உள்ளடக்கத்துக்குச் செல்

அலுமினியம் போரோவைதரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலுமினியம் போரோவைதரைடு[1]
Structural formula of the aluminium borohydride molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அலுமினியம் போரோவைதரைடு
வேறு பெயர்கள்
அலுமினியம் போரோவைதரைடு, அலுமினியம் டெட்ராவைதரோபோரேட்டு
இனங்காட்டிகள்
16962-07-5 N=
ChemSpider 55734 Y
InChI
  • InChI=1S/Al.3BH4/h;3*1H4/q+3;3*-1 Y
    Key: LNJYEMMRSAGORU-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Al.3BH4/h;3*1H4/q+3;3*-1
    Key: LNJYEMMRSAGORU-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள் Image
  • [Al+3].[BH4-].[BH4-].[BH4-]
பண்புகள்
AlB3H12
வாய்ப்பாட்டு எடை 71.51 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
உருகுநிலை −64.5 °C (−84.1 °F; 208.7 K)
கொதிநிலை 44.5 °C (112.1 °F; 317.6 K)
வினைபுரியும்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை தானாகத் தீப்பற்றும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

அலுமினியம் போரோவைதரைடு (Aluminium borohydride) என்பது Al(BH4)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அலுமினியம் டெட்ரா ஐதரோபோரேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. எளிதில் ஆவியாகக் கூடியதாகவும், உடனடியாகத் தீப்பற்றும் சேர்மமாகவும் உள்ள இச்சேர்மம் இராக்கெட் எரிபொருளாகவும், ஆய்வகங்களில் ஒடுக்கும் முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான உலோக போரோ ஐதரைடுகள் போல இல்லாமல் அலுமினியம் போரோவைதரைடு ஒரு சகப்பிணைப்புச் சேர்மமாகும். மற்றவை அயனிப் பிணைப்புக் கட்டமைப்பில் உள்ளன[2][3].

தயாரிப்பு

[தொகு]

சோடியம் போரோவைதரைடு உடன் அலுமினியம் குளோரைடு வினை புரிவதால் அலுமினியம் போரோவைதரைடு உருவாகிறது:[4].

3 NaBH4 + AlCl3 → Al(BH4)3 + 3 NaCl

அல்லது ஒர் உடன் தீப்பற்றாத டெட்ரா ஐதரோபியுரான் கூட்டு விளைபொருளாக,டெட்ரா ஐதரோபியுரானில் உள்ள அலுமினியம் குளோரைடு மற்றும் கால்சியம் போரோவைதரைடுடன் ஒத்த வினையில் ஈடுபடுகிறது:[2].

3 Ca(BH4)2 + 2 AlCl3 → 3 CaCl2 + 2 Al(BH4)3

வினைகள்

[தொகு]

எல்லா போரோவைதரைடுகளையும் போல இச்சேர்மம் ஒரு ஒடுக்கும் முகவராகவும் ஐதரைடு வழங்கியாகவும் செயல்படுகிறது. தண்ணீருடன் வினைபுரிந்து தனிமநிலை ஐதரசன் வாயுவைக் கொடுக்கிறது. மேலும் கார்பாக்சிலிக் எசுத்தர்கள், ஆல்டிகைடுகள், கீட்டோன்கள் ஆகியனவற்றை ஒடுக்கி ஆல்ககாலாக மாற்றுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ed.). Boca Raton, FL: CRC Press. pp. 4–39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2.
  2. 2.0 2.1 J. Kollonitsch & O. Fuchs (1955). "Preparation of Aluminium Borohydride and its Applications in Organic Reductions". Nature 176 (4492): 1081. doi:10.1038/1761081a0. 
  3. Miwa, K.; Ohba, N.; Towata, S.; Nakamori, Y.; Züttel, A.; Orimo, S. (2007). "First-principles study on thermodynamical stability of metal borohydrides: Aluminum borohydride Al(BH4)3". J. Alloys Compd. 446–447: 310–314. doi:10.1016/j.jallcom.2006.11.140. 
  4. Perry, Dale L.; Phillips, Sidney L. (1995). Handbook of Inorganic Compounds. CRC Press. pp. 3–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-8671-3. பார்க்கப்பட்ட நாள் 2007-12-09.

துணை நூல்கள்

[தொகு]
  • Fletcher, Edward; Foster, Hampton; Straight, David (1959). "Aluminum Borohydride and Mixtures with Hydrocarbons in Jet Engine Combustor Ignition". Industrial & Engineering Chemistry 51 (11): 1389. doi:10.1021/ie50599a044. 
  • Hinkamp, James B.; Hnizda, Vincent (1955). "Aluminum Borohydride Preparation". Industrial & Engineering Chemistry 47 (8): 1560. doi:10.1021/ie50548a032.