அதோதி
வட இந்தியாவின் வரலாற்றுப் பகுதி ஹதோதி (हाड़ौती) | |
அமைவிடம் | கிழக்கு இராஜஸ்தான் |
19ஆம் நூற்றாண்டு - கொடி | |
நிறுவப்பட்ட ஆண்டு: | 12ஆம் நூற்றாண்டு |
மொழி | ஹதோதி மொழி |
அரச குலங்கள் | மீனா, ஹட்டா சௌகான், சௌகான் |
தலைநகரம் | புந்தி |
மன்னராட்சிகள் | பூந்தி அரசு, ஜாலவர் அரசு, கோட்டா அரசு |
ஹதோதி (Hadoti (हाड़ौती), முன்னர் பூந்தி சமஸ்தானம் என அழைக்கப்பட்டது. ஹதோதி பிரதேசம் தற்கால மேற்கு இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள தற்போதைய பூந்தி, கோட்டா, ஜாலாவோர் மற்றும் பாரான் மாவட்டங்களை உள்ளடக்கியது.
ஹதோதி பிரதேசத்தின் மேற்கில் மேவாரும், வடமேற்கில் அஜ்மீரும், தெற்கில் மால்வாவும், கிழக்கில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் கிர்டு பிரதேசமும் எல்லைகளாக அமைந்துள்ளது.
புவியியல்
[தொகு]இராஜஸ்தான் மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஹதோதி பிரதேசத்தின், கிழக்கில் மால்வா பீடபூமியும், மேற்கில் ஆரவல்லி மலைத்தொடரும், தென்மேற்கில் மேவார் பீடபூமியும் பிரதேசமும் சூழ்ந்துள்ளது.
ஹதோதி பகுதியில் பாயும் முக்கிய ஆறு சம்பல் ஆறும் மற்றும் அதன் துணை ஆறுகளான காளி சிந்து ஆறு மற்றும் பார்வதி ஆறு, சக்கன் ஆறுகள் ஆகும். ஹதோதி பிரதேச வண்டல் மண்ணால் விளைநிலங்கள் வளம் கொழிக்கிறது.
மொழிகள்
[தொகு]வரலாறு
[தொகு]பிரதிகார மீனா வம்சத்தின் துணை கிளையான மீனா வம்ச மன்னர் பூந்த மீனா என்பவர் முதலில் ஹதோதி பிரதேசத்தில் தமது பெயரில் பூந்தி நகரத்தை நிறுவினர். 1342-இல் ஜெய்தா மீனா எனும் மன்னரிடமிருந்து ராவ் தேவ் ஹட்டா எனும் மன்னர் பூந்தி நகரத்தைக் கைப்பற்றி, அப்பிரதேசம் முழுமைக்கும் ஹதோதி எனப் பெயரிட்டார்.
ஹதோதியின் மன்னராட்சிகள்
[தொகு]இந்திய விடுதலைக்கு பின்னர் 1949 முடிய ஹதோதி பிரதேசத்தில் பிரித்தானிய இந்திய அரசுக்கு கப்பம் செலுத்தி ஆண்ட மூன்று சுதேச சமஸ்தானங்களின் விவரம்:
- பூந்தி சமஸ்தானம் - 1342 – 1949
- ஜாலவர் சமஸ்தானம் - 1838 –1949
- கோட்டா சமஸ்தானம் 17-ஆம் நூற்றாண்டு – 1949
இந்திய விடுதலைக்குப் பின்னர் ஹதோதி பிரதேசத்தில் இருந்த இம்மூன்று மன்னராட்சிப் பகுதிகளும் 1949-இல் இந்தியாவுடன் இணைந்தன.
சுற்றுலாத் தலங்கள்
[தொகு]ஹதோதி பிரதேசத்தில் காக்ரோன் கோட்டை போன்ற பல கோட்டைகளும், அரண்மனைகளும், பறவைகள் மற்றும் விலங்குகள் காப்பகங்களும் உள்ளது. [1]