உள்ளடக்கத்துக்குச் செல்

அன்னா அட்கின்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னா அட்கின்சின் உருவப்படம், 1861

அன்னா அட்கின்சு (Anna Atkins, பிறப்பு சில்ட்ரன்; 16 மார்ச் 1799 – 9 சூன் 1871[1]) ஆங்கில தாவரவியலாளரும் ஒளிப்படக் கலைஞரும் ஆவார். இவர் பொதுவாக ஒளிப்படங்களின் விளக்கத்துடன் நூல் வெளியிட்ட முதல் நபராகக் கருதப்படுகின்றார்.[2][3][4] சிலரின் கூற்றுப்படி ஒளிப்படம் ஒன்றை உருவாக்கிய முதல் பெண்மணியும் இவரேயாவார்.[3][4][5][6]

இளமைக்காலம்

[தொகு]

அட்கின்சு ஐக்கிய இராச்சியத்தின் கென்ட் கவுன்ட்டியிலுள்ள டோன்பிரிட்சில் 1799ஆம் ஆண்டு பிறந்தார்.[1] அவருடைய தாய் எஸ்டர் ஆன் சில்ட்ரன் "குழந்தைப் பிறப்பின் தாக்கத்திலிருந்து விடுபடாமலே" 1800இல் காலமானார்.[5] அன்னா தனது தந்தை ஜான் ஜார்ஜ் சில்ட்ரனுடன் நெருக்கமானார்.[7] அறிவியலாளரான சில்ட்ரன் சில்ட்ரனைட்டு என்ற கனிமத்தைக் கண்டறிந்தவர்.[8] இதனால் அன்னாவிற்கு " அக்காலப் பெண்களுக்கு கிட்டாத அளவில் அறிவியல் கல்வி கிடைத்தது."[9] அவரது தந்தையார் மொழிபெயர்த்து 1823இல் வெளியிட்ட லாமார்க்கின் ஜெனரா ஆப் ஷெல்சு என்ற புத்தகத்தில் அன்னா சிப்பியில் செதுக்கிய சித்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.[9][10]

1825இல் ஜான் பெல்லி அட்கின்சைத் திருமணம் புரிந்தார். இலண்டன் வணிகரான கணவருடன் ஆல்சுடெட் பிளேசிற்கு குடிபெயர்ந்தனர்.[9] இவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டவில்லை.[11] அட்கின்சு தாவரவியலில் தனக்கிருந்த ஆவலைத் தொடர்ந்தார்; உலர்ந்த தாவரங்களைச் சேகரித்தார். இவை பின்னர் பயன்படுத்தப்பட்டன.[9]

ஒளிப்படவியல்

[தொகு]
A cyanotype photogram made by Atkins which was part of her 1843 book, Photographs of British Algae: Cyanotype Impressions
Detail of title page of Photographs of British Algae: Cyanotype Impressions

தந்தை சில்ட்ரனும் கணவர் அட்கின்சும் கேலோடைப் ஒளிப்பட பதிவை கண்டறிந்த வில்லியம் என்றி பாக்சு டால்போட்டிற்கு நண்பர்கள் ஆவர்.[9] அன்னா அட்கின்சு டால்போட்டிடமிருந்து நேரடியாகவே ஒளிப்படவியல் குறித்து கற்கத் தொடங்கினார். ஒளியுணர் தாள் மீது வைக்கப்பட்ட பொருள் சூரியனிடம் காட்டப்படும்போது அதன் உருவம் தாளில் பதியும் "ஒளிப்பட ஓவிய" நுட்பம் அவரைக் கவர்ந்தது. தாளில் பதிந்த உருவத்தை நிலைப்படுத்தும் கேலோடைப் செய்முறை குறித்தும் அறிந்தார்.[12][13]

1841ஆம் ஆண்டில் ஒளிப்பட கருவியின் அணுக்கம் அவருக்குக் கிட்டியது.[9] சிலர் அட்கின்சை முதல் பெண் ஒளிப்படவியலாளராக கருதுகின்றனர்.[3][4][5][6][14] வேறு சிலர் வில்லியம் பாக்சு டால்போட்டின் மனைவி கான்சுடன்சு டால்போட்டை முதல் ஒளிப்படம் எடுத்த பெண்மணியாகக் கருதுகின்றனர்.[15][16][17] ஒளிப்படக் கருவியால் அன்னா எடுத்த எந்தவொரு ஒளிப்படமோ[9] கான்சுடன்சு எடுத்த எந்தவொரு ஒளிப்படமோ[16] கிடைக்காதமையால், இதற்கு தீர்வு காணப்படவில்லை.

பரப்புப் பண்பாட்டில்

[தொகு]

மார்ச் 16, 2015 அன்று இணையத் தேடுபொறி கூகுள் அட்கின்சின் 216வது பிறந்தநாளை தனது தேடல் பக்கத்தில் கிறுக்கல் (டூடுள்] படிமத்தை வெளியிட்டுக் கொண்டாடியது.[18]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Art encyclopedia. The concise Grove dictionary of art. Anna Atkins". Oxford University Press. 2002. பார்க்கப்பட்ட நாள் 11 August 2009.
  2. Parr, Martin; Gerry Badger (2004). The photobook, a history, Volume I. London: Phaidon. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7148-4285-0.
  3. 3.0 3.1 3.2 James, Christopher (2009). The book of alternative photographic processes, 2nd edition (PDF). Clifton Park, NY: Delmar Cengage Learning. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4180-7372-5. Archived from the original (PDF) on 6 அக்டோபர் 2021. பார்க்கப்பட்ட நாள் 11 August 2009.
  4. 4.0 4.1 4.2 New York Public Library (23 October 1999 – 19 February 2000). "Seeing is believing. 700 years of scientific and medical illustration. Photography. Cyanotype photograph. Anna Atkins (1799–1871)." இம் மூலத்தில் இருந்து 13 ஜூலை 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210713183302/http://seeing.nypl.org/235bt.html. பார்த்த நாள்: 11 August 2009. 
  5. 5.0 5.1 5.2 Atkins, Anna; Larry J. Schaaf; Hans P. Kraus Jr. (1985). Sun gardens: Victorian photograms. New York: Aperture. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89381-203-X.
  6. 6.0 6.1 Clarke, Graham (1997). The photograph. Oxford; New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-284248-X.
  7. Ware, Mike (1999). Cyanotype: the history, science and art of photographic printing in Prussian blue. Bradford, England: National Museum of Photography, Film & Television. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-900747-07-3.
  8. Marshall, Peter. "The pencil of nature. Part 2: Anna Atkins". About.com இம் மூலத்தில் இருந்து 25 ஜூன் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060625020000/http://photography.about.com/library/weekly/aa060302b.htm. பார்த்த நாள்: 11 August 2009. 
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 9.6 Halstead Parish Council. "Parish history: Anna Atkins". பார்க்கப்பட்ட நாள் 11 August 2009.
  10. "Historic figures. Anna Atkins (1799–1871)". பிபிசி. Archived from the original on 22 டிசம்பர் 2005. பார்க்கப்பட்ட நாள் 11 August 2009. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  11. "John Pelly Atkins". Legacies of British Slave-Ownership. University College London. பார்க்கப்பட்ட நாள் 16 March 2015.
  12. "Ocean flowers: Anna Atkins's cyanotypes of British algae". New York Public Library Digital Gallery. பார்க்கப்பட்ட நாள் 11 August 2009.
  13. Roger Taylor (2007). Impressed by the Light: British Photographs from Paper Negatives, 1840–1860. NY, Metropolitan Museum of Art. p. 287.
  14. Cumming, Laura (10 March 2002). "Things aren't what they seem. The V&A's exhibition of its vast photo archive shows how the camera can transform even the humblest object". The Observer. http://www.guardian.co.uk/theobserver/2002/mar/10/1. பார்த்த நாள்: 13 August 2009. 
  15. Glauber, Carole (April–June 2001). "Book review. Seizing the light: a history of photography". F2 eZine. http://www.womeninphotography.org/archive06-Apr01/gallery/f2/book2.html. பார்த்த நாள்: 11 August 2009. 
  16. 16.0 16.1 Smith, Vivienne. "Talbot, Constance: Woman at forefront of photography". Derby Evening Telegraph. Archived from the original on 4 டிசம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 11 August 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  17. Gover, C Jane (1988). The positive image: women photographers in turn of the century America. Albany: State University of New York Press. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88706-533-3. பார்க்கப்பட்ட நாள் 11 August 2009.
  18. "Anna Atkins: Google Doodle celebrates 216th birthday of botanist who produced first photographic book". The Independent (London: Independent Digital News and Media Ltd). 16 March 2015. http://www.independent.co.uk/news/uk/anna-atkins-google-doodle-celebrates-216th-birthday-of-botanist-who-produced-first-photographic-book-10109935.html. பார்த்த நாள்: 16 March 2015. 

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னா_அட்கின்சு&oldid=4071784" இலிருந்து மீள்விக்கப்பட்டது