அக்சரதாம் (தில்லி)
அக்சரதாம் (தில்லி) | |
---|---|
பெயர் | |
பெயர்: | அக்சர்தாம் |
அமைவிடம் | |
அமைவு: | நொய்டா,தில்லி, இந்தியா |
ஆள்கூறுகள்: | 28°36′50.35″N 77°16′39.73″E / 28.6139861°N 77.2777028°E |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சுவாமி நாராயணன் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | வாஸ்து சாத்திரம், பஞ்சாட்சர சாத்திரம் |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 6 நவம்பர் 2005 (consecration) |
அமைத்தவர்: | BAPS, பிரமுக் சுவாமி மகராஜ் |
அக்சர்தாம் (குசராத்தி: દિલ્હી અક્ષરધામ, தேவநாகரி: दिल्ली अक्षरधाम) இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் கௌதம புத்தா நகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான நொய்டாவில் உள்ள ஓர் இந்துக் கோயில் வளாகமாகும்.[1] இது தில்லி அக்சர்தாம் அல்லது சுவாமி நாராயணன் அக்சர்தாம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இது புது தில்லியிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது. மெட்ரோ இரயில் வசதி உள்ளது. புது தில்லி இரயில் நிலையத்திலிருந்து அக்சர்தாம் செல்ல மெட்ரோ இரயில் வசதி உள்ளது.
இவ்வளாகமானது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியமுடைய இந்திய பண்பாட்டையும் இந்து பண்பாட்டையும் கட்டடக்கலையையும் ஆன்மீகத்தையும் வெளிப்படுத்துகிறது. இக்கட்டடத்துக்கு போச்சாசன்வாசி ஸ்ரீ அக்சர் புருசோத்தம் சுவாமிநாராயணன் சான்சுதாவின் மதத் தலைவர் பிராமுக் சுவாமி மகாராஜ் உயிர்ப்பூட்டியவராவார். இவரின் 3,000 தொண்டர்களும் 7,000 கைவினைத்தொழிலாளர்களும் அக்சர்தாம் கட்ட உதவினார்கள்.[1][2]
தில்லிக்கு வருகைதரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளிலும் கிட்டத்தட்ட 70 சதவீதமானவர்களைக் கவருகின்ற இக்கோயில்,[3][4] 6 நவம்பர் 2005 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.[1] 2010 இல் காமன்வெல்த்து விளையாட்டிற்காக முன்மொழியப்பட்ட கிராமத்துக்கு அருகே யமுனா ஆற்றங்கரையில் இது அமைந்துள்ளது.[5] வளாகத்தின் மையத்திலுள்ள நினைவுச்சின்னம் வாஸ்து சாத்திரத்தையும் பஞ்சாட்சர சாத்திரத்தையும் சார்ந்து கட்டப்பட்டது. வளாகமானது முழுவதும் கல்லால் செதுக்கப்பட்ட பெரிய மைய கோவிலையும், சுவாமிநாராயணன் வாழ்க்கை மற்றும் இந்திய வரலாறு ஆகியவற்றின் சம்பவங்கள் பற்றிய பொருட்காட்சிகள், ஓர் இன்னிசை நீர்த்தாரைகள், பெரிய இயற்கைக்காட்சியமைப்புத் தோட்டம் ஆகியவற்றை உருவகப்படுத்துகிறது.
நினைவுச்சின்னம்
[தொகு]வளாகத்தின் மையத்தில் அமைந்துள்ள முதன்மை நினைவுச்சின்னத்தில் 141-அடி (43 m) உயரம், 316-அடி (96 m) அகலம் மற்றும் 370-அடி (110 m) நீளம் உள்ளது,[6] நுனி முதல் அடிவரை தாவரம், விலங்கு, நாட்டியக்காரர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் தெய்வங்கள் ஆகியவற்றின் விவரங்கள் செதுக்கப்பட்டிருக்கும். இக் கட்டடம் புராதன இந்துமத வேதத்தின்படி வடிவமைக்கப்பட்டது, இது இந்தியா முழுவதிலுமிருந்தும் பெறப்பட்ட கட்டடக்கலை பாணிகளின் கலவையை வெளிப்படுத்துகிறது.[7][8] எஃகு அல்லது திண்காரை பயன்படுத்தப்படாமல் முழுவதுமாக ராஜஸ்தான் மாநில இளஞ்சிவப்பு மணற்பாறை மற்றும் இத்தாலிய கர்ரரா சலவைக்கல் ஆகியவற்றால் கட்டப்பட்டது.[9] நினைவுச்சின்னமானது 234 அலங்காரமாகச் செதுக்கப்பட்ட தூண்கள், ஒன்பது குவிமாடங்கள், இந்துசமயத்தின் சாதுக்கள், பக்தர்கள், ஆச்சாரியார்களின் 20,000 மூர்த்திகளின் சிலைகளையும் கொண்டுள்ளது.[2] நினைவுச்சின்னம் அதன் அடித்தளத்தில், இந்து நாகரிகத்திலும் இந்திய வரலாற்றிலும் யானைக்குள்ள முக்கியத்துவத்துக்கு மரியாதை வழங்குகின்ற ஓர் அடிப்பீடமான கஜேந்திர சோற்றியையும் உருவகப்படுத்துகிறது. இது மொத்தத்தில் 148 ஒப்பளவான யானைகளையும், மொத்த எடை 3000 டன்களையும் கொண்டுள்ளது.[10]
நினைவுச்சின்னத்தில், மத்திய குவிமாடத்துக்குக் கீழாக 11-அடி (3.4 m) உயரமான சுவாமிநாராயணன் சிலை உள்ளது. சமய உட்பிரிவினைச் சார்ந்த குருமார்களின் அதேபோன்ற சிலைகள் சுற்றிலும் சூழ அமைக்கப்பட்டுள்ளன..[11][12] ஒவ்வொரு மூர்த்தியும் இந்து மரபுப்படி பஞ்சலோகம் என்ற ஐந்து உலோகங்களால் ஆக்கப்பட்டது. மத்திய நினைவுச்சின்னத்திடையே சீதை-ராமன், ராதா-கிருஷ்ணன், சிவன்-பார்வதி, இலட்சுமி-நராயணன் போன்ற பிற இந்துக்களுடைய தெய்வங்களின் சிலைகளும் அமைந்துள்ளன.[12]
கண்காட்சிகள்
[தொகு]மதிப்புகளின் கூடம்
[தொகு]சகாசனந்த் பிராடர்சன் எனவும் அழைக்கப்படுகின்ற கூடம், உயிருள்ளது போன்ற தானியங்கிகள் மற்றும் இயற்கை ஓவியங்கள் ஆகியவற்றையும் உருவகப்படுத்தும். இது சுவாமிநாராயணன் வாழ்க்கைச் சம்பவங்களின் காட்சியையும் சமாதானம், அமைதி, பணிவு, பிறருக்குச் சேவை செய்தல் மற்றும் கடவுள் பக்தி ஆகியன பற்றிய அவரது செய்தியையும் சித்தரிக்கிறது. சகாசனந்த் பிராடர்சன் இந்தியாவில் 18 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இது தானியங்கிகள், இழை ஒளியியல், ஒளி மற்றும் ஒலி விளைவுகள், உரையாடல்கள் மற்றும் இசை ஆகியவற்றின் வாயிலாக 15 இயற்கை ஓவியங்களைக் காட்சிப்படுத்துகிறது.[13] இந்த கூடம் உலகின் மிகச்சிறிய அசையக்கூடிய எந்திர மனிதனை சுவாமிநாராயணனின் குழந்தை வடிவமான கான்சியாம் மகாராஜ் வடிவில் உருவகப்படுத்துகிறது.[14]
திரையரங்கு
[தொகு]'நீல்காந்த கல்யான் யாத்ரா' எனப் பெயரிடப்பட்ட திரையரங்க மாளிகையிலுள்ள திரை தில்லியின் முதலாவதும் ஒன்றேயொன்றுமான பெரிய வடிவமைப்புத் திரையாகும். இது 85-அடி (26 m) க்கு 65-அடி (20 m) அளவுடையது. இந்தியா முழுவதுமாக சுவாமிநாராயணன் தனது பதின்பருவத்தில் மேற்கொண்ட ஏழு ஆண்டுகால யாத்திரையை நீல்காந்த் யாத்ரா வளாகத்துக்கென சிறப்பாக அதிகாரமளிக்கப்பட்ட திரைப்படத்தை திரையரங்கு காண்பிக்கிறது. இத்திரைப்படத்தின் சர்வதேச பதிப்பான மிஸ்டிக் இண்டியா என்பது ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் உலகளாவிய பிரமாண்ட திரையரங்குகளிலும் 2005 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.[15] நீல்காந்த் வர்னியின் 27-அடி (8.2 m)உயரமான ஒரு பித்தளைச் சிலை திரையரங்குக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளது.[16]
இன்னிசை நீர்தாரை
[தொகு]யக்ஞ புருச குந்த் எனப்படுகின்ற இன்னிசைநீர்தாரையானது இந்தியாவின் மிகப்பெரிய படிக் கிணறு ஆகும். இது பாரம்பரிய வேள்வித் தீக்குள் படிகளின் மிகவும் பெரிய வரிசையை உருவகப்படுத்துகிறது. பகல் வேளைகளில், வளாகத்துக்கு வருகை தருபவர்கள் ஓய்வெடுப்பதற்கான இடத்தை வழங்குகின்றது, இரவில் அதே படிக்கட்டுகளில் அமர்ந்துள்ள பார்வையாளருக்கு வாழ்க்கை வட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இன்னிசை நீர்தாரையானது நடத்தப்படுகின்றது.[17] இந்து அமைப்பின் நிறுவனரான சாத்திரி மகாராஜுக்குப் பின்னர் நீர்தாரைக்குப் பெயரிடப்பட்டது.[18] இந்த நீர்தாரையின் அளவு 300 அடிகள் (91 m) க்கு 300 அடிகள் (91 m) மற்றும் 2,870 படிக்கட்டுகள் மற்றும் 108 சிறிய சிறு கோயில்கள் உள்ளன. இதன் மையத்தில் 8 இதழ்களுடைய தாமரை வடிவான வேள்வித் தீ அமைந்துள்ளது. இது பஞ்சாட்சர ஆகமத்தின்படி வடிவமைக்கப்பட்டது.
படகுச் சவாரி
[தொகு]சான்ஸ்க்ருதி விகார் எனப் பெயரிடப்பட்டுள்ள படகுச் சவாரியானது அங்கு வருகை தருபவர்களை கிட்டத்தட்ட 12 நிமிடங்களில் இந்தியவரலாற்றில் 10,000 ஆண்டுகள் வழியாக அழைத்துச் செல்கிறது. வருகையாளர்கள் மயில் போன்ற வடிவத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட படகுகளில் அமர்ந்து, செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள ஆற்றில் தமது பயணத்தைத் தொடருவர். இது தட்சசீலா, உலகின் முதலாவது பல்கலைக்கழகம்,[19] வேதியியல் ஆய்வுகூடங்கள், புராதன மருத்துவமனைகள் மற்றும் கடைத் தெருக்கள் ஆகியவற்றின் மாதிரிகளைக் கடந்து, கடைசியாக இந்தியாவின் எதிர்காலத்துக்கான நம்பிக்கையை வெளிக்காட்டும் செய்தியுடன் நிறைவுபெறும்.[20]
இந்தியத் தோட்டம்
[தொகு]பாரத் உபவான் எனவும் அழைக்கப்படும் இத் தோட்டத்தில் தழையால் அலங்கரிக்கப்பட்ட புல்வெளிகள், மரங்கள் மற்றும் புதர்கள் உள்ளன. இந்தத் தோட்டத்தில் இந்தியாவின் பண்பாடு மற்றும் வரலாற்றுக்குப் பங்களித்தவர்களின் பித்தளை சிற்பங்கள் வரிசையாக இருக்கும். இந்தச் சிற்பங்களில் சிறுவர்கள், பெண்கள், தேசியச் சின்னங்கள், சுதந்திரப் போராளிகள் மற்றும் இந்தியப் போர்வீரர்கள் ஆகியன உள்ளடங்கும். இந்த உருவங்களில், மகாத்மா காந்தி போன்ற தேசியச் சின்னங்களே அதிகளவின் கவனிக்கக்கூடிய உருவங்கள்.[21]
பிற அம்சங்கள்
[தொகு]யோகி இருதய கமலம் (Yogi Hraday Kamal)
[தொகு]மேலிருந்து பார்க்கும்போது ஒரு தாமரை போன்ற வடிவிலுள்ள மூழ்கிய தோட்டமானது, ஷேக்ஸ்பியர் மற்றும் மார்டின் லூதர் கிங் ஆகியோரிலிருந்து சுவாமி விவேகானந்தா மற்றும் சுவாமிநாராயணன் வரையான உலக அறிவுமேதைகளின் மேற்கோள்கள் பொறிக்கப்பட்ட பெரிய கற்களை உருப்படுத்திக் காட்டுகிறது.[21]
நீலகண்ட அபிசேகம் (Nilkanth Abishek)
[தொகு]பக்தர்கள் நீலகாந்த வர்னி சிலைமீது தண்ணீர் ஊற்றப்படும் சமயச்சடங்கான அபிசேகத்தை வழங்கி, தெய்வநிலை சார்ந்த மேம்பாடு மற்றும் விருப்பங்கள் நிறைவேற்றப்படுதல் போன்றவற்றுக்காக தமது பெருமதிப்பு மற்றும் வழிபாடுகளை வெளிப்படுத்துவர்.[22]
நாராயண் ஏரி (Narayan Sarovar)
[தொகு]நாராயண சரோவர் என்பது முதன்மையான நினைவுச்சின்னத்தைச் சூழவுள்ள ஒரு ஏரியாகும். இந்த ஏரியில் 151 ஆறுகள் மற்றும் ஏரிகளிலிருந்து வரும் புனித நீர்கள் உள்ளன. மானசரோவர் நீரும் இதிலுள்ளதாக நம்பப்படுகிறது. இவை சுவாமிநாராயணனால் புனிதமாக்கப்பட்டவை என நம்பப்படுகிறது. நாராயணன் சரோவரைச் சூழ 108 இறைவனின் பெயர்களைக் குறிக்கின்ற 108 கௌமுக்குகள் (gaumukhs) உள்ளன, இவற்றிலிருந்தே புனித நீர் முன்னே வழங்கப்படும்.[23][24]
பிரேம்வதி அக்ரகாரம் (Premvati Ahargruh)
[தொகு]பிரேம்வதி அக்ரகாரம் அல்லது பிரேம்வதி ஃபூட் கோர்ட் என்பது இந்தியா மஹாராஷ்டிராவிலுள்ள அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளை மாதிரிகளாக கொண்டு வடிவமைக்கப்பட்ட சைவ உணவகம் மற்றும் ஆயுர்வேத கடைத்தெருவாகும். இந்த உணவகம் பல்வேறு பாரம்பரிய உணவுகளை வழங்குகிறது.[25]
சமூக அமைதி மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி மையம்
[தொகு]வளாகத்துக்கு உள்ளே அமைந்துள்ள சமூக அமைதி மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சிக்கான அக்சர்தம் மையம் சமூக அமைதி மற்றும் தொடர்பான தலைப்புகளின் ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறது. இதன் ஊடாக கல்வியாளர்களும் மாணவர்களும் செயல்முறை சார்ந்த ஆராய்ச்சியை நடத்தலாம். ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பணித்திட்டங்களைச் செய்துமுடிப்பதற்கும் இம்மையத்துடன் உடன் தங்கள் ஆய்வறிக்கைகளை இணைக்கலாம். கல்வி, மருத்துவ உதவி, பழங்குடி மற்றும் கிராமப்புற நலன், சூழலியல் மற்றும் பண்பாடு ஆகியவை குறித்த ஆய்வுகள் இம்மையத்தில் நடக்கின்றன.[26][27]
வரலாறும் வளர்ச்சியும்
[தொகு]திட்டமிடுதல்
[தொகு]யோகிஜி மாகாராஜின் கனவாக இந்தக் கட்டடம் 1968 ஆம் ஆண்டிலிருந்து திட்டமிடப்பட்டது.[28] அச்சமயத்தில் சுவாமிநாராயணன் சான்ஸ்தாவின் மதத்தலைவராக இருந்த யோகிஜி மகாராஜ், அந்த நேரத்தில் புது தில்லியில் வாழ்ந்த சுவாமிநாராயணனின் சாதுக்களுக்கு யமுனா ஆற்றங்கரைமீது ஒரு பிரமாண்டமான கோவில் கட்டுவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.[29] நிலத்தைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, இருந்தபோதும் மிகச் சிறிய முன்னேற்றமே கண்டது. 1971 ஆம் ஆண்டில் யோகிஜி மகாராஜ் இறந்தார்.
1982 ஆம் ஆண்டில், யோகிஜி மகாராஜைப் பின் தொடர்ந்து மதத் தலைவராகிய பிரமுக் சுவாமி மகாராஜ் தனது குருவின் கனவை நிறைவேற்ற, தில்லியில் கோயிலைக் கட்டுவதற்கான சாத்தியங்களைக் கவனிக்கும்படி பக்தர்களைத் தூண்டினார். இந்தத் திட்டத்துக்கான ஒரு கோரிக்கையானது டில்லி மேம்பாட்டு ஆணையதிற்கு (DDA) அனுப்பப்பட்டது, மேலும் காசியாபாத், குர்கோவன் மற்றும் பரிதாபாத் உள்ளடங்கலாக பல இடங்கள் பரிந்துரைக்கப்பட்டன. கோயிலை யமுனா ஆற்றங்கரையில் கட்டவேண்டும் என்ற யோகிஜி மகாராஜின் விருப்பங்களைப் பின்பற்றுவதில் பிரமுக் சுவாமி மகாராஜ் உறுதியாக இருந்தார்.
18 ஆண்டுகளுக்குப் பின்னர், ஏப்ரல் 2000 ஆம் ஆண்டில் தில்லி மேம்பாட்டு ஆணையமானது 60 ஏக்கர்கள் (240,000 m2) நிலத்தை வழங்கியது, உத்தரப் பிரதேசம் மாநில அரசாங்கம் இப்பணித்திட்டத்துக்காக 30 ஏக்கர்கள் (120,000 m2) வை வழங்கியது.[30] நிலம் பெறப்பட்ட பின்னர், பணிதிட்டத்தின் வெற்றிக்காக, அந்த நிலத்தில் பிரமுக் சுவாமி மகாராஜால் பூமி பூசை செய்யப்பட்டு கோயிலின் கட்டுமானம் 2000 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதியன்று தொடங்கி, ஐந்து ஆண்டுகளுக்கு இரு நாட்கள் இருக்கும் வேளையில் அக்கட்டுமானம் நிறைவு செய்யப்பட்டு, 2005 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆன் தேதியன்று அக்சர்தம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.[31]
உருவாக்கம்
[தொகு]அக்சர்தம் பணித்திட்டத்தை மேற்பார்வை செய்யவென எட்டு சாதுக்கள் அடங்கிய குழு அமர்த்தப்பட்டது.[29] இந்தக் குழுவிலிருந்த பெரும்பாலானவர்களுக்கு குஜராத் காந்திநகரிலுள்ள அக்சர்தம்மில் பணிபுரிந்த அனுபவம் இருந்தது.[32] இது உருவாக்கப்பட்டபோது, நினைவுச்சின்னத்தின் கட்டமைப்பின் பலநேரங்களில் பிரமுக் சுவாமி மஹாராஜிடம் ஆலோசனை பெறப்பட்டது.[29]
1997 மற்றும் 1998 ஆம் ஆண்டளவில், கல் செதுக்குவதைத் தொடங்கியதன் மூலம் கோயிலை உருவாக்கத் தொடங்குவதற்கான கோரிக்கை விடப்பட்டது. இருந்தபோதிலும், இந்தத் திட்டத்தை பிரமுக் சுவாமி மகாராஜ் நிராகரித்தார், நிலம் பெறப்பட்ட பின்னரே கட்டுமானம் தொடங்கவேண்டும் என அவர் நம்பினார். தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மென்மையான ஆற்றங்கரை காரணமாக,அடித்தளக் கட்டுமானத்துக்கு அந்த இடம் உகந்தாகக் கருதப்படவில்லை. இதன் விளைவாக, ஆழமான அடித்தளத்தைத் தவிர்க்க முடியவில்லை. நிலையான அத்திவாரத்தைக் கட்ட, 15-அடி (4.6 m) பாறைகள் மற்றும் மணல் ஆகியன கம்பி வலையுடன் சேர்த்துக் கலக்கப்பட்டு, ஐந்து அடி சிமெண்ட் கலவை மேலிடப்பட்டது. ஐந்து மில்லியன் சுடப்பட்ட செங்கற்கள் அஸ்திவாரத்தை மேலுமொரு 21.5-அடி (6.6 m) க்கு உயர்த்தின. நினைவுச்சின்னத்தின் கீழே முக்கிய ஆதாரத்தை உருவாக்க இந்த செங்கற்களுக்கு மேலே மேலும் மூன்று அடி சிமெண்ட் கலவை போடப்பட்டது.[29]
2 ஜூலை 2001 ஆம் ஆண்டு, செதுக்கிய முதலாவது கல் பதிக்கப்பட்டது.[33] எட்டு சாதுக்களடங்கிய குழுவில் கட்டடக்கலை மற்றும் தெய்வச் சிற்பங்களைச் செதுக்குதல் பற்றிய ஒரு இந்து சமயநூலான பஞ்சாட்சர சாத்திரத்தில் புலமைத்துவம் பெற்றவர்கள் அடங்கியிருந்தனர். இந்த சாதுக்கள் கல் செதுக்கல் பணியையும் எட்டாம் நூற்றாண்டிலிருந்து 12 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் இருந்த இந்திய சிற்ப வேலைப்பாடு பற்றிய ஆராய்ச்சியையும் கண்காணித்தார்கள். இந்த ஆராய்ச்சியானது அங்கோர்வாட், ஜோத்பூர், பூரி, கொனார்க் போன்ற இடங்களிலும், மேலும் தென்னிந்தியாவிலுள்ள பிற கோயில்களிலும் நடந்தது.[29]
அக்சர்தம்மின் கட்டுமானப் பணிக்கு எழாயிரம் சிற்பக்கலைஞர்களும் மூவாயிரம் தொண்டர்களும் பணியமர்த்தப்பட்டனர்.[29] ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வந்த 6,000 டன்களுக்கும் அதிகமான இளஞ்சிவப்பு மணற்கல்லைக் கொண்டு அந்த மாநிலத்திலுள்ள இடங்களைச் சூழ, பட்டறைத் தளங்கள் அமைக்கப்பட்டன.[34] சிற்பக்கலைஞர்கள் இடையே வரட்சியால் பாதிக்கப்பட்ட உள்ளூர் விவசாயிகள் மற்றும் 1500 பழங்குடிப் பெண்கள் ஆகியோர் இருந்தனர், இந்தப் பணியால் அவர்களுக்குப் பொருளாதார நன்மை கிடைத்தது. ஆரம்பத்தில் கல் வெட்டும் எந்திரத்தால் செய்யப்பட்ட வேலையானது, பின்னர் விரிவான சிற்பவேலைகள் கையால் செய்யப்பட்டன. ஒவ்வொரு இரவும், கட்டுமானத் தளத்தில் நாலாயிரம் பணியாளர்களும் தொண்டர்களும் வேலைசெய்த அக்சர்தம்மிற்கு நூற்றுக்கும் அதிகமான ட்ரக் வண்டிகள் அனுப்பப்பட்டன.[29]
திறப்பு விழா
[தொகு]2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆறாம் தேதி அக்சர்தம் பிரமுக் சுவாமி மகாராஜ் அவர்களால் குடமுழுக்கு செய்யப்பட்டு,[35] இந்திய ஜனாதிபதி, முனைவர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம்,[36] பிரதம மந்திரி, மன்மோகன் சிங் மற்றும் இந்தியப் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் லால் கிருஷ்ண அத்வானி ஆகிய 25,000 விருந்தினர்கள் முன்னிலையில் முறைப்படி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.[29][37] மத்திய நினைவுச்சின்னத்தைச் சுற்றிப் பார்த்த பின்னர் அதுபற்றி ஜனாதிபதி கலாம், இங்கு அக்சர்தம் சமூகத்துடன் இணைகிறது என்பதுபற்றி உரை வழங்கினார், மேலும் பின்வருமாறு கூறி உரையை நிறைவு செய்தார்,
"Pramukh Swamiji Maharaj has inspired thousands of people across the country and abroad and brought together the best of the minds for creating a beautiful cultural complex. It has become a place of education, experience and enlightenment. It creatively blends the traditional stone art and architecture, Indian culture and civilization, ancient values and wisdom and the best of modern media and technology. Multiple layers of this complex expresses the strength of the mind, willpower of the human being, indomitable spirit, flowering kindness, fusion of scientific and medical talent, myriad colors of varied cultures and ultimately the power of knowledge. In essence, it is a dynamic complex with lively images. ... Akshardham has happened at the dawn of 21st century with the commitment and dedication of one million volunteers. What has happened today at Akshardham inspires me and gives me the confidence that we can do it? The realization of developed India is certainly possible before 2020 with the millions of ignited minds like you."[38]
இது சமயரீதியான சகிப்புத்தன்மையில் இடங்காட்டியாக இருக்குமென்று நம்பிக்கை தெரிவித்தும், வளாகத்தின் கட்டடக்கலையைப் புகழ்ந்தும் பிரதம மந்திரி சிங் தனது உரையைத் தொடந்தார்.[29] இது இந்தியாவின் எதிர்கால நில அடையாளமாக இருக்கும் என அவர் குறிப்பிட்ட வேளையில்[37] எல். கே. அத்வானி "இது உலகத்தின் மிகத் தனித்துவமான நினைவுச்சின்னம்" என அழைத்தார்.[29] பிரமுக் சுவாமி மகாராஜ் அன்றைய இரவின் பேச்சுக்களை முடித்து வைத்து, "இந்த அக்சர்தம்மில், ஒருவர் மற்றும் அனைவரும் தங்கள் வாழ்க்கைகளை வளர்க்க உத்வேகத்தைக் கண்டுபிடிக்கட்டும், அவர்களின் வாழ்வுகள் தெய்வீக நிலையை அடையட்டும். இதுவே கடவுளிடம் எனது பிரார்த்தனை" என்று ஆசியைத் தெரிவித்தார்.[39]
2009 தீ
[தொகு]ஜூன் மாதம் 2009 ஆம் ஆண்டு, நினைவுச்சின்னத்துக்கு உள்ளே ஏற்பட்ட தீவிபத்தில் 11-அடி (3.4 m) உயரமான சுவாமிநாராயணன் சிலை உட்பட ஆறு உலோகச் சிலைகள் சேதமாகின. இந்த ஆறு சிலைகளும் மரத்தாலான பீடத்தில் வைக்கப்பட்டிருந்தன, அப்பீடம் தீக்கு இரையாகியது. சிலைகள் தலைகீழாகக் கீழே விழுந்து, நடைபாதையில் உருண்டு சேதமாகின. நினைவுச்சின்னத்தின் குளிரவைக்கும் தொகுதியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து உண்டானது. அன்றிலிருந்து நினைவுச்சின்னம் மூடப்பட்டுள்ளது.[40]
கின்னஸ் உலக சாதனை
[தொகு]17 டிசம்பர் 2007 ஆம் ஆண்டு, அக்சர்தம் வளாகத்துக்கான மதத் தலைவர் பிரமுக் சுவாமி மாகாராஜுக்கு புதிய உலக சாதனையை முன்வைப்பதற்காக கின்னஸ் உலக சாதனைக்கான அதிகாரபூர்வ உலக சாதனைத் தீர்ப்பாளர் மைக்கேல் வைட்டி இந்தியா, அகமதபாத்துக்குச் சென்றார்.[41]
இந்த சாதனையானது அக்சர்தம்மை உலகின் மிகப்பெரிய அனைத்தும் கொண்ட இந்துக் கோவில் என்று முன்வைத்தது.(சான்றிதழ்).[42][43]
சான்றிதழில் கூறப்பட்டுள்ளதாவது,
"BAPS Swaminarayan Akshardham in New Delhi, India, is the world's largest comprehensive Hindu temple. It measures 356 அடி (109 m). long, 316 அடி (96 m). wide and 141 அடி (43 m). high, covering an area of 86,342 sq ft (8,021.4 m2). The grand, ancient-style, ornately hand-carved stone temple has been built without structural steel within five years by 11,000 artisans and volunteers. His Holiness Pramukh Swami Maharaj, revered spiritual leader of BAPS, consecrated the temple on 6 November 2005. Akshardham showcases the essence of India's ageless art, borderless culture and timeless values.[44]
விருது வழங்கியதை அடுத்து மைக்கேல் வைட்டி, "அக்சர்தம் விருதுக்குத் தகுதியானது என்று நாங்கள் நம்புவதற்கு முன்னர், அக்சர்தம்மின், ஒப்பிடக்கூடிய அளவுள்ள பிற கோயில்களினதும் விரிவான கட்டடக்கலைத் திட்டங்கள் மீது கவனம்செலுத்தவும், அந்த இடங்களுக்குச் சென்று பரிசோதிக்கவும் எங்களுக்கு மூன்று மாத ஆராய்ச்சி தேவைப்பட்டது ..." என்று கூறினார்.[45]
சர்ச்சைகள்
[தொகு]மதுரையிலுள்ள மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீரங்கத்திலுள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் மற்றும் திருவண்ணாமலையிலுள்ள அருணாச்சலேஸ்வரர் கோயில் ஆகிய இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மூன்று கோயில்களும் அக்சர்தம்மை விடப் பெரியவை எனக் கோரப்பட்டுள்ளன. இந்தக் கோயில்களின் தர்மகர்த்தாக்கள் அக்சர்தம்மின் கின்னஸ் உலக சாதனையை எதிர்த்துள்ளனர்.[46]
மதுரையிலுள்ள மீனாட்சி கோயில் 850 அடிகள் (260 m) நீளமும் 800 அடிகள் (240 m) அகலமும் கொண்டது. இந்தக் கோயிலின் முழுப் பரப்பளவு 17 ஏக்கர்கள் (0.069 km2) ஆக உள்ள நிலையில், ஸ்ரீரங்கத்திலுள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் 156 ஏக்கர்கள் (0.63 km2) பரப்பையும், திருவண்ணாமலையிலுள்ள அருணாச்சலேஸ்வரர் கோயில் 24 ஏக்கர்கள் (0.097 km2) பரப்பையும் கொண்டுள்ளன.[47][48] கோயில்கள் எனப்படுபவை வணங்குவதற்கான இடங்களே, ஆகவே அங்கு அக்சர்தம்மிலுள்ளது போல உணவகங்கள், படகோட்டும் வசதிகள் மற்றும் பிற பொழுதுபோக்கு வசதிகளும் கோயிலின் பகுதியாக இருக்க முடியாது என்று மீனாட்சி கோயிலிலுள்ள அதிகாரிகள் வாதாடியுள்ளனர். உண்மையான கோயிலின் கட்டுமானப் பகுதியானது நிலப்பகுதியைவிடக் கூடுதலான முக்கியமானது என்றும் அவர்கள் வாதாடியுள்ளனர்.[46]
சுவாமி நாராயண் அக்சர்தாம் (காந்திநகர்)
[தொகு]காந்திநகர், குஜராத்திலுள்ள சுவாமி நாராயண் அக்சர்தம், தில்லி அக்சர்தத்தின் சகோதர வளாகமாகும்.[49] ஆரவாரத்துக்கிடையில் 1992 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட, அக்சர்தம் காந்திநகர் ஒரு நினைவுச்சின்னம், கண்காட்சிக் கூடங்கள், மிகப்பெரிய தூண்கள், சிந்தனைமிக்க தோட்டங்கள் மற்றும் பெருமளவில் புது தில்லியிலுள்ள நினைவுச்சின்னம் போலவேயான ஒரு உணவகம் ஆகியன அடங்குகின்றன. தில்லியிலுள்ள நினைவுச்சின்னத்தின் கட்டடக்கலையும் சிற்பங்களும் காந்திநகரிலுள்ள நினைவுச்சின்னத்தை ஒத்துள்ளன.[50]
காந்திநகர் அக்சர்தம் உலகெங்குமிருந்து மில்லியன் கணக்கான வருகையாளர்களைக் கவர்ந்துள்ளது, இதில் பில் கிளிங்டன் "அக்சர்தம் இந்தியாவில் மட்டும் தனித்துவமான ஒரு இடம் அல்ல, இது முழு உலகிற்கும் தனித்துவமானது. இது நான் கற்பனை செய்திருந்ததைவிட அதிகளவுக்கு அழகானது. தாஜ் மஹால் என்பது நிச்சயமாக அழகானதுதான், ஆனால் இந்த இடம் அழகுடன் இணைந்து அழகான செய்தியையும் கொண்டுள்ளது" எனக் கூறியுள்ளதும் அடங்கும்.[51]
குறிப்புதவிகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "What is Akshardham". BAPS Swaminarayan Sanstha. Archived from the original on 2008-10-17. பார்க்கப்பட்ட நாள் 2008-10-28.
- ↑ 2.0 2.1 "Mandir". BAPS. 2005. Archived from the original on 2008-09-12. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
- ↑ Sharma, Manoj (2007-12-28). "Magnificent monuments of Delhi". ஹிந்துஸ்தான் டைம்ஸ். Archived from the original on 2013-07-02. பார்க்கப்பட்ட நாள் 2008-01-08.
{{cite web}}
: More than one of|author=
and|last=
specified (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-09. பார்க்கப்பட்ட நாள் 2022-09-10.{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ Datta, Jyotirmoy. "The 8th Wonder - Delhi Swaminarayan temple uses modern technology to transmit timeless message". New India Times. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Gupta, Moushumi (2007-07-04). "Games Village gets going as DDA clears lone bid". ஹிந்துஸ்தான் டைம்ஸ். Archived from the original on 2013-07-02. பார்க்கப்பட்ட நாள் 2008-01-08.
{{cite web}}
: More than one of|author=
and|last=
specified (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-08-08. பார்க்கப்பட்ட நாள் 2022-09-10.{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "President to inaugurate Akshardham temple today". தி இந்து. 2005-11-06. Archived from the original on 2008-09-13. பார்க்கப்பட்ட நாள் 2008-01-05.
- ↑ "Special Destinations- Akshardham Temple". Delhi Tourism and Transportation Development Corporation. Archived from the original on 2008-06-11. பார்க்கப்பட்ட நாள் 2008-10-30.
- ↑ "Swaminarayan Akshardham Temple in New Delhi". June 24, 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-10-10.
- ↑ "Akshardham Temple Complex". Ministry of Tourism Government of India. Archived from the original on 2008-10-07. பார்க்கப்பட்ட நாள் 2008-09-25.
- ↑ "Gajendra Pith". BAPS. 2005. Archived from the original on 2008-09-07. பார்க்கப்பட்ட நாள் 2008-09-13.
- ↑ "Delhi Travel Guide: Akshardham Temple". Professional Travel Guide. Archived from the original on 2008-10-19. பார்க்கப்பட்ட நாள் 2008-10-01.
- ↑ 12.0 12.1 "Garbhagruh- Inner Sanctum". BAPS Swaminarayan Sanstha. Archived from the original on 2008-10-08. பார்க்கப்பட்ட நாள் 2008-10-01.
- ↑ "Hall of Values". BAPS Swaminarayan Sanstha. 2005. Archived from the original on 2008-10-16. பார்க்கப்பட்ட நாள் 2008-10-01.
- ↑ "First time ever in India: An Audio-animatronics Presentation of an assembly in the time of Lord Swaminarayan". BAPS Swaminarayan Sanstha. 2005. Archived from the original on 2008-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-10-30.
- ↑ "Mystic India". BAPS Charities. 2004. Archived from the original on 2008-10-10. பார்க்கப்பட்ட நாள் 2008-10-30.
- ↑ "Giant Screen Film". BAPS Swaminarayan Sanstha. Archived from the original on 2008-09-15. பார்க்கப்பட்ட நாள் 2008-09-30.
- ↑ "Akshardham, Musical Fountain of Eternal Life - New Delhi, India". Laservision. 2008.
- ↑ "Yagnapurush Kund". BAPS Swaminarayan Sanstha. 2005. Archived from the original on 2008-09-15. பார்க்கப்பட்ட நாள் 2008-09-26.
- ↑ ராதா குமுத் முகர்ஜி (2ஆம் பதி. 1951; மறுபதிப்பு 1989), ஏன்ஷன்ச் இண்டியன் எட்ஜுகேஷன்: பிராமனிக்கல் அண்ட் புட்டிஸ்ட் (ப. 478), மோதிலால் பானர்சிடாஸ் வெளியீடு., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120804236
- ↑ "Sanskruti Vihar". BAPS Swaminarayan Sanstha. 2005. Archived from the original on 2008-10-20. பார்க்கப்பட்ட நாள் 2008-11-17.
- ↑ 21.0 21.1 "Garden of India". BAPS Swaminarayan Sanstha. Archived from the original on 2008-09-15. பார்க்கப்பட்ட நாள் 2008-09-30.
- ↑ "Neelkanth Abhishek Mandapam". BAPS Swaminarayan Sanstha. Archived from the original on 2008-10-08. பார்க்கப்பட்ட நாள் 2008-09-30.
- ↑ "Narayan Sarovar- Sacred Water Lake". BAPS Swaminarayan Sanstha. Archived from the original on 2008-10-08. பார்க்கப்பட்ட நாள் 2008-09-30.
- ↑ "Akshardham Temple, Delhi". Shubh Yatra. 2006. பார்க்கப்பட்ட நாள் 2008-10-18.
- ↑ "Visitors Info". BAPS Swaminarayan Sanstha. 2005. பார்க்கப்பட்ட நாள் 2008-10-30.
- ↑ "Delhi's Akshardham: A monument to India". ரெடிப்.காம். 2005. பார்க்கப்பட்ட நாள் 2008-01-07.
{{cite web}}
: Unknown parameter|month=
ignored (|date=
suggested) (help) - ↑ "Research Center AARSH". BAPS Swaminarayan Sanstha. 2006. Archived from the original on 2008-08-20. பார்க்கப்பட்ட நாள் 2008-11-07.
- ↑ "Making of Akshardham". BAPS Swaminarayan Sanstha. Archived from the original on 2008-10-08. பார்க்கப்பட்ட நாள் 2008-09-30.
- ↑ 29.00 29.01 29.02 29.03 29.04 29.05 29.06 29.07 29.08 29.09 Rajiv, Malik (2006). "Pride of India: How Yogiji Maharaj's Dream Was Fulfilled (Interview)". Hinduism Today. Archived from the original on 2007-09-29. பார்க்கப்பட்ட நாள் 2008-01-05.
{{cite web}}
: More than one of|author=
and|last=
specified (help) - ↑ Menon, Nivedita (2007). Power and Contestation: India Since 1989 (in 219). page 79: Zed Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1842778153, 9781842778159.
{{cite book}}
: Check|isbn=
value: invalid character (help); Unknown parameter|coauthors=
ignored (help)CS1 maint: location (link) CS1 maint: unrecognized language (link) - ↑ Williams, Raymond Brady (2004). "Swaminrayan Hinduism". Williams On South Asian Religions And Immigration. page 132: Ashgate Publishing, Ltd. p. 274. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0754638561, 9780754638568. பார்க்கப்பட்ட நாள் 2008-08-17.
{{cite book}}
: Check|isbn=
value: invalid character (help)CS1 maint: location (link) - ↑ Rajiv, Malik (2006). "Pride of India: Swaminarayan Akshardham opens in New Delhi with praise from India's religious, cultural and political leaders". Hinduism Today. Archived from the original on 2007-09-29. பார்க்கப்பட்ட நாள் 2008-01-05.
{{cite web}}
: More than one of|author=
and|last=
specified (help) - ↑ "Laying of First Stone at Akshardham, New Delhi". Swaminarayan.org. 2001-07-02. பார்க்கப்பட்ட நாள் 2008-01-12.
- ↑ "Akshardham Temple Delhi". Cultural India.net. பார்க்கப்பட்ட நாள் 2008-01-10.
- ↑ Arya, R.P. (2007). Incredible India: Tourist & Travel Guide. page 62: Indian Map Service. p. 320. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8189875205, 9788189875206.
{{cite book}}
: Check|isbn=
value: invalid character (help)CS1 maint: location (link) - ↑ Pruthi, R.K. (2003). President APJ Abdul Kalam. page 244: Anmol Publications PVT. LTD. p. 271.
{{cite book}}
: CS1 maint: location (link) - ↑ 37.0 37.1 "Akshardham designers lauded". தி இந்து. 2005-11-06 இம் மூலத்தில் இருந்து 2007-12-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071223012603/http://www.hindu.com/2005/11/08/stories/2005110814330300.htm. பார்த்த நாள்: 2008-01-04.
- ↑ "The Akshardham Experience". எபவுட்.காம். 2005-11-07. பார்க்கப்பட்ட நாள் 2008-01-05.
- ↑ Swaminarayan Akshardham Dedication Ceremony(vob)[DVD].Amdavad - 4, India:Swaminarayan Aksharpith.Retrieved on 2008-01-12.
- ↑ Surender Sharma (2009-07-09). "A Short circuit led to the fire". மிட் டே. பார்க்கப்பட்ட நாள் 2009-07-09.
- ↑ Jha, Preeti (2007-12-26). "Guinness comes to east Delhi: Akshardham world’s largest Hindu temple". ExpressIndia.com. http://www.expressindia.com/latest-news/Guinness-comes-to-east-Delhi-Akshardham-worlds-largest-Hindu-temple/254631/. பார்த்த நாள்: 2008-01-02.
- ↑ "Akshardham temple enters Guinness Book of World Records". MSN. 2006-07-24 இம் மூலத்தில் இருந்து 2007-12-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071229145606/http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=1162193. பார்த்த நாள்: 2008-01-02.
- ↑ Khandekar, Nivedita (2007-12-26). "Delhi’s Akshardham is the world’s largest temple". ஹிந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103101545/http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=5ea611c5-3adc-473d-8b54-52314cbdcab8. பார்த்த நாள்: 2008-01-02.
- ↑ "Guiness Bestows Two World Records on HDH Pramukh Swami Maharaj". Bochasanwasi Shri Akshar Purushottam Swaminarayan Sanstha, Swaminarayan Aksharpith. பார்க்கப்பட்ட நாள் 2008-10-20.
- ↑ Khandekar, Nivedita (2007-12-26). "Akshardham temple enters Guinness Records". ரெடிப்.காம். http://www.rediff.com/news/2007/dec/26akshar.htm. பார்த்த நாள்: 2008-01-02.
- ↑ 46.0 46.1 "TN temples bigger than Delhi's Akshardham". MSN. 2007. Archived from the original on 2008-04-22. பார்க்கப்பட்ட நாள் 2008-09-26.
- ↑ Natarajan, A. R. "8". Arunachala From Rigveda to Ramana Maharshi. Ramana Maharshi Centre for Learning.
- ↑ Kannikeswaran, K (1996). "Tiruvarangam (Koyil)". indiantemples.com. பார்க்கப்பட்ட நாள் 2008-10-30.
- ↑ "Akshardham Gandhinagar". BAPS Swaminarayan Sanstha. Archived from the original on 2008-09-17. பார்க்கப்பட்ட நாள் 2008-09-14.
- ↑ "Akshardham Temple". Asiarooms Pte. Ltd. Archived from the original on 2008-09-07. பார்க்கப்பட்ட நாள் 2008-09-30. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-09-07. பார்க்கப்பட்ட நாள் 2010-04-22.
- ↑ "Bill Clinton Visits Akshardham". BAPS Swaminarayan Sanstha. Archived from the original on 2008-11-21. பார்க்கப்பட்ட நாள் 2008-09-30.
வெளிப்புற இணைப்புகள்
[தொகு] விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி
- அக்சர்தம் தகவல்
- அதிகாரப்பூர்வ அக்சர்தம் தில்லி வலைத்தளம்
- இன்கிரடிபிள் இண்டியா வலைத்தளத்தில் அக்சர்தம் கோயில் வளாகம் பரணிடப்பட்டது 2008-10-07 at the வந்தவழி இயந்திரம்
- தில்லி சிட்டி டுவரிசம் வலைத்தளத்தில் அக்சர்தம் கோயில் பரணிடப்பட்டது 2008-06-11 at the வந்தவழி இயந்திரம்
- கின்னஸ் உலக சாதனைகள் - தீர்ப்புகள் - உலகின் மிகப்பெரிய இந்துக் கோயில்
- மற்றவை
- BAPS சுவாமிநாராயணன் சான்ஸ்தா- அக்சர்தல் உருவாக்கத்துக்குக் பொறுப்பான அமைப்பு
- மிஸ்டிக் இண்டியா- அக்சர்தத்தில் காண்பிக்கப்படும் திரைப்படம்
- அக்சர்தம் காந்திநகர் வலைத்தளம்