சதியா
சதியா
শদিয়া | |
---|---|
ஊர் | |
அடைபெயர்(கள்): Starting point of Assam | |
அசாமில் சதியாவின் அமைவிடம், இந்தியா | |
ஆள்கூறுகள்: 27°50′N 95°40′E / 27.83°N 95.67°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
மாவட்டம் | தின்சுகியா |
ஏற்றம் | 123 m (404 ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | அசாமிய மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 786157 |
வாகனப் பதிவு | AS |
சதியா (Sadiya), பண்டைய இந்தியாவின் சுதியா நாட்டின் மூன்றாவது தலைநகராக 1524 முடிய இருந்தது.[1] தற்போது சதியா நகரம், அசாம் மாநிலத்தின் தின்சுகியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. சதியாவில் பிரம்மபுத்திரா ஆறு பாய்கிறது. மல்லிகைப் பூ போன்ற பூக்களுக்கு சதியா நகரம் பெயர் பெற்றது.
நிர்வாகம்
[தொகு]சதியா நகரம் ஒரு அசாம் சட்டமன்றத்தின் ஒரு தொகுதியைக் கொண்டுள்ளது.
தின்சுகியா மாவட்டத்தின் மூன்று உட்கோட்டங்களில், சதியா உட்கோட்டமும் ஒன்றாகும்.[2]
புவியியல்
[தொகு]அசாம் மாநிலத்தின் வடக்கிழக்கில், அருணாசலப் பிரதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ளது சதியா நகரம் ஆகும். 27°50′N 95°40′E / 27.83°N 95.67°E.[3] இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 123 மீட்டர் உயரத்தில் உள்ளது.
பிரம்மபுத்திரா ஆற்றின் அகலமான மூன்று துணை ஆறுகளான திகாங் ஆறு, திபாங் ஆறு மற்றும் லோகித் ஆறுகள் சதியா நகரத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் கலக்கிறது.
பூபென் ஹசாரிகா பாலம்
[தொகு]பிரம்மபுத்திர ஆற்றின் பெரிய துணை ஆறான லோகித் ஆற்றின் மீது, அருணாசலப் பிரதேசத்தின் தோலா நகரத்தையும், அசாமின் சதியா நகரத்தையும் இணைக்கும் வகையில் 9.15 கிமீ நீளம் கொண்ட பூபென் ஹசாரிகா பாலம் 26 மே 2017 அன்று திறக்கப்பட்டது.[4]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ (Col. Ved Prakash, ப. 912)
- ↑ "List of Parliamentary & Assembly Constituencies" (PDF). Assam. Election Commission of India. Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
- ↑ Falling Rain Genomics, Inc - Sadiya
- ↑ இந்தியாவின் மிக நீளமான பாலம்: நிறைவுவேறியது 20 ஆண்டு கனவு