உள்ளடக்கத்துக்குச் செல்

எர்ரக்கம்மாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எர்ரக்கம்மாள் என்பவர் நாட்டுபுறப் பெண் தெய்வங்களில் ஒருவராவார். சிவனுடைய மனைவியாகிய பார்வதி தேவியின் அவதாரமாக இந்த தெய்வம் கருதப்படுகிறது. பல்வேறு சமுதாயங்கள் இவரை குலதெய்வமாகக் கொண்டுள்ளனர். [1]இவர்தொட்டியர் குடியில் பிறந்ததாக நம்பப்படுகிறது. ஏவல், பில்லிசூனியம் கட்டுகளை உடைத்து எரியும் சக்திகொண்டதாக நம்பப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை அருகே உள்ள பந்தல்குடி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள சந்தையூர், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே ராசிபுரம் செல்லும் வழியில் ஐந்து கிமீ தூரத்தில் குப்பநாயக்கனூர் ஆகிய இடங்களில் இந்த தெய்வத்துக்கு பூர்வீகமான கோயில்கள் உள்ளன.

எர்ரம்மாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திண்டுக்கல்,நிலக்கோட்டை வட்டம்
அமைவு:சந்தையூர்-தாதபட்டி
கோயில் தகவல்கள்
சிறப்பு திருவிழாக்கள்:சிவராத்திரி.
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திறந்த வெளி
கோயில்களின் எண்ணிக்கை:10 (பாண்டி,கன்னிமார்,நாகம்மா,வீரியகாரி, காமாட்சி அம்மன்,வீருசின்னம்மா-பாண்டியன், சங்கிலி கருப்பு சந்தன கருப்பு, சித்தர்கள்-சக்கரை அம்மா, அடிமுடி பரதேசி அண்ணாமலை பரதேசி)
வரலாறு
கட்டப்பட்ட நாள்:2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது, கல்வட்டம் கல்பதுக்கை கற்குழி கற்குவை போன்ற தொல்லியல் அடையாளங்கள் உள்ளன.
அமைத்தவர்:எரவாதன்,சங்ககால (அகதா)மறவர் இனக்குழுவினர்


எரக்கொற்றி என்ற பெயரில் கேரளத்திலும் வழிபடப்படுகிறது.பாலைநில மக்கள் வழிபட்டு வந்த கொற்றவை என்ற வழிபாட்டின் தொடர்ச்சியாக இதை கொள்ளலாம்.

ஆதாரம்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்ரக்கம்மாள்&oldid=3402262" இலிருந்து மீள்விக்கப்பட்டது