உள்ளடக்கத்துக்குச் செல்

அக்காதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்காதேவி
Akkadevi
பிறப்பு1010 (1010)
இறப்பு1064 (அகவை 53–54)
மரபுசாளுக்கியர்கள்

அக்காதேவி (Akkadevi) 1010-1064[1] ஆம் ஆண்டுகள் காலத்தில் கர்நாடகாவில் இருந்த சாளுக்கிய வம்சத்தின் இளவரசியாவார். கிசூகாடு எனப்படும் ஒரு பகுதியின் ஆளுநராகவும் இவர் இருந்தார். இன்றைய கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்றான பீதர், பீஜப்பூர், பாகல்கோட்டு மாவட்டங்களில் இப்பகுதி அமைந்துள்ளது. மேற்கு சாளுக்கியர்களின் மன்னர் இரண்டாம் செயயசிம்மாவின் சகோதரியாகவும் முதலாம் சோமேசுவரனின் அத்தையாகவும் அறியப்படுகிறார்.

ஒரு திறமையான நிர்வாகியாகவும் திறமையான படைத்தலைவராகவும்[2] அக்காதேவி நன்கு அறியப்பட்டார். நல்லொழுக்கங்களின் அழகி என்ற பொருள் குறிக்கும் குணதபெதங்கி என்ற அடைமொழியாலும் அக்காதேவி அழைக்கப்பட்டார்.[3]


சாளுக்கியர்களின் ஆட்சிக்காலம் தென்னிந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகவும் கர்நாடக வரலாற்றில் ஒரு பொற்காலமாகவும் கருதப்படுகிறது. சாளுக்கியர்கள் இந்தியாவில் தக்காண பீடபூமியை 600 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தனர். அக்காதேவி மேற்கு சாளுக்கியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தார். இப்பேரரசு சோழர்களுடனும், அவர்களது தொலைதூர உறவினர்களான வேங்கியின் கிழக்கு சாளுக்கியர்களுடனும் தொடர்ந்து பகையுடன் இருந்தார்.

அக்காதேவி ஆட்சியின் போது தனது மாகாணத்தை விரிவுபடுத்தினார். மானியங்கள் மூலம் கல்வியை ஊக்குவித்தார். சமண மற்றும் இந்து கோவில்களுக்கு தாராளமாக நிதி வழங்கினார்.[4]

"பெரும் நற்பெயர் மற்றும் விளைவுகளின் ஆளுமை"தான் அக்காதேவி என்று கூறப்பட்டது.[5] 1022 தேதியிட்ட ஒரு கல்வெட்டு அக்காதேவியை பைரவியைப் போல் வீரமிக்கவர் என்று அழைக்கிறது.[6] ஒர் உள்ளூர் கிளர்ச்சியைத் அடக்குவதற்காக கோகாக் கோட்டையை இவர் முற்றுகையிட்டார்.[5] மேலும் பிராமணர்களுக்கு மானியங்களை வழங்குவதன் மூலம் கல்வியை இவர் ஊக்குவித்ததார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Woman, Her History and Her Struggle for Emancipation, By B. S. Chandrababu, L. Thilagavathi. p.158
  2. Saletore, Rajaram Narayan (1983). Encyclopaedia of Indian culture, Volume 3. University of Michigan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-391-02332-1.
  3. Jain Journal, Volume 37. Jain Bhawan. 2002. p. 8.
  4. Kamat, Jyotsna (1980). Social Life in Medieval Karnataka. Abhinav Publications. p. 107. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8364-0554-5.
  5. 5.0 5.1 Mishra, Phanikanta (1979). The Kadambas. Mithila Prakasana. pp. 53, 71.
  6. Murari, Krishna (1977). The Cāḷukyas of Kalyāṇi, from circa 973 A.D. to 1200 A.D.: based mainly on epigraphical sources. Concept Pub. Co. pp. 52, 61–62.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்காதேவி&oldid=3170637" இலிருந்து மீள்விக்கப்பட்டது