உள்ளடக்கத்துக்குச் செல்

இலலித் சூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலலித் சூரி
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
2002–2006
தொகுதிஉத்தரப்பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசுயேச்சை

இலலித் சூரி (Lalit Suri) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தொழிலதிபரும் ஆவார். இவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவர் சுயேச்சையாக இந்தியாவின் நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக உத்தரப்பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 2002 முதல் 2006 வரை பதவியிலிருந்தார்.[1][2]

இப்போது இலலித் (LaLiT) என அழைக்கப்படும் பாரத் தொடர் உணவக தலைவர் இவர் ஆவார். சுமார் 1600 அறைகளுடைய உணவகங்களை வைத்திருக்கும் உணவக உரிமையாளர் இவரே ஆவார். இவரது உணவகங்கள் மும்பை, கோவா, பெங்களூர், ஸ்ரீநகர், உதயப்பூர் மற்றும் கஜுராஹோ உள்ளிட்ட உணவகங்களுடன் தில்லியில் முதன்மையான இன்டர் கான்டினென்டல் உணவகம் உட்பட ஏழு நிறுவனங்களை நடத்தினார். இவர் தனது 59வது வயதில் அக்டோபர் 10, 2006 அன்று இலண்டனில் இறந்தார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 4 December 2017.
  2. "Hotelier Lalit Suri dies of heart attack in UK". தி எகனாமிக் டைம்ஸ். 11 October 2006. பார்க்கப்பட்ட நாள் 4 December 2017.
  3. "MP, hotelier Lalit Suri dies in London".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலலித்_சூரி&oldid=3742747" இலிருந்து மீள்விக்கப்பட்டது