உள்ளடக்கத்துக்குச் செல்

அரங்கேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாதவியின் அரங்கேற்றம்

அரங்கேற்றம் என்பது ஒருவர் தனது நூலை, புத்தாக்கமொன்றை அல்லது அளிக்கையை முதன்முதலில் சபையினர் முன்னிலையில் நிகழ்த்துவது ஆகும். பரதநாட்டியம், இசைக்கலை முதலானவற்றினை பயிலும் மாணக்கர் தம் முதல் நிகழ்வை அரங்கேற்றம் செய்வர். இது ஒரு பெருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. அரங்கேற்றமானது பொதுவாக கோயில் அல்லது மண்டபம் போன்ற பொது இடங்களில் நடத்தப்படுகிறது. பண்டைய தமிழ் மன்னர் காலத்திலும் அரங்கேற்று விழா அரசவிழாவாகக் கொண்டாடப்பட்டமைக்கான குறிப்புகள் உள்ளன. ஆடல்மங்கை மாதவியின் அரங்கேற்றம் பற்றி சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதை குறிப்பிடுகின்றது. அக்காலப் புலவர்கள் தாம் புதியதாக இயற்றிய புராணம், சிற்றிலக்கியம் போன்றவற்றை அது எத்தலத்தின் மீது பாடப்பட்டதோ அத்தலத்திலே உள்ள கோயிலிலே அரங்கேற்றினர். இந்த அரங்கேற்றமானது பல நாட்கள் மாலை நேரத்தில் நடக்கும். இதில் சுற்றவட்டாரப் புலவர்கள் கலந்து கொள்வர். அவர்கள் முன்னிலையில் தினமும் தான் இயற்றிய இலக்கியப் பாடல்களை வரிசையாக சொல்லி அதற்கான பொருளையும் கூறுவார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. உ. வே. சாமிநாதையர் (2016). நல்லுரைக்கோவை (மூன்றாம் தொகுதி). சென்னை: டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் நூல்நிலையம். pp. 506–510.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரங்கேற்றம்&oldid=4111392" இலிருந்து மீள்விக்கப்பட்டது