ஜெ. ஜெயலலிதா
ஜெ. ஜெயலலிதா J. Jayalalithaa | |
---|---|
2015 இல் ஜெயலலிதா | |
தமிழ்நாட்டின் 5-வது முதலமைச்சர் | |
பதவியில் 23 மே 2015 – 5 திசம்பர் 2016 | |
ஆளுநர் |
|
முன்னையவர் | ஓ. பன்னீர்செல்வம் |
பின்னவர் | ஓ. பன்னீர்செல்வம் |
தொகுதி | டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் |
பதவியில் 16 மே 2011 – 27 செப்டம்பர் 2014 | |
ஆளுநர் | |
முன்னையவர் | மு. கருணாநிதி |
பின்னவர் | ஓ. பன்னீர்செல்வம் |
தொகுதி | திருவரங்கம் |
பதவியில் 2 மார்ச் 2002 – 12 மே 2006 | |
ஆளுநர் | |
முன்னையவர் | மு. கருணாநிதி |
பின்னவர் | மு. கருணாநிதி |
தொகுதி | ஆண்டிப்பட்டி |
பதவியில் 14 மே 2001 – 21 செப்டம்பர் 2001 | |
ஆளுநர் |
|
முன்னையவர் | மு. கருணாநிதி |
பின்னவர் | ஓ. பன்னீர்செல்வம் |
தொகுதி | போட்டியிடவில்லை |
பதவியில் 24 சூன் 1991 – 12 மே 1996 | |
ஆளுநர் | |
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பின்னவர் | மு. கருணாநிதி |
தொகுதி | பர்கூர் |
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 3 ஏப்ரல் 1984 – 28 சனவரி 1989 | |
முன்னையவர் | சத்தியவாணி முத்து |
பின்னவர் | தா. கிருட்டிணன் |
தொகுதி | தமிழ்நாடு |
9வது தமிழ்நாடு சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 29 மே 2006 – 14 மே 2011 | |
முன்னையவர் | ஓ. பன்னீர்செல்வம் |
பின்னவர் | விசயகாந்து |
தொகுதி | ஆண்டிப்பட்டி |
பதவியில் 9 பெப்ரவரி 1989 – 30 நவம்பர் 1989 | |
முன்னையவர் | ஓ. சுப்பிரமணியன் |
பின்னவர் | எஸ். ஆர். ராதா |
தொகுதி | போடிநாயக்கனூர் |
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 4 சூலை 2015 – 5 திசம்பர் 2016 | |
முன்னையவர் | பி. வெற்றிவேல் |
பின்னவர் | டி. டி. வி. தினகரன் |
தொகுதி | டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் |
பதவியில் 23 மே 2011 – 27 செப்டம்பர் 2014 | |
முன்னையவர் | மு. பரஞ்சோதி |
பின்னவர் | சீ. வளர்மதி |
தொகுதி | திருவரங்கம் |
பதவியில் 24 பெப்ரவரி 2002 – 14 மே 2011 | |
முன்னையவர் | தங்க தமிழ்ச்செல்வன் |
பின்னவர் | தங்க தமிழ்ச்செல்வன் |
தொகுதி | ஆண்டிப்பட்டி |
பதவியில் 1 சூலை 1991 – 12 மே 1996 | |
முன்னையவர் | கே. ஆர். இராசேந்திரன் |
பின்னவர் | இ. கோ. சுகவனம் |
தொகுதி | பர்கூர் |
பதவியில் 6 பெப்ரவரி 1989 – 30 சனவரி 1991 | |
முன்னையவர் | கே. எஸ். எம். இராமச்சந்திரன் |
பின்னவர் | வி. பன்னீர்செல்வம் |
தொகுதி | போடிநாயக்கனூர் |
5வது அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் | |
பதவியில் 1 ஜனவரி 1988 – 5 திசம்பர் 2016 | |
முன்னையவர் | ம. கோ. இராமச்சந்திரன் |
பின்னவர் | வி. கே. சசிகலா (தற்காலிகம்) |
1ஆவது அ.இ.அ.தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் | |
பதவியில் 5 செப்டம்பர் 1985 – 31 டிசம்பர் 1987 | |
பொதுச் செயலாளர் | எஸ். இராகவானந்தம் ம. கோ. இராமச்சந்திரன் |
பதவியில் 28 சனவரி 1983 – 20 ஆகத்து 1984 | |
பொதுச் செயலாளர் | ப. உ. சண்முகம் |
முன்னையவர் | ஆர். மணிமாறன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மேல்கோட்டை, மைசூர் மாநிலம், இந்திய ஒன்றியம் (இன்றைய கருநாடகம், இந்தியா) | 24 பெப்ரவரி 1948
இறப்பு | 5 திசம்பர் 2016 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 68)
காரணம் of death | இதய நிறுத்தம் |
இளைப்பாறுமிடம் | எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா நினைவிடம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
உறவினர் | ஜெ. தீபா (மருமகள்) |
வாழிடம்(s) | வேதா நிலையம், 81, போயசு தோட்டம், தேனாம்பேட்டை, சென்னை |
முன்னாள் கல்லூரி |
|
தொழில் |
|
விருதுகள் |
|
புனைப்பெயர்(s) | அம்மா புரட்சித் தலைவி |
ஜெ. ஜெயலலிதா (J. Jayalalithaa, 24 பிப்ரவரி 1948 - 5 டிசம்பர் 2016), முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் தமிழக முதலமைச்சராக ஆறு முறை பதவி வகித்துள்ளார். இவர் 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 முதல் 2016 வரையும் 2016 மே 23 முதல் இறக்கும் வரையில் (5 திசம்பர் 2016) முதலமைச்சராகப் பணி புரிந்தார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த இவரை "புரட்சித் தலைவி" எனவும் "அம்மா" எனவும் இவரது ஆதரவாளர்கள் அழைத்தனர்.தனது தொட்டில் குழந்தை திட்டத்துக்காக ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா சபை) மத்தியில் கைதட்டைப் பெற்ற இந்தியாவை சார்ந்த முதல் பெண் முதலமைச்சர் இவரே ஆவார்.[1][2][3]
அரசியலுக்கு நுழைவதற்கு முன்னர் இவர் 120 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]மைசூர் சமஸ்தானம் (தற்போது கர்நாடகா) மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் -வேதவல்லி இணையரின் மகளாக 24 பிப்ரவரி 1948ஆம் நாள் பிறந்தார். இவரது இயற்பெயர் கோமளவல்லி.[4] இவர் தாத்தா அவ்வூரில் உள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார். எனினும் இவர்களின் மூதாதையர்கள் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் காலமானார். அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த தாயார் வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார். அவர் பெங்களூரில் இருந்தபோது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சென்னைக்கு வந்த பின்னர், 1958-ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேறினார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே படிப்பைக் கைவிட்டு நடிகையானார். ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவரது தாயார், அவரது உறவினர்கள் மற்றும் பின்னர் அவருடன் நடித்தவர்கள் மற்றும் நண்பர்கள் ஜெயலலிதாவை 'அம்மு' என்றும் அழைத்தனர்.[5]
ஜெயலலிதாவுக்கு ஜெயக்குமார் என்ற அண்ணன் ஒருவர் இருக்கிறார். அவருக்கு தீபக் என்ற மகனும், தீபா என்ற மகளும் உள்ளனர். ஆரம்ப காலத்தில் தாய் சந்தியா இருந்த போது ஜெயக்குமார் குடும்பத்துடன் எல்லோரும் ஒன்றாகவே போயஸ் கார்டனில் இருந்தார்கள். தாய் காலமான பின்னர் ஜெயக்குமார் குடும்பத்துடன் வெளியேறி விட்டார். ஜெயக்குமாரும் அவர் மனைவியும் காலமாகிவிட்டனர். அதன்பின் ஜெயலலிதாவுக்கும் அவர்கள் குடும்பத்துக்குமிடையில் தொடர்பு விட்டுப்போனது.[6]
திரையுலகப் பங்களிப்பு
[தொகு]ஜெயலலிதா 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றுள் எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்தார்.[7] மேலும் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிசந்திரன், சிவகுமார், ஏ. வி. எம். ராஜன், என். டி. ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், தர்மேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். மக்கள் பலரும் ஜெயலலிதாவின் நடிப்பை வெகுவாக ரசித்தார்கள். இவரது நடிப்பை பாராட்டி இவருக்கு 'கலைச்செல்வி' என்ற பட்டத்தை அளித்தார்கள். இவர் ம. கோ. இராமச்சந்திரன் உடன் நடித்த அனைத்து திரைப்படங்களும் வெகுவாக பாராட்டப்பட்டது. தன் நடிப்பின் மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார்.
அரசியல் பங்களிப்பு
[தொகு]அஇஅதிமுக கொள்கைபரப்புச் செயலாளர்
[தொகு]1982 சூன் 4ஆம் நாள் கடலூரில் நடைபெற்ற விழாவில்[8] அ. இ. அ. தி. மு. க. வில் இணைந்தார். 28 சனவரி 1983 அன்று, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். அவருக்கு முன் அப்பதவியை திருப்பூர் தொகுதி எம்எல்ஏவும், அப்போதைய அதிமுக சட்டமன்ற கொறடாவுமான ஆர்.மணிமாறன் வகித்தார்.[9]
மாநிலங்களவை உறுப்பினர்
[தொகு]அதன் பிறகு 1984ல் நடந்த மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க வின் மூத்த தலைவரான ஆற்காடு வீராசாமியை தோற்கடித்து மார்ச் 24ஆம் நாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.[8] நாடாளுமன்றத்தில் தன் ஆங்கில புலமையால் பல தலைவர்களை கவர்ந்தார். தனது கன்னிப்பேச்சிலேயே அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியைக் கவர்ந்தார். இவருக்கு நாடாளுமன்றத்தில் 185வது இருக்கை அளிக்கப்பட்டது. அந்த இருக்கை 1962 முதல் 1967 வரை தி.மு.க. நிறுவுநரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான கா. ந. அண்ணாதுரை அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்னர், அதிமுகவைச் சேர்ந்த மோகனரங்கம் அவ்விருக்கையில் அமர்ந்திருந்தார்.[10]
அணித்தலைவர்
[தொகு]எம். ஜி. இராமச்சந்திரனின் மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தது. கட்சியின் மூத்த தலைவர்கள் எம்.ஜி.இராமசந்திரன் மனைவி வை. நா. ஜானகி இராமச்சந்திரன் தலைமையில் ஓர் அணியாகவும் பிறர் ஜெ. ஜெயலலிதாவின் தலைமையில் மற்றோர் அணியாகவும் பிரிந்தனர். 1 ஜனவரி 1988 அன்று, ஜெயலலிதா தனது அணியின் தலைவர்களால் அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் மறுநாள் அவர் கூட்டிய கட்சியின் பொதுக்குழுவால் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.[11][12] 1988 சனவரி 28ஆம் நாள் தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பின்பொழுது அப்பிரிவு மோதலாக வெளிப்பட்டது.[8]
பொதுச்செயலாளர்
[தொகு]1989ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களைக் கைப்பற்றியது. ஜானகி தலைமையிலான அதிமுக அணி ஒரேயோர் இடத்தில் மட்டுமே வென்றது. இதனால் ஜானகி அரசியல் களத்திலிருந்து விலகினார். ஜெயலலிதா அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.[13]
எதிர்கட்சித்தலைவர்
[தொகு]1989ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். அவர் மீதும் அவருக்குத் துணையாக இருந்த ம. நடராசன் மீதும் தொடக்கப்பட்ட வழக்கு ஒன்றிற்காக நடராசன் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஜெயலலிதாவின் சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதம் கிடைத்தது. அந்நிகழ்விற்குப் பின்னர், 1989 மார்ச் 25ஆம் நாள் நிதிநிலை அறிக்கையை வாசித்த கருணாநிதி தாக்கப்பட்டபொழுது ஏற்பட்ட குழப்பத்தில் ஜெயலலிதாவும் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் ஜெயலலிதா, ‘‘தி.மு.க உறுப்பினர்கள் எனது புடவையை இழுத்தார்கள். இந்தச் சட்டமன்றத்தில் பெண்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. சட்டமன்றாம எப்பொழுது பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாறுகிறதோ அப்பொழுதுதான் சட்டமன்றத்துக்குள் வருறவன்” என்று கூறிச்சென்றார்.[8]
முதல்வர் 1991-1996
[தொகு]1991ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி 225 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஜெ. ஜெயலலிதா 1991 சூலை 24ஆம் நாள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்பொழுது அவரின் காலில் கே. செங்கோட்டையன் விழுந்தார்; அவரைத் தொடர்ந்து பிறரும் விழுந்தனர். அதிமுகவில் காலில் விழும் கலாச்சாரம் தொடங்கியது. சட்டசபை இவரைப் புகழ்ந்துரைக்கும் இடமாக மாறியது. ஜெயலலிதா தனது முதலமைச்சர் பணிக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு ரூபாய் மட்டும் ஊதியமாகப் பெற்றார். இவர் மீதும் அமைச்சர்கள் மீதும் எதிர்கட்சிகள் ஊழல் புகார்களை அடுக்கின.[8] இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் பல திட்டங்களை தமிழகத்தில் கொண்ட வந்தார். பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறைகொண்டு பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தார்.
மகாமக விபத்து
[தொகு]அதேவேளையில் 1992 பிப்ரவரி 18ஆம் நாள் இவர் கும்பகோணம் மகாமகக்குளத்தில் சென்று நீராடியபொழுது ஏற்பட்ட கூட்டநெரிசலில் தர்மசாலா என்ற கட்டிடத்தின் சுவர் இடிந்துவிழுந்து 48பேர் இறந்தார்கள்.[8]
வளர்ப்புமகன் திருமணம்
[தொகு]ஜெ. ஜெயலலிதா, தன் தோழி சசிகலாவுக்கு அக்கா மகனான வி. என். சுதாகரன் என்னும் 28 வயது இளைஞரை தன் மகனாகத் தத்தெடுத்தார். அவருக்கு 1995 செப்டம்பரில் ஆடம்பரமாகத் திருமணம் செய்துவைத்தார்.[8]
முதல்வராக 2001
[தொகு]டான்சி & பிளெசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கின் தீர்ப்பின் காரணமாக 2001 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டாலும், தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பின்னர் அவர் முதல்வராக பதவியேற்றார். இதில் தலையிட்ட உச்சநீதிமன்றம் அவரை செப்டம்பர் 2001 இல் தகுதி நீக்கம் செய்தது, இதன் விளைவாக அவர் பதவி விலகினார். மேலும் சசிகலா பரிந்துரைப்படி ஓ. பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக ஆக்கினார்.
பிளெசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கோடு,2001 திசம்பர் 4, அன்று அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் சென்னை உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவையும் மற்ற ஐந்து குற்றவாளிகளையும் விடுவித்தது. ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் 2003 நவம்பர் 24 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து 2002 மார்ச்சில் ஆண்டிபட்டி தொகுதியில் இருந்து 2002 தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.
முதல்வராக 2002 - 2006
[தொகு]இந்தியாவின் முதல் பெண் போலீஸ் கமாண்டோக்களைக் கொண்ட நிறுவனம் 2003 இல் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டது. ஆயுதங்களைக் கையாளுதல், வெடிகுண்டுகளைக் கண்டறிதல் மற்றும் அப்புறப்படுத்துதல், வாகனம் ஓட்டுதல், குதிரையேற்றம் மற்றும் சாகச விளையாட்டுகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஆண்களுக்கு இணையான பயிற்சியை அவர்கள் பெற்றனர்.[14] 2003 ஆம் ஆண்டில் அவர் தலைமையிலான அரசாங்கம், மாநிலத்தின் எல்லைக்குள் ஆன்லைன் உட்பட அனைத்து லாட்டரிகளையும் விற்பனை செய்வதைத் தடை செய்தது, மாநிலத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் இருந்தபோதிலும். கர்நாடகாவுக்குள் நுழைந்து கொள்ளைக்காரன் வீரப்பனைக் கைப்பற்றி கொல்ல ஒரு இரகசிய நடவடிக்கையை மேற்கொள்ள கே.விஜய்குமார் தலைமையிலான ஒரு சிறப்புப் பணிக்குழுவிற்கு அவர் உத்தரவிட்டார் .[15] 2004 ஆம் ஆண்டு வீரப்பனை ஒழித்தது தனது அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனையாக அவர் அறிவித்தார் மேலும் ""வீரப்பன் இறந்த அல்லது உயிருடன் பிடிபட்டதுதான் அவர்களுக்கு எனது ஒரே சுருக்கம். அதன் பிறகு நான் தலையிடவே இல்லை. அவர்களின் சொந்த உத்திகளை வகுக்க நான் அவர்களை விட்டுவிட்டேன், இது பலனளித்தது." [16] இந்த காலத்தின் முடிவில் அவர் 'மக்கள் முதல்வர்' மற்றும் இந்தியாவின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படத் தொடங்கினார். இந்த காலத்தில் அவர் 2001 ஆம் ஆண்டு மழைநீர் சேகரிப்பு (RWH) திட்டத்தை தொடங்கி, நீர் ஆதாரங்களை புதுப்பிக்கவும், வறண்ட தென் மாநிலத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்தவும், இந்த யோசனையை பல்வேறு மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு பின்பற்றியது. சென்னை பெருநகரம். மன்மோகன் சிங், ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமை, மதிய உணவுத் திட்டங்கள் மற்றும் பாலின மேம்பாட்டிற்கான முயற்சிகளுக்காக ஜெயலலிதாவை அடிக்கடி பாராட்டினார். 26 டிசம்பர் 2004 அன்று தமிழ்நாட்டைத் தாக்கிய சுனாமியைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளைக் கையாண்டதில் அவரது நிர்வாகத் திறன்கள் குறிப்பிடத்தக்கவை. ஜெயலலிதா ரூ. 153.37 கோடி நிவாரணப் பொதியை அறிவித்தார், பொதுப் பொதியாகவும், மீனவர்களுக்கான தனித் தொகுப்பாகவும் பிரிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடாக ஒரு வேட்டி, ஒரு புடவை, இரண்டு பெட்ஷீட்கள், 60 கிலோ அரிசி, 3 லிட்டர் மண்ணெண்ணெய், மளிகைப் பொருட்களுக்கு ரூ. 1,000 மற்றும் ரொக்கமாக ரூ.1,000 என, இழப்பீட்டுத் தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். பாத்திரங்கள் வாங்குவதற்கு 1,000 ரூபாய், தங்குமிடம் போடுவதற்கு 2,000 ரூபாய் கொடுக்க வேண்டும். ஒரு குடும்பம், மற்றும் மொத்தம் ஒரு லட்சம் குடும்பங்கள் இருந்தால், பேக்கேஜ் சுமார் 5,000 ரூபாய் செலவாகும். மேலும் மீனவர்கள் கில் வலைகள் மற்றும் படகுகளை மறைக்க கூடுதலாக 65 கோடி ரூபாய் பெற்றுள்ளனர். நாகப்பட்டினத்தில் மீண்டும் மின் விநியோகம் செய்ய சில மணி நேரங்கள் ஆகும். ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பேரிடர் மேலாண்மையில் அரசு பணியாற்றி வருவதால், பதில் நேரம் கணிசமாகக் குறைக்கப்பட்டது; மொபைல் கிரேன்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் ரோந்து பணியில் ஈடுபட்டன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பொறுப்பை மாவட்ட நிர்வாகத்திடம் அரசு ஒப்படைத்தது. தீவு தேசத்தின் மறுவாழ்வு செயல்பாட்டில் வழிகாட்ட அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் ஜெயலலிதா இலங்கை அரசாங்கத்திற்கு உதவினார். குட்கா விற்பனையைத் தடை செய்தாலும் சரி, அல்லது மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை கட்டாயமாக நிறுவுவதாயினும் சரி, அவரது நிர்வாகப் பாணி சமரசமற்றது. அவளுடைய பதவிக்காலத்தின் இரக்கமற்ற தன்மை, ஆனால் அது அவர்களுக்கு அளித்த உதவி.
11 மே 2006 அன்று, சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஜெயலலிதா தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் , 2006
[தொகு]2006 மே 2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுமோசமாக இருந்தது, 2006 ஆம் ஆண்டு மாநிலத் தேர்தல்களில் அவரது கட்சி மொத்தமுள்ள 234 இடங்களில் வெறும் 61 இடங்களை மட்டுமே வென்றது. அவர் ஆண்டிப்பட்டியில் வெற்றி பெற்றார். அவரது பிரதான எதிர்க்கட்சியான திமுக தனிப்பெரும்பான்மையைப் பெறவில்லை (96/234), திமுக கூட்டணி 162/234 இடங்களைப் பெற்றது மற்றும் 2011 வரை அமைச்சரவையை அமைத்தது, அதை அவர் "மைனாரிட்டி திமுக அரசாங்கம்" என்று குறிப்பிட்டார்.[17][18]
29 மே 2006 அன்று, ஓ.பன்னீர்செல்வத்திற்குப் பதிலாக அதிமுக எம்.எல்.ஏக்களால் எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, 60 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அவர் ஆளும் திமுகவை தனித்துப் போட்டியிட்டார் முழு அமர்வு.[19][20]
முதல்வர் (2011-2014)
[தொகு]மற்றொரு காலகட்டத்திற்குப் பிறகு (2006-11) எதிர்க்கட்சியாக இருந்து, 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, நான்காவது முறையாக ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார். ஸ்ரீரங்கத்தில் வெற்றி பெற்றார். அவரது அரசாங்கம் அதன் விரிவான சமூக-நல நிகழ்ச்சி நிரலுக்காக கவனத்தைப் பெற்றது, இதில் பல மானிய விலையில் "அம்மா"-பிராண்டட் பொருட்கள் (அம்மா கேன்டீன்கள், அம்மா பாட்டில் தண்ணீர், அம்மா உப்பு, அம்மா மருத்துவக் கடைகள், அம்மா சிமெண்ட் மற்றும் அம்மா குழந்தை பராமரிப்பு கிட்) அடங்கும்.
ஏப்ரல் 2011 இல், 14வது மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 13 கட்சிகளின் கூட்டணியில் அதிமுக இருந்தது. 2011 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி நான்காவது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார், அந்தத் தேர்தல்களுக்குப் பிறகு அதிமுக சட்டமன்ற கட்சியின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[21] 19 டிசம்பர் 2011 அன்று, சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் தனக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்பதை அறிந்த ஜெயலலிதா, தனது நீண்டகால நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா மற்றும் 13 பேரை அதிமுகவில் இருந்து நீக்கினார்.[22] பெரும்பாலான கட்சி உறுப்பினர்கள் அவரது முடிவை வரவேற்றனர்.எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டு சசிகலா மீண்டும் கட்சி உறுப்பினராக சேர்க்கப்பட்டதன் மூலம் இந்த விவகாரம் மார்ச் 31க்குள் தீர்க்கப்பட்டது.[23] தனக்கு கட்சியிலோ, ஆட்சியிலோ எந்த லட்சியமும் இல்லை என்றும், ஜெயலலிதாவுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும், ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அவரது குடும்பத்தினர் செய்த தவறான செயல்களை உணர்ந்ததாகவும் சசிகலா எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளார். சசிகலா தனது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இல்லை என்று உறுதியளித்த பின்னரே, ஜெயலலிதா மீண்டும் சசிகலாவை தனது வீட்டிற்கு அனுமதித்தார்.[24]
இந்த காலகட்டத்தில், ஆதரவற்ற திருநங்கைகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தார், இதன் மூலம் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத ஓய்வூதியமாக ரூ.1,000 பெறலாம். திருநங்கைகள் சமூகத்தின் உறுப்பினர்கள் கல்வி மற்றும் வேலையில் சேருவதை அவரது அரசாங்கம் உறுதி செய்தது.[25] 2011 முதல், ஒவ்வொரு ஆண்டும் அவரது அரசாங்கம் கிராமப்புறங்களுக்கு டிஜிட்டல் கல்வியை வழங்குவதற்காக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கியது.[26] 2011 ஆம் ஆண்டு அவரது அரசாங்கம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நான்கு ஆடுகள் மற்றும் ஒரு மாடு - வீடுகளுக்கு மிக்சி மற்றும் கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள், 3 செட் இலவச சீருடைகள், பள்ளி, பைகள், நோட்டுப் புத்தகங்கள், அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஜியோமெட்ரி பாக்ஸ்கள் மற்றும் சைக்கிள்கள் வழங்க முடிவு செய்தது. மற்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள்.[27] 2011 இல் அவர் திருமண உதவித் திட்டத்தைத் தொடங்கினார், அதில் பெண் மாணவர்கள் திருமணத்திற்கு திருமாங்கல்யமாகப் பயன்படுத்த 4 கிராம் தங்கம் இலவசமாகவும், இளங்கலை அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களுக்கு ரூ. 50,000 வரை பண உதவியும் பெற்றார்.[28] 2006 முதல் 2011 வரை அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது 10 முதல் 15 மணி நேரம் வரை மின்சாரம் வழங்கப்படவில்லை. இருப்பினும், அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, 2011 மற்றும் 2015 க்கு இடையில், அவரது மாநில அரசு முந்தைய திமுக ஆட்சியின் அனைத்து முரண்பாடுகளையும் சரிசெய்தது, அதாவது 2016 ஆம் ஆண்டில் மத்திய மின்சார ஆணையம் மாநிலம் 11,649 மில்லியன் யூனிட் உபரி மின்சாரத்தை எதிர்பார்க்கும் என்று கூறியது.[27] இந்த காலத்தில் அவர் முதலமைச்சராக இருந்த போது தமிழ்நாடு மின் மிகை மாநிலங்களில் ஒன்றாக மாறியது.[29] இந்த காலக்கட்டத்தில், முந்தைய திமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை நில அபகரிப்பு மூலம் தவறான முறையில் அபகரிக்கப்பட்ட சொத்தை அவரது அரசாங்கம் உறுதி செய்தது, 2011 மற்றும் 2015 க்கு இடையில் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.[28].
முதல் அமைச்சர் (2015-2016)
[தொகு]நிரபராதியாக விடுவிக்கப்பட்டதன் மூலம் அவர் மீண்டும் பதவியில் இருக்க அனுமதித்தது மற்றும் 23 மே 2015 அன்று, ஜெயலலிதா ஐந்தாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.பின்னர் 27 ஜூன் 2015 அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் வடசென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியின் வாக்காளர்களால் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமோக வெற்றியில், 74.4 சதவீத வாக்குகளில் 88 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 150,000 வாக்குகள் வித்தியாசம்.[30][31][32]. பிப்ரவரி 20, 2016 அன்று, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தமிழ்நாடு முனிசிபல் சட்டங்கள் (திருத்த) சட்டம், 2016 மற்றும் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் (திருத்த) சட்டம், 2016 ஆகியவற்றை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், நகர பஞ்சாயத்துகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியது.[33][34]
தொடர்ந்து முதல்வர் (2016)
[தொகு]2016 சட்டமன்றத் தேர்தலில், எம்.ஜி.ஆருக்குப் பிறகு தாெடர்ந்து வென்ற முதல் தமிழக முதல்வரானார், 1984க்கு பின்.அந்த செப்டம்பரில், அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார், 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்ததைத் தொடர்ந்து, இதயத் தடுப்பு காரணமாக டிசம்பர் 5, 2016 அன்று இறந்தார்.
சிறையில்
[தொகு]1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜெ.ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அவரது கட்சி ஆட்சியை இழந்தது. அவர் மீதும் அவரது அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் பலர் மீதும் ஊழல் வழக்குகள் தொடக்கப்பட்டன. 1996 திசம்பர் 6ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.சிவப்பா, ஜெயலலிதாவின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். 1996 திசம்பர் 7ஆம் நாள் ஜெயலலிதா, ஊழல் வழக்கின் மீதான விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் 2529ஆம் எண்கைதியாக அடைக்கப்பட்டார். அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 300 கிலோ தங்கம், 500 கிலோ வெள்ளி, 150 விலைமதிப்புமிக்க கைக்கடிகாரங்கள், 10,000 புடவைகள், 250 ஜோடி செருப்புகள் கைப்பற்றப்பட்டன. 28 நாள்களுக்குப் பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்தார். நகை அணிவதைத் தவிர்த்தார். சசிகலாவையும் அவர்தம் உறவினர்களையும் தனது வீட்டிலிருந்து வெளியேற்றினார்.[8] ஆனால், ஈராணடு சிறைவாசத்திற்குப் பின்னர் 1999ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியேவந்த சசிகலா மீண்டும் ஜெயலலிதாவின் வீட்டில் குடியேறினார்.18 ஆண்டுகளுக்கு பின், 27 செப்டம்பர் 2014 அன்று, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ₹100 கோடி அபராதமும் (2020ல் ₹136 கோடி அல்லது 17 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) விதிக்கப்பட்டது. அவர் மீதான வருமான வரித் துறை அறிக்கையின் அடிப்படையில் 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி (இப்போது பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்) அவர்களால் தொடங்கப்பட்ட 18 ஆண்டுகள் பழமையான சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, அவரது அண்ணன் மகள் செ. இளவரசி, அவரது அண்ணன் மகன் மற்றும் முதல்வரின் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோரும் குற்றவாளிகள்.அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ₹10 கோடி அபராதமும் (2020ல் ₹14 கோடி அல்லது 1.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) விதிக்கப்பட்டது. சிறப்பு நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா அவர் ₹66.65 கோடி (2020ல் ₹310 கோடி அல்லது 39 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குச் சமம்) (இதில் 2,000 ஏக்கர் (810 ஹெக்டேர்) நிலம், 30 கிலோகிராம் (66 எல்பி) சொத்து வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டினார். தங்கம் மற்றும் 12,000 புடவைகள்) 1991-96ல் அவர் முதல் முறையாக முதலமைச்சராக இருந்தபோது அவர் அறிந்த வருமான ஆதாரங்களுக்கு விகிதாசாரம். ஜெயலலிதா மற்றும் பிற குற்றவாளிகள் முன்னிலையில் பரப்பன அக்ரகார மத்தியச் சிறைச்சாலை வளாகத்தில் உள்ள தற்காலிக நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவி மற்றும் சட்டமன்றத்தில் இருந்து அவர் தானாகவே தகுதி நீக்கம் செய்யப்பட்டார், இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் பதவியில் உள்ள இந்திய முதலமைச்சர் ஆனார்.அவரது கட்சியில் அமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், அவருக்குப் பிறகு 29 செப்டம்பர் 2014 அன்று முதலமைச்சரானார்.17 அக்டோபர் 2014 அன்று, உச்ச நீதிமன்றம் அவருக்கு இரண்டு மாத ஜாமீன் வழங்கியது மற்றும் அவரது தண்டனையை நிறுத்தி வைத்தது.21 நாட்கள் பெங்களூரு சிறையில் இருந்த ஜெயலலிதா 2014 அக்டோபர் 18 அன்று சென்னை திரும்பினார். அன்று பலத்த மழையையும் பொருட்படுத்தாமல், அதிமுக தொண்டர்கள் அவரது இல்லத்திற்கு வெளியே கூடி அவரை வரவேற்றனர்.
11 மே 2015 அன்று, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் சிறப்பு பெஞ்ச் மேல்முறையீட்டில் அவரது தண்டனையை ரத்து செய்தது. அந்த நீதிமன்றம் அவரையும், சசிகலா, அவரது அண்ணி இளவரசி, அவரது மருமகன் மற்றும் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோரையும் விடுதலை செய்தது.
பிப்ரவரி 14, 2017 அன்று (அவரது மரணத்திற்குப் பிறகு) இந்திய உச்ச நீதிமன்றம் கர்நாடக உயர் நீதிமன்றத்தை மீறி தீர்ப்பளித்தது. சசிகலா மற்றும் பிற குற்றவாளிகளுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது. ஆனாலும் சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த ஜெயலலிதாவை குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை 5 ஏப்ரல் 2017 அன்றும் மற்றும் மறு சீராய்வு மனுவை 28 செப்டம்பர் 2018 அன்றும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[35][36]
சட்டமன்றப் பொறுப்புகள்
[தொகு]தமிழக முதல்வர்
[தொகு]ஜெயலலிதா தமிழக முதல்வராக கீழ்காணும் காலங்களில் பணியாற்றியிருக்கிறார்.
முதல் | வரை | தேர்தல் | குறிப்பு |
---|---|---|---|
ஜூன் 24, 1991 | மே 11, 1996 | 1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் | தமிழகத்தின் 11வது முதல்வர் |
மே 14, 2001 | செப்டம்பர் 21, 2001 | தேர்தலில் போட்டியிடாமல் முதல்வராக பதவி வகித்தார் | இப்பதவி முடக்கப்பட்டது |
மார்ச் 2, 2002 | மே 12, 2006 | 2001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் | தமிழகத்தின் 14வது முதல்வர் |
மே 16, 2011 | செப்டம்பர் 27, 2014 | 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் | தமிழகத்தின் 16வது முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது) |
மே 23, 2015 | மே 22, 2016 | 2015 ஆர். கே. நகர் இடைத்தேர்தல்[37] | தமிழகத்தின் 18வது முதல்வர் |
மே 23, 2016 | டிசம்பர் 5, 2016 | 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் | தமிழகத்தின் 19வது முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது) |
இவர் மேல் வழக்குகள் இருந்தாலும் 2001, மே அன்று முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டதால் நான்கு மாதம் கழித்து பதவி விலகினார். இவர் மீதான தண்டனை டான்சி வழக்கில் நீக்கப்பட்டதை தொடர்ந்து 2002, மார்ச்சு மாதம் முதல்வராக பதவியேற்றார்.[38] 2002இல் ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் போட்டியிட ஏதுவாக தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியிலிருந்து பதவி விலகினார். [39] 2002, பிப்ரவரி 21ல் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.[40]
சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்
[தொகு]ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார்.
- 1989 முதல் 1991வரை.
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]ஆண்டு | நிலைமை | இடம் |
---|---|---|
1989 | வெற்றி | போடிநாயக்கனூர் |
1991 | வெற்றி | பர்கூர், காங்கேயம் |
1996 | தோல்வி | பர்கூர் |
2002 | வெற்றி | ஆண்டிப்பட்டி |
2006 | வெற்றி | ஆண்டிப்பட்டி |
2011 | வெற்றி | திருவரங்கம் |
2015 | வெற்றி | டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் |
2016 | வெற்றி | டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் |
2001, ஏப்பிரல் 24. அன்று ஜெயலலிதா 2001, மே 10 அன்று நடைபெற்ற 2001 சட்டமன்றத் தேர்தலுக்கு 4 தொகுதிகளுக்கு ( ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை) வேட்புமனு அளித்திருந்த மனுக்கள் தள்ளுபடி\நிராகரிக்கப்பட்டன. இவையனைத்தும் இரண்டு ஆண்டுகளுக்கோ அதற்கு மேலோ தண்டனைபெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட சட்டம் அனுமதிக்கவில்லை என்பதால் தள்ளுபடி செய்யப்பட்டன.[41] ஆண்டிப்பட்டி தேர்தல் அதிகாரி செயா, கிருஷ்ணகிரி தேர்தல் அதிகாரி மதிவாணன் சட்ட உட்கூறு 8(3) கீழ் வேட்புமனுவை தள்ளுபடி செய்தனர். இச்சட்டத்தின் படி ஒருத்தர் இரு தொகுதிகளுக்கு மேல் மனு தாக்கல் செய்திருந்தால் மனுவை தள்ளுபடி செய்யலாம். ஜெயலலிதா டான்சி நில வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றிருந்தார். அவரது மேல் முறையீடு மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா முடிவு செய்தார். 2001ம் ஆண்டு ஆண்டிப்பட்டியில் தங்க. தமிழ்ச்செல்வன் அதிமுக சார்பாக வென்றார்.
2016 தேர்தலில் போட்டி
[தொகு]2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் போட்டியிட்டார்.அவரது வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களின்படி, செயலலிதாவுக்கு உள்ள மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.118.58 கோடியாகும், கடன் ரூ.2.04 கோடி. 2006ம் ஆண்டு ஜெயலலிதா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டபோது அவரின் சொத்து மதிப்பு ரூ.24.7 கோடியாக இருந்தது. 2011 சட்டசபை தேர்தலின்போது அவரின் சொத்து மதிப்பு ரூ.51.40 கோடியாக உயர்ந்தது.[42] ஏப்பிரல் 25, 2016 அன்று வேட்புமனு அளித்தார்[43]. அத்தேர்தலில் டாக்டர். ராதாகிருஷ்ணன் நகரில் போட்டியிட்டு 97,218 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஜெயலலிதா தலைமையில் அதிமுகவின் சாதனைகள்
[தொகு]- 1991 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 168 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது.
- 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் 18 இடங்களில் வெற்றிபெற்று அடல் பிகாரி வாச்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசில் அதிமுக அங்கம் வகித்தது.
- 2001 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 132 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது.
- 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 150 இடங்களில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.
- 2011 ஆம் ஆண்டு செப்டம்பர்/அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தமிழகத்தில் அப்போது இருந்த 10 (இப்போது 12) மாநகராட்சிகளிலும் வெற்றிபெற்றது.
- 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் தலைமையில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, 37இல் வென்று வரலாற்றுச் சாதனை புரிந்தது. மேலும் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் பெற்றது.
- 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 227இல் நேரடியாகவும், 7இல் அதிமுக கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் அதிமுகவின் இரட்டை இல்லை சின்னத்திலும் போட்டியிட்டு 134 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது 2016இல் தான்.
- 2016 ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 4 உறுப்பினர்களை அனுப்பியதன் மூலம், நாடாளுமன்றத்தில் அதிமுகவின் பலம் 50 (37 மக்களவை + 13 மாநிலங்களவை) ஆக உயர்ந்தது. இது தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்யாத சாதனை.
- 2011 சட்டமன்ற தேர்தல், 2011 உள்ளாட்சித் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் என தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் பெரும்பாலும் தனித்து நின்று ஜெயலலிதா தலைமையில் அதிமுக வெற்றிவாகை சூடியது.
அதிமுக தோற்றுவிக்கப்பட்ட பிறகு நடந்த தேர்தல்கள்
[தொகு]மேலும் அதிமுக தோற்றுவிக்கப்பட்ட பிறகு இதுவரை நடந்த 10 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 7 முறை அதிமுக ஆட்சியைப்பிடித்து, தமிழகத்தில் அதிக முறை ஆட்சி அமைத்த கட்சி என்ற சாதனையைப் படைத்தது.
சட்டசபை
[தொகு]வருடம் | பொதுத்தேர்தல் | கிடைத்த வாக்குகள் | வெற்றிபெற்ற தொகுதிகள் | தலைவர் |
---|---|---|---|---|
1977 | 6வது சட்டசபை | 5,194,876 | 131 | எம்.ஜி.ஆர் |
1980 | 7வது சட்டசபை | 7,303,010 | 129 | எம்.ஜி.ஆர் |
1984 | 8வது சட்டசபை | 8,030,809 | 134 | எம்.ஜி.ஆர் |
1989 | 9வது சட்டசபை | 148,630 | 27 / 2 | ஜெ அணி /ஜா அணி |
1991 | 10வது சட்டசபை | 10,940,966 | 164 | ஜெ. ஜெயலலிதா |
1996 | 11வது சட்டசபை | 5,831,383 | 4 | ஜெ. ஜெயலலிதா |
2001 | 12வது சட்டசபை | 8,815,387 | 132 | ஜெ. ஜெயலலிதா |
2006 | 13வது சட்டசபை | 10,768,559 | 61 | ஜெ. ஜெயலலிதா |
2011 | 14வது சட்டசபை | 1,41,49,681 | 151 | ஜெ. ஜெயலலிதா |
2016 | 15வது சட்டசபை | 1,76,17,060 | 134 | ஜெ. ஜெயலலிதா |
இதில் நான்கு முறை ஜெயலலிதா தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றியது அதிமுக.
விருதுகளும் சிறப்புகளும்
[தொகு]இவர் கலைப் படைப்புகளுக்காகவும், சமூகப் பணிகளுக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- கலைமாமணி விருது - தமிழ்நாடு அரசு (1972)
- சிறப்பு முனைவர் பட்டம் - சென்னைப் பல்கலைக்கழகம் (டிசம்பர் 19, 1991)
- தங்க மங்கை விருது - பன்னாட்டு மனித உரிமைகளுக்கான குழு, உக்ரைன்
பிடித்த புத்தகங்கள்
[தொகு]ஜான் மில்டன் எழுதிய 'பாரடைஸ் லாஸ்ட் (இழந்த சொர்க்கம்)பாரடைஸ் ரீகெய்ன்ட் (மீண்ட சொர்க்கம்)' போன்ற புத்தகங்களை அடிக்கடி வாசிப்பார் [44]
புனைப் பெயர்கள்
[தொகு]- 'அம்மு' என்று அழைக்கப்பட்டார். 1991 தேர்தலில் அஇஅதிமுக வெற்றி பெற்று முதல்வரான பின்னர் மரியாதை கருதி அம்மா என்று தொண்டர்களால் அழைக்கப்பட்டார்.[45]
- புரட்சித்தலைவர் என்றழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ம. கோ. ராமச்சந்திரனின் அரசியல் வாரிசாக கருதப்படுவதால், புரட்சித் தலைவி என்றும் அழைக்கப்பட்டார்.
வழக்குகள்
[தொகு]ஜெயலலிதாவின் மீதான வழக்கு விவரங்கள்:
வண்ணத் தொலைக்காட்சி வழக்கு
[தொகு]- ஊராட்சிகளில் பயன்படுத்த 45,302 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கியதில் 10.16 கோடி ரூபாய் அளவிற்கு கையூட்டுப் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட இவ்வழக்கில் ஜெயலலிதா, சசிகலா நடராசன், சசிகலாவின் உறவினர் பாஸ்கரன், அன்று உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த டி.எம். செல்வகணபதி, தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், அதிகாரிகள் ஹெச்.எம்.பாண்டே, சத்தியமூர்த்தி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள்.
- தீர்ப்பு - அரசுத் தரப்பு சாட்சிகளாக 80 பேரை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன் ஆகியோரை 2000-ஆம் ஆண்டு மே 30 அன்று விடுவித்தார். அதேசமயம் அமைச்சர் செல்வகணபதிக்கும், அதிகாரிகளுக்கும் 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
டான்சி நில வழக்கு
[தொகு]- சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள, அரசு நிறுவனமான டான்சிக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்காக வாங்கியதாகவும் அதை விற்ற வகையில் அரசுக்கு சுமார் 3 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
- தீர்ப்பு - 2000-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் இரண்டு வழக்குகளுக்குமாகச் சேர்த்து ஐந்தாண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை அளித்தது.
- சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது 2000-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் அந்தத் தீர்ப்பிற்குத் தடை விதித்தது. ஆனால் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்யவில்லை. இது 2001-ஆம் ஆண்டு ஒரு சட்ட சிக்கலுக்கு வித்திட்டது. 2001-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா பெரும் வெற்றி பெற்று, முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியாது, எனவே அவர் பதவியேற்கக் கூடாது என வழக்குகள் தொடரப்பட்டன, இவ்வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து ஜெயலலிதா முதல்வர் பதவியை விட்டு விலகினார். 2002-இல் சென்னை உயர்நீதி மன்றம் அவரை விடுவித்த பின்னர் ஆண்டிப்பட்டித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார்.
- இவ்வழக்கின் காரணமாக அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகி ஓ. பன்னீர்செல்வம் முதல்வரானார்.
பிளசண்ட் ஸ்டே விடுதி வழக்கு
[தொகு]- கொடைக்கானலில் கட்டிட விதிகளை மீறி, ஐந்து மாடிகள் உடைய நட்சத்திர விடுதி கட்டிக்கொள்ள பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்ததாகக் குற்றச்சாட்டு.
- தீர்ப்பு - சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அன்றைய அமைச்சர் செல்வகணபதி, அதிகாரி பாண்டே, விடுதி இயக்குநர் ராகேஷ் மிட்டல், விடுதியின் சேர்மன் பாளை சண்முகம் ஆகியோருக்கு ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தார். 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது
- 2000-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவிற்குச் சிறைத் தண்டனை விதித்த செய்தி வெளியானதும் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ரகளையில் ஈடுபட்டனர். அச்சமயம் தருமபுரி மாவட்டத்திற்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்த கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்து மறிக்கப்பட்டு பேருந்துக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்தச் சம்பவத்தில் காயத்ரி, கோகில வாணி, ஹேமலதா என்ற மூன்று பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்டு இறந்து போயினர். தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் மூன்று அதிமுகவினருக்கு சேலம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தன[46], இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு, ‘கல்லூரி’ என்று ஒரு திரைப்படம் உருவானது.
நிலக்கரி இறக்குமதி வழக்கு
[தொகு]- தமிழக அனல் மின்நிலையங்களில் பயன்படுத்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகவும் அதனால் அரசுக்கு 6.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், தலைமைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன், மின்வாரியத் தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.
- தீர்ப்பு - சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுக்களைத் தள்ளுபடி செய்தது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
- இந்த வழக்கில் சுப்ரமணியம் சுவாமியும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். ‘700 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாகப் புகார் அளித்திருந்த சுப்ரமணியம் சுவாமியால், விசாரணையின்போது குற்றச்சாட்டுகளைப் பட்டியலிடவோ, விளக்கவோ முடியவில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
டிட்கோ-ஸ்பிக் பங்குகள் வழக்கு
[தொகு]- அரசு -தனியார் கூட்டுறவில் உருவான நிறுவனம் ஸ்பிக். செட்டிநாட்டரசர் குடும்பத்தைச் சேர்ந்த எம்.ஏ. சிதம்பரமும், அவரது மகன் ஏ.சி. முத்தையாவும், தோற்றுவித்த அந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை (26%) தமிழக அரசு நிறுவனமான டிட்கோ வைத்திருந்தது. நிறுவனத்தின் தலைவராக எம்.ஏ.சிதம்பரமும், துணைத்தலைவராக ஏ.சி.முத்தையாவும் இருந்தார்கள். 89-ஆம் ஆண்டு ஏற்பட்ட திமுக ஆட்சியின்போது பெரும்பான்மைப் பங்குகளை தமிழக அரசு வைத்திருப்பதால் தலைமைச் செயலாளர்தான் தலைவராக இருக்க வேண்டும் என்று அரசு முடிவெடுத்தது. :எம்.ஏ.சிதம்பரம் குடும்பத்தினர் தலைவராவதற்கு ஏதுவாக தமிழக அரசு தன்னிடமிருந்த 2 லட்சம் கடன் பத்திரங்களை அவர்களுக்கு மாற்றிக் கொடுத்தது. 12.37 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை 40.66 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டுதான் கொடுத்தது. ஆனால், இதில் ஊழல் நடந்ததாக சுப்ரமணியன் சுவாமி கூறி வந்த குற்றச்சாட்டுக்களையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.
- தீர்ப்பு - 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் நாள் சிறப்பு நீதிமன்றம் சி.பி.ஐ. குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவில்லை எனச் சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்து, ஜெயலலிதாவை விடுதலை செய்தது. அரசுக்கோ, டிட்கோவிற்கோ நிதி இழப்பு ஏற்படவில்லை என்றும் சொல்லியது.
- செய்தித்தாளில் வந்த ஒரு கட்டுரையின் அடிப்படையில் பொது நல வழக்குத் தொடர்ந்ததாகவும், இந்தப் பங்கு பரிமாற்றம் பற்றித் தனக்குத் தனிப்படத் தெரியாது என்றும் அதுவும் கட்டுரை வெளிவந்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் வழக்குத் தொடர்ந்திருப்பதாலும் பொது நல வழக்குத் தொடர்ந்த சுப்ரமணிய சுவாமியின் சாட்சியத்தை ஏற்க இயலாது என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.
பிறந்த நாள் பரிசு வழக்கு
[தொகு]- 1992-ஆம் ஆண்டு 57 பேரிடமிருந்து 89 வரைவோலைகள் (இதில் அயல்நாட்டிலிருந்து 3 லட்சம் டாலருக்கான ஒரு வரைவோலையும் அடக்கம்) மூலம் 2 கோடி ரூபாய்க்கு மேல் தனது பிறந்த நாளன்று பரிசாகப் பெற்றதாக சி.பி.ஐ. தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. பின்பு குற்றச்சாட்டுப் பதிவு செய்தபோது 21 பேரிடமிருந்து 1.48 கோடி ரூபாய் என்று அதைக் குறைத்துவிட்டது. இந்த வழக்கில் அன்றைய அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டார்கள்.
- தீர்ப்பு - 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா, சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த மொத்தக் குற்றசாட்டுக்களையும் தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்தார். பத்தாண்டுகளாகியும் சி.பி.ஐ. விசாரணையை முடிக்காமல் காரணமின்றி இழுத்தடிக்கிறது என்று குறிப்பிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட எவரும் புகார் அளித்து, சி.பி.ஐ. இந்த வழக்கைத் தொடரவில்லை என்றும், ஜெயலலிதா அவரது வருமான வரி தாக்கலின் போது பிறந்தநாள் பரிசுகள் குறித்துக் கொடுத்திருந்த தகவலை அடிப்படையாகக்கொண்டே குற்றச்சாட்டு கூறப்படுகிறது. எனவே அவர் எந்தத் தகவலையும் மறைக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கு
[தொகு]- ஜெயலலிதா தமிழக முதல்வராக 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.56 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக 1996 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சென்னை நீதிமன்றத்தில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கினைத் தொடர்வதற்கான அனுமதியை மாநில ஆளுனரிடமிருந்து சுப்பிரமணியன் சுவாமி பெற்றார்.
- 2001 ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வரானது இந்த வழக்கின் விசாரணையை கர்நாடகத்துக்கு மாற்ற வேண்டும் என தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் மனு அளித்தார். அதை ஏற்று கொண்ட நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றி கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
- பெங்களூருவில் உள்ள மாநகர சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் விசாரணை தொடங்கியது.
- இவ்வழக்கில் 252 அரசுத் தரப்பு சாட்சிகளிடமும், 99 எதிர்தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
- குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313ன் கீழ், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதியுடன் வாதங்கள் நிறைவடைந்தன.
- 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தியதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார்.
- பாதுகாப்பு காரணங்களுக்காக தீர்ப்பு கர்நாடக மாநிலத்தின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார்.
- இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் ஜெயலலிதா சுமார் 66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.[47][48][49].
- இதன் தொடர்ச்சியாக அவர் முதல்வர் பதவியை இழந்தார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.[50][51].
- மே 11 ,2015 அன்று சொத்துக்குவிப்பு வழக்கின் வழங்கப்பட்ட தண்டனைக்கெதிராக இவரால் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.[52]
- ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது.[53]
- 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் திகதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, வி. என். சுதாகரன், ஜெ. இளவரசி ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இந்த நால்வரில், முதல் குற்றவாளியான செயலலிதா இறந்துவிட்டதால், அவருக்கு எதிராக ரூபாய் 100 கோடி அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது. வி. கே. சசிகலா, வி. என். சுதாகரன், ஜெ. இளவரசி ஆகிய மூன்று பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 10 கோடி அபராதமும் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டது.[54]
- ஆனாலும் சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த ஜெயலலிதாவை குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை 5 ஏப்ரல் 2017 அன்றும் மற்றும் மறு சீராய்வு மனுவை 28 செப்டம்பர் 2018 அன்றும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[35][36]
வருமானவரிக் கணக்கு வழக்கு
[தொகு]ஜெயலலிதா வருமான வரி வழக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது அவர் 1993-1994 ஆம் ஆண்டில் தனது வருமானம் குறித்த கணக்கை வருமான வரித்துறைக்கு சமர்ப்பிக்கவில்லை என வருமான வரித் துறையால் 1996 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்காகும். 1991-1992, 1992-1993 ஆகிய ஆண்டுகளில் சசி எண்டர்பிரைசசும் அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரும் வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, 1997ல் மேலும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது வருமானவரித் துறை. வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான வருமானவரி வழக்கு சென்னை கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்யவேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 2006ல் நிராகரிக்கப்பட்டன. பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்கும்படி எழும்பூர் பெருநகர நீதிமன்றத்திற்கு கடந்த 30 ஜனவரி 2014ஆம் தேதியன்று உத்தரவிட்டது. பிறகு இந்த கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த விவகாரத்தை சமரசமாகப் பேசித் தீர்ப்பதற்கு கடந்த ஜூன் 25ஆம் தேதியன்று வருமான வரித்துறையிடம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் 17-09-2014ல் நடந்தது. இந்த வழக்கு நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. [55]
இந்நிலையில் ரூபாய் வருமான வரித்துறையினர் விதித்த அபராதத் தொகை இரண்டு கோடியை வருமானவரித் துறைக்கு ஜெயலலிதா மற்றும் சசிகலா அபராதம் செலுத்தியதால், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி அன்று வருமானவரித் துறையினர் வழக்கை திரும்ப பெற்றதின் மூலம் வருமானவரிக் கணக்கு வழக்கு முடிவுக்கு வந்தது.[56] அனைத்து வழக்குகளிலிருந்தும் இவர் விடுவிக்கப்பட்டமையால் 2015 மே மாதம் 23 ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சராகப் ஐந்தாவது முறையாகப் பதவி ஏற்றுக்கொண்டார்.[57][58]
2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக் குறைவும், மருத்துவ சிகிச்சைகளும்
[தொகு]2016ஆம் ஆண்டின் செப்டம்பர் 22 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 75 நாட்களுக்குப் பிறகு உடல்நலம் மிகவும் மோசமாகி உயிரிழந்தார்.
மறைவு
[தொகு]ஜெயலலிதா, 5 டிசம்பர் 2016 அன்று இரவு 11.30 மணிக்கு சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.[59][60][61]
மருத்துவமனையிலிருந்து போயஸ் கார்டனிலுள்ள அவரின் வேத நிலையம் இல்லத்துக்கு ஜெயலலிதாவின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. அதன் பிறகு ராஜாஜி அரங்கத்திற்கு அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.[62] இந்திய சனாதிபதி பிரணப் முகர்ஜியின் இறுதி அஞ்சலிக்குப்பின் முப்படையிடம் ஒப்படைக்கப்பட்டு[63] மாலை 6.10 மணிக்கு ஆளுனரின் மரியாதைக்குப் பின்னர் எம்ஜிஆர் நினைவிடத்திற்குப் பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.[64] இறுதிச் சடங்குகளை ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் செய்தனர்.[6]
கட்சித் தொண்டர்கள் உயிரிழப்பு
[தொகு]ஜெயலலிதா உயிரிழந்த செய்தியறிந்து தமிழகத்தில் சுமார் 470 பேர் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்தனர். மேலும் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 இலட்சம் நிதியுதவி வழங்குவதாகவும்[65][66], அதிர்ச்சியிலிருந்து மீளமுடியா தொண்டர் ஒருவர் தனது சுண்டு விரலை வெட்டிக்கொண்டார்[67]. அவருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்குவதாகவும் அஇஅதிமுக சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது[66].
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Srinivasaraju, Sugata (21 மார்ச் 2011). "The Road To Ammahood". Outlook India. http://www.outlookindia.com/article.aspx?270858. பார்த்த நாள்: 10 நவம்பர் 2013.
- ↑ "Amma No More: End Of An Era In Indian Politics". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 6, 2016.
- ↑ "Amma no more: Jayalalithaa buried next to mentor MGR". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 6, 2016.
- ↑ "In school her name was Komalavalli". DNA. 7 மே 2006. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2013.
- ↑ Babu, Venkatesha (6 December 2016). "Ammu to Amma: The life and times of Jayalalithaa Jayaraman". http://www.businesstoday.in/current/economy-politics/ammu-to-amma-the-life-and-times-of-jayalalithaa-jayaraman/story/241781.html.
- ↑ 6.0 6.1 "சசிகலாவால் நிராகரிக்கப்பட்ட ஜெ. அண்ணன் மகள் தீபா.. பயன்படுத்தப்பட்ட அண்ணன் மகன் தீபக்!". oneindia.com. 7 டிசம்பர் 2016. Archived from the original on 7 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 7 டிசம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
,|date=
, and|archivedate=
(help) - ↑ "www.ithayakkani.com". www.ithayakkani.com.
- ↑ 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 8.6 8.7 நியாஸ் அகமது மு; மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை: ஜெயலலிதா டைரிக்குறிப்புகள்!
- ↑ Singh, Bhagwan R (22 January 1984). "Jayalalitha: Lady behind the throne". The Week. பார்க்கப்பட்ட நாள் 26 June 2022.
- ↑ http://www.malaimurasu.com)27.07.2013
- ↑ "HT THIS DAY: January 2, 1988 — Jayalalitha made Gen Secy; parallel meetings called". hindustan times (Chennai, India). 2 January 1988. https://www.hindustantimes.com/india-news/htthisday-january-2-1988-jayalalitha-made-gen-secy-parallel-meetings-called-101641047639963-amp.html.
- ↑ "Jayalalithaa vs Janaki: The last succession battle". the hindu. 10 February 2017. https://www.thehindu.com/news/national/tamil-nadu/Jayalalithaa-vs-Janaki-The-last-succession-battle/article17284902.ece/.
- ↑ "தினமணி".
- ↑ Haviland, Charles (10 June 2003). "Indian women join elite police". BBC. http://news.bbc.co.uk/2/hi/south_asia/2976142.stm.
- ↑ வார்ப்புரு:Cite work
- ↑ "I am legend: Jayalalithaa's top 10 achievements". India Today. 5 December 2016. https://www.indiatoday.in/lite/story/jayalalithaa-dead-biggest-achievements-cm/1/781452.html.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "DMK to form minority govt in Tamil Nadu". Outlook. 11 May 2006. Archived from the original on 15 May 2021. பார்க்கப்பட்ட நாள் 19 July 2022.
- ↑ "AIADMK attacks Karuna for 'Mrs Jaya' remark". India Today. 17 August 2009. பார்க்கப்பட்ட நாள் 18 August 2009.
- ↑ "Jayalalithaa elected Leader of Oppn in TN assembly". The Times of India. 29 May 2006. https://timesofindia.indiatimes.com/india/jayalalithaa-elected-leader-of-oppn-in-tn-assembly/articleshow/1587371.cms.
- ↑ "AIADMK MLAs suspended for rest of the session". Hindustan Times. 26 May 2006. https://www.hindustantimes.com/india/aiadmk-mlas-suspended-for-rest-of-the-session/story-AfrdybCVAIcSdMlWrfsAdM.html.
- ↑ "Jayalalithaa sworn in Tamil Nadu Chief Minister". The Hindu (Chennai, India). 16 May 2011. http://www.thehindu.com/news/article2021167.ece.
- ↑ "Amma Let Sasikala Stay Only Because of DA Case: Natarajan in 2014". The Quint. 8 December 2016. https://www.thequint.com/jayalalithaa/2016/12/08/jayalaithaa-let-sasikala-stay-only-because-of-da-case-husband-in-2014-ndtv-interview-tamil-nadu-politics-natarajan.
- ↑ "Jaya expels close aide Sasikala, husband from AIADMK". The Indian Express. 19 December 2011. http://www.indianexpress.com/news/jaya-expels-close-aide-sasikala-husband-from-aiadmk/889588/.
- ↑ "Sasikala Natarajan: Friend, shadow, sister and now Jayalalithaa's political heir". The News Minute. 5 February 2017. http://www.thenewsminute.com/article/sasikala-natarajan-friend-shadow-sister-and-now-jayalalithaa-s-political-heir-54953.
- ↑ "Transgenders to get Rs 1,000 monthly pension". The Times of India. 2 August 2012. http://www.timesofindia.com/city/chennai/Transgenders-to-get-Rs-1000-monthly-pension/articleshow/15322613.cms.
- ↑ "Free laptop Scheme Tamil Nadu". Startupindiascheme. 14 February 2016. Archived from the original on 17 May 2017. பார்க்கப்பட்ட நாள் 3 May 2017.
- ↑ 27.0 27.1 "There is no magic in Tamil Nadu being a power surplus state, Jayalalithaa says". The Times of India. 3 August 2016. https://timesofindia.indiatimes.com/city/chennai/there-is-no-magic-in-tamil-nadu-being-a-power-surplus-state-jayalalithaa-says/articleshow/53522226.cms.
- ↑ 28.0 28.1 "Jayalalithaa's achievements over the last few years". Thehansindia.com. 13 May 2016. http://www.thehansindia.com/posts/index/National/2016-05-13/Jayalalithaas-achievements-over-the-last-few-years/227896.
- ↑ "Revised marriage aid scheme launched". The Hindu. 7 June 2011. http://www.thehindu.com/news/national/tamil-nadu/revised-marriage-aid-scheme-launched/article2082606.ece.
- ↑ "LIVE: Jayalalithaa wins in RK Nagar with a margin of over 1.5 lakh votes, Congress takes Aruvikkara". இந்தியன் எக்சுபிரசு. 30 June 2015. http://indianexpress.com/article/india/politics/results-of-aruvikkara-rk-nagar-bypolls-today/.
- ↑ "Jayalalithaa is CM again". தி இந்து. 24 May 2015. http://www.thehindu.com/news/national/tamil-nadu/jayalalithaa-is-tamil-nadu-cm-again/article7238526.ece?homepage=true.
- ↑ "Jayalalithaa returns as Tamil Nadu Chief Minister for fifth term, AIADMK completes 4 years in power". India Today. 23 May 2015.
- ↑ "Tamil Nadu women get 50 per cent quota in local bodies". deccanchronicle. 20 February 2016. https://www.deccanchronicle.com/nation/current-affairs/210216/tamil-nadu-women-get-50-per-cent-quota-in-local-bodies.html.
- ↑ "Jayalalithaa Thanks MLAs for Adopted Bills Providing 50 Percent Reservation for Women in Local Bodies". newindianexpress. 21 February 2016. https://www.newindianexpress.com/cities/chennai/2016/feb/21/Jayalalithaa-Thanks-MLAs-for-Adopted-Bills-Providing-50-Percent-Reservation-for-Women-in-Local-Bodies-895164.html.
- ↑ 35.0 35.1 "Jayalalithaa DA case: Supreme Court rejects Karnataka government's review plea". The Times of India. 5 April 2017.
- ↑ 36.0 36.1 "DA case: SC rejects Karnataka's curative petition". business standard. 28 September 2018.
- ↑ "5-வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு".
- ↑ "Profile: She wanted to study…a film role changed her life". IndianExpress. பார்க்கப்பட்ட நாள் 2014-09-28.
- ↑ "The conundrum in an AIADMK stronghold". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 28 செப்டம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Jayalalithaa AIADMK nominee in Andipatti". ReDiff. பார்க்கப்பட்ட நாள் 28 செப்டம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "All Jayalalitha nominations rejected". Rediff. பார்க்கப்பட்ட நாள் 28 செப்டம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ஜெ.வின் சொத்து மதிப்பு ரூ118.58 கோடி- கடன் ரூ2.04 கோடி... வேட்புமனுவில் தகவல்". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2016-04-25.
- ↑ "2ம் நம்பர் சென்டிமெண்ட் + புதன்ஹோரையில் சசியுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த ஜெ". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2016-04-25.
- ↑ தினத்தந்தி-தலையங்கம்- 10.8.2020- ஈரோடு பதிப்பு
- ↑ உருவானார் தலைவர்: ஜெயலலிதா
- ↑ "தருமபுரி பஸ் எரிப்பு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 28 மே 2015.
- ↑ "நீதிபதியிடம் ஜெ., கோரிக்கை".
- ↑ "Jayalalithaa Sentenced to 4 Years in Jail in Corruption Case".
- ↑ "சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு". BBC தமிழ்.
- ↑ "செயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை; ரூ.100 கோடி அபராதம்: பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு". தி இந்து. 27 செப்டம்பர் 2014. http://tamil.thehindu.com/tamilnadu/article6452701.ece. பார்த்த நாள்: 27 செப்டம்பர் 2014.
- ↑ "நீதிபதி குன்ஹா தீர்ப்பு: 10 முக்கியக் குறிப்புகள்!".
- ↑ http://tamil.thehindu.com/india/சொத்துக்-குவிப்பு-வழக்கில்-ஜெயலலிதா-விடுதலை/article7193024.ece?homepage=true
- ↑ "ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: மேல்முறையீடுகள் ஏற்பு". BBC தமிழ்.
- ↑ "சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்: 4 ஆண்டுகள் சிறை; ரூ.10 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு".
- ↑ "ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு நவம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு".
- ↑ "ஜெ., வருமானவரி வழக்கு வாபஸ்".
- ↑ முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு தி இந்து தமிழ் 23.மே 2015
- ↑ "தமிழக முதல்வராக ஜெ.ஜெயலலிதா பதவியேற்றார்". BBC தமிழ்.
- ↑ "Jayalalithaa, Tamil Nadu Chief Minister, passes away". தி இந்து. 6 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 டிசம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Amma no more: Tamil Nadu chief minister Jayalalithaa dies". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 5, 2016.
- ↑ "Jayalalithaa died at 11.30 pm, confirms Apollo". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 5, 2016.
- ↑ "Jayalalithaa's body lying in state at Rajaji Hall". தி இந்து. 6 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 டிசம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ For Jayalalithaa, A Sandalwood Casket, Lakhs Gather In Grief: 10 Points என் டி டி வி 06 டிசம்பர் 2016
- ↑ சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் தி இந்து தமிழ் 07 டிசம்பர் 2016
- ↑ "Jayalalithaa's demise: Shock death toll reaches 470, claims AIADMK". இந்தியன் எக்சுபிரசு. 11 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 டிசம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ 66.0 66.1 "முதல்வர் இறந்த துக்கத்தில் அதிமுக தொண்டர்கள் 77 பேர் உயிரிழப்பு". தினமணி. 8 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 டிசம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "ஜெ., மறைந்த துக்கத்தில் விரலை வெட்டிய தொண்டர்". தினமலர். 6 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 7 டிசம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)
உசாத்துணைகள்
[தொகு]- Ramaswamy, Vijaya (2007). Historical dictionary of the Tamils. United States: Scarecrow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-82958-5.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - Swaminathan, Roopa (2002). M.G. Ramachandran: Jewel of the Masses. Rupa Publications. p. 1986. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171678976.
- Velayutham, Selvaraj (2008). Tamil Cinema: The Cultural Politics of India's Other Film Industry. Routledge. p. 93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-39680-6.
- Sir Stanley Reed, ed. (1983). The Times of India directory and year book including who's who. Times of India Press.
{{cite book}}
:|work=
ignored (help) - Vassanthi (2008). Cut-outs, Caste and Cines Stars. Penguin Books India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-306312-4.
- Vanitha, Rose (2005). Love's Rite. Penguin Books India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-400059-3.
- Das, Sumita (2005). Refugee Management: Sri Lankan Refugges in Tamil Nadu, 1983–2000. Mittal publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788183240666.
- Jagmohan (2007). My Frozen Turbulence In Kashmir. Allied Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788181242174.
- "திருப்பு முனையில்..." மாலன். புதியதலைமுறை. பார்க்கப்பட்ட நாள் 27 செப்டம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- Jayalalithaa - 1948-2016 - ஒரு நினைவுத் தொகுப்பு
- ஜெயலலிதா - அம்மு முதல் அம்மா வரை
- [1]
- Jayalalithaa and Governance
- ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும் 100 கோடி அபராதமும்
- ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: 1996 முதல் 2014 வரை
- நீதிபதி குன்ஹா தீர்ப்பு: 10 முக்கியக் குறிப்புகள்!
- ஜெ. ஜெயலலிதா என்னும் நான் ...
- ஜெ.,யின் சொத்து மதிப்பு!
- தமிழ்நாட்டு முதலமைச்சர்கள்
- தமிழ்த் திரைப்பட நடிகைகள்
- தமிழ்ப் பெண் அரசியல்வாதிகள்
- 1948 பிறப்புகள்
- 2016 இறப்புகள்
- இந்திய நடிகர்-அரசியல்வாதிகள்
- கலைமாமணி விருது பெற்றவர்கள்
- இந்தியப் பெண் முதலமைச்சர்கள்
- ஜெயலலிதா
- 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
- கன்னடத் திரைப்பட நடிகைகள்
- தமிழ்நாட்டுக் குற்றவாளிகள்
- தெலுங்குத் திரைப்பட நடிகைகள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
- 15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்
- தமிழ்நாட்டு நடிகைகள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள்
- நாடாளுமன்ற அ. தி. மு. க. உறுப்பினர்கள்
- தகுதி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்
- தமிழக சட்டமன்ற பெண் உறுப்பினர்கள்