உள்ளடக்கத்துக்குச் செல்

உருசிய மாநில குழந்தைகள் நூலகம்

ஆள்கூறுகள்: 55°43′43″N 37°36′46″E / 55.72861°N 37.61278°E / 55.72861; 37.61278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருசிய மாநில குழந்தைகள் நூலகம்
Russian State Children's Library
Российская государственная детская библиотека
நாடுஉருசியா
வகைநூலகம்
தொடக்கம்1969
அமைவிடம்மாசுகோ
அமைவிடம்55°43′43″N 37°36′46″E / 55.72861°N 37.61278°E / 55.72861; 37.61278
ஏனைய தகவல்கள்
இயக்குநர்மரியா வேதென்யாபினா
இணையதளம்https://rgdb.ru/
Map
Map

உருசிய மாநில குழந்தைகள் நூலகம் (Russian State Children's Library) உருசிய நாட்டின் தலைநகரமான மாசுகோ நகரில் அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய குழந்தைகள் நூலகமாக இது கருதப்படுகிறது.[1][2] நூலகம் ஆண்டுக்கு 45,000 பார்வையாளர்களையும் ஆண்டுதோறும் 1.2 மில்லியன் இணையவழி பார்வையாளர்களையும் பெறுகிறது.[3] 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, உருசிய மாநில குழந்தைகள் நூலகத்தில் 560,000 புத்தகங்கள் சேகரிப்பில் இருந்தன.[4]

வரலாறு

[தொகு]

நூலகக் கட்டிடம் 1969 ஆண்டு டிசம்பர் மாதம் நிறுவப்பட்டது. 50 ஆவது ஆண்டு நிறைவை 2019 ஆம் ஆண்டில் கொண்டாடியது.[5][2] விளாடிமிர் புடின் நூலகத்தின் ஆண்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.[4] அலோ, நெய்பர் என்ற ஒரு பண்பாட்டு பரிமாற்ற திட்டத்தை நூலகம் நடத்துகிறது. இத்திட்டம் உருசியர்களை மற்ற பண்பாட்டினரோடு அறிமுகப்படுத்த முயல்கிறது.[6] 2019 ஆம் ஆண்டில், அரேபியர்களுடனான பண்பாட்டுப் பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, குழந்தைகள் மேம்பாட்டுக்கான எமிராட்டி கலிமத் அறக்கட்டளை ஏராளமான அரபு குழந்தைகளுக்கான புத்தகங்களை நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியது.[3] 2020 ஆம் ஆண்டில் நூலகம் அசர்பசான் பண்பாடு மற்றும் மரபுகள் பற்றிய இணையவழி நிகழ்நிலை நிகழ்ச்சியான அற்புதமான அசர்பைசான்" என்ற திட்டத்தை நடத்தியது.[6] இதே ஆண்டின் அக்டோபர் மாதத்தில் "டிரா எகிப்து" என்றொரு போட்டியையும் நடத்தியத. இப்போட்டியில் உருசிய குழந்தைகள் எகிப்து எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள் என்பதை வரைபடங்களாகச் சமர்ப்பித்தனர்.[7]

உருசிய சனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணி லாரா புசு இருவரும் 2002 ஆம் ஆண்டில் ஒன்றாக நூலகத்திற்கு வருகை தந்தனர்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Burykina, Marina; Lebedeva, Angela; Beznosov, Denis (October 2016). "Russian National Electronic Children's Library" (in en). Journal of Web Librarianship 10 (4): 375–381. doi:10.1080/19322909.2016.1201448. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-2909. https://www.tandfonline.com/doi/full/10.1080/19322909.2016.1201448. 
  2. 2.0 2.1 Bauress, Henry. "Kildare photographers exhibit in Moscow". www.leinsterleader.ie (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-20.
  3. 3.0 3.1 "Kalimat helps Russia's Arab kids with books". www.gulftoday.ae. பார்க்கப்பட்ட நாள் 2022-05-20.
  4. 4.0 4.1 "Greetings on 50th anniversary of Russian State Children's Library". President of Russia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-20.
  5. Васильевна, Залужская Марина. "Russian State Children's Library 50". english.gpntb.ru (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-20.
  6. 6.0 6.1 Azernews.Az (2020-09-30). "Take a journey to the world of fairy tales!". Azernews.Az (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-20.
  7. ""Draw Egypt", an art competition through the eyes of Russian children". EgyptToday. 2020-10-20. பார்க்கப்பட்ட நாள் 2022-05-20.
  8. "Highlights of Mrs. Bush's Library Tours and Visits". georgewbush-whitehouse.archives.gov. பார்க்கப்பட்ட நாள் 2022-05-20.