உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய விரைவுவழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காந்தாலாவிலிருந்து மும்பை-புனே விரைவுச்சாலையின் காட்சி

விரைவுவழி (expressway) என்பது அணுக்கம் கட்டுப்படுத்தப்பட்ட நெடுஞ்சாலையாகும்.[1] இங்கு அணுக்கம் என்பது எவ்வாறு பிற சாலைகளிலிருந்து போக்குவரத்து விரைவுவழிக்கு மாறுகிறது என்பதாகும்; சுங்க கட்டணத்துடன் குழம்பக் கூடாது. விரைவுவழிகள் சுங்கம் இன்றி இலவசச்சாலைகளாகவும் இருக்கலாம். விரைவுவழிக்கு செல்லவும் வெளியேறவும் சாலை வடிவமைப்பின்போதே தனி பக்கச்சாலைகள் அமைந்திருக்கும். இது மணிக்கு அதிகபட்சம் 120கீ.மீ வேகத்தில் செல்லும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனால் விரைவாகச் செல்லும் போக்குவரத்திற்கு தடங்கலின்றி விரைவுவழிக்குள் செல்லவும் வெளியேறவும் இயலும். இந்தியப் போக்குவரத்து வலையமைப்பில் இவையே மிக உயர்ந்தநிலை சாலைகளாகும். இவை ஆறு அல்லது எட்டு தடவழிச் சாலைகளாக உள்ளன. இந்தியாவில் 600 கிமீ நீளமுள்ள விரைவு வழிகள் உள்ளன.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் ஏறத்தாழ 10,000 km (6,200 mi) சுங்கம் பெறும் நான்குவழி நெடுஞ்சாலைகள் உள்ளன; கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கம் இல்லாமையால் இவற்றை விரைவுவழிகள் என்ற கூறவியலாது. தற்போது பெரும் திட்டமொன்று இந்த நெடுஞ்சாலை வலையமைப்பை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய அரசும் மேலும் 18,637 km (11,580 mi) விரைவுவழிகளை 2022க்குள் சேர்த்திட திட்டமிட்டுள்ளது.[2] இந்தச் சாலைகள் அணுக்கம் கட்டுப்படுத்தப்பட்டவையாகவும் நான்கு அல்லது ஆறு தடவழிகளைக் கொண்டவையாகவும் இருக்கும். 3,530 km (2,190 mi) நீள சாலைகள் அடுத்த மூன்று ஆண்டுகளில் வரவுள்ளன. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்றே இந்திய தேசிய விரைவுவழி ஆணையம் உருவாக்கிட நடுவண் அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் செயல்பாட்டைத் துவக்கி உள்ளது.[3]

இந்தியாவின் மொத்த விரைவு வழிகளின் நீளம் வருடந்தோறும்

[தொகு]
இந்தியாவின் மொத்த விரைவு வழிகளின் நீளம் (கி.மீல்)
வருடம் மொத்த நீளம் (கி.மீ)
2023–2024 (Preliminary)
4,901
2022–2023
3,629
2021–2022
2,501
2020–2021
2,002
2019–2020
1,989
2018–2019
1,762
2017–2018
1,323
2016–2017
1,021
2015–2016
1,021
2014–2015
1,021
2013–2014
1,004
2012–2013
988
2011–2012
580
2010–2011
580
2009–2010
534
2008–2009
438
2007–2008
384
2006–2007
384
2005–2006
343
2004–2005
253
2003–2004
160
2002–2003
160

மாநிலங்கள் தோறும் விரைவுவழிகளின் தொகுப்பு

[தொகு]

2023 மார்ச் மாத மாநிலங்கள்தோறும் இயங்கக்கூடிய விரைவுவழிகளின் பட்டியல்:

மாநிலங்கள் நீளம் (கி.மீ/மைல்) விரைவுவழிகளின் எண்ணிக்கை
உத்திரப்பிரதேசம் 1,396 km (867 mi) 8
மகாராட்டிரம் 765.3 km (475.5 mi) 6
இராசத்தான் 757 km (470 mi) 3
609 km (378 mi) 7
சத்தீசுகர் 191 km (119 mi) 2
கருநாடகம் 171 km (106 mi) 5
தெலுங்கானா 169.6 km (105.4 mi) 2
தமிழ்நாடு 94.8 km (58.9 mi) 2
குசராத் 93.1 km (57.8 mi) 1
சார்கண்டு 85 km (53 mi) 1
பீகார் 33 km (21 mi) 2
மேற்கு வங்காளம் 30.17 km (18.75 mi) 2
தில்லி 26.6 km (16.5 mi) 4
மொத்தம் 4,719km

(2932)mi

47


இயங்ககூடிய விரைவுவழிகளின் வகைகளின் நீளம்

[தொகு]
வ.எண். வகை நீளம் (கி.மீ/மை)
1 தேசிய விரைவுவழிகள் 570 km (350 mi)
2 மாநில விரைவுவழிகள் 3,901 km (2,424 mi)
3 சுற்றுச்சாலை விரைவுவழிகள் 675.8 km (419.9 mi)
மொத்தம் 4,900 km (3,000 mi)


தேசிய அதிவேக நெடுஞ்சாலைகள்

[தொகு]

ஏப்ரல் 2021 நிலவரப்படி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் எட்டு அதிவேக நெடுஞ்சாலைகள் தேசிய அதிவேக நெடுஞ்சாலையாக (NE) அறிவிக்கப்பட்டுள்ளன.

     இயங்கக்கூடியவை      கட்டுமானத்தில்      திட்டமிடலில்

வழி எண் விரைவு வழி இயக்கத்தில் (கி.மீ) மொத்த நீளம் (கி.மீ) விரைவுவழியாக அறிவிக்கப்பட்ட தினம் திட்டம் கட்டிமுடிக்கப்பட்ட

தினம்

NE 1 அகமதாபாத்–வதோதரா விரைவுவழி 93 93 13 மார் 1986[4] 16 ஆகத்து 2004[5]
NE 2 கிழக்கு புறவழி விரைவுவழி(KGP) 135 135 30 மார் 2006[6] 27 மே 2018[7]
NE 3 தில்லி–மீரட் விரைவுவழி 96 96 18 ஜூன் 2020[8] 1 ஏப்ரல் 2021[9]
NE 4 தில்லி-மும்பை விரைவுவழி 246 1380 10 ஜன 2020[10] மார்ச்சு 2023
NE 5 தில்லி-அமிர்தசர்-கத்ரா விரைவுவழி 0 398 25 ஜூன் 2020[11] அக்டோபர் 2023
NE 5A நகோதர்-அமிர்தசர் விரைவுவழிy 0 99 17 செப் 2020[12] அக்டோபர் 2023
NE 6 லக்னோ-கான்பூர் விரைவுவழி 0 62 15 டிச 2020[13] அக்டோபர் 2023
NE 7 பெங்களூர்–சென்னை விரைவுவழி 0 258 1 ஜன 2021[14] மார்ச்சு 2024
NE 8 வாரணாசி-கொல்கத்தா விரைவுவழி 0 652 1 ஜன 2023 திசம்பர் 2026
NE 9 காரக்பூர்– மொரகரம் காரக்பூர்-சிலிகுரி பொருளாதார வழித்தடம் 0 230 1 ஜன 2023 25 திசம்பர் 2026
NE 10 கட்டிஹார்-கிசன்கஞ்சு-சிலிகுரி-குவகாத்தி விரைவுவழி 0 676 1 ஜன 2023 25 திசம்பர் 2026
Total 570 4,080

காட்சிக்கூடம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://en.wikipedia.org/wiki/Controlled-access_highway
  2. Ashutosh Kumar. "Expressway cost pegged at Rs20 crore/km". Daily News and Analysis. DNA.
  3. Dipak Kumar Dash (2009-11-23). "By 2022, govt to lay 18,637km of expressways". Times of India. http://timesofindia.indiatimes.com/articleshow/5259102.cms. 
  4. "Notification dated March 13, 1986" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 12 November 2021.
  5. "Ahmedabad Vadodara Expressway to be ready by March-Source-Business Standard". Archived from the original on 4 October 2012. பார்க்கப்பட்ட நாள் 30 December 2021.
  6. "Notification dated March 30, 2006" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 12 November 2021.
  7. "Gurgaon: Kundli-Manesar expressway inauguration today". https://indianexpress.com/article/cities/delhi/gurgaon-sultanpur-kundli-manesar-expressway-inauguration-5452647/. 
  8. "Notification dated June 18, 2020" (PDF). Archived (PDF) from the original on 29 May 2022. பார்க்கப்பட்ட நாள் 24 September 2020.
  9. "Delhi-Meerut Expressway open for public, cuts travel time to 45 minutes". https://economictimes.indiatimes.com/news/india/delhi-meerut-expressway-open-for-public-cuts-travel-time-to-45-min/articleshow/81853266.cms. 
  10. Notification dated January 10, 2020
  11. "Notification dated June 25, 2020" (PDF). Archived (PDF) from the original on 3 May 2021. பார்க்கப்பட்ட நாள் 24 September 2020.
  12. "Notification dated September 17, 2020" (PDF). Archived (PDF) from the original on 3 May 2021. பார்க்கப்பட்ட நாள் 24 September 2020.
  13. "Notification dated December 15, 2020" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 12 November 2021.
  14. "Notification dated January 1, 2021" (PDF). Archived (PDF) from the original on 21 April 2021. பார்க்கப்பட்ட நாள் 21 April 2021.