அப்பல்லோ சிறுகோள்கள்
அப்பல்லோ சிறுகோள்கள் (Apollo asteroids) என்பது புவியருகு விண்பொருட்களின் கூட்டம் ஆகும். கார்ல் வில்லெம் ரெய்ன்முத் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இக்கூட்டத்தின் முதலாவது சிறுகோள் 1862 அப்பல்லோ என்ற பெயரைக் கொண்டு இக்கூட்டத்திற்கு அப்பல்லோ சிறுகோள்கள் எனப் பெயரிடப்பட்டது. இவை புவிக்குக் குறுக்கே செல்லும் விண்பொருட்கள் ஆகும். இவற்றின் சுற்றுவட்ட அரைப்பேரச்சு புவியினதை விட அதிகமாகும். (> 1 AU) ஆனால் இவற்றின் ஞாயிற்றண்மைத்தூரங்கள் புவியின் ஞாயிற்றுச்சேய்மைத் தூரத்தை விடக் குறைவாகும். (q < 1.017 AU).[1] இக்கூட்டத்தின் சில பொருட்கள் புவிக்கு மிக அண்மையாகவும் வரக்கூடியமையினால், இவை பூமிக்கு ஆபத்தானவை ஆகும். 2013 பெப்ரவரி 15 இல் உருசியாவின் செல்யாபின்ஸ்க் நகரில் அப்பல்லோ வகை விண்கல் வீழ்ந்து வெடித்ததில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.[2][3]
அப்பல்லோ கூட்டத்தின் மிகப்பெரிய சிறுகோள் 1866 சிசிபஸ் ஆகும். இதன் விட்டம் 8.5 கிமீ. As of பெப்ரவரி 2014[update] வரை 5766 அப்பல்லோ-வகை சிறுகோள்கள் அறியப்பட்டுள்ளன. இவற்றில் 832 சிறுகோள்கள் எண்களால் பெயரிடப்பட்டுள்ளன.
அறியப்பட்ட அப்பல்லோ சிறுகோள்கள் சில:
பெயர் | ஆண்டு | கண்டுபிடித்தவர் |
---|---|---|
2013 எஃப்டபிள்யூ13 | 2013 | கேட்டலினா வானாய்வு |
2013 ஆர்எச்74 | 2013 | கேட்டலினா வானாய்வு |
2011 எம்டி | 2011 | லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு |
2011 ஈஓ40 | 2011 | மவுன்ட் லெம்மன் ஆய்வு |
2010 ஏஎல்30 | 2010 | லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு |
2009 டபிள்யூஎம்1 | 2009 | கேட்டலினா வானாய்வு |
2009 டிடி45 | 2009 | சிடிங் ஸ்ப்ரிங் வானாய்வு நிலையம், ஆத்திரேலியா |
(386454) 2008 எக்சுஎம் | 2008 | லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு |
2008 டிசி3 | 2008 | கேட்டலினா வானாய்வு |
2008 எஃப்எஃப்5 | 2008 | மவுன்ட் லெம்மன் ஆய்வு |
2007 விகே184 | 2007 | கேட்டலினா வானாய்வு |
2007 டியூ24 | 2007 | கேட்டலினா வானாய்வு |
2007 டபிள்யூடி5 | 2007 | கேட்டலினா வானாய்வு |
2007 ஓஎக்சு | 2007 | மவுன்ட் லெம்மன் ஆய்வு |
(277810) 2006 எஃப்வி35 | 2006 | ஸ்பேஸ்வாட்ச் |
(394130) 2006 எச்வை51 | 2006 | லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு |
(292220) 2006 எஸ்யூ49 | 2006 | ஸ்பேஸ்வாட்ச் |
(308635) 2005 வையூ55 | 2005 | ஆர். எஸ். மாக்மிலன், அமெரிக்கா |
2005 எச்சி4 | 2005 | LONEOS |
2005 டபிள்யூவை55 | 2005 | |
(374158) 2004 யூஎல் | 2004 | லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு |
2004 எக்சுபி14 | 2004 | லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு |
2004 ஏஎஸ்1 | 2004 | லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு |
(89958) 2002 எல்வை45 | 2002 | லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு |
(179806) 2002 ரிடி66 | 2002 | லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு |
54509 யோர்ப் | 2000 | லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு |
(137108) 1999 ஏஎன்10 | 1999 | லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு |
101955 பென்னு | 1999 | லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு |
1998 கேவை26 | 1998 | ஸ்பேஸ்வாட்ச் |
1997 எக்சுஆர்2 | 1997 | லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு |
65803 டிடிமொசு | 1996 | ஸ்பேஸ்வாட்ச் |
69230 எர்ம்சு | 1937 | கார்ல் வில்லெம் ரெய்ன்முத் |
(53319) 1999 ஜேஎம்8 | 1999 | லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு |
(52760) 1998 எம்எல்14 | 1998 | லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு |
(35396) 1997 எக்சுஎஃப்11 | 1997 | ஸ்பேஸ்வாட்ச் |
25143 இட்டோகாவா | 1998 | லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு |
(136617) 1994 சிசி | 1994 | ஸ்பேஸ்வாட்ச் |
(175706) 1996 எஃப்ஜி3 | 1996 | சிடிங் ஸ்ப்ரிங் வானாய்வு நிலையம், ஆத்திரேலியா |
6489 கோலெவ்கா | 1991 | எலனோர் எஃப் எலின் |
4769 கஸ்டாலியா | 1989 | எலனோர் எஃப் எலின் |
4660 நெரூசு | 1982 | எலனோர் எஃப் எலின் |
4581 ஆஸ்கிளெபயசு | 1989 | என்றி ஈ. ஹோல்ட், நோர்மன் ஜி. தாமசு |
4486 மித்ரா | 1987 | எரிக் எல்ஸ்ட், விளாதிமிர் ஸ்கோதுரொவ் |
14827 இப்னோசு | 1986 | கரொலைன் சூமேக்கர், யூஜின் சூமேக்கர் |
(4197) 1982 டிஏ | 1982 | எலனோர் எஃப் எலின், யூஜின் சூமேக்கர் |
4183 கூனோ | 1959 | கூனோ ஒஃப்மெயிஸ்டர் |
4179 டூட்டாடிசு | 1989 | கிறித்தியான் பொலாசு |
4015 வில்சன்-ஹரிங்டன் | 1979 | எலனோர் எஃப் எலின் |
3200 பீத்தோன் | 1983 | சைமன் கிரீன், ஜோன் டேவிசு / IRAS |
2063 பக்கூசு | 1977 | சார்ல்சு கோவல் |
1866 சிசிபசு | 1972 | பவுல் வைல்டு |
1620 ஜியோகிராபொசு | 1951 | ஆல்பர்ட் வில்சன், ருடோல்ஃப் மின்கோவ்ஸ்கி |
(29075) 1950 டிஏ | 1950 | கார்ல் நிர்டானென் |
1566 இகாரசு | 1949 | வால்டர் பாடி |
1685 டோரோ | 1948 | கார்ல் விர்ட்டானென் |
2101 அடோனிசு | 1936 | யூகின் டெல்போர்ட்டே |
1862 அப்பல்லோ | 1932 | கார்ல் வில்லெம் ரெய்ன்முத் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Weisstein, Eric. "Apollo Asteroid". Wolfram Research. பார்க்கப்பட்ட நாள் 27 பெப்ரவரி 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Cantor, Matt (26 பெப்ரவரி 2013). "Scientists figure out Russia meteor's origin Ron Jeffery". USA Today.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ http://www.newscientist.com/article/dn23213-russian-meteor-traced-to-apollo-asteroid-family.html
- http://neo.jpl.nasa.gov/neo/groups.htmlபரணிடப்பட்டது 2013-02-02 at the வந்தவழி இயந்திரம்