உள்ளடக்கத்துக்குச் செல்

அன்பே வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்பே வா
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புஎம். முருகன்
ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
சரோஜாதேவி
டி. ஆர். இராமச்சந்திரன்
நாகேஷ்
எஸ். ஏ. அசோகன்
வெளியீடுசனவரி 14, 1966
நீளம்4855 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்பே வா (Anbe Vaa ) 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜாதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

கதை

[தொகு]

ஓயாத உழைப்பிலிருந்து ஓய்வெடுக்க சிம்லாவிலுள்ள தனது மாளிகைக்கு வரும் பாலு, அது சிலருக்குத் தங்குமிடமாக வாடகைக்கு விடப்பட்டிருப்பதைக் கண்டு திடுக்கிடுகிறான். இருப்பினும், தன்னை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாது தானும் வாடகைக்குத் தங்க வந்தவன் போல நடிக்க, அங்கு இருக்கும் கீதா என்னும் இளம்பெண்ணுக்கும் அவனுக்கும் ஏற்படும் மோதல்கள், ஒருவரை ஒருவர் ஏமாற்றும் சம்பவங்கள், இவற்றைப் பின் தொடரும் காதல் ஆகியவற்றை நகைச்சுவை மிளிரச் சித்தரித்தது இந்த வண்ணப்படம்.

நடிகர்கள்

[தொகு]

முதன்மை நடிகர்கள்

துணை நடிகர்கள்

துணை நடிகைகள்

  • மனோரமா - கண்ணம்மா[4]
  • டி. பி. முத்துலட்சுமி- பாப்பம்மா, க

கீதாவின் தாயார்[5]

  • மாதவி - மேரி, கீதாவின் பெற்றோர்களை கவனித்துக் கொள்ளும் செவிலியர்[5].
  • எம். எசு. எசு. பாக்கியம் - கண்ணம்மாவின் தாயார்.

சிறப்பம்சங்கள்

[தொகு]
  • வெளிப்புறப்படப்பிடிப்பு அரிதாக இருந்த அந்நாட்களில் பெரும்பகுதி சிம்லாவில் படமாக்கப்பட்டது இதன் சிறப்பம்சம்.
  • முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்து வந்துகொண்டிருந்த நாகேஷின் மிக அற்புதமான நகைச்சுவைக் காட்சிகள் இப்படத்தின் கூடுதல் சிறப்பம்சமாகத் திகழ்ந்தன.
  • தனது படங்களிலேயே மிகவும் வித்தியாசமான படம் இதுவென்றும், எப்போது பார்த்தாலும் அந்த வித்தியாசத்தை உணர முடியும் என்றும் எம். ஜி. ஆர் கூறியதாகச் சொல்வர்.
  • மெல்லிய நகைச்சுவை இழையோடும் காதல் கதையாக உருவாகிய இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஏவி. எம். நிறுவனம் எம்.ஜி.ஆரை வைத்துத் தயாரித்த ஒரே திரைப்படமும் இதுவே.
  • விஸ்வநாதன் இசையில் இப்படத்தின் பாடல்கள் சாகாவரம் பெற்றன.
  • வில்லனாக அன்றி வித்தியாசமான ஒரு குணசித்திர வேடத்தில் அசோகன் நடித்திருந்தார்.

பாடல்கள்

[தொகு]

இப்படத்துக்கு இசை எம். எஸ். விஸ்வநாதன், பாடல்கள் கவிஞர் வாலி எழுதியது. ஜே.பி. மற்றும் கீதா ஒரு திருப்பத்தை நிகழ்த்திய "நாடோடி" பாடல் ஒரு ராக் அண்ட் ரோல் பாடலாக இருந்தது.

"புதியவானம்" முதலில் "உதய சூரியனின் பார்வையிலே" (உதயமாகும் சூரியனின் பார்வையில்) பாடல்களைக் கொண்டிருந்தது, ஆனால் தணிக்கை வாரியம் அதை ஏற்காது என்று மெய்யப்பன் கூறிய பின்னர், வாலி பாடல்களை "புதிய சூரியனின் என மாற்றினார். "ராஜாவின் பார்வையிலே குதிரைகளின் அடிவருடியின் ஒலி விளைவு மீசை முருகேசன் உருவாக்கியது. "ஒன்ஸ் எ பாப்பா" பாடல் இலங்கையின் இசை வகையான பைலாவுக்கு சொந்தமானது.

இப்படப் பாடல்களும் பிரபலமாக இருந்தன, குறிப்பாக "ராஜாவின் பார்வையிலே. புதிய வானம்" பாடல்கள் மக்களை ஊக்குவிக்க உதவியது" டி.வி.கே கலாச்சார அகாடமி, ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில், 2006 இல் பி சுசீலா எஸ்.ஜானகியுடன் "ராஜாவின் பார்வை நிகழ்ச்சியை நேரடியாக பாடினார், மேலும் இந்திய மருத்துவ சங்க மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மாகலீர் 2007 இல் பாடலைத் தனியாக பாடினார். இப்படத்தின் பாடல்களை டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ஏ. எல். ராகவன் ஆகியோர் பாடி இருந்தனர்.

குறிப்பு

[தொகு]
  • ரொக் ஹட்சன் என்பவர் நடித்த "Come September" ஆங்கிலப் படத்தின் தழுவல் என்று கருதப்படுகிறது.
  • "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" என்ற புகழ் பெற்ற பாடல் இதில் இடம் பெற்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Randor Guy (10 November 2012). "Anbe Vaa 1966". தி இந்து இம் மூலத்தில் இருந்து 26 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141126044933/http://www.thehindu.com/features/cinema/anbe-vaa-1966/article4084816.ece. 
  2. Bali, Karan (14 January 2016). "Films that are 50: Come, fall in love again with 'Anbe Vaa'". Scroll.in. Archived from the original on 16 March 2016. பார்க்கப்பட்ட நாள் 16 March 2016.
  3. Rangarajan, Malathi (13 November 2014). "A word kept". தி இந்து இம் மூலத்தில் இருந்து 13 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141113165714/http://www.thehindu.com/features/friday-review/interview-with-avm-saravanan/article6594598.ece. 
  4. Rangan, Baradwaj (12 October 2015). "Mistress of arts". The Hindu. Archived from the original on 12 October 2015. பார்க்கப்பட்ட நாள் 17 March 2016.
  5. 5.0 5.1 "திருப்புமுனை திரைப்படங்கள் - 38: அன்பே வா (1966)". சினிமா எக்ஸ்பிரஸ் (in Tamil). Archived from the original on 9 July 2016. பார்க்கப்பட்ட நாள் 9 July 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பே_வா&oldid=3979165" இலிருந்து மீள்விக்கப்பட்டது