தெக்கினீசியம்(III) அயோடைடு
இனங்காட்டிகள் | |
---|---|
1509903-36-9 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
TcI3 | |
தோற்றம் | கருப்பு நிறத் திண்மம் |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தெக்கினீசியம்(III) அயோடைடு (Technetium(III) iodide) என்பது TcI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தெக்கினீசியத்தின் முதல் அயோடைடாக இது கண்டுபிடிக்கப்பட்டு முதன்முதலில் 2013 ஆம் ஆண்டில் தெரிவிக்கப்பட்டது. கோட்பாட்டு ஆய்வுகள் TcI3 சேர்மத்தின் ஒற்றை அடுக்கு பெரோ காந்தப் பண்பை வெளிக்காடுவதாக தெரிவிக்கின்றன.[1]
தெக்கினீசியம் குளோரோ அசிட்டேட்டுடன் (Tc2(CH3COO)4Cl2) ஐதரசன் அயோடைடைச் சேர்த்து 150 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்து அல்லது 300~400 ° செல்சியசு வெப்பநிலையில் தெக்கினீசியமும் அயோடினும் சேர்ந்து வினைபுரிவதால் தெக்கினீசியம்(III) அயோடைடு உருவாகிறது. வெற்றிடத்தில் தெக்கினீசியம்(III) அயோடைடு சேர்மத்தை 450 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் சிதைவு வினைமூலம் உலோக தெக்னீசியத்தை தயாரிக்கலாம்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Liu, Tian; Zhou, Na; Li, Xu; Zhu, Guojun; Wei, Xiaolin; Cao, Juexian (2019). "Prediction of colossal magnetocrystalline anisotropy for transition metal triiodides". Journal of Physics: Condensed Matter 31 (29): 295801. doi:10.1088/1361-648X/ab1885. பன்னாட்டுத் தர தொடர் எண்:0953-8984. பப்மெட்:30974424. Bibcode: 2019JPCM...31C5801L.
- ↑ Erik V. Johnstone, Frederic Poineau, Jenna Starkey, Thomas Hartmann, Paul M. Forster, Longzhou Ma, Jeremy Hilgar, Efrain E. Rodriguez, Romina Farmand, Kenneth R. Czerwinski, Alfred P. Sattelberger (2013-12-16). "Synthetic and Coordination Chemistry of the Heavier Trivalent Technetium Binary Halides: Uncovering Technetium Triiodide" (in en). Inorganic Chemistry 52 (24): 14309–14316. doi:10.1021/ic402278c. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:24295331. https://pubs.acs.org/doi/10.1021/ic402278c. பார்த்த நாள்: 2021-04-16.