அமி மைஞ்சர்
அமி மைஞ்சர் Amy Mainzer | |
---|---|
பிறப்பு | சனவரி 2, 1974 |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியற்பியல் |
பணியிடங்கள் | தாரைச் செலுத்த ஆய்வகம் |
கல்வி கற்ற இடங்கள் | சுட்டான்போர்டு பல்கலைக்கழகம் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் கலிபோர்னியா பல்கலைக்கழகம், இலாசு ஏஞ்சலீசு |
அறியப்படுவது | வானியற்பியல் கருவிகளும் அகச்சிவப்புக் கதிர் வானியலும் |
அமி மைஞ்சர் (Amy Mainzer) (பிறப்பு: ஜனவரி 2, 1974) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் வானியற்பியல் கருவிகளிலும் அகச்சிவப்புக் கதிர் வானியலிலும் சிறப்பு புலமை பெற்றவர்.இவர் அகல்புல அகச்சிவப்புக் கதிர் அளக்கை தேட்டக்கலத் திட்ட்த்தின் இணை திட்ட அறிவியலாளரும் சிறுகோள்கள் ஆய்வுக்கான நியோவைசு (NEOWISE) திட்ட முதன்மை ஆய்வாளரும் ஆவார்.[1] இவர் மேலும் இப்போது முன்மொழியப்பட்டுள்ள புவியண்மை வான்பொருள் படப்பிடிப்பு விண்வெளித் தொலைநோகித் திட்ட முதன்மை ஆய்வாளராகவும் உள்ளார்.
வாழ்க்கை
[தொகு]இவர் 1996 இல் இயற்பியலில் இளம் அறிவியல் பட்டத்தைசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் உயர்தகவுடன் பெற்றார்; இவர் 2000 இல் வானியலில் மூதறிவியல் பட்டத்தை கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்திலும் வானியல் முனைவர் பட்டத்தை 2003 இல் இலாசு ஏஞ்சலீசில் அமைந்த கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.
இவர் சிறுகோள்களையும் பழுப்புக் குறுமீன்களையும் கோள் வளிமண்டலங்களயும் சிதில வட்டுகளையும் விண்மீன் உருவாக்கத்தையும் தரை, வெண்வெளி சார்ந்த புதிய வானியல் கருவிகளையும் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்கிறார்.[2]
சிறுகோள் 234750 அமிமைஞ்சர் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
இவர் வரலாறு சார்ந்த தொலைக்காட்சித் தொடர்களிலும் புடவி தொலைக்காட்சித் தொடர்களிலும் பலவற்றில் கலந்துகொள்கிறார்.[3] 2010 மார்ச்சில் வெளியிடப்பட்ட வீட்டுக் காணொளிக் காட்சி தொடராகிய "விண்மீன் பயணத் தலைமுறைகள்" கீழ் அமைந்த "உடுக்கண வான்படவியல்: புவி மீது" தொடரில் அடிக்கடி கலந்துகொள்கிறார். இவர் இலியோனார்டு நிமோய் வாழ்க்கைத் தொடர் ஆவண நிகழ்ச்சியிலும் மக்கள் பண்பாட்டில் சுபோக்கின் தாக்கம் பற்றிய சுபோக் பாலான அன்பு எனும் ஆவணத் தொடரிலும் கலந்துகொள்கிறார். இவை இலியோனார்டு நிமோயின் மகனாகிய ஆதாம் நிமோயால் 2016 இல் உருவாக்கப்பட்டன. இவர் 2016 மாரிக் காலத்தில் இருந்து அறிவியல் அறிவுரைஞராகவும் தாரையுந்து ஆயத்தம் போவோமே எனும் பிபியெசு குழந்தைகள் தொடரில் விருந்தினராகவும் தொண்டாற்றி வருகிறார்.[4]
விருதுகள்
[தொகு]- நாசா விதிவிலக்கான உயர்தகவு அறிவியல் சாதனைப் பதக்கம் (2012)
- நாசா விதிவிலக்கான உயர்தகவு அறிவியல் சாதனைப் பதக்கம் (2011)
- வைசு, நியோவைசு, சுபிட்சர்திட்டங்களில் குழுசார் சாதனை விருதுகள்
- சிறப்புத் தகவுக்கான இலியூ ஆலன் விருது (2010)
- நாசா பட்டமேற்படிப்பு மாணவர் ஆராய்ச்சித் திட்ட நல்கை (2001-2003)
- தேசிய அறிவியல் அறக்கட்டளை பட்டமேற்படிப்பு மாணவர் ஆராய்ச்சித் திட்ட நல்கை (1996-1999)[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "NASA's NEOWISE Completes Scan for Asteroids and Comets – NASA Jet Propulsion Laboratory". jpl.nasa.gov. 1 February 2011. Archived from the original on 5 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 11 March 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Science – Evolution of Galaxies: People: Amy Mainzer". science.jpl.nasa.gov. Archived from the original on 3 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 11 March 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Amy Mainzer". CBS Entertainment. Archived from the original on 14 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 30 January 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ https://www.pbs.org/about/news/archive/2015/ready-jet-go-premiere/
- ↑ Mainzer, Amy. "Science - Structure of the Universe (3266): People: Amy Mainzer". science.jpl.nasa.gov. Archived from the original on 2018-06-15. பார்க்கப்பட்ட நாள் 2017-04-22.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் அமி மைஞ்சர்
- Amy Mainzer பரணிடப்பட்டது 2013-07-03 at the வந்தவழி இயந்திரம் at Jet Propulsion Laboratory பரணிடப்பட்டது 2016-06-16 at the வந்தவழி இயந்திரம்
- Jasmin Ionescu. "A Voyage of Discovery with Amy Mainzer". JPL Education Office. Archived from the original on 2013-12-27. பார்க்கப்பட்ட நாள் 2018-03-12.