உள்ளடக்கத்துக்குச் செல்

எர்மன் கார்ல் வோகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்மன் கார்ல் வோகல்
Hermann Carl Vogel
எர்மன் கார்ல் வோகல்
பிறப்பு1841|4|3
இலீப்சிகு, சாக்சானிப் பேரரசு
இறப்பு1907|8|13|1841|4|3
போட்சுடாம், செருமானியப் பேரரசு
தேசியம்செருமானியர்
துறைவானியல்
பணியிடங்கள்போட்சுடாம் வான்காணகம்
அறியப்படுவதுவானியல்சார் கதிர்நிரலியல்
விருதுகள்வால்சு பரிசு (1890)
என்றி டிரேப்பர் பதக்கம் (1893)
அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1893)
புரூசு பதக்கம் (1906)

எர்மன் கார்ல் வோகல் (Hermann Carl Vogel) (ஏப்பிரல் 3, 1841 - ஆகத்து 13, 1907) ஒரு செருமானிய வானியற்பியலாளர் ஆவார். இவர் சாக்சானிப் பேர்ரசின் இலீப்சிகுவில் பிறந்தார். இவர் 1882 முதல் 1907 வரை போட்சுடாமில் இருந்த வானியற்பியல் வான்காணகத்தின் இயக்குநராக இருந்தார். விண்மீன்களின் கதிர்நிரல் பகுப்பாய்வு செய்து பரவலான கண்டுபிடிப்புகல் செய்துள்ளார்.

வாழ்க்கை

[தொகு]

வோகல் 1641 இல் இலீப்சிகுவில் பிறந்தார். இவர் த்ந்தையார் ஒன்றிய பூர்கர்சுகூலனாக இருந்தவர். இவர் தான் இலீப்சிகுவில் முதல் பள்ளியை நிறுவியவர் ஆவார்.இவர் பெற்றெடுத மக்களில் ஆப்பிரிக்காவின் ஆய்வாளரும் வானியலாளரும் ஆகிய எடுவார்டு வோகல் (1829–1856, கவிஞரும் பாடகரும் ஆகிய ) எஇல்சே போல்கோ (1823–1899), எழுத்தாலரும் வெளியீட்டாளரும் மொழிபெயர்ப்பாளரும் ஆகிய ஜூலி டோம்கே (1827–1913) அடங்குவர். In 1862, வோகல் தன் படிப்பை டிரெசுடன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். இவர் 1863 இல் இலீப்சிகு பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். அங்கு இவர் கார்ல் கிறித்தியான் புரூகின்சிடம் உதவியாளராக பணிபுரிந்தார். அப்போது இவர் பிரீடுரிக் வில்கெல்ம் உருடோல்ஃப் எங்கல்மன் மேற்கொண்ட இரட்டை விண்மீன்களின் அளவீடுகளில் பங்கேற்றார்.

இவர் ஜேனாவில் தன் முனைவர் பட்ட்த்தை ஒண்முகில்கல், விண்மீன் கொத்துகள் ஆகியவை பற்றிய ஆய்வுக்காக பெற்றார். அதே ஆண்டில் சுட்டென்வார்த்தே போத்காம்புக்குச் சென்றார். இது கீல் நகருக்கு 20 கி.மீ தெற்கில் இருந்த காமர்கெர்னில் அமைந்துள்ளது .இங்கே இவர் முதன்முதலாக, வான்பொருள்களின் கதிர்நிரல் பகுப்பாய்வை மேற்கொண்டார்.. அப்போது இவருக்கு வில்கெல்ம் ஆசுவால்டு உலோக்சே உதவியாளர் ஆனார்.

இவர் 1874 இல் போட்சுடாமில் நிறுவப்பட்ட வானியற்பியல் வான்காணகத்தின் பணியாளராக இந்த வான்காணகத்தை விட்டு வெளியேறினார். அங்கு இவர் அந்நிறுவனத்தின் கருவிகளின் திட்டமிடலிலும் அமைப்பதிலும் ஈடுபட்டார். இதற்காக இவர் பிரித்தானியாவுக்கு 1875 கோடையில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.

வோகல் 1882 முதல் 1907 வரை போட்சுடாம் வானியற்பியல் வான்காணகத்தில் இயக்குந்ராக இருந்தபோது அந்நிறுவனத்தை வானியர்பியலுக்கான உலக முன்னிலை நிறுவனமாக மாற்றினார். எர்மன் கார்ல் வோகல் 1907 இல் போட்சுடாமில் இறந்தார்.

தகைமைகள்

[தொகு]

விருதுகள்

இவரது பெயர் இடப்பட்டவை

  • நிலாவில் உள்ள குழிப்பள்ளம் வோகல்
  • செவ்வாயில் உள்ள குழிப்பள்ளம் வோகல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Joseph S. Tenn. "The Bruce Medalists: Hermann Carl Vogel". Sonoma State University. Archived from the original on 2001-07-21. பார்க்கப்பட்ட நாள் 2017-01-29.
  2. "Henry Draper Medal". National Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 19 February 2011.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]