் சூழ்நிலையை புரிந்துகொள்வீர்கள் என நினைத்தேன். உங்களைப் போலவே பலரும் (நான் உட்பட) வேலைப் பளுவின் மத்தியில் தான் இயன்றவரை பங்களிக்கின்றோம். புதியவர்களை அரவணைப்போம் அதேவேளை பிற பயனர்களது சூழலும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}}07:28, 10 மே 2017 (UTC)[பதிலளி]
இத்தொகுப்பை நீங்கள் செய்யும் போது ஏன் பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவில்லை. நான் முன்னிலையாக்கினதில் ஏதும் தவறுள்ளதா? நான் சூழலுக்கமைய முடிந்தவரை சரியாகவே பங்களித்திருந்தேன். ஏன் பேச்சுப் பக்கத்தில் உரையாடாமல் வார்ப்புருவை முதலில் நீக்கினீர்கள். அதனாலேயே முன்னிலையாக்கினேன். பின்னரும் பேச்சுப் பக்கத்தில் உங்களுக்கு விளக்கவே முனைந்தேன். மன்னிக்கவும் வகுப்பிற்குச் செல்லவிருப்பதால் தற்போது தொடர்ந்து பதிலளிக்க முடியாது.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}}07:49, 10 மே 2017 (UTC)[பதிலளி]
Antan அப்பயனர் tnse பங்களிப்பாளரும் அல்ல. வேறொருவர் உருவாக்கியதை தவறுதலாக மீண்டும் உருவாக்கவும் இல்லை. தானே இரு முறை இரு பெயரில் கட்டுரையை உருவாக்கியிருந்தார்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}}07:52, 10 மே 2017 (UTC)[பதிலளி]
உண்மை. ஆலமரத்தடி கருத்துக்களைப்பாருங்கள். tnse இல்லாமலும் பதிவு செய்திருக்கலாம் என்கிறார்கள். தற்போதைக்கு இறுக்கம் வேண்டாம் என்பதால் இவ்வாறு செய்ய வேண்டியுள்ளது. --AntanO07:58, 10 மே 2017 (UTC)[பதிலளி]
Antan, சிறப்பு:Contributions/Maruff மார்ச்சிலிருந்து பங்களிக்கின்றார் அதனால் தான் tnse இல்லை என் நினைத்தேன். மன்னிக்கவும் தாங்கள் முதலில் கேட்டதற்கான பதில் - நான் மீளமைக்கவில்லை முன்னிலையாக்கினேன் அதனால் தான் தொகுப்புச் சுருக்கத்தில் விளக்க முடியவில்லை. தானாகவே தொகுப்புச் சுருக்கம் உருவாகிவிடும். அதனால் தான் பேச்சுப் பக்கத்தில் விளக்க முயன்றேன். நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டீர்கள்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}}08:21, 10 மே 2017 (UTC)[பதிலளி]
@AntanO: மன்னிக்கவும் அன்டன். இங்கு நீங்கள் உரையாடும் பாங்கு ஏற்றுக் கொள்ள முடியாதது. இது முற்றிலும் புரிந்துணர்வு (empathy) இன்றி இருக்கிறது. ஒரு பயனர் தீநோக்கோடு விசமத் தொகுப்பில் ஈடுபடாதவரை அவர் பங்களிக்க நேர்ந்த சூழலைக் கருத்தில் கொள்வது தகும். ஆங்கில விக்கிப்பீடியாவின் சின்னச் சின்ன விதிகளையும் நடைமுறைகளையும் இங்கு பின்பற்றக் கோருவது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி நிலையைக் கருத்தில் கொள்ளும் போது நல்விளைவைத் தராது. --இரவி (பேச்சு) 13:33, 10 மே 2017 (UTC)[பதிலளி]
நான் வார்புரு இட்டால் அதனை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் முரண்பட்டதை அறிந்திருக்கலாம். மீளமைப்பதும் மற்ற பயனருக்கு தாக்கம் ஏற்படுத்தும் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? தர்க்க ரீதியாக யாரும் உரையாடலாம். இங்கு தர்க்கித்தது யார்? அல்லது உங்களுக்கு வந்தால் இரத்தம். மற்றவருக்கு என்றால்..... என்ற மனநிலையா? நான் என்ன செய்தாலும் குற்றம் காண வேண்டும் என்ற மனநிலையா? நான் என்ன செய்தாலும் அது தவறு. அப்படித்தானே?--AntanO13:51, 10 மே 2017 (UTC)[பதிலளி]
உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.
இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:
தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.
நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:
இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.
வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.
2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.
ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.
இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.
வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.
இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.
நன்றி. --இரவி (பேச்சு) 09:42, 10 மார்ச் 2018 (UTC)
கட்டுரைப் போட்டியில் தலைப்புகள் குறித்த முக்கிய மாற்றம் ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். மீண்டும் நினைவூட்டுகிறேன். இப்போட்டியின் விளைவு என்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மட்டுமன்று, பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கும், நம்மைப் போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த விக்கிப்பீடியாக்களுக்கும் பெரும் பயன் நல்க வல்லது. ஆகவே, மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள். (யாராச்சும் சோடா கொடுங்கப்பா :) ) போட்டியில் கலந்து கொண்டு திட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:49, 13 மார்ச் 2018 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
வணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G