உள்ளடக்கத்துக்குச் செல்

த சாடோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த சாடோ
இயக்கம்ரசல் மல்ஹஹே
தயாரிப்புவில்லி பார்
மார்டின் ப்ரெக்மேன்
மைகேல் ஸ்கோட் ப்ரெக்மேன்
கதைடேவிட் கோப்
இசைஜெரி கோல்ட்ஸ்மித்
நடிப்புஅலெக் பால்ட்வின்,பெனொலொப் அன் மில்லர்,ஜோன் லோன்,ஜயான் மக்கெல்லென்
ஒளிப்பதிவுஸ்டீபன் எச்.பரும்
படத்தொகுப்புபீட்டர் ஹோன்ஸ்
விநியோகம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
வெளியீடுஜூலை 1, 1994
ஓட்டம்108 நிமிடங்கள்.
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$40 மில்லியன்

த சாடோ (The Shadow) திரைப்படம் 1994 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.1937 ஆம் ஆண்டு வால்டர் பி.கிப்சன் உருவாக்கிய கதாபாத்திரமான சாடோவே 1994 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தின் கருவாகும் 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வரைபடக் கதைகள் பாணியில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.[1][2][3]

வகை

[தொகு]

நாவல்படம் / தற்காப்புக்கலைப்படம்

கதை

[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

முதலாம் உலகப்போரில் அமெரிக்க இராணுவீரனாகப் பணியாற்றும் லாமொண்ட் கிரான்ஸ்டொன் (அலெக் பால்ட்வின்) போரில் ஏற்படும் வெறுப்புணர்வாலும் அலுப்புகளினாலும் போரிலிருந்து விலகி திபெத்து நாட்டில் போதைப் பொருட்களை விற்பவனாகவும் மேலும் பல தீய செயல்களிலும் ஈடுபடுபவனாகவும் விளங்குகின்றான்.இதற்கிடையில் அங்கு ஒரு புத்த மதப் பிக்குவினைச் சந்தித்துக்கொள்ளும் அவன் அங்கிருந்து மனதை ஒருங்கு நிலைப்படுத்தும் யுக்திகளை அறிந்தும் கொள்கின்றான்.அங்கிருந்து திருந்திய மனதுடையவனாகச் செல்லும் லாமொண்ட் அமெரிக்காவில் ஏற்படும் தீய சம்பவங்களையும் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்காக இரவு நேரங்களில் போராடவும் செய்கின்றான்.இச்சமயம் அங்கு வரும் ஜென்ஹிஸ் கானின் சீடனான ஷிவான் கானால் பலமுறை தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகின்றான் லாமொண்ட்.பல தந்திர மாஜாயாலச் சக்திகளைப் பெற்றிருந்த ஷிவான் கான் லாமொண்டின் மனதினை அவன் கட்டுப்பாடிற்குள் கொண்டுவருவதற்காக முயற்சிகளும் செய்கின்றான்.இவற்றை எவ்வாறு எதிர்கொள்கின்றான் லாமொண்ட் என்பதே திரைக்கதையின் முடிவாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Shadow (12)". British Board of Film Classification. July 15, 1994. பார்க்கப்பட்ட நாள் September 27, 2016.
  2. "The Shadow (1994) - Financial Information". The Numbers.
  3. "Baldwin's 'Shadow' Achieves Pale Silhouette Of Its Potential". Orlando Sentinel. https://www.orlandosentinel.com/1994/07/01/baldwins-shadow-achieves-pale-silhouette-of-its-potential/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_சாடோ&oldid=4099319" இலிருந்து மீள்விக்கப்பட்டது