கங்கோத்ரி தேசியப் பூங்கா
Appearance
கங்கோத்ரி தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | உத்தராகண்டம், இந்தியா |
அருகாமை நகரம் | உத்தராகாசி |
ஆள்கூறுகள் | 31°38′N 79°33′E / 31.633°N 79.550°E |
பரப்பளவு | 1553 (1552.73) km² |
நிருவாக அமைப்பு | உத்தராகண்டம் வனத்துறை |
கங்கோத்ரி தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Gangotri National Park) வட இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த தேசியப் பூங்காவானது 1553 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. இங்கு இதுவரை 15 வகையான பாலூட்டி உயிரினங்களும் 150 வகையான பறவை இனங்களும் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. இங்கு சிறுத்தை வகைகள், மான் வகைகள் மற்றும் கரடி வகைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்தப் பூங்காவானது ஹார்ஸில் நகரிலிருந்து 30 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையான மாதங்களில் அதிக அளவு சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.