கோத்தோக்கு-இன்
Appearance
கோத்தோக்கு-இன் என்பது நிப்பான் நாட்டின் கனகாவா மாகாணத்தின் காமாகுரா நகரில் உள்ள ஒரு புத்தக் கோவில். இக்கோவில் அங்குள்ள அமிதாப புத்தரின் மிகப்பெரிய வெண்கலச் சிலையினால் புகழ்பெற்றது. இச்சிலை 13.35 மீட்டர் உயரமும் ஏறத்தாழ 93 டன் எடையும் கொண்டது.
இப் புத்தர் சிலை 1252-ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகக் கருதப்படுகிறது. மேலும் இச்சிலை கோவிலுக்குள் இருந்ததாகவும் 1498-இல் ஏற்பட்ட சுனாமியின் காரணமாக அது அழிந்த பின் புத்தர் சிலை வெட்டவெளியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.