உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்த்தோபார்மிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்த்தோபார்மிக் அமிலம்
Stereo skeletal formula of orthoformic acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆர்த்தோபார்மிக் அமிலம்
முறையான ஐயூபிஏசி பெயர்
Methanetriol[1]
வேறு பெயர்கள்
மூவைதராக்சிமீத்தேன்
இனங்காட்டிகள்
463-78-5 N
ChemSpider 4401409 Y
InChI
  • InChI=1S/CH4O3/c2-1(3)4/h1-4H Y
    Key: RLAHWVDQYNDAGG-UHFFFAOYSA-N Y
  • InChI=1/CH4O3/c2-1(3)4/h1-4H
    Key: RLAHWVDQYNDAGG-UHFFFAOYAS
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5231666
  • OC(O)O
பண்புகள்
CH4O3
வாய்ப்பாட்டு எடை 64.04 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

ஆர்த்தோபார்மிக் அமிலம் அல்லது மீத்தேன் டிரையால் (Orthoformic acid or methanetriol) என்பது HC(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கருத்தியலான சேர்மமாகும். இச்சேர்மத்தின் மூலக்கூறில் நடுவிலுள்ள கார்பன் அணுவானது ஓர் ஐதரசன் மற்றும் மூன்று ஐதராக்சில் குழுக்களால் சூழப்பட்டுள்ளது.

இன்றையநாள் வரையில் ஆர்த்தோபார்மிக் அமிலம் தனித்துப்பிரிக்கப்படவில்லை. நிலைப்புத்தன்மையற்றதாகக் கருதப்படும் இது தண்ணீர் மற்றும் பார்மிக் அமிலமாகச் சிதைவடையும் என்று நம்பப்படுகிறது.

மீத்தேன் டிரையால் எசுத்தர்கள்

[தொகு]

ஆர்த்தோபார்மேட்டுகள் என அறியப்படும் மீத்தேன் டிரையால் எசுத்தர்கள் வர்த்தகமுறையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.[2][3] அசிட்டால்களைப் போல இவை காரங்களுடன் நிலைப்புத்தன்மையுடனும், அமிலச்சூழலில் எளிதாக நீராற்பகுப்பு அடைந்து ஆல்ககால் மற்றும் பார்மிக் அமிலத்தினுடைய எசுத்தராகவும் பிரிகின்றன. மிதமான நீர்நீக்கியாக ஆர்த்தோபார்மேட்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். மும்மெத்தில் ஆர்த்தோபார்மேட்டு மற்றும் மூவெத்தில் ஆர்த்தோபார்மேட்டு போன்றவை பரவலாக அறியப்பட்டுள்ள ஆர்த்தோபார்மேட்டுகளாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Methanetriol - PubChem". NCBI. பார்க்கப்பட்ட நாள் 22 April 2013.
  2. Peter P. T. Sah, Tsu Sheng Ma (1932), ""ESTERS OF ORTHOFORMIC ACID". J. Am. Chem. Soc., volume 54, issue 7, pages 2964–2966 எஆசு:10.1021/ja01346a048
  3. H. W. Post (1943), "The Chemistry of the Aliphatic Orthoesters", Reinhold, 188 pages

இவற்ரையும் காண்க

[தொகு]