ஆசிய யானை
ஆசிய யானை[1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | E. maximus
|
இருசொற் பெயரீடு | |
Elephas maximus L, 1758 | |
Asian Elephant range |
ஆசிய யானை (அறிவியற் பெயர்: எலிஃவாஸ் மேக்சிமஸ்) யானையினத்தில் எஞ்சியுள்ள மூன்று சிற்றினங்களில் ஒன்றாகும். இவை பெரும்பாலும் இந்தியா, இலங்கை, இந்தியசீனத் தீபகற்பம் போன்றவற்றின் பெரும்பகுதிகளிலும் இந்தோனேசியாவின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. ஆசிய யானைகள் ஆப்பிரிக்க யானைகளை விட உருவத்தில் சிறியவை. இவற்றின் காதுகளும் ஆப்பிரிக்க யானைகளை விடச் சிறியதாகவே இருக்கின்றன. வளர்ந்த யானைக்காதுகளின் மேல் ஓரம் ஆசிய யானைக்கு வெளிப்புறம் மடிந்து இருக்கும், ஆப்பிரிக்க யானைக்கு உட்புறம் சுருண்டிருக்கும்[3]. ஆசிய யானைகள் ஏழில் இருந்து 12 அடி உயரம் வரை வளர்கின்றன. 3000 – 5000 கிலோகிராம் வரை எடை கொண்டவையாக உள்ளன.
உடலமைப்பு
[தொகு]தும்பிக்கை
[தொகு]யானையின் தனிச்சிறப்பான தும்பிக்கையானது அதன் மேலுதடும் மூக்கும் நீண்டு உருவானது. தும்பிக்கையின் நீளம் 1.5 முதல் 2 மீட்டர் GT வேலைகளுக்கும் தும்பிக்கை பயன்படுகிறது. யானையின் தும்பிக்கை ஏறத்தாழ 4 லிட்டர் நீர் கொள்ளும்.
அச்சுறுத்தல்
[தொகு]துப்பாக்கி பயன்பாட்டுக்கு வந்த பிறகு ஆசிய யானைகள் தந்தத்துக்காகப் பெருமளவில் கொல்லப்பட்டன. இதைக் கவனித்த பிரித்தானிய அரசு 1871லேயே மதராஸ் ராஜதானியில் யானைகளை, பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவித்தது.[4] ஆசிய யானைகள் ஒரு காலத்தில் ஆசியப்பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களில் வசித்தாலும் தற்போது 13 நாடுகளில் மட்டுமே வாழுகிறது. தமிழகத்தில் அகத்தியமலைத் தொடர் மற்றும் பெரியாறு மலைத் தொடர் போன்றவற்றில் உயிரியற் பல்வகைமை உள்ளதால் இங்கு கொஞ்சம் இவ்வகை யானைகளைப்பார்க்க முடிகிறது. பல அச்சுறுத்தல்களின் காரணமாக இவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டுள்ளது.[5]
துணை நூற்பட்டியல்
[தொகு]- ச, முகமது அலி; க, யோகானந்த் (நவம்பர் 2004). யானைகள் அழியும் பேருயிர். மேட்டுப்பாளையம்: மலைபடு கடாம் பதிப்பகம். p. 117.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ வார்ப்புரு:MSW3 Shoshani
- ↑ Asian Elephant Specialist Group (1996). Elephas maximus. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 10 May 2006. Listed as Endangered (EN A1cd v2.3)
- ↑ ச.முகமது அலி, பக். 16
- ↑ சு. தியடோர் பாஸ்கரன் (15 செப்டம்பர் 2018). "வேழத்துக்கு ஒரு திருவிழா". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 16 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ ஆரியங்காவில் சிக்கித் தவிக்கும் யானைகள் தி இந்து தமிழ் செப்டம்பர் 5 2016
வெளி இணைப்புகள்
[தொகு]- Save Elephant Foundation
- International Elephant Foundation
- ElefantAsia: Protecting the Asian elephant
- Asian Elephants at the Zoological Gardens of the World
- Elephant Information Repository பரணிடப்பட்டது 2017-07-11 at the வந்தவழி இயந்திரம்
- WWF—Asian elephant species profile
- National Zoo Facts on Asian Elephant and a Webcam of the Asian Elephant exhibit
- Environmental Investigation Agency: Illegal Wildlife Trade : Elephants பரணிடப்பட்டது 2011-12-24 at the வந்தவழி இயந்திரம்