உள்ளடக்கத்துக்குச் செல்

தட்டச்சுக் கருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொறிமுறைத் தட்டச்சுக் கருவியொன்று.

தட்டச்சுக் கருவி (typewriter) என்பது, பொறிமுறை (mechanical), மின்பொறிமுறை (electromechanical) அல்லது மின்னணுவியல் (electronic) கருவியாகும். இதிலுள்ள எழுத்துக்களுக்குரிய விசைகளை அழுத்தும்போது அக்கருவியில் பொருத்தப்படுகின்ற காகிதத்தின்மீது எழுத்துக்கள் பொறிக்கப்படுகின்றன.

20 ஆம் நூற்றாண்டின் பெரும் பகுதியில், அலுவலகங்களிலும், தொழில்முறை எழுத்தர்கள் மத்தியிலும், தட்டச்சுக் கருவி இன்றியமையாத ஒன்றாக விளங்கியது. 1980களை அண்டிக் கணினிகளும், அவற்றில் பயன்படுத்தப்படக்கூடிய சொல் தொகுப்பிகளும் அறிமுகப்படுத்தப்பட்டபோது தட்டச்சுக் கருவியினால் அச்சுப்பொறித்தல் செல்வாக்கிழந்தது. எனினும் இன்னும் பல வளர்ந்துவரும் நாடுகளில் தட்டச்சுக் கருவியின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் இருந்துவருகிறது.

பாதுகாப்பு ரகசியங்கள் கசிவதைத் தடுப்பதற்காக, பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான நிறுவனங்களில் பழைய தட்டச்சுக் கருவிகளையே பயன்படுத்த ரஷ்யா 2013 ஜூலை மாதம் முடிவெடுத்தது.[1]

2006 ஆம் ஆண்டு நிலவரப்படி, சிமித்-கொரோனா, ஒலிவெட்டி, அட்லர்-ரோயல், பிரதர், நாகாஜிமா ஆகிய நிறுவனங்கள் தட்டச்சுக் கருவி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. கைமுறைத் (manual) தட்டச்சுக் கருவி உற்பத்தி செய்கின்ற ஒரே மேனாட்டு நிறுவனம் ஒலிவெட்டியாகும். ஏனைய தற்கால வகைகள் அனைத்தும் மின்னணுத் தட்டச்சுக் கருவிகளே.

மேற்கோள்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]