குன்யு மலை
குன்யு மலை (Chinese ) என்பது சீனாவின் சான்டாங் ஷான்டாங் தீபகற்பத்தில் உள்ள அழகிய மலைகளின் குழு. இது மேற்கில் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யாண்டாய் நகரங்களுக்கும் கிழக்கே வெய்ஹாய் நகருக்கும் இடையில் அமைந்துள்ளது. இம்மலையின் மிக உயரமான இடம் தைபோ சிகரம் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 923 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த மலையின் மொத்தப் பரப்பளவு 1750 சதுர கிலோமீட்டர் ஆகும். இது மலையேற்றப் பாதைகள், சுற்றுலாப் பகுதிகள் மற்றும் நினைவு பரிசுக் கடைகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பிராந்திய சுற்றுலாத் தலமாகும். மலைகளில் செர்ரி, ஆப்பிள் மற்றும் ஆப்ரிகாட் உள்ளிட்ட பல்வேறு மரங்களும், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளும் உள்ளன.
குவான்சென் ஸ்கூல் ஆஃப் தாவோயிசம் இங்கு 12 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.[1] அதன் பிறகு இந்த இடம் வரலாற்று மற்றும் மத முக்கியத்துவத்தை தொடர்ந்து கொண்டிருந்தது. குறிப்பாக, தாவோயிசத் துறவிகள் மற்றும் சீனப் பேரரசர்கள் இந்த தளம் அழியாத வாழ்க்கையை வழங்கும் மாய சக்திகளைக் கொண்டிருப்பதாக நம்பியிருந்தனர்.
இந்த மலைப் பகுதியின் அடிவாரத்தில் குன்யு மலை சாவோலின் தற்காப்புக் கலைகள் அகாதெமியின் பிறப்பிடமாகவும் இருந்தது.[2] இந்தப் பள்ளி சாவோலின் குங்பூ பயிற்சியைக் கற்றுத்தருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Introduction". Mount Kunyu Administrative Office. பார்க்கப்பட்ட நாள் 21 January 2016.
- ↑ "Introduction". Mount Kunyu Administrative Office. பார்க்கப்பட்ட நாள் 21 January 2016.