சர்ஜனா சர்மா
சர்ஜனா சர்மா (Sarjana Sharma), (பிறப்பு: மார்ச் 18, 1959) ஒரு மூத்த இந்திய பத்திரிக்கையாளர் ஆவார். இவர், இந்தி ஊடகங்களில் பணிபுரியும் பெண்கள் மிகக் குறைவாக இருந்த நேரத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மரபுசாரா தொழில்களில் உள்ள பெண்கள் மற்றும் பெண் கைதிகள் போன்ற தலைப்புகள் குறித்த பல ஆவணப்படங்களை இயக்குவதற்கும் தயாரிப்பதற்கும் இவர் உதவியுள்ளார். இந்த ஆவணப்படங்கள் இந்தியா, முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்காவில் நடந்த விழாக்களில் காட்டப்பட்டன. ஜீ நியூஸில் துணை நிர்வாக தயாரிப்பாளராக இருந்தார்.[1] தற்போது இவர் கபீர் கம்யூனிகேஷன் என்கிற நிறுவனத்தில் படைப்பாக்க தலைமை மேலாளராக பணிபுரிகிறார்.
சுயசரிதை
சர்ஜனா சர்மா சஹரன்பூரில் மார்ச் 18, 1959 அன்று உத்தரபிரதேசத்தில் கிரிஷன் மற்றும் பிரேம் லதா சர்மாவுக்கு மகளாகப் பிறந்தார். இவர், அரசியல் அறிவியலில்,முதுகலை பட்டம் பெற்றுள்ளார். மேலும், மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலை பட்டமும், மொழிபெயர்ப்பு, இந்திய கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் ஒரு புகைப்படம் போன்றவற்றில் பட்டயப் படிப்பையும் முடித்துள்ளார். சர்ஜனா, பல்வேறு ஊடகத் துறைகளில் பணியாற்றி உள்ளார்.[2]
தொழில்
தனது 31 ஆண்டுகால பத்திரிகை வாழ்க்கையில், இவர் முக்கிய இந்திய ஊடக நிறுவனங்களுடன் பணிபுரிந்தார். பிபிசி மற்றும் அமெரிக்க தகவல் நிறுவனம் போன்ற புகழ்பெற்ற சர்வதேச அமைப்புகளுடன் பணியாற்றினார். 1995 ஆம் ஆண்டில் இவர் 45 நிமிட தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக, பெண்கள் பத்திரிகையான அஸ்மிட்டாவைத் தயாரிப்பதில் முக்கிய நபராக இருந்தார். இந்த மகளிர் பத்திரிகை ஒரு முற்போக்கு அமைப்பாக இருந்தது. இது இந்திய பெண்களை மிகவும் நேர்மறையான பார்வையில் காண்பித்தது.[3]
ஊடகப் பணிகள்
இவர் 1998 மற்றும் 2013 க்கு இடையில் ஜீ நியூஸுடன் நீண்ட காலமாக இருந்தார், இவர் செய்தி மேசையிலிருந்து, துறையில் அறிக்கை செய்தல், செய்தி மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்த சிறப்புத் திட்டங்களைத் தயாரிக்கும் போது, வெவ்வேறு திறன்களில் பணியாற்றினார். இவர் தொடர்புடைய சில பிரபலமான நிகழ்ச்சிகளில், நியூஸ்ஸி கவுண்டவுன், மிஸ்டரி அன்ஃபோல்ட்ஸ், ஏக் அவுர் நசரியா, விவவ் மந்தன்போன்றவை குறிப்பிடத்தக்கவையாக உள்ளது. இது தவிர, சர்ஜனா பல பொதுத் தேர்தல்களையும், மாநில சட்டசபை தேர்தல்களையும் தொகுத்து வழங்குவதற்கான முக்கிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். ஜீ நியூஸின் கடைசி கட்டத்தில், இந்தியாவின் புகழ்பெற்ற இந்திய பாரம்பரியம், கலாச்சாரம், மத கண்காட்சி திருவிழாக்கள் குறித்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு திட்டமான "மந்தன்" நிகழ்ச்சியை இயக்கியுள்ளார். மேலும், இந்நிகழ்ச்சிக்கு தேவையான உரையை எழுதியுள்ளார். கிசான் சேனல் உள்ளடக்க தேர்வுக் குழுவுக்கு (ஏப்ரல்-மே 2015) பிரசார் பாரதி ஜூரி உறுப்பினர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]
பிற பணிகள்
இவர், இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் நடத்திய 27 நாள் சர்வதேச நடன விழாவின் ஊடக ஒருங்கிணைப்பாளராக ஈடுபட்டார். சர்வதேச நடனக் குழுக்கள், ஊடகங்கள் மற்றும் தூதரகங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய இணைப்பாக இவர் இருந்தார். இந்த திருவிழா ஊடகங்களில் பரவலான தகவல்களைப் பெற்றது.[5]
விருதுகள்
சர்ஜனா சர்மா, ஊடகங்களுக்கான இவரது நீண்ட பங்களிப்பிற்காக, பல விருதுகளை வென்றுள்ளார். இவற்றில் பாரத் நிர்மன் விருது, இந்தி மொழிக்கு சேவை செய்ததற்காக 32 வது பண்டிட் துர்கா பிரசாத் துபே விருது (2011), டாக்டர் சாதனா சர்வதேச அதிகாரமளித்தல் விருது மற்றும் வேத ரத்தன் விருது 2010 ஆகியவை அடங்கும். இவர் தனது செய்திகளை ராஸ்பாடியன் என்கிற வலைப்பதிவில் எழுதுகிறார்.[6] இது, பரவலாக வாசிக்கப்பட்ட இந்தி மொழி வலைப்பதிவு ஆகும். சிறந்த வலைப்பதிவிற்காக அவர் இரண்டு சர்வதேச விருதுகளுடன் கௌரவிக்கப்பட்டார். அவை, பரிகல்பனா சார்க் விருது -(2015) மற்றும் வலைப்பதிவு பூஷன் விருது -(2014) போன்றவை ஆகும்.[4]
குறிப்புகள்
- ↑ "Zee News' Sarjana Sharma wins prestigious award". Zee News. 10 September 2011. பார்க்கப்பட்ட நாள் 22 April 2016.
- ↑ "सर्जना शर्मा" [Sarjana Sharma] (in Hindi). Parikalpna Kosh. Archived from the original on 25 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 April 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ "भूटान में ब्लागर्स मिले" [Bloggers met in Bhutan] (in Hindi). Srijanagatha. பார்க்கப்பட்ட நாள் 22 April 2016.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ 4.0 4.1 "Zee News' Sarjana Sharma wins Dr Sadhna Award". Zee News. 5 March 2011. பார்க்கப்பட்ட நாள் 22 April 2016.
- ↑ "सर्जना शर्मा का सम्मान, ब्लॉग जगत का बढ़ा मान" [Sharma honor creativity, increase the value of the blog world.] (in Hindi). Deshnama. Archived from the original on 8 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 22 April 2016.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ http://rasbatiya.blogspot.in/