உள்ளடக்கத்துக்குச் செல்

குக்குரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குக்குரங்கு[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
செபியூலா (Cebuella)

இனம்:
C. pygmaea
இருசொற் பெயரீடு
Cebuella pygmaea
ஸ்பிக்சு, 1823
புவியிடப் பரவல்
வேறு பெயர்கள்

C. p. pygmaea:

  • nigra Schinz, 1844
  • leoninus Bates, 1864

குக்குரங்கு (Cebuella pygmaea) என்பது தென்னமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளில்[3] வாழும், மிகவும் சிறிய உருவுடன் காணப்படும், ஒரு குரங்கு. வாலை விட்டுவிட்டுப் பார்த்தால் உடல் நீளம் 14 முதல் 16 செமீ கொண்ட சிற்றுருவம். இக்குக்குரங்கு அமேசான் மழைக்காடுகளில் கீழ்நிலைப் பகுதிகளில் வாழ்கின்றது. மேற்கு பிரேசில், தென்மேற்குக் கொலம்பியா, கிழக்கு ஈக்வெடார், கிழக்குப் பெரு நாடு, வடக்கு பொலிவியா போன்ற நாட்டுப்பகுதிகளில் உள்ள காடுகளில் கடல்மட்டத்தில் இருந்து 200 மீ முதல் 940 மீ உயரமான[2] பகுதிகள் வரையில் இவை பெரும்பாலும் வாழ்கின்றன. உயிரினப் பாகுபாட்டில் தென்னமெரிக்காவில் வாழும் குரங்குகளில் மார்மோசெட்டு (marmoset) எனப்படும் சிறு உருவம் உடைய பேரின வகைகளை காலித்திரிக்சு (Callithrix), மைக்கோ (Mico) என்னும் இரண்டு பேரினத்தின் கீழ் குறிப்பர். ஆனால் அவற்றில் இருந்து சிறிதே வேறுபடுமாறு குக்குரங்குகள், செபுயெலா அல்லது செபூயா (Cebuella) எனும் தனிப்பேரினமாக, காலித்திரிசிடே (Callitrichidae) என்னும் குடும்பவகையில்[1] சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றின் உணவு மரப்பிசின் ஆகும். குக்குரங்குங்கள் இயற்கையில் ஏறத்தாழ 11-12 ஆண்டுகளைத் தம் வாழ்நாளாகக் கொண்டுள்ளன, ஆனால் உயிர்க்காட்சி சாலைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்திருக்கின்றன.

உருவம்

[தொகு]
குக்குரங்கின் எலும்புக்கூடு

இது முதனிகளில் மிகவும் சிறிய உருவுடையவற்றுள் ஒன்று. இதன் உடல் அளவு வாலை விட்டுவிட்டுப் பார்த்தால் 14 முதல் 16 செமீ இருக்கும்; வால் மட்டுமே 15 முதல் 20 செமீ இருக்கும்.[4] ஆண் குக்குரங்குகளாகிய கடுவன்கள் ஏறத்தாழ 140 கிராம் எடையும், பெண் மந்திகள் 120 கிராம் எடையும் கொண்டிருக்கும்.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

[தொகு]
  1. 1.0 1.1 Rylands AB and Mittermeier RA (2009). "The Diversity of the New World Primates (Platyrrhini)". In Garber PA, Estrada A, Bicca-Marques JC, Heymann EW, Strier KB (ed.). South American Primates: Comparative Perspectives in the Study of Bahavior, Ecology, and Conservation. Springer. pp. 23–54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-78704-6.{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link)
  2. 2.0 2.1 "Cebuella pygmaea". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
  3. Jackson, C. P. C. P. (2011). The positional behavior of pygmy marmosets (Cebuella pygmaea) in northwestern Bolivia. Primates; Journal of Primatology, 52(2), 171-178. Retrieved from [1]
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-25. பார்க்கப்பட்ட நாள் 2012-08-06.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குக்குரங்கு&oldid=3634254" இலிருந்து மீள்விக்கப்பட்டது