சிந்தி லீவ்
சிந்தியா லீவ் ( Cynthia Leive ) (பிறப்பு ஜனவரி 21, 1967) ஒரு பத்திரிகையாளரும், ஊடகத் தலைவரும், பெண்களுக்காக வாதிடுபவரும், ஒரு கலாச்சார விமர்சகரும் ஆவார். இவர் கிளாமர் மற்றும் செல்ஃப் இதழ்களின் முன்னாள் தலைமை ஆசிரியராக இருந்தார். 2018 ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸின் சிறந்த விற்பனையான "டுகெதர் வி ரைஸ்" உட்பட பல புத்தகங்களை எழுதியவர் அல்லது தயாரிப்பாளர் ஆவார். மாநிலத் தலைவர்கள், ஹாலிவுட், விளம்பர உலகின் மிகப்பெரிய ஆளுமைகள் மற்றும் அனைத்துத் தரப்புத் தலைவர்களையும் பேட்டி கண்டுள்ளார். இவர் தற்போது கலிபோர்னியாவிலுள்ள "அன்னென்பெர்க் தகவல் தொடர்பு மற்றும் ஊடகவியல் நிறுவனத்தில் மூத்த சக ஊழியராக உள்ளார்.
தொழில்
[தொகு]இவரது தொழில் வாழ்க்கை தி பாரிஸ் ரிவ்யூவில் தொடங்கியது. ஸ்வார்த்மோர் கல்லூரியில் மாணவியாக இருந்தபோதே பயிற்சியாளராக இருந்தார். பட்டம் பெற்ற பிறகு, கிளாமரில் தலையங்க உதவியாளர் பதவியைப் பெற்றார். அங்கு 31 ஆண்டுகள் பத்திரிகையின் தலைமையாசிரியராக இருந்த ரூத் விட்னியுடன் இணைந்து பணியாற்றினார். [1] 11 ஆண்டுகள் கிளாமரில் துணை ஆசிரியராகப் பணியாற்றிய சிந்தி செல்ப் என்ற பத்திரிகையின் தலைமை ஆசிரியராக சேர்ந்தார். இவரது பதவிக் காலத்தில், பத்திரிக்க்கையின் வெளியீடு பதினொரு சதவீதம் அதிகரித்தது. [2] 2001 இல் கிளாமர் இதழில் தலைமை ஆசிரியராக மீண்டும் சேர்ந்தார். [3] 9.7 மில்லியன் அச்சு வாசகர்கள் மற்றும் இணையத்தில் 11 மில்லியன் தனிப்பட்ட பயனர்களுடன், ஒவ்வொரு எட்டு அமெரிக்கப் பெண்களில் ஒருவரைச் சென்றடையும் கிளாமர்.காம் என்பதில் உருவாக்கம் மற்றும் வெற்றிக்குப் பின்னால் இவர் இருந்தார். [4] இவரது நிர்வாகத்தின் கீழ், பத்திரிகை மாதாந்திர மின்னணுப் பதிப்பு, பிரபலமான சிறப்பு பதிப்புகள், பயன்பாடுகள் மற்றும் புத்தகங்களை அறிமுகப்படுத்தியது.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சிந்தியா லீவ், ஒரு யூதக் குடும்பத்தில் [5] மெக்லீன், வர்ஜீனியாவில் பிறந்தார். சுவார்த்மோர் கல்லூரியில் 1988 இல் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றுள்ளார். [3] தனது கணவரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஹோவர்ட் பெர்ன்ஸ்டீன், மகள் லூசி, மகன் ஐசக் ஆகியோருடன் நியூயார்க் நகரில் வசிக்கிறார். [6]
சான்றுகள்
[தொகு]- ↑ "Cynthia Leive - Crain's New York Business | New York Rising Star - 40 under 40". Archived from the original on 2007-09-26. பார்க்கப்பட்ட நாள் 2007-02-07.
- ↑ "Cynthia Leive - 2002 - 40 Under Forty | Crain's New York Business". mycrains.crainsnewyork.com. பார்க்கப்பட்ட நாள் 2015-10-10.
- ↑ 3.0 3.1 Redden, Elizabeth (July 2011). "Style and Substance". Swarthmore College Bulletin. Swarthmore College. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015.
- ↑ "Glamour – Condé Nast". Condé Nast (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-21.
- ↑ Leive, Cynthia (June 10, 2014). "A Few Things About Dating From Editor-in-Chief Cindi Leive". Glamour.
I'm a Jewish chick from New York
- ↑ "Brands/Media Kits | Condé Nast". Condenastmediakit.com. பார்க்கப்பட்ட நாள் 2016-01-30.