உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாட்டின் நகராட்சிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழக நகராட்சிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்நாட்டில், மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை 148 நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக, அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். நகர்மன்றத் தலைவர் மக்களால் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக நகர்மன்றத் துணைத் தலைவர் நகர்மன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகின்றார். நகர்மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் நகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.

இவை சிறப்புநிலை, தேர்வுநிலை, முதல்நிலை, இரண்டாம்நிலை என்கிற நிலைகளில் 142 நகராட்சிகள் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நகராட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் தலைமையிலான அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றன. தமிழக உள்ளாட்சி அமைப்பான நகராட்சிகள் அரசியலமைப்பு 74 வது திருத்தச் சட்ட செயல் 1992ன் விதி 243 டபுள்யூ நகராட்சிகள் அமைக்க, அதற்கு அதிகாரங்களை வழங்க வழி செய்கின்றது. அதன் படி இது ஒரு மாநில அரசிடமிருந்து அதிகாரப் பகிர்வைப் பெற்றத் தன்னாட்சி அமைப்பாக தமிழகத்தில் செயல்படுகின்றது.

  1. திருவள்ளூர்
  2. திருத்தணி
  3. பூந்தமல்லி
  4. திருவேற்காடு
  5. பொன்னேரி (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  6. திருநின்றவூர் (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  1. செங்கல்பட்டு
  2. மதுராந்தகம்
  3. மறைமலைநகர்
  4. நந்திவரம்-கூடுவாஞ்சேரி (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  5. மாமல்லபுரம்
  1. குன்றத்தூர் (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  2. மாங்காடு (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  3. ஸ்ரீபெரும்புதூர்
  1. குடியாத்தம்
  2. பேரணாம்பட்டு
  1. அரக்கோணம்
  2. ஆற்காடு
  3. இராணிப்பேட்டை
  4. வாலாஜாபேட்டை
  5. மேல்விஷாரம்
  6. சோளிங்கர் (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  1. திருப்பத்தூர்
  2. வாணியம்பாடி
  3. ஆம்பூர்
  4. ஜோலார்பேட்டை
  1. விழுப்புரம்
  2. திண்டிவனம்
  3. கோட்டக்குப்பம் (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  1. கள்ளக்குறிச்சி
  2. திருக்கோவிலூர்(2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  3. உளுந்தூர்பேட்டை (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  1. சிதம்பரம்
  2. விருத்தாச்சலம்
  3. பண்ருட்டி
  4. நெல்லிக்குப்பம்
  5. வடலூர் (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  6. திட்டக்குடி (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  1. ஆரணி
  2. திருவத்திபுரம்
  3. வந்தவாசி
  1. கிருஷ்ணகிரி
  1. தருமபுரி
  1. எடப்பாடி
  2. ஆத்தூர்
  3. மேட்டூர்
  4. நரசிங்கபுரம்
  5. தாரமங்கலம் (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  6. இடங்கணசாலை (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  7. சங்ககிரி
  1. திருச்செங்கோடு
  2. இராசிபுரம்
  3. பள்ளிபாளையம்
  4. குமாரபாளையம்
  1. உதகமண்டலம்
  2. குன்னூர்
  3. கூடலூர்
  4. நெல்லியாளம்
  5. கோத்தகிரி
  1. மேட்டுப்பாளையம்
  2. பொள்ளாச்சி
  3. வால்பாறை
  4. கருமத்தம்பட்டி (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  5. காரமடை (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  6. கூடலூர் (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  7. மதுக்கரை (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  1. தாராபுரம்
  2. உடுமலைப்பேட்டை
  3. வெள்ளக்கோயில்
  4. காங்கேயம்
  5. பல்லடம்
  6. திருமுருகன்பூண்டி (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  7. அவினாசி
  1. குளித்தலை
  2. புகழூர் (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  3. பள்ளப்பட்டி (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  1. அரியலூர்
  2. ஜெயங்கொண்டம்
  1. பெரம்பலூர்
  1. கோபிச்செட்டிப்பாளையம்
  2. சத்தியமங்கலம்
  3. பவானி
  4. புஞ்சை புளியம்பட்டி
  5. பெருந்துறை
  1. மணப்பாறை
  2. துறையூர்
  3. துவாக்குடி
  4. இலால்குடி (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  5. முசிறி (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  1. பட்டுக்கோட்டை
  2. அதிராம்பட்டினம் (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  3. திருவையாறு
  1. அறந்தாங்கி
  1. திருவாரூர்
  2. மன்னார்குடி
  3. திருத்துறைப்பூண்டி
  4. கூத்தாநல்லூர்
  1. நாகப்பட்டினம்
  2. வேதாரண்யம்
  1. மயிலாடுதுறை
  2. சீர்காழி
  1. பழனி
  2. கொடைக்கானல்
  3. ஒட்டன்சத்திரம்
  1. தேனி
  2. பெரியகுளம்
  3. கம்பம்
  4. சின்னமனூர்
  5. போடிநாயக்கனூர்
  6. கூடலூர்
  1. திருமங்கலம்
  2. மேலூர்
  3. உசிலம்பட்டி
  1. தேவகோட்டை
  2. சிவகங்கை
  3. மானாமதுரை
  1. இராமநாதபுரம்
  2. பரமக்குடி
  3. இராமேஸ்வரம்
  4. கீழக்கரை
  1. அருப்புக்கோட்டை
  2. இராஜபாளையம்
  3. சாத்தூர்
  4. ஸ்ரீவில்லிப்புத்தூர்
  5. விருதுநகர்
  1. கோவில்பட்டி
  2. காயல்பட்டினம்
  3. திருச்செந்தூர் (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  1. தென்காசி
  2. சங்கரன்கோவில்
  3. கடையநல்லூர்
  4. புளியங்குடி
  5. செங்கோட்டை
  6. சுரண்டை (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  1. அம்பாசமுத்திரம்
  2. விக்கிரமசிங்கபுரம்
  3. களக்காடு (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)
  1. குழித்துறை
  2. குளச்சல்
  3. பத்மனாபபுரம்
  4. கொல்லங்கோடு (2021-இல் புதிதாக நிறுவப்பட்டது)

2021-இல் உருவாக்கப்பட்ட புதிய நகராட்சிகள்

[தொகு]

2021 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 30 பேரூராட்சிகளைக் கொண்டு, 28 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டது. மேலும் கும்பகோணம் நகராட்சியானது, கும்பகோணம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]

தொடர்புடையவை

[தொகு]

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்