கும்பகோணம் அபிமுகேஸ்வரர் கோயில்
கும்பகோணம் அபிமுகேஸ்வரர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
ஊர்: | கும்பகோணம் |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கும்பகோணம் அபிமுகேஸ்வரர் கோயில் கும்பகோணம் மகாமகக்குளத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கோயில். இக்கோயில் 12ராசிகளில் துலாம் ராசிக்கு சிறப்பான கோயிலாகும்.[1]
தல வரலாறு
[தொகு]அமுத கும்பத்தில் அணிந்திருந்த தேங்காயில் (நாளிகேரம்) தோன்றியவர். இதனால் இக்கோயிலுக்கு நாளிகேரேசம் என்றும், பெருமானுக்கு நாளிகேரசுவரர் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. மகாமக தீர்த்தத்தில் நீராடுவதற்கு கங்கை முதுலிய நதிமடந்தையர் ஒன்பது பேருக்கும் பெருமான் அரிமுகமாக (மேற்கு முகமாக) இருந்து காட்சி கொடுத்ததால் அபிமுகேசுவரர் என்று பெயர் ஏற்பட்டது.[2] ஒரு சமயம் சுபதன் என்ற அந்தணன் தனது மகள் சுமதி என்னும் பெண்ணுக்கு குட்ட நோய் பற்ற அதனைத் தீர்க்கும் பொருட்டுப் பல தலங்களுக்கும் யாத்திரை சென்றான். அவ்வந்தணனை சந்தித்த நாரத முனிவர் குடந்தை சென்று மகாமகத் தீர்த்தத்தில் நீராடி அதன் கிழக்குக்கரையில் அமர்ந்திருக்கும் அபிமுகேஸ்வரரை வணங்கினால் நோய் தீரும் என்று கூறினார். அவ்வாறே அவ்வந்தணரும் மகாமகம் அன்று மகாமகத் தீர்த்தத்தில் நீராடி அபிமுகேஸ்வரரை வணங்கிப் போற்ற அக்கொடிய நோய் நீங்கியது.[3] இக்கோயில் மகாமகக் குளத்தின் கீழ்க்கரையில் உள்ளது.
இறைவன், இறைவி
[தொகு]இத்தலத்தில் உள்ள இறைவன் அபிமுகேசர், இறைவி அமுதவல்லி.
குடமுழுக்கு
[தொகு]1954 மற்றும் 1991ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோயிலில் 4.2.2004இல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.[1] 2016 மகாமகத்தை முன்னிட்டு அக்டோபர் 26, 2015இல் குடமுழுக்கு நடைபெற்றது.[4] [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 அபிமுகேஸ்வரர் திருக்கோயில், ஞான ஆலயம், மார்ச் 2004
- ↑ திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு)
- ↑ மகாமகப் பெருவிழா 2004, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, தமிழ்நாடு அரசு, கும்பகோணம்
- ↑ கும்பகோணத்தில் ஏகாம்பரேஸ்வரர், அமிர்தகலசநாதர் கோயில்களில் குடமுழுக்கு விழா, தினமணி, அக்டோபர் 23, 2015
- ↑ கும்பகோணத்தில் ஏகாம்பரேஸ்வரர், கும்பகோணத்தில் 14 கோயில்களில் குடமுழுக்கு, தினமணி, அக்டோபர் 27, 2015