உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் ஊர்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் ஊர்த்
Jan Oort
பிறப்பு(1900-04-28)28 ஏப்ரல் 1900
பிரானெக்கர், பிரீசுலாந்து
இறப்பு5 நவம்பர் 1992(1992-11-05) (அகவை 92)
லைடன், தெற்கு ஒல்லாந்து
தேசியம்டச்சு
துறைவானியல்
ஆய்வு நெறியாளர்யாக்கோபுசு கார்னேலியசு காப்டெய்ன்
அறியப்படுவது
விருதுகள்வெத்லேசன் பரிசு (1966)
கியோட்டோ பரிசு (1987)

ஜான் என்றிக் ஊர்த் (Jan Hendrik Oort, அரசு வானியல் கழக அயல்நாட்டு உறுப்பினர்[1] (/ˈɔːrt/ or /ˈʊərt/;[2] 28 ஏப்பிரல் 1900 – 5 நவம்பர் 1992) நெதெர்லந்து சார்ந்த ஒரு டச்சு வானியலாலர். இவர் பால்வழி பற்றிய புரிதலில் பெரும்பங்களிப்பு செய்துள்ளார். இவர் ஒரு கதிர்வீச்சு வானியல் முன்னோடி.[3] நியூயார்க் டைம்சு இதழ் தன் நினைவேந்தலில் இவரை இந்த நூற்றாண்டின் ”புடவி தேட்டத்தில் பெரும்பணியாற்றிய முன்னோடி வானியலாளர்களில் ஒருவராக” பாராட்டியுள்ளது.[4] ஐரோப்பிய விண்வெளி முகமையின் வலைத்தளம் இவரை “இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த வானியலாளராக்க் கருதுவதோடு இவர் தன் அரிய கண்டுபிடிப்புகளால் வானியலையே புரட்சிகரமாக மாற்றியதாகக் கூறுகிறது.”[5] ஊர்த்தின் பெயர் 1955 இல் நூறு வாழும் பெருமக்களில் ஒருவராக லைஃப் இதழில் வெளியிடப்பட்டது.[6] போருக்குப் பின்னரான வானியலில் நெதெர்லாந்தை அதன் முன்னணிக்கு வந்தவரகக் கருதப்படுகிறார்.”[4]

ஊர்த் பால்வழி சுழல்கிறதென்று தீர்மானிது, சூரியன் அதன் மையத்தில் அமையவில்லையென்று உறுதிப்படுத்தினார். இவர் 1932 இல் கரும்பொருண்ம்ம் நிலவுவதையும் முன்மொழிந்தார். இதுவே புடவியின் 84.5% பங்களவுக்கு அமைகிறதென்றார். இதன் ஈர்ப்பே விண்மீன்களைப் களக்கொத்துகளாக்கி, அவற்றைப் பால்வெளிகளின் சரங்களாக அணிதிரட்டுகிறதென்றார்.”[4][7] இவர்தான் பால்வெளியின் புறவட்டத்தை அதாவது பால்வழியின் விண்மீன்களின் குழுவொன்று முதன்மை வட்டத்தின் வெளியே சுற்றி வருவதைக் கண்டறிந்தார்.[8] இவர் மேலும் வால்வெள்ளிகள் வட்டணைகளில் சுற்றிவருவதைத் தெளிவாகக் கூறியதோடு அவற்றின் பல கருத்துப்படிமங்களையும் உருவாக்கினார் “implied there was a lot more solar system than the region occupied by the planets.”[4]

ஊர்த் முகிலும் ஊர்த் மாறிலிகளும் சிறுகோள் 1691உர்த்தும் இவரது பெயரால் வழங்குகின்றன.

ஊர்த்தின் சில கண்டுபிடிப்புகள்

[தொகு]
ஊர்த்தும் பிறரும் 21 செ.மீ உமிழ்வுக்கோட்டைச் சார்ந்து எடுத்த பால்வெளியின் கதிர்ப்படம் (1958)
  • ஊர்த் 1924 இல் பால்வழி எனும் நம் பால்வெளியின் புறவட்டத்தைக் கண்டுபிடித்தார். இதில் அணிதிரண்ட விண்மீன்கள் ஒரு குழுவாகப் பால்வழியை முதன்மை வட்ட்த்தின் வெளியே சுற்றிவருகின்றன என்றார்.
  • இவர் 1927 இல் பால்வழியின் மையம் புவியில் இருந்து 5,900[பார்செக்குகள் (19,200 ஒளிடாண்டுகள்) தொலைவில் சகாரிட்டசு விண்மீன் குழுவின் திசையில் அமைவதாகக் கூறினார்.[9]
  • இவர் 1932 இல் பால்வழி விண்மீன்களின் இயக்கங்களை அளந்து முதன்முதலில் கரும்பொருண்மம் நிலவுவதைச் சான்றோடு காட்டினார். அதாவது, பால்வழித் தளத்தின் பொருண்மை காணும் பொருள்களின் பொருண்மையை விட கூடுதலாக இருத்தலால், அதன்வழி கரும்பொருண்மம் பால்வழியின் மையத்தில் இருப்பதை நிறுவினார்.[10][11][12]
  • இவர் சூரியனைப் போல பால்வழி 100 பில்லியன் மடங்காக உள்ளதாக எடுத்துக் காட்டினார்.
  • இவர் 1950 இல் சூரியக் குடும்பத்தின் பொது வட்டரத்தில் இருந்து வால்வெள்ளிகள் வருவதை முன்மொழிந்தார். இவ்வட்டரம் இப்போடு ஊர்த் முகில் எனப்படுகிறது.
  • இவர் நண்டு ஒண்முகிலின் ஒளி முனைவுற்றுள்ளதைக் கண்டறிந்து இது ஒத்தியங்கு முடுக்கி உமிழ்வால் விளையும் கதிர்வீச்சாகும் என்றார்.

தகைமைகள்

[தொகு]
பிரேனக்கரில் ஜான் ஊர்த் பிறந்தவீட்டில் உள்ள பாராட்டுப் பட்டயம்.

விருதுகள்

  • பசிபிக் வானியல் கழகப் பொற்பதக்கம், 1942
  • அரசு வானியல் கழகப் பொற்பதக்கம், 1946
  • பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழக ஜான்சன் பதக்கம், 1946
  • அமெரிக்க வானியல் கழக ஃஎன்றி நோரிசு இரசெல் விரிவுரைத் தகைமை, 1951
  • கவுடன் கஞ்சவீர், 1960
  • வெத்லேசன் பரிசு, 1966
  • தேசிய வானியல் காணக, ஜான்சுகி பரிசு, 1967
  • கார்ல் சுவார்சுசைல்டு பதக்கம், வானியல் நிறுவனம் (Astronomische Gesellschaft), 1972
  • Association pour le Développement International de l’Observatoire de Nice இன் அடியோன் பதக்கம், 1978
  • வானியற்பியலுக்கான பால்சன் பரிசு, 1984
  • இனமோரி அறக்கட்டளையின், கயோட்டோ பரிசு, 1987

இவர் பெயரிடப்பட்டவை

உறுப்பினர்த் தகுதிகள்

  • நெதெர்லாந்து அரசுகலை, அறிவியல் கழகத்தின் உறுப்பினர் (1937–1943, 1945–)[13]

இவர் இறந்த பிறகு நோபெல் பரிசாளரான சுப்ரமணியன் சந்திரசேகர், "வானியலின் ஓக் மரம் சாய்ந்திடவே, அதன் அரிய நிழலை இழந்து விட்டோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.[14]

குறிப்புகள்

[தொகு]
  1. Hendrik C. van de Hulst (1994). "Jan Hendrik Oort. 28 April 1900-5 November 1992". Biographical Memoirs of Fellows of the Royal Society 40: 320–326. doi:10.1098/rsbm.1994.0042. 
  2. "Oort". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.  (Subscription or participating institution membership required.)
  3. Lodewijk Woltjer (November 1993). "Obituary: Jan H. Oort". Physics Today 46 (11): 104–105. doi:10.1063/1.2809110. Bibcode: 1993PhT....46k.104W. http://www.physicstoday.org/resource/1/phtoad/v46/i11/p104_s1?bypassSSO=1. பார்த்த நாள்: 2016-02-06. 
  4. 4.0 4.1 4.2 4.3 Wilford, John (12 November 1992). "Jan H. Oort, Dutch Astronomer In Forefront of Field, Dies at 92". New York Times. http://www.nytimes.com/1992/11/12/us/jan-h-oort-dutch-astronomer-in-forefront-of-field-dies-at-92.html. பார்த்த நாள்: 30 May 2014. 
  5. "Jan Hendrik Oort: Comet Pioneer". European Space Agency. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.
  6. Katgert-Merkelijn, J. "Jan Oort". Archived from the original on 21 May 2013. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.
  7. Bertschinger, Edmund. "DARK MATTER, COSMOLOGICAL". பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.
  8. J. H. Oort; Arias, B; Rojo, M; Massa, M (June 1924), "On a Possible Relation between Globular Clusters and Stars of High Velocity", Proc Natl Acad Sci U S A., 10 (6): 256–260, Bibcode:1924PNAS...10..256O, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1073/pnas.10.6.256, PMC 1085635, PMID 16586938.
  9. J. H. Oort (1927-04-14), "Observational evidence confirming Lindblad's hypothesis of a rotation of the galactic system", Bulletin of the Astronomical Institutes of the Netherlands, 3 (120): 275–282, Bibcode:1927BAN.....3..275O.
  10. http://imagine.gsfc.nasa.gov/docs/teachers/galaxies/imagine/hidden_mass.html
  11. http://www.esa.int/esaSC/SEMBPC2PGQD_index_0.html
  12. Ken Freeman, Geoff McNamara (2006). In Search of Dark Matter. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-27616-8. "the story of the emergence of the dark matter problem, from the initial 'discovery' of dark matter by Jan Oort"
  13. "Jan Hendrik Oort (1900 - 1992)". Royal Netherlands Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 30 July 2015.
  14. van de Hulst, H. C. (1994), "Jan Hendrik Oort (1900–1992)", Quarterly Journal of the Royal Astronomical Society, 35 (2): 237–242, Bibcode:1994QJRAS..35..237V.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஊர்த்&oldid=3848751" இலிருந்து மீள்விக்கப்பட்டது