உள்ளடக்கத்துக்குச் செல்

சத்திசுகரி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்திசுகரி மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-2inc
ISO 639-3hne

சத்திசுகரி மொழி (छत्तिसगढ़ी) பெரும்பாலும் இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் பேசப்படும் ஒரு இந்திய-ஆரிய மொழியாகும். இம் மொழி பேசுவோர் அயல் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, பீஹார் ஆகியவற்றிலும் காணப்படுகின்றனர்.

1920 முதலே, சத்திசுகர்கீ அரசியல் மற்றும் பண்பாட்டு இயக்கங்களின் கூடுதல் தன்னாட்சிக்கான நடவடிக்கைகளை அடுத்து 2000 ஆவது ஆண்டில் மத்தியப் பிரதேசத்தின் 16 மாநிலங்களைப் பிரித்துத் தனி மாநிலம் உருவாக்கப்பட்டது.

சத்திசுகரி, பாகேலி மொழி, அவதி மொழி ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புள்ளது. இந்திய அரசாங்க அறிக்கைகளின்படி இம் மொழியை ஹிந்தியின் கிழக்கத்திய கிளைமொழிகளில் ஒன்றாகவே கருதினர். எனினும் ஆய்வாளர்கள், ஒரு தனி மொழியாகக் கருதப்படுமளவுக்கு ஹிந்தியிலிருந்து இது வேறுபடுவதாகக் காட்டியுள்ளனர். இதற்கும், பைகானி, பூலியா, பிஞ்ச்வாரி, கலங்கா, காவர்தி, கைராகரி, சாத்ரி கோர்வா, சுர்கூஜியா போன்ற பல கிளைமொழிகள் உள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது.

இது பல்வேறு வட இந்திய மொழிகளைப் போலவே தேவநாகரி எழுத்தில் எழுதப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்திசுகரி_மொழி&oldid=2229058" இலிருந்து மீள்விக்கப்பட்டது