உள்ளடக்கத்துக்குச் செல்

எரிநெய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எரிநெய் (Fuel oil) என்பது பெட்ரோலியம் துளித்தெடுப்பு வழியாக ஒரு துளிப்பாகவோ (distillate) அடிவண்டலாகவோ (residue) பிரித்து எடுக்கப்படும் ஒரு பின்னக்கூறு ஆகும். பொதுவாக வெப்பத்தை உண்டாக்குவதற்குக் கொதிகலனிலோ, ஆற்றலை உண்டாக்க ஒரு எந்திரத்திலோ, உலையிலோ செலுத்தி எரிக்கப்படும் எந்த ஒரு பெட்ரோலியப் பொருளையும் எரிநெய் என்று சொல்லலாம். இந்த வரைமுறைப்படி டீசல் என்பதும் ஒரு எரிநெய்யே.[1][2][3]

எரிநெய்யானது நீண்ட நீரியக்கரிமச் சங்கிலிகளால் ஆனது. குறிப்பாக, ஆல்க்கேன்கள், வட்ட ஆல்க்கேன்கள், அரோமாட்டிக் ஹைடிரோகார்பன்கள் இவற்றால் ஆனது. பொதுவாக எரிநெய் என்னும் பெயர் பலவிதப் பெட்ரோலியக் கூறுகளைக் குறிக்கப் பயன்பட்டாலும், உண்மையில் கன்னெய், நேப்தா முதலானவற்றைத் தாண்டிய கனமான எரிபொருட்களையே எரிநெய் என்பது குறிக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mayor Bloomberg Presents an Update to PlaNYC: a Greener, Greater New York". NYC.gov. 2010-03-22. Archived from the original on 2 February 2017. பார்க்கப்பட்ட நாள் 22 April 2011.
  2. Office of the Mayor (2016-02-09). "Mayor de Blasio and DEP Announce That All 5,300 Buildings Have Discontinued Use of Most Polluting Heating Oil, Leading to Significantly Cleaner Air". City of New York. Archived from the original on 14 September 2017. பார்க்கப்பட்ட நாள் 14 September 2017.
  3. "U.S. Energy Information Administration (EIA)". Archived from the original on 1 நவம்பர் 2004. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகத்து 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிநெய்&oldid=4106609" இலிருந்து மீள்விக்கப்பட்டது