உள்ளடக்கத்துக்குச் செல்

ஆங் துவா ஜெயா

ஆள்கூறுகள்: 2°16′N 102°17′E / 2.267°N 102.283°E / 2.267; 102.283
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆங் துவா ஜெயா
Hang Tuah Jaya
மலாக்கா
உள்ளாட்சி மன்றம்
சொற்பிறப்பு: ஆங் துவா
அடைபெயர்(கள்): அறிவார்ந்த மாநகரம்
(Smart City)
Map
ஆங் துவா ஜெயா is located in மலேசியா
ஆங் துவா ஜெயா
      ஆங் துவா ஜெயா
ஆள்கூறுகள்: 2°16′N 102°17′E / 2.267°N 102.283°E / 2.267; 102.283
நாடு மலேசியா
மாநிலம் மலாக்கா
மாவட்டம்மத்திய மலாக்கா
உருவாக்கம்25 சூன் 2006
உள்ளாட்சி தகுதி1 சனவரி 2010
அரசு
 • வகைஉள்ளாட்சி மன்றம்
 • நிர்வாகம்ஆங் துவா ஜெயா நகராண்மைக் கழகம்
 • தலைவர்சாபியா அருண்
பரப்பளவு
 • மொத்தம்144.61 km2 (55.83 sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசியாவின் அஞ்சல் குறியீடுகள்
75xxx to 77xxx
மலேசியத் தொலைபேசி எண்கள்06
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்M
இணையதளம்www.mphtj.gov.my

ஆங் துவா ஜெயா (மலாய்: Hang Tuah Jaya; ஆங்கிலம்: Hang Tuah Jaya; சீனம்: 汉都亚再也); என்பது மலேசியா, மலாக்கா மத்திய மலாக்கா மாவட்டம்; ஜாசின் மாவட்டம்; அலோர் காஜா மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு புறநகர் நிலப்பகுதி; மற்றும் ஒரு நாடாளுமன்றத் தொகுதி (P137) ஆகும். இந்தத் தொகுதி சூன் 1, 2005-இல் நிறுவப்பட்டது[1]

பொருளாதார, சமூக, உள்கட்டமைப்பு மற்றும் பொழுதுபோக்கு மேம்பாடுகளுடன், மலாக்கா மாநிலத்தின் நிர்வாக மையமாகவும்; அறிவார்ந்த மாநகரமாகவும், மலாக்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. இந்த நகரம் நிலத்தால் சூழப்பட்ட ஒரே நகராட்சியாகும்.[2]

பொது

[தொகு]

ஆங் துவா ஜெயா புறநகர் நிலப்பகுதியின் பங்கு முக்கியமானது. ஏனெனில் மலாக்கா மாநில அரசின் நிர்வாக மையம் இந்த ஆங் துவா ஜெயா நகராட்சி நிர்வாகத்திற்குள் அமைந்துள்ளது.

ஆங் துவா ஜெயா மக்களவை தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 2018-ஆம் ஆண்டு முதல் மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் பிரதிநிதித்துவம் படுத்தப் படுகிறது.[2][3]

சொற்பிறப்பியல்

[தொகு]

புகழ்பெற்ற மலாய் வீரர் ஆங் துவா என்பவரின் பெயரால் இந்த இடத்திற்குப் பெயரிடப்பட்டது. ஆங் துவா ஜெயா என்பது ஆங் துவா மற்றும் ஜெயா எனும் இரு சொற்களின் கலவையாகும். ஆங் துவா ஜெயா எனும் பெயர், மலாய் மொழியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சமசுகிருத சொல்லான "ஜெயா" எனும் சொல்லைப் பின்னணியாகக் கொண்டது.

வரலாறு

[தொகு]

2010-ஆம் ஆண்டுக்கு முன்னர், மாநில அரசு நிறுவனமான ஆங் துவா ஜெயா நிறுவனத்தின் மூலம் ஆங் துவா ஜெயா நிர்வகிக்கப்பட்டது. இதன் வளர்ச்சியை மலாக்கா பன்னாட்டு வணிக மையம் (எம்ஐடிசி) மேற்பார்வையிடுகிறது. மலேசியாவின் ஐந்தாவது பிரதமர், அப்துல்லா அகமது படாவி அவர்களால் 25 ஜூன் 2006-இல் ஆங் துவா ஜெயா தொடங்கப்பட்டது.[4][5]

நிர்வாகப் பகுதி

[தொகு]

நிர்வாகப் பகுதி பின்வரும் முக்கிம்களின் பகுதிகளைக் கொண்டுள்ளது:[6][7]

மலேசியாவில், ஒரு முக்கிம் என்பது ஒரு மாவட்டம் அல்லது ஒரு மாவட்டத்தின் துணைப்பிரிவு அல்லது உட்பிரிவாக இருக்கலாம்; அல்லது தேசிய நிலச் சட்டம் 1965-இன் பிரிவு 11 (சி) இன் படி (Section 11(c) of the National Land Code 1965), தன்னாட்சி பெற்ற துணை மாவட்டமாகவும் இருக்கலாம்.

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Background".
  2. 2.0 2.1 "Hang Tuah Jaya situated amidst State Malacca cover Pusat Pentadbiran area State Government and include 3 District namely part of Daerah Melaka Tengah, Alor Gajah and Jasin". பார்க்கப்பட்ட நாள் 7 February 2024.
  3. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2020-06-20.
  4. "Malacca ushers in 2010 with new Hang Tuah Jaya municipality". The Star (Malaysia). 2 January 2010.
  5. "Hang Tuah Jaya can be accessed through the PLUS highway through the Ayer Keroh Toll House (4.6km). It is Melaka's new administrative town. Hang Tuah Jaya includes, among others, Ayer Keroh, Melaka International Trade Centre (MITC),". heritagemalaysia.my. பார்க்கப்பட்ட நாள் 7 February 2024.
  6. "Publications".
  7. "Laporan Tahunan 2018" (PDF).

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்_துவா_ஜெயா&oldid=3910000" இலிருந்து மீள்விக்கப்பட்டது