உள்ளடக்கத்துக்குச் செல்

கிளாடிசு வெர்கரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளாடிசு வெர்கரா
பிறப்புகிளாடிசு எலனா வெர்கரா கவாகுனின்
1928 (1928)
இறப்பு5 சூலை 2016(2016-07-05) (அகவை 87–88)
மாந்தெவிதியோ, உராகுவே
தேசியம்உராகுவேயர்
படித்த கல்வி நிறுவனங்கள்உராகுவே குடியரசு பல்கலைக்கழகம்
பணிவானியல் பேராசிரியர்

கிளாடிசு எலனா வெர்கரா கவாகுனின் (Gladys Elena Vergara Gavagnin) (1928 – 5 ஜூலை 2016) ஓர் உராகுவே வானியல் பேராசிரியர் ஆவார். இவர் கணினி பயன்பாட்டில் இல்லாதபோது ஒளிமரைப்புகளின் கணக்கீடுகளைச் செய்வதில் வல்லவர். 5659 வெர்கரா எனும் சிறுகோள் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.[1][2][3][4]

வாழ்க்கைப்பணி

[தொகு]

வெர்கரா மகளிர் நுழையமுடியாத இயற்பியல்சார் புலங்களிலும் வானியலிலும் படித்தார். உராகுவே குடியரசு பல்கலைக்கழகத்தில் வாழ்வியல், அறிவியல் புலத்தில் செர்னுசுசி நிறுவிய வானியல் துறையின் முதல் தலைமுறை மாணவரில் இவரும் ஒருவர் ஆவார். அபிசியனாதோசு வானியல் கழகத்தை 1952 இல் நிறுவியவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.[5] இவர் உராகுவே அண்டார்க்டிக் நிறுவனத்தின் செயலாளர் ஆவார்.[1][2][6]

சிலியில் உள்ள செரோ எல்ரோபிள் வானியல் நிலையத்தில் 1968 ஜூலை 18 இல் சிலி வானியலாளர்களாகிய கார்லோசு தாரெசுவும் எசு. கோஃப்ரேவும் முதன்மைச் சிறுகோள் பட்டையில் கண்டுபிடித்த புதிய் சிறுகோள் முதலில் 1968 OA1 எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டது. வெர்கரா இறந்ததும், பன்னாட்டு வானியல் ஒன்றியம் இச்சிறுகோளை இவரது நினைவாக 5659 வெர்கரா எனப் பெயரிட்டது.[1][2][7]

முதல் தேசிய அண்டார்க்டிக் மாநாடு 1970 ஏப்பிரல் 24 முதல் 27 வரை நடந்தபோது அம்மாநாட்டின் தீர்மானத்தின்படி, இவர் உராகுவே அண்டார்க்டிக் நிறுவனத்தின் ஆட்சிமன்றச் செயலாளர் ஆனார்.[8][9] இவரை 1973 ஆண்டு உராகுவே குடிமை-படைமை வல்லாட்சி பணிநீக்கம் செய்தது. பின்னர் 1985 இல் மக்களாட்சி திரும்பும் வரை வேலையின்றித் தவித்தார்.[2] வெர்கரா மேனிலைக் கல்வி மன்றத்தின் வானியல் பேராசிரியர் ஆனார்.[2]

இவர் மாந்தெவிதியோ வான்காணக இயக்குநராகவும் உராகுவே குடியரசு பல்கலைக்கழகத்தின் பொறியியல் புலம் சார்ந்த அளக்கைக் கழகத்தின் பேராசிரியராகவும் பாட்டிலே ஓர்தொனேழ் நிறுவனம் பெண்கள் நிறுவனமாக இருந்தபோது அதன் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.[2]

இவர் தன் மாணவர்களை 10 செமீ யூனிட்ரான் ஒளிவிலகல்வகைத் தொலைநோக்கியை வாங்கும்படி ஊக்கப்படுத்தினார். இம்முயற்சியால், இவர் பாட்டிலே ஓர்தோனேழ் நிறுவனத்தின் மேனிலைக் கல்வி மகளிர் கழக வான்காணகத்தைத் தொடங்கினார். மேலும் இவர் பாட்டிலே ஓர்தோனேழ் நிறுவனத்தை 1976 ஜனவரியில் உருவாக்கி நிறுவியவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.[10]

உராகுவே தேசிய வானியல் குழுவின் நிறுவனர்களில் இவரும் ஒருவர் ஆவார்.[11]

பொறியியல் புலத்தில் இவர் பேராசிரியர் எசுமரால்டா மல்லாடாவின் வகுப்புத் தோழியாவர். மல்லாடாவின் நினைவாக 16277 மல்லாடா எனும் சிறுகோள் பெயரிடப்பட்டது.[12]

கிளாடிசு வெர்கரா மாந்தெவிதியோவில் 2016 ஜூலை 5 இல் இறந்தார்.[13][14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "(5659) Vergara = 1968 OA1 = 1988 CE5". IAU Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 23 November 2017.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Unión Astronómica Internacional designa asteroide (5659)Vergara" [International Astronomical Union Designates Asteroid 5659 Vergara] (in Spanish). Uruguay Educa. Archived from the original on 2 April 2017. பார்க்கப்பட்ட நாள் 23 November 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Comings and Goings". The David Dunlap Doings 22 (2): 3. 15 February 1989. பன்னாட்டுத் தர தொடர் எண்:0713-5904. http://astro.utoronto.ca/AALibrary/doings/DDDoings_v22n2_1989.pdf. பார்த்த நாள்: 23 November 2017. 
  4. "Ella es astrónoma; la ciencia de Urania en la Educación Pública" [She is an Astronomer; the Science of Urania in Public Education] (in Spanish). Portal Uruguayo de Astronomía. 13 May 2009. பார்க்கப்பட்ட நாள் 23 November 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Historia" [History] (in Spanish). Association of Astronomy Aficionados of Uruguay. பார்க்கப்பட்ட நாள் 23 November 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "Uruguay to Join Treaty Nations". Antarctic (New Zealand Antarctic Society): 432. June 1970. http://www.antarctic.org.nz/pdf/Antarctic/Antarctic.V5.10.1970.pdf. பார்த்த நாள்: 23 November 2017. 
  7. "5659 Vergara (1968 OA1)". NASA Jet Propulsion Laboratory. பார்க்கப்பட்ட நாள் 23 November 2017.
  8. Fontes, Waldemar (25 April 2010). "40 años de la Primera Convención Nacional Antártica" [40 Years Since the First National Antarctic Convention]. Historia del Uruguay en la Antártida (in Spanish). பார்க்கப்பட்ட நாள் 23 November 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  9. "Acto de Homenaje a la Profesora Gladys Vergara" [Tribute to Professor Gladys Vergara] (in Spanish). Antarkos Association. 2 November 2011. பார்க்கப்பட்ட நாள் 23 November 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  10. Minniti Morgan, Edgardo Ronald. "Quienes en la astronomia uruguaya" [Who's Who in Uruguayan Astronomy] (PDF) (in Spanish). Apuntes de Astronomía Latinoamericana. பார்க்கப்பட்ட நாள் 23 November 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  11. "Uruguay en el cielo" [Uruguay in the Heavens] (in Spanish). Instituto de Física. பார்க்கப்பட்ட நாள் 23 November 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  12. "Primer asteroide con el nombre de una mujer astrónoma uruguaya" [First Asteroid With the Name of a Uruguayan Woman Astronomer] (in Spanish). Uruguay Educa. Archived from the original on 20 November 2016. பார்க்கப்பட்ட நாள் 23 November 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  13. "Astrónoma Prof. Gladys Elena Vergara Gavagnin" (in Spanish). El Observador. https://www.elobservador.com.uy/astroacutenoma-prof-gladys-elena-vergara-gavagnin-n937757. 
  14. "Gladys Vergara Gavagnin" (in Spanish). El Observador. https://www.elobservador.com.uy/gladys-vergara-gavagnin-n937764.