உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை அரசியலமைப்பு நெருக்கடி 2018

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2018 இலங்கை அரசியலமைப்பு நெருக்கடி
தேதி26 அக்டோபர் 2018 முதல் டிசம்பர் 17 வரை
(6 ஆண்டு-கள், 1 மாதம் and 2 நாள்-கள்)
அமைவிடம்
இலங்கை
காரணம்
முறைகள்ஆர்ப்பாட்டங்கள்
நிலைமுடிவுற்றது.
  • மகிந்த ராசபக்சவை பிரதமராக அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன நியமித்தல்
  • நாடாளுமன்றத்தை அரசுத்தலைவர் சிறிசேன கலைப்பு
  • ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கத்தை நிராகரித்து, அலரி மாளிகையில் தொடர்ந்து தங்கல்
  • புதிய அமைச்சரவை நியமிப்பு
  • அரசு ஊடகங்கள் மீதான அழுத்தங்கள்
  • அமைச்சரவை நியமனங்களில் ஊழல்
  • சிறிசேன நாடாளுமன்டத்தைக் கலைத்து, புதிய தேர்தலுக்கு அழைப்பு
  • நாடாளுமன்றக் கலைப்பை உச்சநீதிமன்றம் இடைநிறுத்தல்
அரச தலைவர் மைத்திரி பால சிறிசேன நாடாளுமன்ற த்தை கலைத்தது சட்ட விரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது .ரணில் விக்கிரம சிங்கே மீண்டும் பிரதமரானார்
தரப்புகள்
வழிநடத்தியோர்
உயிரிழப்புகள்
இறப்பு(கள்)1[1][2]
காயமுற்றோர்3[1]
கைதானோர்2[2]

இலங்கை அரசியலமைப்பு நெருக்கடி 2018 (2018 Sri Lankan constitutional crisis) இலங்கையில் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன 2018 அக்டோபர் 26 அன்று நடப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கி முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவை பிரதமராக நியமித்ததை அடுத்து ஆரம்பமானது. இதனை அடுத்து நாட்டில் இரண்டு பிரதமர்கள் உள்ள நிலை ஏற்பட்டது. விக்கிரமசிங்க இந்த நியமனம் சட்டவிரோதமானது எனக் கூறி பதவி விலக மறுத்துவிட்டார்.[3]

அரசுத்தலைவரின் இந்தத் திடீர் முடிவு பெரும் அரசியல் கொந்தளிப்பை நாட்டில் ஏற்படுத்தியதோடல்லாது, பன்னாட்டு சமூகத்தின் விமரிசனத்துக்கும் உள்ளானது.[2][4][5] விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள், மற்றும் எதிர்க்கட்சிகள் ராசபக்சவின் நியமனத்தை இலங்கை அரசியலமைப்புக்கு முரணானது எனக் கூறி ஏற்றுக்கொள்ளவில்லை.[6] தனக்கே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையின் ஆதரவு உள்ளதாக விக்கிரமசிங்க அறிவித்து, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவைக் கேட்டுக் கொண்டார்.[7] நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு இணங்காத சிறிசேன அக்டோபர் 27 அன்று நாடாளுமன்ற அமர்வுகளை நவம்பர் 16 வரை ஒத்தி வைத்தார்.[8] ராசபக்ச பிரதமராகத் தேவையான அறுதிப் பெரும்பான்மையைப் பெறமுடியாததால், சிறிசேன சிறப்பு வர்த்தமானி மூலம் நவம்பர் 9 அன்று நாடாளுமன்றத்தைக் கலைத்தார். ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக நிறுவனங்களும் இதனை அரசியலமைப்புக்கு முரணானது எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, 2018 டிசம்பர் வரை இடைக்காலத் தடையைப் பெற்றன.[9][10]

2009-இல் ஈழப் போர் முடிவடைந்த நாளில் இருந்து ராசபக்ச இலங்கை அரசியலில் சரச்சைக்குரியவர்களாக இருந்து வந்துள்ளார்.[1] அவரும், அவரது குடும்பமும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ராசபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்கள், மற்றும் ஏனையோரின் படுகொலைகள், மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் வழக்குகள் முடிவுறாத நிலையில் உள்ளன.[2][11] 2018 டிசம்பரில் அரச தலைவர் மைத்திரி பால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தது சட்ட விரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து மீண்டும் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவியேற்றார். இதை தொடர்ந்து அரசியலமைப்பு நெருக்கடி முடிவடைந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Athas, Iqbal; George, Steve. "Sri Lanka constitutional crisis turns violent". CNN. Archived from the original on 31-10-2018. பார்க்கப்பட்ட நாள் 31-10-2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 "Sri Lanka crisis: Fears of a 'bloodbath' in power struggle". BBC. Archived from the original on 30-10-2018. பார்க்கப்பட்ட நாள் 31-10-2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  3. Meixler, Eli. "Sri Lankan Strongman's Return Sparks 'Constitutional Crisis'". Time. பார்க்கப்பட்ட நாள் 11-11-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. Aneez, Shihar. "Sri Lanka PM, 44 ex-MPs defect from party led by president ahead of election". Channel NewsAsia. Archived from the original on 2018-11-14. பார்க்கப்பட்ட நாள் 14-11-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. Rasheed, Zaheena. "Sri Lanka president sacks prime minister, appoints Rajapaksa". Al Jazeera. Archived from the original on 31-10-2018. பார்க்கப்பட்ட நாள் 31-10-2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  6. "The tale of two Prime Ministers". The Sunday Times Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 11-11-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "Sri Lanka President sacks PM, plunges country into crisis". Archived from the original on 28-10-2018. பார்க்கப்பட்ட நாள் 28-10-2018. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  8. "Parliament prorogued". Archived from the original on 28-10-2018. பார்க்கப்பட்ட நாள் 28-10-2018. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  9. "Sunday Times – UNP to challenge President's gazette to dissolve Parliament on Monday". sundaytimes.lk.
  10. "SC stays proclamation dissolving parliament".
  11. "India scrambles to claw back ground in Sri Lanka after pro-China leader named PM". t.lk. Wijeya Newspapers Ltd. Archived from the original on 30-10-2018. பார்க்கப்பட்ட நாள் 31-10-2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)