உள்ளடக்கத்துக்குச் செல்

இலண்டன் முருகன் கோயில்

ஆள்கூறுகள்: 51°32′52″N 0°03′24″E / 51.5479°N 0.0566°E / 51.5479; 0.0566
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலண்டன் முருகன் கோயில்
அமைவிடம்
நாடு: ஐக்கிய இராச்சியம்
அமைவு:பிரௌனிங் சாலை, இலண்டன் பெருநகர்ப் பகுதி
ஏற்றம்:7 m (23 அடி)
ஆள்கூறுகள்:51°32′52″N 0°03′24″E / 51.5479°N 0.0566°E / 51.5479; 0.0566
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டடக்கலை
இணையதளம்:[2]

இலண்டன் முருகன் கோயில் என்பது ஐக்கிய இராச்சியத்தில், இலண்டன் பெருநகர்ப் பகுதியின் பிரௌனிங் சாலையில் அமையப் பெற்றுள்ள ஒரு முருகன் கோயில் ஆகும்.[1][2][3] இக்கோயிலின் மூலவர் முருகன் ஆவார். வள்ளி மற்றும் தெய்வானை சமேதராகக் காட்சியளிக்கிறார்.

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 7 மீ. உயரத்தில் (51°32′52″N 0°03′24″E / 51.5479°N 0.0566°E / 51.5479; 0.0566) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பிரௌனிங் சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது.

இலண்டன் முருகன் கோயில் is located in Greater London
இலண்டன் முருகன் கோயில்
இலண்டன் முருகன் கோயில்
இலண்டன் முருகன் கோயில் (Greater London)

விபரங்கள்

[தொகு]

1975ஆம் ஆண்டு இலண்டனில் ஒரு தொண்டு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு, 1984ஆம் வருடம் சிறிய அளவிலான கோயிலாக உருப்பெற்று, 2005ஆம் ஆண்டு 50 அடி உயரமுள்ள இராஜ கோபுரத்துடன் கும்பாபிசேகம் நடைபெற்று, கிழக்கு இலண்டனில் பிரௌனிங் சாலையில் தற்போதைய இடத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறது இக்கோயில்.[4]

திருவிழாக்கள்

[தொகு]

கந்த சஷ்டி, தைப்பூசம், கார்த்திகை விளக்கீடு, வைகாசி விசாகம் மற்றும் பங்குனி உத்தரம் ஆகியவை இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களாகும்.

இதர தெய்வங்கள்

[தொகு]

வெங்கடேசுவரர், மகாலட்சுமி, புவனேசுவரர், நடராசர், புவனேசுவரி, செய துர்க்கை, தட்சிணாமூர்த்தி, ஆனந்த விநாயகர், வள்ளி மற்றும் தெய்வானை சமேத சுப்பிரமணியர், சண்முகர், ஐயப்பன், குருவாயூரப்பன், ஆஞ்சநேயர், அகத்தியர், அருணகிரிநாதர், சூரியன் , சந்திரன், நவக்கிரகங்கள், பைரவர், இடும்பன் மற்றும் பாபா பாலக் நாத் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Āyvuk kōvai. Intiyap Palkalaik Kaḻakat Tamiḻāciriyar Manṟam. 1992.
  2. என்.. செல்வராஜா (2002). நூல் தேட்டம் : தாயகத்திலும் புகளிடத்திலும் வெளியிடப்பெற்ற ஈழத்தூத் தமிழ் நூல்கள் : குறிப்புரையுடனான நூல்விவரப்பட்டியல். அயோத்தி நூலக சேவைகள். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549440-3-2.
  3. Manikanda Prabu. "லண்டன் முருகன் கோயிலில் அண்ணாமலை தரிசனம்: அனைவருக்கும் வேண்டிக் கொண்டதாக ட்வீட்!". Asianet News Network Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 2024-11-06.
  4. [1]
  5. "London Sri Murugan Temple". London Sri Murugan (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-06.

வெளி இணைப்புகள்

[தொகு]

[3]