ஆன் ஆர்ன்சுகெமீயர்
ஆன் ஆர்ன்சுகெமீயர் (Ann Hornschemeier) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் X-கதிர் இரும விண்மீன் திரள்களின் X-கதிர் உமிழ்வு ஆய்வில் சிறப்பான புலமையுள்ளவர்.[1] இவர் நாசாவில் அண்டத் திட்ட இயற்பியல் பிரிவின் முதன்மை அறிவியலாளராக உள்ளார்.[1]
வாழ்க்கைப் பணியும் ஆராய்ச்சியும்
[தொகு]இவர்NuSTAR விண்மீன் வெடிப்பு எனும் களப்பணி அறிவியல் குழுவின் தலைவர் ஆவார். இக்குழு ஏழு அருகாமை பால்வெளிகளை நோக்கிடு செய்துவருகிறது.[1] நாசாவில் இவர் உயர் ஆற்றல்வானியற்பியலிலும் அண்டவியலிலும் ஆய்வு செய்கிறார்.[1] இவர் ஐரோப்பிய விண்வெளி முகமையம், 2028 இல் விண்ணில் ஏவ்வுள்ள அதெனா திட்டம் எனும் உயர் ஆற்றல் வானியற்பியலுக்கான மேம்பட்ட தொலைநோக்கித் திட்டம் ஆகிய எதிர்கால ஆய்வுத் திட்டங்களில் பங்கேற்று வருகிறார்.[1] Hornschemeier is also an adjunct faculty member at Johns Hopkins University.[2]
தகைமைகளும் விருதுகளும்
[தொகு]இவர் 2007 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதைப் பெற்ரார். இது வானியலில் அரிய ஆய்வுகளை மேற்கொள்ளும் பெண் வானியலாளருக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது இவர் மிகத் தொலைவாக உள்ல பால்வெளிகளின் X-கதிர் ஆய்வுக்காக வழங்கப்பட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "X-ray Deep: Studying the Universe in X-rays". xraydeep.org. பார்க்கப்பட்ட நாள் 2016-06-18.
- ↑ "NASA - Goddard Space Science Is the Place for Awards This Season". www.nasa.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-06-18.
- ↑ "Annie Jump Cannon Award in Astronomy | American Astronomical Society". aas.org. பார்க்கப்பட்ட நாள் 2016-06-18.