ஞாழல்
Appearance
ஞாழல் Senna sophera | |
---|---|
ஞாழல் விதைகள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Fabales
|
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Caesalpinioideae
|
சிற்றினம்: | Cassieae
|
துணை சிற்றினம்: | Cassiinae
|
பேரினம்: | |
இனம்: | S. sophera
|
இருசொற் பெயரீடு | |
Senna sophera (Linn.) Roxb | |
வேறு பெயர்கள் | |
Cassia sophera |
ஞாழல் மரம், பொன்னாவரசு அல்லது புலிநகக் கொன்றை (ஆங்கிலத்தில் tigerclaw tree; Cassia Sophera / Senna sophera) என்னும் பெயர் கொண்டு விளங்குகிறது. இதன் பூக்கள் ஐயவி என்னும் வெண்சிறு கடுகு போல் இருக்கும்.[1]
எல்லா நிலங்களிலும் பூக்கும் என்றாலும் நெய்தல் நிலத்தில் மிகுதி.
- கானலில் பூக்கும்.[2][3]
- மணிபல்லவத்தீவில் கடலோரம் இருந்த இலஞ்சியில் ஞாழலும் பூத்திருந்தது [4]
- உடன் வளரும் மரங்கள் - செருந்தி [5] புன்னை [6] தாழை [7] மா [8]
நிறம்
[தொகு]இரு நிறங்களில் பூக்கும்
- பொன்னிறத்தில் பூக்கும்.[9], காதலன் பிரிவால் காதலி மேனியில் ஞாழல் பூப்போல பசப்பு தோன்றிற்றாம் [10]
- செந்நிற ஞாழலின் கிளைகள் கருநிறம் கொண்டவை.[11] ஞாழல் ஏனோன்(சாமன்) நிறத்தில் (செந்நிறத்தில்) பூக்கும்,[12]
மணம்
[தொகு]சூடும் பூ
[தொகு]- குறிஞ்சிநில மகளிர் ஞாழல் மலர்க் கொத்தைக் கூந்தலில் சூடிக்கொள்வர்.[15]
- மகளிர் விரும்பிச் சூடுவதால் இதற்குக் ‘குமரிஞாழல்’ என்னும் பெயர் உண்டு.[16]
- இதனால் கன்னிஞாழல் என்னும் பெயரும் உண்டு.[17] :மீனவர் நிலப்பூ ஞாழலையும், நீர்ப்பூ நீலத்தையும் தலையில் சூடிக்கொள்வர்.[18] ஞாழலையும், நெய்தலையும் சூடிக்கொள்வர்.[19]
பூ விளக்கம்
[தொகு]ஞாழல் மலருக்குத் தரப்பட்டுள்ள அடைமொழிகள் ஞாழலின் தன்மையை உணர்த்துகின்றன.
- சிறு வீ ஞாழல் [20]
- நறுவீ ஞாழல் [21]
- நறுமலர் ஞாழல் [22]
- பன்மாண் புதுவீ ஞாழல் [23]
- பசுநனை ஞாழல் [24]
- தண்ணிய கமழும் ஞாழல் [25]
- நனைமுதிர் ஞாழல் சினைமருள் திரள்வீ [26]
- இணர் ததை ஞாழல் [27]
- குவி இணர் ஞாழல் [28]
- தெரியிணர் ஞாழல் [29]
பயன்பாடு
[தொகு]- ஞாழலால் தழையாடை புனைவர்.[30]
- ஞாழல் மரத்தில் தாழைநார்க் கயிற்றில் ஊஞ்சல் ஆடினர்.[31]
- கடலாடு மகளிர் ஞாழலைக் கொய்துகொண்டு சென்று விளையாடுவர்.[32]
- ஞாழலில் கடற்காக்கைகள் கூடு கட்டும்.[33]
- ஞாழல் சங்ககால மகளிர் குத்து விளையாடிய பூக்களில் ஒன்று.[34]
- வையையாறு அடித்துக்கொண்டு வந்த மலர்களில் ஞாழலும் ஒன்று.[35]
இவற்றையும் காண்க
[தொகு]அடிக்குறிப்பு
[தொகு]- ↑ ஐயவி அன்ன சிறுவீ ஞாழல் - குறுந்தொகை 50
- ↑ இள மணல் தண் கழிக் கானல்வாய்ப் பூவா இள ஞாழல் போது. திணைமாலை 39,
- ↑ கானல் இடை எலாம், ஞாழலும் தாழையும்; ஆர்ந்த புடை எலாம், புன்னை; திணைமாலை 58
- ↑ மணிமேகலை 8-6
- ↑ ஐங்குறுநூறு 141,
- ↑ ஐங்குறுநூறு 103,
- ↑ அகநானூறு 180-12,
- ↑ தாழை, மா ஞாழல், ததைந்து உயர்ந்த தாழ் பொழில் திணைமாலை 44,
- ↑ பொன்வீ ஞாழல் - அகநானூறு 70-9
- ↑ கலித்தொகை 131-19,
- ↑ செவ்வீ ஞாழல் கருங்கோட்டு இருஞ்சினை - அகநானூறு 240-1,
- ↑ காமன் கருநிறம். சாமன் செந்நிறம். கலித்தொகை 26-4,
- ↑ ஞாழல் மணம் கமழ் நறுவீ நற்றிணை 267,
- ↑ எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினை - ஐங்குறுநூறு 150,
- ↑ கலித்தொகை 56-2,
- ↑ கொய்குழை அரும்பிய குமரி ஞாழல் - நற்றிணை 54-9,
- ↑ குயில் பயிரும் கன்னி இள ஞாழல் பூம் பொழில் திணைமொழி 49-3,
- ↑ அகநானூறு 270-3,
- ↑ அகநானூறு 370-9,
- ↑ குறுந்தொகை 50, 328, நற்றிணை 31, 74, 96, 191, 311, 315
- ↑ குறுந்தொகை 318,
- ↑ நற்றிணை 106,
- ↑ நற்றிணை 167,
- ↑ குறுந்தொகை 81,
- ↑ குறுந்தொகை 310,
- ↑ குறுந்தொகை 397,
- ↑ பதிற்றுப்பத்து 30-1,
- ↑ பதிற்றுப்பத்து 51-5
- ↑ கலித்தொகை 127-1
- ↑ ஐங்குறுநூறு 191
- ↑ அகநானூறு 20-5,
- ↑ அகநானூறு 216-8,
- ↑ ஐங்குறுநூறு 169,
- ↑ குறிஞ்சிப்பாட்டு 81
- ↑ பரிபாடல் 12-6