கோபால்ட்(II) சயனேட்டு
கோபால்ட்(II) சயனேட்டு (Cobalt(II) cyanate) என்பது Co(OCN)2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்
கருதுகோள்நிலையிலுள்ள இந்த எளிய கோபால்ட்(II) சயனேட்டு தயாரிக்கப்பட்டதாக நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும், டெட்ரா ஐசோசயனனேட்டோகோபால்ட்(II) அயனி (Co(NCO)42-) அறியப்படுகிறது. இதன் நீல நிறம் கோபால்ட்(II) அயனிகளுக்கான தர சோதனையாகப் பயன்படுத்தப்படுகிறது.
வரலாறு
கோபால்ட்(II) சயனேட்டு சேர்மம் 1952 ஆம் ஆண்டில் பிரிடின் கோபால்ட்(II) சயனேட்டை வெற்றிடத்தின் கீழ் கவனமாக சூடாக்குவதன் மூலம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இது நிரூபிக்கப்படவில்லை[1]
இதற்கு மாறாக டெட்ரா ஐசோசயனனேட்டோகோபால்ட்(II) அயனி காணப்படுவதாக எக்சு கதிர் படிகவியல் ஆய்வுகள் கூறுகின்றன, இவ்வயனி பரவலாகவும் காணப்படுகிறது. 1871 ஆம் ஆண்டில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட பிறகு, இது கோபால்ட்(II) அயனிக்கான ஒரு தரமான சோதனையாகப் பயன்படுத்தப்பட்டது.
டெட்ராகிசு(பிரிடின்)கோபால்ட்(II) சயனேட்டு போன்ற கோபால்ட்டின் மற்ற சயனேட்டு அணைவுச் சேர்மங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
- ↑ Albert V. Logan; David C. Bush; Charles J. Rogers (1952). "The Heats of Formation of Cobalt(II) and Nickel(II) Pyridinated Cyanates and Thiocyanates" (in en). Journal of the American Chemical Society 74 (16): 4194–4195. doi:10.1021/ja01136a069.