கரோல் முண்டல்
கரோல் முண்டல் Carole Mundell | |
---|---|
படித்த கல்வி நிறுவனங்கள் | கிளாசுகோ பல்கலைக்கழகம்
மேரிலாந்து பல்கலைக்கழகம் மான்செசுட்டர் பல்கலைக்கழகம் |
பணியகம் | பாத் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | காமாக் கதிர் வெடிப்புகள் புறப்பால்வெளி வானியல் |
கரோல் முண்டல் (Carole Mundell) ஒரு புறப்பால்வெளிப் பேராசிரியரும் பாத் பல்கலைக்கழக இயற்பியல் துறைத்தலைவரும் ஆவார். இவர் நோக்கீட்டு வானியற்பியலாளர் ஆவார். இவரது ஆய்வுப் புலம் அண்டக் கருந்துளைகளும் காமாக் கதிர் வெடிப்புகளும் ஆகும்.
கல்வி
[தொகு]இவர் 1992 இல் கிளாசுகோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலிலும் வானியலிலும் இளமறிவியல் பட்டம் பெற்றார்.[1] இவர் வானியற்பியலில் முனைவர் பட்டம் பெற மான்செசுட்டர் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். அங்கே ஜோதிரல் பேங்க் வான்காணகத்தில் துகள் இயற்பியல், வானியல் மன்றத்தின் ஆய்வுநல்கையை 1997 வரை பெற்றார்.[1]
ஆராய்ச்சி
[தொகு]இவர் 1997 இல் மேஇலாந்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.[1][2] ஈவர் 1999 இல் இலிவர்பூல் ஜான் மூரெசு பல்கலைக்கழகத்தில் அரசு கழக ஆய்வாளராகச் சேர்ந்தார். இவரது ஆய்வு முனைவான பால்வெளிகளின் (பால்வெளி உட்கருக்களின்) இயக்கத்தில் கவனம் குவித்தது.[3][4] இவர் 2005 இல் இவருக்குப் பெரும்பிரித்தானிய ஆராய்ச்சி மன்ற கல்வி ஆய்வுநல்கை காமாக் கதிர்வெடிப்புக் குழுவை இலிவர்பூல் ஜான் மூரெசு பல்கலைக்கழகத்தில் உருவாக்கி வழிநடத்த வழங்கப்ப்ட்டது. இவர் 2007 இல் பேராசிரியராக அமர்த்தப்பட்டார்.[5][6] இவரது குழு 2007 இல் காம்மஆக் கதிர் வெடிப்புகளை அளந்ததற்காக அவ்வாண்டின் டைம்சு உயர்கல்வி ஆராய்ச்சித் திட்ட்த்தைப் பெற்றது.[7]
மிக வேகமாகப் பாயும் தாரைகளைப் படம்பிடிக்கும் எந்திரன்வகைத் தொலைநோக்கிகளை உருவாக்கி இவர் காமாக் கதிர் வெடிப்புகளைப் புரிந்துகொள்வதில் முன்னோடிப் பாத்திரம் வகித்தார்.[8] இவர் 2011 இல் அரசு கழகத்தின் வுல்ப்சன் தகைமை விருதைக் "கருந்துளை முடுக்கும் வெடிப்புகள், இயங்கியல் புடவி" ஆகியவற்றின் ஆய்வுக்காக வென்றார்.[3] இவர் 2012 இல் இலிவர்பூலில் இருந்தபோது, காமாக் கதிர் வெடிப்புக்குப் பிறகு உருவாகும் ஒளியின் முனைவுறலை அளக்க, RINGO2 தொலைநோக்கியை மற்றவரோடு இணைந்து வடிவமைத்து கட்டியமைத்தார்.[9] இந்தத் தொலைநோகி நாசாவின் வேகமான செயற்கைக் கோள்களின் அறிவிப்புகளுக்கு ஏற்ப விரைவாக துலங்லகுமாறு வடிவமைக்கப்பட்டது.[10] இவர் காமாக் கதிர் வெடிப்புகளை அண்டவெளியில் நிகழும் மிக அறுதிம துகள்முடுக்கிகளாக விவரிக்கிறார். மேலும் இவை இயற்பியல் விதிகளை ஓர்வு செய்வதற்கான வாய்ப்புகளைத் தருகின்றபன என்கிறார்.[11] இவரது குழு 2014 இல் ஆராய்ச்சி நல்கைக்கான துணைவேந்தரின் விருதைப் பெற்றது.[12]
இவர் 2015 இல் பாத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, 2016 இல் அதன் இயற்பியல் துறையின் தலைவர் ஆனார்.[13] அங்கு இவர் ஒரு புதிய வானியற்பியல் குழுவை உருவாக்கினார். இக்குழு கருந்துளைகள் முடுக்கும் அமைப்புகளிலும் அவற்றின் சூழல்களிலும் அமைந்த உயர் ஆற்றல் புறப்பால்வெளி வானியற்பியலில் செறிந்த கவனத்தைக் குவித்தது.[14][15]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Advances in astronomy : from the big bang to the solar system. Thompson, J. M. T., Royal Society (Great Britain). London: Imperial College Press. 2005. p. 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1860945775. இணையக் கணினி நூலக மைய எண் 232159979.
{{cite book}}
: CS1 maint: others (link) - ↑ "MAD 27th April 2013: Carole Mundell". www.astro.ljmu.ac.uk. Archived from the original on 2016-01-26. பார்க்கப்பட்ட நாள் 2018-01-21.
- ↑ 3.0 3.1 "Carole Mundell". royalsociety.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-21.
- ↑ "Astrophysics Research Institute - Liverpool John Moores University". www.astro.ljmu.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2018-01-21.
- ↑ "rae 2008 : submissions : ra5a". www.rae.ac.uk (in ஆங்கிலம்). Archived from the original on 2018-01-22. பார்க்கப்பட்ட நாள் 2018-01-21.
- ↑ "Black hole driven explosions and the dynamic universe". www.bath.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-21.
- ↑ "Research project of the year - Measuring gamma ray bursts" (in en). Times Higher Education (THE). 2007-11-26. https://www.timeshighereducation.com/news/research-project-of-the-year-measuring-gamma-ray-bursts/310051.article.
- ↑ Jee, Charlotte. "What We Can Learn From Dying Stars" (in en-GB). Techworld இம் மூலத்தில் இருந்து 2018-01-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180122071912/https://www.techworld.com/data/meet-astrophysicist-who-studies-dying-stars-black-holes-3648222/.
- ↑ "The Liverpool Telescope : Telescope + Instruments : Instruments : RINGO2". telescope.livjm.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2018-01-21.
- ↑ "PUBLICATIONS". www.ras.org.uk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-21.
- ↑ "How extreme magnetic fields shape the universe's cataclysms". Christian Science Monitor. 2013-12-05. https://www.csmonitor.com/Science/2013/1205/How-extreme-magnetic-fields-shape-the-universe-s-cataclysms.
- ↑ "Speakers | The University of Manchester | Jodrell Bank Centre for Astrophysics". www.jodrellbank.manchester.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-21.
- ↑ Dunn, Laura (2016-09-22). "Women In Business Q&A: Professor Carole Mundell, Professor of Extragalactic Astronomy, University of Bath". Huffington Post (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-21.
- ↑ web-support@bath.ac.uk (2016-10-31). "Professor Carole Mundell new Head of Physics Department | University of Bath". www.bath.ac.uk (in ஆங்கிலம்). Archived from the original on 2018-01-22. பார்க்கப்பட்ட நாள் 2018-01-21.
- ↑ "Carole Mundell". The Conversation (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-21.